கடுகு சைஸ் பொருளை வச்சு இந்த உலகத்தை அழிக்க முடியுமா?
முடியும் என்கிறது ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடின்படி அமைந்த E=Mc2
என்னும் சமன்பாடு.
உதாரணத்துக்கு ஐம்பது கிலோ இருக்கின்ற ஒருவர் உங்கள் மீது மெதுவாக வந்து மோதினால் உங்களுக்கு பெரிய விஷயமாக தோன்றாது, ஆனால் அதே ஐம்பது கிலோ எடை இருப்பவர், நூறு கிலோ மீட்டர் வேகத்தில் வந்து உங்கள் மீது மோதினால், "பிப்டி கேஜி தாஜ்மகால்" அப்படினு பாட்டு பாட முடியுமா? ஐம்பது கிலோ எடை, இயக்கத்தில் வேகமாக வந்து மோதியதால் எடை அதிகமாகி விடுமல்லவா?
நூறு கிலோ மீட்டர் வேகத்தில் வருவதற்கு பதில் ஒளியின் திசைவேகத்தில் வந்து மோதினால்?
ஒளியின் திசைவேகம் என்பது C= 3 x 108 ms-1. அதாவது ஒரு செகண்டில் மூணு லட்சம் மீட்டர் வேகத்தில் வந்து மோதுவதாக கற்பனை செய்துக்கொள்ளுங்கள். இப்போது அதிக வேகத்தின் காரணமாக பொருளின் நிறை நிச்சயம் மிக அதிகமாக இருக்கும்.
வேகத்தை இன்னும் அதிகரித்து ஒளியின் திசைவேகத்தின் இருமடி வேகத்தில் செலுத்தினால், அதாவது C2 = 9 x 1016 ms-1 என்னும் வேகத்தில் மோதினால் எப்படியிருக்கும்? கட்டாயம் கடுகு சைஸ் பொருளின் நிறை, எதிரில் இருக்கும் எந்தவொரு பொருளையும் தூள் தூளாக்கி விடும்.
இவ்வாறு இயங்கும் பொருளொன்றின் திசைவேகம் மாறுவதன் காரணமாக ஏற்படும் நிறை அதிகரிப்பை ஆற்றலாக மாற்ற இயலும் என்பது தான் E=Mc2
சமன்பாட்டின் தத்துவமாகும்.அதன் பெயரே நிறை ஆற்றல் இணைமாற்றுச்சமன்பாடு என்பது தான்.
கடுகு சைஸ் பொருளை வச்சு இந்த உலகத்தை அழிக்க முடியுமா? என்று கேட்டால் முடியும் என்பது தான் அறிவியல் உண்மை. இந்த ஆற்றலை உலகை அழிக்க பயன்படுத்தாது, ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு கூட பயன்படுத்தலாம்.
உதிரிப்பூக்களாய் சில தகவல்கள் :
நியூட்டனின் இயக்கவியல் கோட்பாடுகளின் படி நீளம், நிறை, காலம் மாறாதவை. அதாவது எங்கு, எப்படி அளந்தாலும் ஒரு பொருளின் நீளம் மாறாமல் இருக்கும். ஆனால் ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு படி நீளம் மாறும்,அது போலவே நிறை மாறும், காலமும் மாறும்.
(எல்லாம் மாறிவிடும் என்று சொல்லும் ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாட்டில் ஒரே ஒரு விஷயம் மட்டும் மாறாததாக சொல்லப்படுகிறது. அது என்னவென்று சொல்ல முடியுமா?)
ஐன்ஸ்டீனின் புகழ்பெற்ற இந்த சமன்பாட்டிற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படவில்லை என்பது உங்களுக்கு தெரியுமா? (ஒளிமின் விளைவிற்கான சமன்பாட்டிற்காகவே வழங்கப்பட்டது)
ஐன்ஸ்டீனின் இந்த E=Mc2சமன்பாட்டினை பயன்படுத்தியே ரூதர்போர்ட் என்பவர் அணுகுண்டினை வடிவமைத்தார்.
இந்த சமன்பாட்டினை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தித்தான் அணுக்கரு உலைகளில் அணுசக்தி உருவாக்கப்படுகிறது.
அணுக்கரு உலைகளில் உருவாக்கப்படும் அணுசக்திதான் இனிவரும் நாட்களை வழிநடத்தும் என்பது எதிர்கால உண்மை.
98 கருத்துரைகள்:
ரோஜா பூந்தோட்டத்திற்கு இனிய வணக்கங்கள் :)
//கடுகு சைஸ் பொருளை வச்சு இந்த உலகத்தை அழிக்க முடியுமா? என்று கேட்டால் முடியும் என்பது தான் அறிவியல் உண்மை. இந்த ஆற்றலை உலகை அழிக்க பயன்படுத்தாது, ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு கூட பயன்படுத்தலாம். //
முற்றிலும் உண்மையான கருத்து பாரதி சூப்பரா சொல்லியிருக்கீங்க :)
அறிவியல் எனக்கு மிகவும் பிடித்த பாடம் அறிவியல் சம்பந்தமான தகவல்களை பதிவிட்டமைக்கு ரோஜா பூந்தோட்டத்திற்கு சிறப்பு நன்றிகள் பல... :))
//ஐன்ஸ்டீனின் புகழ்பெற்ற இந்த சமன்பாட்டிற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படவில்லை என்பது உங்களுக்கு தெரியுமா? (ஒளிமின் விளைவிற்கான சமன்பாட்டிற்காகவே வழங்கப்பட்டது)//
ஐன்ஸ்டீனின் வரலாற்று தகவல்கள் என்னிடம் உள்ளது அடுத்த வாரத்தில் பதிவிடுகிறேன்...
அருமையான விளக்கம் சகோதரா... நன்றிகள்..
எளிய நடையில் விளக்கப்பட்டு இருக்கும், நல்ல பதிவு.. இது போல, பல பதிவுகளை எதிர்ப்பார்க்கிறோம்.
சகோதரா ஐன்ஸ்டினின் TIME RELATED THEORY ஐ விளக்கி ஒரு சிறு கதையாக எனது ஆரம்ப காலத்தில் நான் ஒரு பதிவு இட்டேன் முடிந்தால் பாருங்கள்..
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
பில்கேட்சை ஏழையாக்கப் போகும் இந்தியன்..!
மிக அருமையான விளக்கம்...
மிக அருமையான விளக்கம்... சரி 2012 ல் உலகம் அழியும் என்று சொல்வதை பற்றி உங்கள் கருத்து என்ன?
அறிவு பூர்வமான சிந்தனை கட்டுரை.. வாழ்த்துக்கள்
நல்ல கிளப்புறாங்கைய்யா பீதிய!!!.
உபயோகமான தகவல். கடுகு சிறுத்தாலும் அதற்கு வேகம் மட்டும் கூடாது சாமி!
படிக்கும் போது ஒழுங்கா படித்து இருந்தால் எனக்கும் இது தெரிந்திருக்கும் பரவாயில்லை நீங்கள் அருமையாக கூறி இருக்கீங்க. இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களை தொடர்ந்து கூறுங்க பாரதி
அருமையான விளக்கம்... நம்ம Study centre பக்கம் வாங்க..
