ஈழம்:புலம்பெயர்ந்ததமிழர்களுக்கு தமிழருவிமணியன் கொடுக்கும் எச்சரிக்கை.

குமுதம் நேரலைக்காக தமிழருவி மணியனை ஏகலைவன் சந்தித்து பேசிய காணொளியை பார்க்க நேரிட்டது.
உலகம் முழுவதும் இருக்கக்கூடிய தமிழர்கள் அனைவரின் மனதிலும் உறைந்து கிடக்கும் ஈழம் பற்றிய விஷயங்களை, இப்போது ஈழம் பற்றி அறிக்கைப்போர் நடத்திக்கொண்டிருக்கும் தமிழக தலைவர்களை இனியும்  நம்ப வேண்டாம் என்ற அவரின் வாதம் எந்த அளவில் ஏற்றுக்கொள்ளக்கூடியது என்பதை தீர்மானமாய் சொல்ல எம்மால் முடியவில்லை. இருப்பினும் இந்த விஷயத்தை டிவிட்டரில் பகிர ஆரம்பித்த போது, ஏகப்பட்ட எதிர்மறை விமர்சனங்களும் வந்து விழுந்தன. 


தமிழருவி மணியன் சொன்ன கருத்துக்களின் முதல் பகுதியை இங்கே பகிர்ந்திருக்கிறோம். படித்துப்பாருங்கள்.வாய்ப்பிருந்தால் இது குறித்த உங்களது கருத்துக்களையும் தாருங்கள்.

தமிழருவி மணியன் சொன்னவை:

இலங்கை அரசின் போர் குற்றங்களை ஐ.நா. அவையின் மூன்று நபர் குழு இப்போது வெளிப்படுத்தியிருக்கும் சூழ்நிலை உருவாகி இருப்பதற்கு, புலம் பெயர்ந்த தமிழர்கள் உலகம் முழுவதும் கொடுத்த அழுத்தமும், எடுத்த முயற்சியும் தான் காரணம், தமிழக கட்சிகளோ தலைவர்களும் இதற்கு காரணம்.

ஐ.நா.வில் ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டால் சீனா, ரஷ்யாவின் வீட்டோ பவர் மூலம் அதனை தடுப்போம் என்று கோத்தபய ராஜபட்சே சொல்லியிருப்பது உலகநாடுகளுக்கு ஒரு சவால் தான்.

வீட்டோ பவர் வைத்திருக்கும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளின் மூலம் இதனை புலம்பெயர்ந்த தமிழர்கள் எதிர்கொள்ள வேண்டும்.

ஜனனத்திற்குள் மரணம் ஒளிந்திருப்பது போல, மரணத்திற்குள் ஜனனம் மறைந்திருப்பது போல், ஒவ்வொரு வரத்திற்குள்ளும் ஒரு சாபம் இருக்கிறது; எந்தவொரு சாபத்திற்குள்ளும் ஒரு வரம் இருக்கிறது.
 
இலங்கை தமிழர்கள் புலம் பெயர்ந்து உலகம் முழுவதும் சிதறியிருப்பதை வரமாக எடுத்துக்கொண்டு, ஈழம் பற்றி எண்ணங்கள் உலக நாடுகள் முழுவதும் முன்னெடுத்துச்செல்ல வேண்டும். முக்கியமான 60 நாடுகளில் இருக்கும் அறிவார்ந்த புலம்பெயர் தமிழர்கள் சட்டபூர்வமாக இலங்கை பிரச்சனையை  எடுத்துச்செல்ல வேண்டும்.

இலங்கை பிரச்சனையில் தனித்தனியே குரல் கொடுக்கும் ஏன் தமிழக தலைவர்கள், ஜெயலலிதாவாகட்டும், கருணாநிதியாகட்டும் ஏன் கட்சி என்பதை தாண்டி போராடவில்லை?

கர்நாடகாவில் காவிரி பிரச்சனை என்று வரும் போது, அவர்கள் கட்சி வேறுபாடுகள் தாண்டி போராடவில்லையா?
 
தமிழக தலைவர்கள் இலங்கைப்பிரச்சனையை முகமூடியாகத்தான் வைத்திருக்கிறார்கள். அதனை ஏன் முகமாக வைத்துக்கொள்ளக்கூடாது.

என் நண்பர்களாக இருக்கும் சீமான், வைகோ, நெடுமாறன் ஏன் மற்ற தலைவர்களுடன் இலங்கை பிரச்சனையில் இணைந்து செயலாற்றவில்லை.

தமிழினத்தை அழிக்க எல்லா முயற்சியை செய்த ராஜபக்ஷேவை ஏன் போர்குற்றவாளியாக ஏன் இந்திய அரசு முன் நிற்கவில்லை.

