வந்த சோனியாவும், வராமல் போன சுனாமியும்.

Ganesukumar
தீவுத் திடலில் சோனியா-கருணாநிதி பேச்சு # தேவை இல்லாதப்ப வர்ற சுனாமியை தேவைப் படும்போது கூப்டுக்க முடியுமா?
இப்படி ஒரு டிவிட் படிக்க நேர்ந்த போது, கொஞ்சம் வருத்தப்பட்டேன்.  திடீரென பிரச்சார கூட்டத்தின் போது சுனாமி வந்து விட்டால், நிறைய அப்பாவி மனிதர்களும் அல்லவா பாதிக்கப்படுவார்கள் என  
சாமானிய மனிதனாய் கவலைப்பட்டேன். 


நிச்சயம் தீவுத்திடலில், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவும், மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வும் கிடைக்கும் என்று மிஸ்டர் பொதுஜனமாய் நம்பினேன். ஏனெனில் மீனவர் பிரச்சனைக்கு பின்னர் இப்போதுதான் சோனியா தமிழக மண்ணில் காலடிவைக்கிறார்.


ஆவலாய் காத்திருந்த எமக்கு அதிர்ச்சி தோல்விதான் மிஞ்சியது.


சென்ற நாடாளுமன்ற தேர்தலில் வாசித்த அதே வானிலை அறிக்கையை, கட் & காப்பி செய்து, கொஞ்சம் ஜிகினா தூவி பேஸ்ட் செய்துவிட்டு போய்விட்டார் சோனியா காந்தி. 


கொஞ்சம் கத்தி கத்தி படித்தது தான் புதுமை.


ஒரு விதவை, ஒரு இனத்தையே விதவையாக்கிய கதையின் தொடர்ச்சியாய், நீட்சியாய் இன்னமும் சோனியா இருப்பது வருத்தமே.


இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்காக மத்திய அரசு ஏராளமான உதவி செய்துள்ளது என்று சோனியா சொல்கிறார். மத்திய அரசு தந்த பணத்தை வைத்துத்தான் தமிழர்களை கருவறுத்தார்கள் என்று சொல்கிறார்கள் இலங்கையில் ஏதோ ஒரு நம்பிக்கையில் இன்னமும் செத்துக்கொண்டே வாழ்ந்து கொண்டிருக்கும் (???) எம் சக உதரர்கள். 
(சக - ஒரே, உதரம் - வயிறு , ஒரே வயிற்றில் பிறந்தவர்கள்)


எம் வரிப்பணத்தைக் கொண்டு எம் இனத்தை அழித்ததில் என்ன சுகம் கிடைத்ததோ அவர்களுக்கு.....


தமிழகத்தில் இருக்கும் நாங்கள் குரல் கொடுப்போம் என்று கடைசி வரை நம்பி நம்பி, ஏமாந்த ஈழத்தமிழர்கள் இறுதியில் எங்களை காறி உமிழ்ந்தது தான் மிச்சம். அந்த எச்சில் இன்னமும் கூட துடைக்கப்படவில்லை.


ஈழத்தமிழர்கள் விஷயத்தில் தான் இப்படி மனம் கெட்டோம் என்றால் 
மீனவர் விஷயத்தில் அதை விட,


நிருபமா ராவ் அவர்களின் உதட்டுச்சாயம் கொஞ்சம் பேச்சு வார்த்தைக்காக கலைந்தது தவிர உருப்படியாய் ஒன்றும் நிகழ்ந்து விடவில்லை. 


எப்படி நம்புவது, இப்போது சோனியா அளித்திருக்கும் வாக்குறுதிகளை...


சம உரிமை, சம அந்தஸ்து இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்கு வாங்கித்தரப்படும் என இப்போது ராகம் பாடும் சோனியா நினைத்திருந்தால், இப்படி ஒரு நிலைமை வராமலே தவிர்த்திருக்க முடியுமே?


இப்போது கூட சோனியா தன் கூட்டாளி ராஜபக்சேவை, மும்பை வான்காடே மைதானத்தில் சந்தித்தாரே அப்போது ஏன் இதைப்பற்றி பேசவில்லை. 


சென்னை வந்தவுடன் தான் இலங்கை தமிழர்களும், தமிழக மீனவர்களும் ஞாபகம் வருகிறது என்றால் என்ன அர்த்தம். 


பேருந்துகளில் யாசகம் கேட்பவர்கள் தங்களுக்கு என்று மூன்று பாட்டுகள் வைத்திருப்பது போல, தமிழகத்தில் ஓட்டு யாசகம் கேட்டு வருவதற்காகவே நீங்கள் வைத்திருக்கும்  மூன்று பாட்டுக்கள் தானே சம உரிமை, சம அந்தஸ்து அப்புறம் கட்சத்தீவு.