ஒரு செகண்டில் மூணு லட்சம் மீட்டர் வேகத்தில்.........//////////////
மூணு லட்சம் கிலோ மீட்டர் ........வினாடிக்கு ஒரு லச்த்தி எண்பத்திஆறாயிரம் மையில் வேகம்
எளிமையான அருமையான பதிவு
நல்ல தகவல்,
மாற்றம் என்பதே என்றும் மாறாதது!
பிரமாதமான கட்டுரை.. பாராட்டுக்கள்..
ஒரே ஒரு விஷயம் மட்டும் மாறாததாக சொல்லப்படுகிறது. //
ஒளி மட்டுமே மாறாததுன்னு அவர் சொன்னாரு....
அருமையான கட்டுரை.
நன்றி.
கொசுறுத்தகவல்: அந்த ரூதர்ஃபோர்ட் நியூஸிக்காரர். (தற்பெருமைதான் எனக்கு)
//Arun Prasath said...
ஒரே ஒரு விஷயம் மட்டும் மாறாததாக சொல்லப்படுகிறது. //
ஒளி மட்டுமே மாறாததுன்னு அவர் சொன்னாரு....//
கலக்கிட்டீங்க. அருண்.
ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாட்டின்படி ஒளியின் திசைவேகம் மட்டுமே மாறாதது.
நல்ல தகவல்
(எல்லாம் மாறிவிடும் என்று சொல்லும் ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாட்டில் ஒரே ஒரு விஷயம் மட்டும் மாறாததாக சொல்லப்படுகிறது. அது என்னவென்று சொல்ல முடியுமா?)
அதாங்க " மாற்றம்"! அருமையான பதிவு நண்பா! நல்ல காரமான சூப் குடிக்க நம்ம ஏரியாவுக்கு வாங்க! ( அப்போ மத்தவங்க எல்லாம் தீய்ஞ்சு போன பழைய கூழையா ஊத்துறாங்க? லொள்ள பாரு! )
மாணவர்களுக்கு ரொம்பவே பயனுள்ள கட்டுரை.. இதேமாதிரி இன்னும் நிறைய எழுதுங்க.
கலக்கிட்டீங்க. அருண்.
ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாட்டின்படி ஒளியின் திசைவேகம் மட்டுமே மாறாதது. ////
ஹா ஹா ஹா எனக்கே விருது....
யாருப்பா... ஆட்டோகிராப்பா... லைன் ல நில்லுங்க....
சரி சரி ஒரே போட்டோ தான்.... டைம் ஆச்சுல்ல....
குட் சார்
நல்ல விளக்கம்!
அருமையான பதிவு
அறிவியல் கருத்துக்களை எளிமையா சொல்லி இருக்கீங்க!
அதே நேரத்தில் ஒளியின் வேகத்தைவிட அதிகமாக எதுவும் செல்ல முடியாது..!
இது போல நல்ல அறிவியல் விஷ்யங்களைத் தொடருங்கள்.....
பன்னிக்குட்டி ராம்சாமி sir ..
உங்களைப்பற்றி பயோடேட்டா போடலாம் என்று இருக்கிறோம். பதிவை அனுப்பி முன் அனுமதி பெற வேண்டுமா?
ஐன்ஸ்டைனுடைய சார்பியல் தத்துவங்கள் நிருவப்பட முடியாததே அவருக்கு அதற்காக நோபல் பரிசு கொடுக்கப்படாததற்குக் காரணம், நோபல் பரிசு வழங்குவதற்கு, முழு ஆதாரத்துடன் கூடிய கண்டுபிடிப்பு அவசியம்.
//////பாரத்... பாரதி... said...
பன்னிக்குட்டி ராம்சாமி sir ..
உங்களைப்பற்றி பயோடேட்டா போடலாம் என்று இருக்கிறோம். பதிவை அனுப்பி முன் அனுமதி பெற வேண்டுமா?/////
முன் அனுமதியா...... ஹஹஹா.... தேவையே இல்லை, நமக்கு இலவசமா வெளம்பரம் போட போடுறிங்க......!
நன்றி..நன்றி.. அடிச்சு தூள் கிளப்பிடறோம்..
//// பாரத்... பாரதி... said...
நன்றி..நன்றி.. அடிச்சு தூள் கிளப்பிடறோம்..///////
கலக்குங்க.....!
நன்றி..நன்றி..
அருமையான அறிவியல் கட்டுரை..தொடர்ந்து இதே போன்ற கட்டுரைகளை எதிர்பார்க்கிறேன்..
நினைவை விட்டு நீண்ட தூரம் சென்ற விஷயங்கள்............
இதுவும் தேவையான ஒன்றுதான்!
நன்றி!
பாரத்... பாரதி... said...
பன்னிக்குட்டி ராம்சாமி sir ..
உங்களைப்பற்றி பயோடேட்டா போடலாம் என்று இருக்கிறோம். பதிவை அனுப்பி முன் அனுமதி பெற வேண்டுமா?////
எதுக்கும் அவருக்கு ஒரு காப்பி அனுப்புங்க....
நாலு கம்பனிக்கு அனுப்பலாம் பாருங்க.....
பாவம் வேலைவெட்டி இல்லாம சும்மாதான் இருக்காரு!
////வைகை said...
பாரத்... பாரதி... said...
பன்னிக்குட்டி ராம்சாமி sir ..
உங்களைப்பற்றி பயோடேட்டா போடலாம் என்று இருக்கிறோம். பதிவை அனுப்பி முன் அனுமதி பெற வேண்டுமா?////
எதுக்கும் அவருக்கு ஒரு காப்பி அனுப்புங்க....
நாலு கம்பனிக்கு அனுப்பலாம் பாருங்க.....
பாவம் வேலைவெட்டி இல்லாம சும்மாதான் இருக்காரு!/////
ங்கொக்காமக்கா..... நாட்ல இப்படித்தான் ரொம்ப பேரு நமைச்சல் எடுத்து திரியறானுக.... சும்மா இருக்க கூட விடமாட்டேங்கிறானுங்க.... சே....!
Very nice post in which u have explained complex concept in a simple manner.
Then, Velocity of Light is the only thing which remains constant.. Right?
அட, அருண் முந்திகிட்டியா? ஆனா, வெறுமனே ஒளினு மட்டும் சொல்லக்கூடாது.. பாரத் பாரதி சொல்லியிருக்கிற மாதிரி ஒளியின் திசைவேகம்னு சொல்லனும் :-)
அட விடுங்க.. அவரு சுற்றுலா போகிற அவசரத்தில் திசைவேகத்தை மறந்துட்டாரு..
@ பாரத்...பாரதி..
வாஸ்தவமான பேச்சு @ அருண்.. :-)
மேலும் ஒரு தகவல்: இப்போ இருக்கிற உபகரணங்களைப் பயன்படுத்தி ஒளியின் திசைவேகத்திற்கு இணையாக எந்த பொருளையும் செலுத்த முடியாது. (இது சரிதானே?)