டெல்லியில் உள்ள குதிரை லாயத்தில் இருக்கும் குதிரைகளை கனைக்கக்கூட விடவில்லை முன்பு எழுபதுகளில் சொன்ன கருணாநிதி, ஏன் இப்போது மத்திய அரசில் வல்லமை பெற்றியிருக்கும் சமயத்தில் ஏன் கனைக்கக்கூட முயற்சிக்கவில்லை.

ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் மத்திய அரசுக்கு, மாநில அரசை  கொத்தடிமையாக மாற்றிவிட்டதால் ஈழப்பிரச்சனைக்கு  கருணாநிதி துணிந்து போராடவில்லை என்பது தான் உண்மை.

கட்சி மாறுபவன் எந்த பாவமும் செய்யாதவன், கொள்கை மாறுபவன் தான் சகல பாவங்களுக்கும் உரியவன். பல கட்சிகளுக்கு ஜீவா மாறினார் ஆனால் ஜீவா என்றுமே கொள்கை மாறவே இல்லை.ஆனால் கலைஞர் நீண்ட காலம் ஒரே கட்சியில் இருக்கிறார். அடிக்கடி கொள்கை மாறுகிறார்.

கலைஞர் இலங்கை பிரச்சனைக்காக 1956 முதல் 2009 வரை என்னவெல்லாம் செய்தார் என்ற  பட்டியலை படிக்கும் போது, ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஒரு மலையாளி என்று குற்றம் சாட்டி, எம்.ஜி,யாரை வீழ்த்தவே கருணாநிதி இலங்கை பிரச்சனையை கையில் எடுத்தார். பத்தாண்டு காலம் முதல்வர் நாற்காலியில் அசைக்க முடியாத வகையில் எம்.ஜி.ஆர். ஆட்சி  செய்த காலத்தில், எதிர்கட்சியாக இருந்து இலங்கை தமிழர்களுக்காக போராடுவது போல காட்டிக்கொண்ட கருணாநிதி ஏன் இப்போது ஆட்சியில் இருக்கும் போது போராடவில்லை.

எதிர்கட்சியாக இருக்கும் போது போராடுவதை விட, ஆளுங்கட்சியாக இருக்கும் போது மிக அதிகமாக அல்லவா போராட வேண்டும். ஆட்சி போனால் போகட்டும் என்று இருந்திருந்தால், இன்று அடியோடு கவிழ வேண்டிய நிலைவந்திருக்காதே.

இனி எதிர்கட்சியாக மாறினாலும், திமுக இலங்கை தமிழர்களுக்காக போராடாது, வீரர்கள் வீரர்களாகவே இருக்கும் போது வீரம் இருக்கும், வீரர்கள் சோரம் போய்விட்டால், சுகத்திற்கு அடிமையாகி விட்டால், கையில் வாள் கொடுத்தாலும் அவர்கள் தோள் உயர்த்தி போராட மாட்டார்கள். இழந்தது இழந்தது தான்.

நாளை இதே ஜெயலலிதா வந்தால்  என்னென்ன செய்வார் என்று யாரும் கணிக்க முடியாது. ஜெயலலிதாவுக்கு ராஜபக்சே எதிரி இல்லை, அவருக்கு கருணாநிதி எதிரி.

ராஜபக்சேவை போர்குற்றவாளியாக நிறுத்துவதில்லை ஜெயலலிதாவின் வேலை, கருணாநிதி குடும்பத்தை ஒழிப்பது மட்டும் தான். அதற்கு காங்கிரஸ் தேவைப்பட்டால் அவர்கள் பின்னால் கூட்டணி என்று போய்விடுவார்.

ஜெயலலிதாவின் பாஞ்சாலி சபதம் என்ன? கருணாநிதி குடும்பத்தை ஒட்டு மொத்தமாக  அரசியல் ரீதியாக முடித்து விடுவது, அவ்வளவு தான்.
 


இப்போது கருணாநிதி, இனி ஜெயலலிதா என நம்பி நம்பி, புலம் பெயர்ந்த தமிழர்கள் ஏமாந்து விடக்கூடாது என்று எச்சரிக்கை மணியடிக்கிறேன்.

டிஸ்கி:


 
தமிழகத் தலைவர்களை நம்பலாமா, புலம்பெயர்ந்த தமிழர்கள் தாங்களே இதனை முன்னெடுத்து செல்லவேண்டுமா?

இறுதிக்கட்டப்போரில் நிகழ்ந்த கொடுமைகளுக்கு, ராஜபக்ஷேவை போர்குற்றவாளியாக்கி, தண்டனை பெற்றுத்தருவது தான் அனைவரின் நோக்கமா?