வலியுறுத்துவோம், வலியுறுத்துவோம், வலியுறுத்துவோம், வலியுறுத்துவோம் இந்த வார்த்தைகளை கேட்டு, கேட்டு காதுகள் புளித்து விட்டன.


எதையும் சகித்துகொள்பவர்களாக எங்களை மாற்றுவதுதான் உங்கள் திட்டம். அதுவும் சரி தான் உணர்ச்சிவயப்பட்டு என்ன செய்துவிட முடியும், பணமும், துரோகமும் மட்டும் ஜெயிக்கும் இந்த தேசத்தில்.கூடுதல் இணைப்பு:


1)அய்யா கலைஞர் அவர்களே, பிரச்சாரத்திற்காக நடக்கும் கூட்டத்தை, சோனியா காந்தியிடம் கோரிக்கை வைக்கும் கூட்டமாக மாற்றிய ராஜதந்திரத்தை என்னவென்று புகழ்வது.. சோனியாவிடம் நீங்கள் கோரிக்கை வைப்பீர்கள், சோனியா ரத்த வெறி ராஜபக்சேவிடம் கோரிக்கை வைப்பார்... அஹா... அஹா.. அடிச்சு தூள் கிளப்புறீங்க... இதுக்கு நாங்க வேற சாட்சிகள்...


2) முன்னேறிய மாநிலங்களில் முதன்மை மாநிலமாக தமிழகம் இருக்கிறது என்று சந்தோஷப்படும் சோனியா இதை அவர்களின் டெல்லியில் இருந்துகொண்டு சொல்வரா அல்லது காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் இருந்துகொண்டு சொல்வாரா? 


3) இந்த கவிதையின் வலிக்கு யாரேனும் பதில் சொல்லமுடியுமா?
  http://tamilnattu.blogspot.com/2011/04/blog-post_05.html
  

24 கருத்துரைகள்:

செங்கோவி said...

சாட்டையடிப் பதிவு...இன்னைக்கு நம்ம கடையிலும் இவங்களுக்கு ஸ்பெஷல் கவனிப்பு தான்!

செங்கோவி said...

உங்க ப்ளாக் நல்லா பளிச்சுன்னு இருக்கு..நல்ல டெம்ப்ளேட்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நெற்றியடி, சாட்டையடி!! அருமையான பதிவு + தலைப்பும் தான்!!

நிரூபன் said...
This comment has been removed by the author.
நிரூபன் said...

சென்ற நாடாளுமன்ற தேர்தலில் வாசித்த அதே வானிலை அறிக்கையை, கட் & காப்பி செய்து, கொஞ்சம் ஜிகினா தூவி பேஸ்ட் செய்துவிட்டு போய்விட்டார் சோனியா காந்தி.//

சகோ,, அரசியல் நாடகத்திலை இதெல்லாம் சகஜமப்பா.......
தலையில் மிளகாய் அரைக்கும் வித்தை, எம் தலைவர்களுக்குத் தானே தெரியும்.

நிரூபன் said...

எம் வரிப்பணத்தைக் கொண்டு எம் இனத்தை அழித்ததில் என்ன சுகம் கிடைத்ததோ அவர்களுக்கு.....//

நியாயமான கேள்வி சகோ, காலாதி காலமாக இதற்கான பதில்களை மட்டும் தேடிய படி நாங்கள்.

நிரூபன் said...

தமிழகத்தில் இருக்கும் நாங்கள் குரல் கொடுப்போம் என்று கடைசி வரை நம்பி நம்பி, ஏமாந்த ஈழத்தமிழர்கள் இறுதியில் எங்களை காறி உமிழ்ந்தது தான் மிச்சம். அந்த எச்சில் இன்னமும் கூட துடைக்கப்படவில்லை.//

இந்த வார்த்தைகளுடன் எனக்கு உடன்பாடில்லைச் சகோதரம், நாங்கள் அரசியல்வாதிகளை மட்டும் தான் வெறுத்திருக்கிறோமே தவிர, தமிழக மக்கள் மீதான எமது அன்பும், பாசமும் இன்றும் எங்கள் உள்ளங்களில் அழியாது இருக்கிறது..

இவ் இடத்தில் இந்த வார்த்தைகள் கொடூரமாக தெரிகிறது, நீங்கள் எங்கள் உள்ளத்தில் உயர்ந்த இடத்தில் எப்போதுமே இருப்பீர்கள்.

நிரூபன் said...

சம உரிமை, சம அந்தஸ்து இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்கு வாங்கித்தரப்படும் என இப்போது ராகம் பாடும் சோனியா நினைத்திருந்தால், இப்படி ஒரு நிலைமை வராமலே தவிர்த்திருக்க முடியுமே?//

இது கலைஞர், சோனியா இணைந்து தயாரிக்கும் தேர்தல் கால முழு நீள நகைச்சுவைப் படத்தின் உட் கதை..