///// நாகராஜசோழன் MA said...
மேலும் ஒரு தகவல்: இப்போ இருக்கிற உபகரணங்களைப் பயன்படுத்தி ஒளியின் திசைவேகத்திற்கு இணையாக எந்த பொருளையும் செலுத்த முடியாது. (இது சரிதானே?)/////
இப்போன்னு இல்ல, எப்பவுமே முடியாதுன்னுதான் நினைக்கிறேன். ஏன்னா ஒரு பொருள் ஒளியின் திசைவேகத்தை அடையனும்னா அதன் நிறை (mass) ஜீரோ ஆகிடும் அதாவது அது பொருளாக இருக்கமுடியாது, அலைவடிவமாக (wave) மாறிவிடும், ஒளித்துகளான போட்டோனுக்கு (photon) நிறை கிடையாது....
உண்மை பன்னிக்குட்டியாரே... நாம் ஒளியின் திசைவேகத்தில் செல்ல முயன்றால் சதைகள் சிதறிவிடும் வாய்ப்பு உள்ளது.
நாம் புள்ளி நிறையாக (point mass) இருப்பின் இது சாத்தியம் தான்.
அதனால் தான் கடுகு சைஸ் பொருள் என்று மட்டும் சொல்கிறார்கள்.
கடுகு ஒளியின் திசைவேகத்தில். செல்லமுயலும் போதே பொரிந்து விடும்...
@ ராம்ஸ் அண்ணா
Waves & Photons பத்தி பேசிட்டீங்க.. ஒளியின் dual nature பத்திக் கொஞ்சம் சொல்லுங்களேன் :)
பன்னிக்குட்டியார் எங்கிருந்தாலும் விழா மேடைக்கு வரவும்..
இதுக்கெல்லாம் ஒரு தனி ப்ளாக் வெச்சு எழுதினாலுமே பத்தாது.. கமெண்ட்ஸ்ல என்ன சொல்லனு கேட்காதீங்க.. :-)
நல்ல விளக்கம் பதிவுக்கு நன்றி..
//////சுபத்ரா said...
@ ராம்ஸ் அண்ணா
Waves & Photons பத்தி பேசிட்டீங்க.. ஒளியின் dual nature பத்திக் கொஞ்சம் சொல்லுங்களேன் :)//////
இப்படி மடக்குனா என்ன பண்றது?
ஒளி சில நேரங்கள்ல துகளாகவும், சில நேரங்கள்ல அலையாவும் இயங்குது (ஒளி மட்டுமல்ல, எலக்ட்ரான், நியூட்ரான் கூட), உதாரணத்துக்கு, ஃபோட்டோ எலக்ட்ரிக் எஃபெக்ட்ல, ஒளி துகளாத்தான் இயங்குது. அப்போதுதான் அப்படி ஒரு விளைவே நடக்க முடியும், அதே நேரம், ஒளி எதிரொலித்தல் (reflection) போன்றவை ஒளி அலையாக இயங்கினால் தான் நடக்க முடியும், இப்படித்தான் இருவிதமாகவும் ஒளி செயல்படுகிறது. எலக்ட்ரானும் அப்படித்தான், குறைந்த வேகத்தில் இருக்கும் போது துகளாகவும், அதிக வேகத்தில் அதாவது ஒளியின் வேகத்தில் 90% தை எட்டும் போது அலையாகவும் மாறிவிடுகிறது, எலக்ட்ரானின் இந்தப்பண்பை வைத்துதான் எலட்ரான் மைக்ராஸ்கோப் இயங்குகிறது...!
//குறைந்த வேகத்தில் இருக்கும் போது துகளாகவும், அதிக வேகத்தில் அதாவது ஒளியின் வேகத்தில் 90% தை எட்டும் போது அலையாகவும் மாறிவிடுகிறது,//
குறைந்த ஆற்றல் இருக்கும் போது அலை வடிவத்தையும், அதிக ஆற்றல் இருக்கும் போது துகள் வடிவத்தையும் பெறும் என்பது உண்மைதானே..
ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடின்படி ஒரு பொருளின் நிறை எவ்வாறு மாறும் என்பதை இங்கு பார்க்கவும்.
//குறைந்த வேகத்தில் இருக்கும் போது துகளாகவும், அதிக வேகத்தில் அதாவது ஒளியின் வேகத்தில் 90% தை எட்டும் போது அலையாகவும் மாறிவிடுகிறது//
R u sure? ஏன்னா, ஒளி எப்போ துகளாகவும் எப்போ அலையாகவும் செயல்படுதுங்குறதே தெரியாதுனு நினைச்சேன்...!
http://www.youtube.com/watch?v=DfPeprQ7oGc
//////சுபத்ரா said...
//குறைந்த வேகத்தில் இருக்கும் போது துகளாகவும், அதிக வேகத்தில் அதாவது ஒளியின் வேகத்தில் 90% தை எட்டும் போது அலையாகவும் மாறிவிடுகிறது//
R u sure? ஏன்னா, ஒளி எப்போ துகளாகவும் எப்போ அலையாகவும் செயல்படுதுங்குறதே தெரியாதுனு நினைச்சேன்...!/////
அது எலக்ட்ரானுக்குத்தான், ஏனென்றால ஒளியின் வேகம் மாறுவதில்லையே?
ஆ....
இத்தனை விஷயம் தெரிஞ்சவுங்க இருக்கீங்களா?
அதிகபிரசங்கித்தனமா பதிவு எழுதிட்டமோ?
என்ன .. ஆளாளுக்கு அள்ளி விடராங்க... எஸ்கேப்
//அது எலக்ட்ரானுக்குத்தான்//
then, what is "dual nature of light" ?
(மன்னிக்கவும்.. தமிழில் சரியாக என்ன பதம் எனத் தெரியவில்லை)
பன்னிக்குட்டியார் சிக்கி விட்டார்.
/////சுபத்ரா said...
//அது எலக்ட்ரானுக்குத்தான்//
then, what is "dual nature of light" ?
(மன்னிக்கவும்.. தமிழில் சரியாக என்ன பதம் எனத் தெரியவில்லை)/////
அதாவது இந்த wave-particle theory லைட்டிற்கு மட்டுமே இல்லை, எலட்ரான் போன்ற துகளுக்கும் பொருந்தும் என்பதற்காகவே அந்த எடுத்துக்காட்டு. மற்றபடி ஒளி துகளாகவும், அலையாகவும் இயங்குவதுதான் dual nature of light
//dual nature of light" ?//
என்பதற்கு ஒளியின் இருமைத்தன்மை அல்லது இரட்டைப்பண்பு என்று தமிழில் சொல்வார்கள்.
////// பாரத்... பாரதி... said...
பன்னிக்குட்டியார் சிக்கி விட்டார்./////
பாவிகளா..... எனக்கே அல்வாவா......?
டிபிராலியின் சமன்பாட்டின்படி பருப்பொருள்(matter) அனைத்திற்கும் இரட்டைப்பண்பு உண்டு. நிறையும்(mass), அடர்த்தியும்(density) உள்ள அனைத்துப்பொருளும் பருப்பொருளே. ஆதலால் எலக்ட்ரான் என்பதற்கு இரட்டைப்பண்பு உண்டு.