ராஜபக்ஷே தண்டிக்கப்படுவது தாண்டி, ஈழம் உருவாது பற்றிய கனவும், ஆங்கமும் உலகம் முழுவதும் பரவியிருக்கும்  தமிழர்களுக்கு இருக்கிறதா?

இவையெல்லாம் நாம் விடை அறிந்துகொள்ள விரும்பும் கேள்விகள்..
உங்களிடம் விடை இருந்தால் தாருங்கள்.     

வீடியோ இணைப்புக்கு  சொடுக்கவும்.
http://www.tamilthai.com/?p=16144

15 கருத்துரைகள்:

கவி அழகன் said...

நல்லாயிருக்கு ...வாழ்த்துக்கள்

MANO நாஞ்சில் மனோ said...

நல்ல அறிவுரைகள்....

Unknown said...

//ஜெயலலிதாவாகட்டும், கருணாநிதியாகட்டும் ஏன் கட்சி என்பதை தாண்டி போராடவில்லை? //

நெத்தியடி!!

Unknown said...

//தமிழகத் தலைவர்களை நம்பலாமா, புலம்பெயர்ந்த தமிழர்கள் தாங்களே இதனை முன்னெடுத்து செல்லவேண்டுமா?//
நம்பவே முடியாது...
உலகறிந்த உண்மை!

Unknown said...

//
இப்போது கருணாநிதி, இனி ஜெயலலிதா என நம்பி நம்பி, புலம் பெயர்ந்த தமிழர்கள் ஏமாந்து விடக்கூடாது என்று எச்சரிக்கை மணியடிக்கிறேன். //

பெரிய காண்டா மணியா அடியுங்கோ!!

தனிமரம் said...

சரியாச் சொல்லியிருக்கிறார் பூனைக்கு மணிகட்டுவது யாரு !

Namy said...

Lack of leadership is a big problem in TN. That affect not only TN and also Eelam tamils. In feature don't belive political leaders. Organise a people movement like Egypt and middle east in Tamil nadu. That will use for cause of Eelam.

ராஜ நடராஜன் said...

பாரத்...பாரதி!இலங்கைக்கு மூக்கணாங்கயிறு போடும் வலிமை தமிழகத்துக்கு இருந்தும் குழு மனப்பான்மையால்,கட்சி மனப்பான்மையால் நம்மால் ஒன்றும் செய்யவில்லை.

சகோதர யுத்தத்தால் பின்னடைவு என்று விடுதலைப்புலிகளைப் பற்றி விமர்சித்தவரல்லவா கருணாநிதி?

இவரும்,ஏனையவர்களும் தமிழகத்தில் செய்வதும் ஜனநாயக சகோதர யுத்தம்தான் என்பதை இங்கே பதிவு செய்கிறேன்.

யோகா.எஸ் said...

அப்படி தமிழருவி மணியன் ஐயா சொவது போல் ஒரேயடியாக உதறித் தள்ளி விட முடியாது!இலங்கை அரசைப் பொறுத்த வரை புலம் பெயர் தமிழர்களும்,தமிழ் நாட்டுத் தமிழர்களும் ஒரே தராசில் வைத்துத் தான் கணிக்கப்படுகின்றனர்!தமிழக அரசியல் தலைவர்களை இலங்கை அரசியல் வாதிகள் "கோமாளிகள்" என்று வர்ணித்தாலும் கூட அந்த எட்டுக் கோடி என்பது வயிற்றில் புளி(புலி?)கரைக்கும் விடயமே!உண்மையில் ஆட்சியிலிருக்கும் எந்த ஒரு கட்சியாவது தமிழ் நாட்டில் கிழர்ந்தெழுந்தால் இந்திய அரசின் இலங்கை தொடர்பான வெளி நாட்டுக் கொள்கையில் மாற்றமேற்படுத்த முடியும்!அத்தைக்கு" மீசை" முளைப்பது எப்போ???????????????(புலம்பெயர் தமிழன்)

செங்கோவி said...

தமிழக அரசியல் தலைவர்களுக்கு முதலில் சீட் தான் குறி..அதன்பிறகே மற்றதெல்லாம்..இருப்பினும் அவர்களை முழுதாக ஒதுக்கி விட முடியாது என்பதே உண்மை!

சி.பி.செந்தில்குமார் said...

சுயநலக்காரர்களை எப்பவும் நம்ப முடியாது

Jana said...