இதனை இனியுமா நம்புவது.
கடந்த முறை 2009ம் ஆண்டு தேர்தல் நடக்கையில் நாங்கள் கதறி அழுத போது சோனியா அம்மாவின் மனச்சாட்சி எங்கே இருந்தது?

நிரூபன் said...

எதையும் சகித்துகொள்பவர்களாக எங்களை மாற்றுவதுதான் உங்கள் திட்டம். அதுவும் சரி தான் உணர்ச்சிவயப்பட்டு என்ன செய்துவிட முடியும், பணமும், துரோகமும் மட்டும் ஜெயிக்கும் இந்த தேசத்தில்.//

இது சோனியாவிற்கு நெத்தியடி.....
அது மட்டுமன்றி, மக்களை வைத்து ஏமாற்றிப் பிழைப்பு நடத்தும் அரசியல் வாதிகளுக்கும் இப் பதிவு ஒரு சாட்டையடி.

நிரூபன் said...

முன்னேறிய மாநிலங்களில் முதன்மை மாநிலமாக தமிழகம் இருக்கிறது என்று சந்தோஷப்படும் சோனியா இதை அவர்களின் டெல்லியில் இருந்துகொண்டு சொல்வரா அல்லது காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் இருந்துகொண்டு சொல்வாரா?//

சபாஷ்..............டில்லியில் இருந்து சொன்னால் நாறடிச்சிட மாட்டாங்க..
அது தான் தமிழகம் வரும் போது வாக்குறுதிகளை அள்ளி வீசும் திறமையைப் பார்த்தாலே தெரியுதே.

நிரூபன் said...

என் கவிதையினையும், உங்கள் பதிவில் பதிந்து, பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் சகோ.

நிரூபன் said...

உங்கள் டெம்பிளேட் வடிவமைப்பு, ரோஜாப் பூந்தோட்டத்திற்கு ஏற்றாற் போல அழகாக இருக்கிறது.

வைகை said...

சோனியாவிடம் நீங்கள் கோரிக்கை வைப்பீர்கள், சோனியா ரத்த வெறி ராஜபக்சேவிடம் கோரிக்கை வைப்பார்... அஹா... அஹா.. //

அப்படியே அவரு இந்த கோரிக்கையெல்லாம் ஆப்பா மாத்தி தமிழனுக்கு திருப்பி வைப்பாரு!

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

சவுக்கடி பதிவு..

சி.பி.செந்தில்குமார் said...

>>ஒரு விதவை, ஒரு இனத்தையே விதவையாக்கிய கதையின் தொடர்ச்சியாய், நீட்சியாய் இன்னமும் சோனியா இருப்பது வருத்தமே.

பளார் பளார்....

சி.பி.செந்தில்குமார் said...

தமிழ்மனத்தில் ஓட்டு போட முடில.. என்னன்னு பாருங்க..

தமிழ்வாசி - Prakash said...

அண்ணே! சும்மா சாட்டைய நீளமா வீசியிருக்கிங்க.

MANO நாஞ்சில் மனோ said...

//ஒரு விதவை, ஒரு இனத்தையே விதவையாக்கிய கதையின் தொடர்ச்சியாய், நீட்சியாய் இன்னமும் சோனியா இருப்பது வருத்தமே//

ரோம் எரிஞ்ச போது பிடில் வாசித்தவன் பரம்பரையில் வந்தவளும் அப்பிடித்தானே இருப்பாள்...!!! என்ன பெயர் மட்டும் மாத்தி வச்சிட்டாள் அம்புட்டுதான் வித்தியாசம்...

சசிகுமார் said...

புது டேம்ப்லேட்டா கலக்குறீங்க போங்க உண்மையாவே சூப்பரா இருக்குப்பா

Jana said...

உண்மையில் ஒவ்வொரு சொல்லும் சாட்டைதான். தேர்தல் என்பதே மக்கள் கையில் கிடைத்திருக்கும் சாட்டை தான்... பார்ப்போம் இம்முறை சாட்டையை மக்கள் எப்படி கையாள்கின்றார்கள் என்று!

அரசன் said...

சரியான சாட்டையடி ,,,, பதிவு ,.,,

ஆர்.கே.சதீஷ்குமார் said...

டேம்ப்ளேட் சூப்பர்..ரொம்ப நீட்டா இருக்கு

ஆர்.கே.சதீஷ்குமார் said...

போட்டு தாக்குங்க சூடான பதிவு

♔ம.தி.சுதா♔ said...

ஃஃஃஃஈழத்தமிழர்கள் விஷயத்தில் தான் இப்படி மனம் கெட்டோம் என்றால்
மீனவர் விஷயத்தில் அதை விட,ஃஃஃஃ

இன்னும் இருக்குது பாருங்க எதக்கெல்லாம் மானக்கெடப் போறாங்கண்ணு...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
ஆணுறை பாவிப்போரே பெரும் ஆபத்து காத்திருக்கிறது (18+) condom

Blog Archive

Follow by Email

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்