பருப்பொருளைப்போலவே ஆற்றலுக்கும் இருமைப்பண்பு உண்டு. ஒளி என்பதும் ஒரு வகையான ஆற்றல் என்பதால் அதற்கும் இருமைப்பண்பு உண்டு.
நன்றி ராம்ஸ் அண்ணா & பாரத் பாரதி.
பள்ளிக்கூடத்துல படிக்கிற காலத்துலயே இந்தப் போஸ்ட்ல அழகா சொல்லியிருக்குற மாதிரி சொல்லிக் கொடுத்திருந்தாங்கனா இந்நேரம் இன்னும் நிறைய புரிஞ்சிருக்குமோ? (அல்லது அப்போ எனக்குத் தான் புரியலையோ, தெரியல)
படிக்கும் ஆவலைத் தூண்டும் இதுபோன்ற பதிவுகளை வரவேற்கிறேன். நன்றி பாரத் பாரதி...!
நல்ல எளிமையான விளக்கம், நல்ல பதிவு பாரதி ...
// ஐம்பது கிலோ எடை இருப்பவர், நூறு கிலோ மீட்டர் வேகத்தில் வந்து உங்கள் மீது மோதினால், "பிப்டி கேஜி தாஜ்மகால்" அப்படினு பாட்டு பாட முடியுமா? //
ஹ ஹ ஹா..
சின்ன சின்ன விஷயங்களுக்கும் நகைச்சுவையாய் தரும் விளக்கங்கள் அழகு...
வரவேற்க கூடிய பதிவு இது போன்று பதிவுகளை தேடித்தேடி படிக்கும் பழக்கமுடையவன் என்ற முறையில் நன்றிகள்...
தியரிகள் பற்றிய பதிவகளை நிறைய எழுதுங்கள். அவற்றை படிப்பதில் ஆர்வம் அதிகம்.
பகிர்வுக்கு நன்றி
உபயோகமான தகவல்.
மிகவும் பயனுள்ள அறிவியல் பகிர்வு...
நன்றிகள்..
சித்தாரா
முதன் முதலாய் என் இனிய உறவுக்காய்
தங்கள் விளக்கம் இலகுவாக விளங்கக் கூடியதாக இருக்கிறது...
தங்கள் விளக்கம் இலகுவாக விளங்கக் கூடியதாக இருக்கிறது...
நல்ல பதிவு..ஆனால்:
//வேகத்தை இன்னும் அதிகரித்து ஒளியின் திசைவேகத்தின் இருமடி வேகத்தில் செலுத்தினால், அதாவது C2 = 9 x 1016 ms-1 என்னும் வேகத்தில் மோதினால் எப்படியிருக்கும்//
சமுத்ரா: வேகத்தை 'C' -க்கு மேல் அதிகரிக்க முடியாது என்பது ஐன்ஸ்டீனின் கண்டுபிடிப்பு...we cant get C2
//ஐம்பது கிலோ எடை, இயக்கத்தில் வேகமாக வந்து மோதியதால் எடை அதிகமாகி விடுமல்லவா?//
சமுத்ரா: தயவு செய்து 'நிறை' என்ற வார்த்தையை உபயோகிக்கவும்..இயற்பியலில் எடை என்பது outdated concept ...
//இவ்வாறு இயங்கும் பொருளொன்றின் திசைவேகம் மாறுவதன் காரணமாக ஏற்படும் நிறை அதிகரிப்பை ஆற்றலாக மாற்ற இயலும்//
சமுத்ரா:wrong..இங்கே பொருள் இயங்குவதற்குக் கொடுக்கப்படும் ஆற்றல் தான் நிறை அதிகரிப்பாக உணரப்படுகிறது..உதாரணமாக நம்மால் ஒரு பொருளை அதிக பட்சம் C வேகத்தில் செலுத்த முடியும்..அதற்க்கு மேல் செலுத்த முயற்சித்தால் நாம் கொடுக்கும் ஆற்றல் (எஞ்சினின் ஆற்றல்) நிறையாக மாறி பொருள் பெருக்க ஆரம்பிக்குமே தவிர அந்த ஆற்றல் வேகத்தை அதிகரிக்கப் பயன்படாது...
இன்னொன்று E -MC2 என்பதற்கும் ஒரு பொருளின் வேகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை..
நிறைய பேர் படிக்கிறார்கள்...கொஞ்சம் கவனமாக எழுதவும்...அல்லது நன்றாகப் படித்து விட்டு எழுதவும்..
ஐன்ஸ்டீனின் புகழ்பெற்ற இந்த சமன்பாட்டிற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படவில்லை என்பது உங்களுக்கு தெரியுமா? (ஒளிமின் விளைவிற்கான சமன்பாட்டிற்காகவே வழங்கப்பட்டது)
ஐன்ஸ்டீனின் வரலாற்று தகவல் --Thank you.
இந்தப் பதிவிலும் பின்னூட்டங்களிலும் ஏகத்துக்கும் தவறுகள். எல்லோரும் ஐன்ஸ்டீனைப் பற்றியும் அவரது தியரியைப் பத்தியும் உண்மை என்னவோ அதை விடுத்து, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் + உங்கள் கற்பனையையும் கலந்து அடித்து விட்டிருக்கிறீர்கள். எதைச் சொல்வது எதை விடுவதென்று தெரியவில்லை. \\வேகத்தை இன்னும் அதிகரித்து ஒளியின் திசைவேகத்தின் இருமடி வேகத்தில் செலுத்தினால், அதாவது C2 = 9 x 1016 ms-1 என்னும் வேகத்தில் மோதினால் எப்படியிருக்கும்?\\ ஒளியின் வேகத்தில் செல்ல வேண்டுமானால் நிறை [mass]=0 ஆக இருக்க வேண்டும். அவ்வாறில்லாத எந்த துகளும்/பொருளும் ஒளியின் வேகத்தை அடைய முடியாது.
//இவ்வாறு இயங்கும் பொருளொன்றின் திசைவேகம் மாறுவதன் காரணமாக ஏற்படும் நிறை அதிகரிப்பை ஆற்றலாக மாற்ற இயலும் என்பது தான் E=Mc2 சமன்பாட்டின் தத்துவமாகும்.அதன் பெயரே நிறை ஆற்றல் இணைமாற்றுச்சமன்பாடு என்பது தான்.// இதைப் புரிய வைக்கிறது கொஞ்சம் கடினம். இருந்தாலும் முயல்கிறேன். நாம் பள்ளிகளில் நிலையாற்றில், இயக்க ஆற்றல் என்று படித்திருப்போம். ஒரு பொருள் h உயரத்தில் இருந்தால் அதன் நிலையாற்றல் mgh, திசை வேகம் v யில் சென்று கொண்டிருந்தால் அதன் இயக்க ஆற்றல் 1/2*mv2 இவை இரண்டின் கூட்டுத் தொகை [வெளிப்புற விசைகள் செயல்படாத வரை] மாறாது. ஆனால் நிலையாற்றல் இயக்க ஆற்றலாகவும், இயக்க ஆற்றல் நிலயாற்றலாகவும் மாற இயலும், ஆனால் இரண்டின் Total மாறாது. இங்கே ஐன்ஸ்டீன் என்ன சொல்ல வருகிறார் என்றால் நிறையை [mass] யும் ஒரு ஆற்றலாக கருதலாம். ஆற்றல் என்றால் எவ்வளவு? நிறை m [Kg] கொண்ட ஒரு பொருளை mc2 [Unit:Joules] ஆற்றலாகக் கருதலாம். E Joules ஆற்றலை E/c2 எடையாகக் கருதலாம். [இங்கே c என்பது ஒளியின் வேகம்] ஆற்றல் அழிவின்மை விதி இப்போது திருத்தி எழுதப் பட்டது. அதாவது சம எடை கொண்ட எலக்ட்ரானும் பாசிட்ரானும் [எலக்ட்ரானேதான் மின்னூட்டம் மட்டும் சம அளவில் +ve] ஒரு அணுவின் அருகே சந்திக்கும் போது அவை ஆற்றலாக வெளிப்பட்டால் அது அந்த அணுவுக்கு கொடுக்கும் கொஞ்சம் ஆற்றலைத் தவிர்த்து, கிட்டத் தட்ட 2Mc2 [எலக்ட்ரானின் எடையை ஒளியின் இருமடியால் பெருக்கி வருவதைப் போல இரு மடங்கு] இருக்கும். அது சரி ஒளி போட்டனாக வருகிறதே photon- க்கும் ஆற்றல் உண்டல்லாவா? ஆமாம். அந்த ஆற்றலை எடையாகக் கருதலாம் அல்லவா? சரிதான். அப்படியானால் பொருட்களை புவி இழுக்கிறதே, புவியை சூரியை இழுக்கிறதே, அது போல இந்த photon- னும் நிறையீர்ப்பு விசைக்கு [Gravitational force] உட்படுமா? ஆம் என்றார் ஐன்ஸ்டீன். அதை எப்படி பார்ப்பது? சாதாரண பொருட்கள் ஒளியை பார்க்கும் அளவுக்கு வளைக்காது. சூரியன் போன்ற பெரிய பொருள் இழுத்தல் அதை பூமி மாதிரி தொலைவில் இருந்து பார்த்தல் ஒரு வேலை ஒளி வளைக்கப் படுவதைப் பார்க்கலாம். சூரியனுக்குப் பின்னால் இருக்கும் விண்மீன்களின் ஒளி சூரியனைக் கடக்கும் போது பாதை வளையும், ஆனால் சூரிய ஒளியில் விண்மீன்களே தெரியாதே!! அதான் சூரிய கிரகனாம் இருக்கே!! May 29,1919 அன்று ஆப்பரிக்க நாட்டில் ஒரு பிரிட்டிஷ் கார வானவியாளர் சென்று சூரியனின் பின்னல் ஒள்ள குறிப்பிட்ட விண்மீன்களைப் படமெடுத்தார். சாதாரண நாட்களில் அவை எப்படி இருக்கும் என்ற படத்தோடு ஒப்பிட்டார். ஒளி வளைக்கப் பட்டடுள்ளது தெரிந்தது, அது ஐன்ஸ்டீன் சொன்ன அளவுக்கே வளைக்கப் பட்டிருந்தது. அன்றுதான், ஐன்ஸ்டீன்புகழ் உலகெங்கும் பரவியது!!
\\ஐன்ஸ்டீனின் புகழ்பெற்ற இந்த சமன்பாட்டிற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படவில்லை என்பது உங்களுக்கு தெரியுமா?\\ இது நோபல் கமிட்டியின் தில்லு முல்லு வேலை.
@பன்னிக்குட்டி ராம்சாமி said...
\\ஐன்ஸ்டைனுடைய சார்பியல் தத்துவங்கள் நிருவப்பட முடியாததே அவருக்கு அதற்காக நோபல் பரிசு கொடுக்கப்படாததற்குக் காரணம், நோபல் பரிசு வழங்குவதற்கு, முழு ஆதாரத்துடன் கூடிய கண்டுபிடிப்பு அவசியம்.\\ Piglet Rams அண்ணே, நான் என்னைக்காச்சும் வேதியியலைப் பத்தி எதையாச்சும் தப்பா பேசியிருக்கேனா? இப்படி என்னோட physics -ஐ நீங்க கடிச்சு குதருணா என் மனசு எவ்வளவு பாடு படும், யோசிச்சு பாத்தீங்களா? நோபல் பறயு ஓபாமாவுக்குக் கூடத்தான் குடுத்தானுங்க, அந்த ஆள் அமைதிக்காக என்ன சாதிச்சான்னு சொல்ல முடியுமா? மைசூருக்கும் மைசூர் பாகுக்கும் உள்ள சம்பந்தம் கூட அமைதிக்கும் இந்த ஆளுக்கும் கிடையாது!!. ஆக நோபல் பரிசு ஒரு அரசியல், கன்பியூஸ் ஆக வேண்டாம். ஐன்ஸ்டைனுடைய சார்பியல் தத்துவங்கள் அத்தனையும் சோதனைகளால் நிரூபணம் ஆனவை. வேகத்தால் பொருட்களின் எடை மாறுதல் சாதாரண Cyclotron, Betatron போன்ற துகள் முடிக்கிகளிலேயே சரி பார்க்கப் பட்டது. துகளை முடிக்க வேகத்தை அதிகரித்தார்கள், அவை செல்லும் வட்டப் பாதையின் ஆரம் [Radius] எவ்வளவு இருக்க வேண்டுமென்று பார்த்தார்கள், ஆனால் கணக்கிட்டதை விடக் அதிகமாக இருந்தது. ஐன்ஸ்டீனின் தியரிப் படி போட்டால் சரியாக வந்தது. அதே மாதிரி அளவிடும் காலம் நிலையாக உள்ள ஒருத்தருக்கும் இயங்கிக் கொண்டிருக்கும் ஒருத்தருக்கும் மாறுபடும் என்றார்கள். இதை Pi-Meson Decay சோதனைகள் மூலம் நிரூபித்தார்கள், அதாவது இந்த துகள் உருவாளன சில பிகோ செகண்டுகளில் செத்துவிடும். அதிக பட்சம் இரண்டு மீட்டருக்கு மேல் பயணிக்க முடியாது. ஆனால் வலி மண்டலத்தில் முந்நூறு கி.மீ. தொலைவிர்க்காப்பல் உருவாகும் மேசான்கள் புவியை அடைகின்றன? எப்படி? அவை வேகமாக வரும் அண்டவெளித் துகள்களால் உருவாக்கப் படுவதால், அதிக காலம் உயிர் வாழ்கின்றன, எனவே புவியை அடைகின்றன. ஆனால் அவற்றைப் பொறுத்தவரை, வேகமாகச் செல்லும் ஒரு Observer -க்கு நீளம் குறைந்து விடும், அதாவது 200 Km தூரம் அதுக்கு இரண்டு மீட்டராகத் தெரியும். ஹா... ஹா... ஹா.... ஒளியானது நிறையால் ஈர்க்கப் படுமென்றால் அதுவும் சரிபார்க்கப் பட்டது. இது மட்டுமல்ல Theory of Relativity சொன்ன அத்தனை predictions களும் இன்றைவரை பொய்க்க வில்லை. இதற்க்கு மேல் எப்படியோ. [One thousand Experiments whose outcome are as per Theory don't prove your theory, but one experiment with outcome against the theory, disproves it!!-Albert Einstein].
@பன்னிக்குட்டி ராம்சாமி said...
\\ஒளி சில நேரங்கள்ல துகளாகவும், சில நேரங்கள்ல அலையாவும் இயங்குது (ஒளி மட்டுமல்ல, எலக்ட்ரான், நியூட்ரான் கூட)\\ ஒளி (ஒளி மட்டுமல்ல, எலக்ட்ரான், நியூட்ரான் கூட) எப்படி இயங்குதுன்னு யாருக்குமே தெரியாது. அது அலையா, இல்லை துகளா? யாராலும் பதில் சொல்ல முடியாது. அப்படின்னா "Wave Particle Duality" என்பதன் பொருள் என்ன? நீங்கள் ஒரு சோதனையை வடிவமைக்கிறீர்கள், அதில் நீங்கள் ஆராயப் போகும் துகளின்/பொருளின் அலை இயல்பையோ [Wave Nature] அல்லது துகள் இயல்பையோ [Particle Nature] தான் எந்த ஒரு குறிப்பிட்ட சமயத்திலும் பார்க்க முடியும். இரண்டையும் ஒரு சேர தெரியுமாறு உங்களால் ஒரு சோதனையை வடிவமைக்கவே முடியாது. ஒன்னு இது இல்லைன்னா அது. அதே சமயத்தில், நம்மூரு டவுன் பஸ்சுக்கு கூட அலைப் பண்பு இருக்கு, [வண்டி குலுங்குதே அதா என்று ஜோக்கு அடிக்கக் கூடாது, பிச்சுபுடுவேன், பிச்சு!!] டவுன் பஸ்ஸின் அலைநீளம்=[ h/12 Tons*60 Km/hr] மீட்டர்கள். [இங்கு h என்பது பிளான்க் மாறிலி, மற்றவற்றை கிலோகிராம், மீட்டார், வினாடிகளில் மாற்றிப் போட்டால் விடை கிடைக்கும். ஆனால் அந்த விடைக்கு அர்த்தம் எதுவுமே இருக்காது, ஏனெனில் அவ்வளவு சிறிய அலை நீளத்தை அளக்கும் அளவுக்கு எந்தக் கருவியும் மனுஷன் இதுவரைக்கும் கண்டுபிடிக்கவில்லை, இதுக்கு மேலும் முடியாதுங்கனா!! ஹி..ஹி..ஹி...]. X-rays, Gamma Rays போன்றவை துகள் பண்புகள் உண்டு என்பதை நிரூபிக்க சோதனைகள் உள்ளன .
@ சமுத்ரா said...
\\உதாரணமாக நம்மால் ஒரு பொருளை அதிக பட்சம் C வேகத்தில் செலுத்த முடியும்.\\ ஒரு பொருளின் நிறை [mass ] =௦ ஆக இருந்தால் மாறுமே ஒளியின் வேகத்தை யடைய முடியும். மற்ற எதையும் ஒளியின் வேகத்திர்க்குக் கொண்டு செல்ல முடியாது. அவ்வாறு செல்ல வேண்டுமால் அதன் எடை Infinity ஆகி விடும்.
@ சமுத்ரா said...
\\இன்னொன்று E -MC2 என்பதற்கும் ஒரு பொருளின் வேகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.\\ ஒரு பொருளின் நிறை M [mass] வேகத்திற்கேற்றவாறு மாறுபடும். வேகம் அதிகரிக்கும் போது நிறையும் M அதிகரிக்கும். M அதிகரித்தால் E யும் அதிகரிக்கும், ஏனெனில் E=MC2.
To remove the misconceptions About the over hyped E=MC2 Please read the following page.
http://www.einstein-online.info/spotlights/atombombe
.
//////Jayadev Das said...
\\ஐன்ஸ்டீனின் புகழ்பெற்ற இந்த சமன்பாட்டிற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படவில்லை என்பது உங்களுக்கு தெரியுமா?\\ இது நோபல் கமிட்டியின் தில்லு முல்லு வேலை./////
தலைவரே, நோபல் பரிசு ஐன்ஸ்டைனுக்கு கொடுக்கலாம் என்று முடிவு செய்யப்பட்ட போது, அவருடைய போட்டோ எலக்ட்ரிசிட்டி தியரி மட்டுமே பரிசோதனைகளால் நிரூபிக்கப் பட்டிருந்தது. நீங்கள் சொல்லும் பரிசோதனைகள் அதற்கு பின்பே செய்யப்பட்டதாக ஞாபகம். நீருபிக்கப் படவே இல்லை என்று நான் சொல்லவில்லை. அச்சமயத்தில் நோபல் பரிசிற்கு ஏன் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்றே கூறினேன்.
Key Staff - Manhattan Project
Scientists Who Invented the Atomic Bomb under the Manhattan Project: Robert Oppenheimer, David Bohm, Leo Szilard, Eugene Wigner, Otto Frisch, Rudolf Peierls, Felix Bloch, Niels Bohr, Emilio Segre, James Franck, Enrico Fermi, Klaus Fuchs and Edward Teller.
//அச்சமயத்தில் நோபல் பரிசிற்கு ஏன் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்றே கூறினேன்.// இதுவும் யோசிக்கப் பட வேண்டியதுதான். அது சரி நிரூபிக்கப் பட்டதுக்கப்புறமும் ஏன் கொடுக்க வில்லை? இதை என் கேட்கிறேன்னா, அந்த சமயத்துல கண்டுபிடிப்புன்ன பெரும்பாலும், எதையோ பிடிக்கப் பொறி வச்சா வேறு ஏதோ வந்து மாட்டும். உதாரணம்; X-Ray, Radio Activity, Electron etc. அந்த மாதிரி கண்டுபிடிப்புகள் வரும். அல்லது முன்னர் வேறு யாராவது செய்த கடும் உழைப்பில் கொஞ்சம் மெருகேற்றி புதுசா எதாச்சும் வரும். உதாரணம் கெப்ளர் விதிகளை வைத்து நியூட்டன் Law of Gravitation கண்டுபிடிச்சது. ஆனா ஐன்ஸ்டீன் தியரி அத்தனையும் Non-Intuitive, proven, அவற்றை அவரைத் தவிர வேறு யாராலும் செய்திருக்க முடியாது என்பது போன்ற தியரிகள். இருந்தும் அவை எவற்றுக்குமே நோபல் பரிசு கொடுக்கப் பட வில்லை. Photo Electric Effect ற்கு நோபல் பரிசு குடுத்தார்கள், அதன் ஏற்ப்புறையில் அவர் அதைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் தனது "General Theory of Relativity " பற்றி மட்டுமே பேசினார்.
சார், நல்ல பதிவு..
ஆனா எனக்கு கொஞ்சம் டவுட்/மாற்றுக் கருத்து இருக்கு. தப்புன்னா கொஞ்சம் திருத்தி புரிய வச்சுடுங்க...
உங்களோட உதாரணத்தின்படி நூறு கிலோமீட்டர் வேகத்தில் வரும்போது, எடை அவ்வளவாக அதிகரிக்காது. மாறாக நாம் ஜீன்ஸ் படப் பாட்டு பாடமுடியாததற்கு காரணம் momentum-உம் இனேர்ஷியாவும் தான் என நினைக்கிறேன்.
மெதுவாக மோதுபவரின் மொமேண்டத்துக்கும் நூறு கிலோமீட்டரில் மோதுபவரின் மொமேண்டத்துக்கும் பாரிய வித்தியாசம் இருக்கும். நமது உடல் என்றும் ஓய்விலேயே இருக்க முற்படுவதால் (இனேர்ஷியா) அவ்வளவு மொமேண்டத்தினை உள்வாங்கி தடுக்க முற்படும்போது டேமேஜ் ஆகிறது.
ஐன்ஸ்டீன்-இன் E=mc^2 பார்முலா திசைவேகத்தால் மாறும் ஆற்றல்/நிறையைப் பற்றி மட்டும் குறிப்பிடவில்லை. மாறாக எந்த ஒரு நிறையுள்ள பொருளையும் ஆற்றலாக மாற்றினால் எவ்வளவு ஆற்றல் கிடைக்கும் என்பதையே அது கூறுகின்றது.
உ+ம் > 1 kilo object = 9 x 10^16 Jouls
இங்கே, நிறையினை பெருக்குவதற்கு பயன்படுத்தப்படும் ஒரு மாறிலியே ஒளியின் வேகத்தின் இரண்டாம் அடுக்காகும்.
@raamasamy,
//இப்போன்னு இல்ல, எப்பவுமே முடியாதுன்னுதான் நினைக்கிறேன். ஏன்னா ஒரு பொருள் ஒளியின் திசைவேகத்தை அடையனும்னா அதன் நிறை (mass) ஜீரோ ஆகிடும் அதாவது அது பொருளாக இருக்கமுடியாது, அலைவடிவமாக (wave) மாறிவிடும், ஒளித்துகளான போட்டோனுக்கு (photon) நிறை கிடையாது....//
இதிலயும் எனக்கு மாற்றுக்கருத்து இருக்கு.. தப்புன்னா தெளிய வச்சுடுங்க ப்ளீஸ்..
எனக்குத் தெரிந்து, ஐன்ஸ்டீன் கோட்பாட்டின்படி, வேகமாக செல்லும் எந்தப் பொருளுக்கும் நிறை அதிகரித்துக்கொண்டு செல்லும். (அதை வேகமாக செல்ல வைக்க செலவிடும் சக்தியில் ஒரு பங்கு நிறையாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கும்) அப்படி ஒரு பொருள் ஒளி வேகத்தில் சென்றால், அதை மேலும் உந்தித்தள்ள முடிவிளியான சக்தி தேவைப்படுவதால், இது நடக்காத காரியம் என முடிவு கட்டப்பட்டது.
அத்துடன், வேகமாகச் செல்லும் எந்த நிறையுள்ள பொருளும் சார்பில் மெதுவாகச் செல்லும். (அப்பொருளுக்கு காலம் மெதுவாகச் செல்வதால்) அந்தப் பொருள் ஒளிவேகத்தில் செல்லும்போது, காலம் முற்றிலுமாக நின்றுவிடுவதால் அப்பொருளால் அதற்கு மேலே செல்ல முடியாது.
@ராமசாமி சார்,
//இப்போன்னு இல்ல, எப்பவுமே முடியாதுன்னுதான் நினைக்கிறேன். ஏன்னா ஒரு பொருள் ஒளியின் திசைவேகத்தை அடையனும்னா அதன் நிறை (mass) ஜீரோ ஆகிடும் அதாவது அது பொருளாக இருக்கமுடியாது, அலைவடிவமாக (wave) மாறிவிடும், ஒளித்துகளான போட்டோனுக்கு (photon) நிறை கிடையாது....//
ஒரு பொருள் வேகமாகச் செல்லும்போது அதன் நிறை அதிகரிக்கும் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள் குறையும் என்கிறீர்களே?
I second Samutra..
@ Abarajithan சார்,
நான் சொல்லி இருப்பது தியரி, அதாவது ஒளியின் வேகத்தில் செல்லும் பொருளுக்கு நிறை இருக்கமுடியாது.
ஆனால் ப்ராக்டிகலாக நடப்பது என்னவென்றால், வேகம் கூட கூட பொருளின் நிறை அதிகரிப்பதாகவே பார்ப்பவர் உணர்கிறார். சமுத்திரா சாரும் இதைத்தான் சொல்லி இருக்கிறார். நிறை உண்மையில் அதிகரிப்பதில்லை, உணரப்படுகிறது, அதுவும் பார்ப்பவரைப் பொறுத்தே, பார்ப்பவரும் அதே வேகத்தில் அதே திசையில் சென்று கொண்டிருந்தால் நிறையில் வித்தியாசம் தெரியாது.
நிறை ஜீரோவாக மாறுவது சாத்தியம் இல்லை என்பதால், ஒளிவேகத்தில் எந்தப் பொருளும் செல்ல முடியாது!
இதுதான் நான் புரிந்து கொண்டவரையில்! தவறு இருந்தால் எடுத்துக் காட்டுமாறு மற்ற நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன்!
// நிறை உண்மையில் அதிகரிப்பதில்லை, உணரப்படுகிறது, அதுவும் பார்ப்பவரைப் பொறுத்தே, பார்ப்பவரும் அதே வேகத்தில் அதே திசையில் சென்று கொண்டிருந்தால் நிறையில் வித்தியாசம் தெரியாது.// அன்புள்ள ராம்சாமி அண்ணா அவர்களே, ஐன்ஸ்டீனின் சார்பியல் கொள்கை கொஞ்சம் விசேஷமானது. இதில் முக்கிய அம்சம், "There is no absolute inertial frame of reference" என்பதாகும். அதாவது, ஒருவர் இயங்காமல், [தன்னைப் பொறுத்தவரை!!] இருக்கிறார். இன்னொருவர் இவரைப் பொறுத்து நேர்கோட்டில் மாறாத வேகத்தில் சென்றுகொண்டிருக்கிறார். அறிவியல் விதிகளைப் பொறுத்த மட்டில் இந்த இருவருக்கும் மாறாமல் ஒன்றாகவே இருக்கும். [இது எல்லா அறிவியல் விதிகளுக்கும் பொருந்தும்]. உதாரணத்திற்கு, ஒரு பொருள் 50 கி.மீ. வேகத்தில் செல்வதாக நிலையாக இருப்பவர் சொல்கிறார் என வைத்துக் கொள்வோம். அது உண்மைதான். ஆனால் அந்தப் பொருளோடு அதே வேகத்தில் செல்பவர் அந்தப் பொருள் அசையாமல் இருக்கிறது என்று சொல்வார். அதுவும் உண்மைதான். இந்த வேறு பாடு இருந்தாலும், இருவருமே அந்த பொருளின் மீது வெளிப்புற விசை எதுவும் செயல்பட வில்லை என்று ஒத்துக் கொள்வார்கள், ஏனெனில் இரண்டு பேருக்குமே முடுக்கம் [Acceleration] =௦. எனவே, F=ma=0, என்ற அறிவியல் விதி இந்த இரண்டு frame of Reference லும் உண்மை.
இப்போ, வேகத்தைப் பொறுத்து ஒரு பொருளின் எடை அதிகரிக்கிறது, அது உண்மையா இல்லையா? நிச்சயம் அதிகரிக்கும். இது ஒன்றும் மாயத் தோற்றம் இல்லை. நிஜமாவே அதிகரிக்கும். அவர் செய்யும் சோதனைகள் அத்தனையிலும் இது பிரதிபலிக்கும். அதே சமயம் அந்தப் பொருளின் வேகத்தில் பயனிப்பவருக்கு எடை குறைவாகவே இருக்கும். அப்படியென்றால் யார் சொல்வது சரி, யார் சொல்வது தவறு. இருவருமே சரிதான். இவர்தான் உசத்தி, அவர் மட்டம் என்று யாரும் இல்லை என்பதுதான் சார்பியல் கொள்கையின் விசேஷம். இரண்டுமே அவரவரைப் பொறுத்த வரை சரிதான் என்றே சார்பியல் கொள்கை கூறுகிறது. இன்னும் சொல்லப் போனால், ஒருத்தர் இயங்காமல் இருக்கிறார் என்றால், அவரைப் பொறுத்தவரை இயங்காமல் இருக்கிறார், 100 KM வேகத்தில் செல்லும் ஒருத்தர் தான் நிலையாக இருப்பதாகவும், சும்மா இருக்கும் ஆளைப் பார்த்து நீதான் 100 KM வேகத்தில் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறாய் என்றும் கூறுவார். இந்த இருவருக்குமே, தத்தம் சோதனைகளில் எல்லா அறிவியல் விதிகளும் சரி என்றே சொல்வார்கள் என்றும் கூறுகிறது.
@ராமசாமி சார்,
நிறை அதிகரிப்பது உண்மைதான். தாஸ் சார் சொல்வது போல அது சார்புடையது.
ஆனால், நிறையுடைய பொருள் ஒளிவேகத்தில் சென்றால், அதன் எடை முடிவிலியாக மாறும். பூச்சியம் ஆகாது (காரணம் சமுத்திரா சார் சொன்னது). எனவே, எந்தப் பொருளுக்கும் எடை முடிவிலியாக இருக்க முடியாது. அந்தளவுக்கு வேகத்தைக் கூட்ட எம்மால் சக்தியைக் கொடுக்க முடியாது. அதனால்தான் எந்த 'நிறை'யுடைய பொருளும் ஒளிவேகத்திலோ அல்லது அதைவிட வேகமாகவோ செல்ல முடியாது என நிறுவப்படுகின்றது.
ஆனால், நிறையற்ற எதுவும் ஒளியின் வேகத்தில் செல்ல முடியும். உதாரணம் போட்டான்கள் (இவை துகள்களாக இருந்தாலும் நிறையற்றவை எனவே கொள்ளப்படுகின்றது), ஈர்ப்பு அலைகள் (காலவெளியின் ஏற்படும் அதிர்வுகள்) போன்றவற்றால் ஒளியின் வேகத்தில் செல்ல முடிந்ததற்கு காரணம் அவற்றின் நிறை பூச்சியம் என்பதுதான்.
\\ எனவே, எந்தப் பொருளுக்கும் எடை முடிவிலியாக இருக்க முடியாது. அந்தளவுக்கு வேகத்தைக் கூட்ட எம்மால் சக்தியைக் கொடுக்க முடியாது. அதனால்தான் எந்த 'நிறை'யுடைய பொருளும் ஒளிவேகத்திலோ அல்லது அதைவிட வேகமாகவோ செல்ல முடியாது என நிறுவப்படுகின்றது.\\நண்பர்கள் இயற்பியல் எப்படி வேலை செய்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டும். அறிவியலில் Postulate என்று கூறுவது என்னவென்று நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஒரு சோதனை செய்கிறோம், அதன் முடிவை விளக்க வேண்டும். அதற்க்கு ஒரு தியரியை ஒரு விஞ்ஞானி முன் வைக்கிறார். இதனால் தான் இந்த விளைவை பெறுகிறோம் என்று. அந்த தியரிக்கு ஒரு சில அடிப்படைக் கோட்பாடுகளை அவர் assume செய்து கொள்ளலாம், அந்த assumption தான் Postulate . Postulate ஐ ஒருபோதும் நீங்கள் நிரூபிக்க வேண்டியதில்லை. ஆனால், அந்த Postulate ஐ வைத்து நீங்கள் ஒரு தியரியை முன் வைக்கிறீர்கள் அல்லவா? அந்த தியரி தற்போதைய சோதனையின் முடிவை சரியாக விளக்க வேண்டும். அது மட்டுமல்ல எதிர்காலத்தில் நடக்கும் சோதனைகளுக்கும் அந்த விளக்கம் பொருந்துவதாக இருக்க வேண்டும். ஆயிரம் சோதனையின் முடிவுகள் உங்கள் தியரியின் படி சரியாக இருந்தாலும், உங்கள் தியரி நிரூபிக்கப் படுகிறது என்று அர்த்தமல்ல, ஆனால் ஒரு சோதனையின் முடிவு எதிராக வந்தாலும் உங்கள் தியரி disprove ஆனதாகக் கொள்ளப் படும். [சொன்னவர் ஐன்ஸ்டீன்].
இங்கே ஐன்ஸ்டீன் இரண்டு Postulate களை எடுத்துக் கொண்டார்:
1. எல்லா கொம்பனுக்கும் ஒளியின் வேகம் ஒன்றே தான், மாறாது.
2. There is no preferred Inertial frame of referrence. முடிக்கமடையாமல் சீராக ஒரே திசையில் பயனிப்பவரும், நிலையாக உட்கார்ந்திர்ப்பவரும் செய்யும் சோதனை முடிவுகள் இரண்டுமே ஏற்கத் தக்கவை. யாரும், Absolute இல்லை.
இவை இரண்டையும் வைத்து சார்பியல் கொள்கையை வகுத்தார். அவை அன்றிலிருந்து இன்று வரை சொன்ன மாதிரியே எல்லா சோதனை முடிவுகளும் வருகின்றன. அதில் ஒன்று தான் வேகத்தைப் பொறுத்து பொருளின் எடை வேறுபடுதல். இது மேற்ச்சொன்ன இரண்டு Postulate களின் விளைவு, எந்த தனி மனிதனின் விருப்போ வெறுப்போ அல்ல.
Post a Comment