தமிழக தமிழர்கள், இந்தியத்தமிழர்கள், இலங்கைத்தமிழர்கள், சிங்கப்பூர் தமிழர்கள், தென்ஆபிரிக்க தமிழர்கள் என்ற வார்த்தைகளையும், எழுத்துக்களையும் தடை செய்யுங்கள் தமிழர்கள் எங்கும் ஒரே தமிழர்கள்தான் என்ற நிலை வரவேண்டும். அதற்கு தலைவர்களும் விதிவிலக்கல்ல, விதிவலக்காக நிற்பவர்கள் தூக்கி எறியப்படவேண்டும்.

இறுதி யுத்தத்தில் உண்மையாக ஒரு இலட்சம் பேருக்கும் அதிகமான தமிழ் உயிர்கள் காவு கொள்ளப்பட்டது என்பது நிஜம். அதேவேளை 1958முதல் இன்றுவரை தமிழினம் அழிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றது என்பதை கவனிக்கவேண்டும்.
"எங்க அப்பன் குதிருக்க இல்லை" என்பதுபோல உணர்ச்சிவசப்பட்ட இலங்கை மந்திரி டியூ குணசேகர தன்வாயாலேயே ஏன் உலகம் இறுதிக்கட்டப்போரை ப்wறி அதிகம் அலட்டிக்கொள்கின்றது. ஒவ்வொரு கட்டத்திலும் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் தானே என்று ஒரு செய்தியாளர் மானாட்டிலேயே சொல்லியிருக்காரு..
ஆக அதுவே உண்மை. பிரச்சினை இந்த இழப்புக்கள் எதற்காக என்பதும், அவற்றுக்கு தீர்வு என்னவென்று உலகம் விரைவில் சொல்லவேண்டும் என்பதே..
இருந்தபோதிலும் இப்படியான மிலேச்சத்தனமான பாதகமான இனப்படுகொலைகள் உலகில் எங்கும் நிலவாது இருக்க இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படவேண்டும். இதுவே உலகத்தின் கடமை.

உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் உள் உணர்வpல் தமக்கான தம் மொழிக்கான ஒரு சிறிய கூடு தேவை என்ற உணர்வு நிற்யம் இருக்கின்றது. அதை பெறுவதற்கான தொடரும் போராட்டங்கள், வழிமுறைகள் இனி ஈழத்தமிழர்களின் கைகளில் மட்டும் இல்லை, உலகத்தமிழர்களின் கையில்.
ஒன்றை கவனியுங்கள்... இத்தனை இன்னல்களிலும் தமிழ் ஈழம் மலர்ந்தால் அது ஈழத்தமிழர்களுக்கானது என்று யாப்பில் குறிப்பிடப்படவில்லை.
தமிழ் ஈழம் என்பது உலகில் வாழும் அத்தனை தமிழருக்கும் சொந்தமானது என்பதே யாப்பின் முதல் வரி.

vasan said...

ஈழ‌ இறுதிப்போரின் போது நில‌விய‌ த‌மிழ‌க‌ம‌க்க‌ளின் ம‌னக்குமுற‌ல் ம‌ற்றும் தாக்க‌த்தை நீர்த்துப் போக‌ச் செய்‌த‌தில், திருமா, பாமாக‌, அதிமுக‌, வைகோ, நெடுமாற‌ன் எனப் ப‌ல‌ர் பிரிந்தும் இணைந்தும் இருந்த‌து ஒரு கார‌ண‌ம் எனினும், ஆட்சியில் இருந்துகொண்டே, ம‌த்திய‌ அர‌சின் இல‌ங்கை த‌மிழ‌ர் அழிப்புச் செய‌ல்பாடுக‌ளின் ந‌ட‌வடிக்கைக‌ளை அறிந்திருந்தும் த‌ன்சுய‌லாப‌த்திற்காய் , காங்கிர‌ஸை (சோனிய‌வை) எதிர்க்காது, அவர்க‌ளுக்கு சாமர‌ம் வீசிய‌ முக‌ முக்கால‌த்திலும் ம‌ன்னிக்கூடாத‌, முடியாத‌ இனத்துரோக‌ம் செய்து விட்டார் என்ற‌ ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் கோப‌ம் நியாய‌மானதே. Thamizharuvi Manaiyan is right about MK & JJ. Both are sheer SELFISH.

Anonymous said...

//////மைந்தன் சிவா said...

//
இப்போது கருணாநிதி, இனி ஜெயலலிதா என நம்பி நம்பி, புலம் பெயர்ந்த தமிழர்கள் ஏமாந்து விடக்கூடாது என்று எச்சரிக்கை மணியடிக்கிறேன். //

பெரிய காண்டா மணியா அடியுங்கோ!!////////////////////////// ஹிஹிஹி சூப்பர் பாஸ்

Anonymous said...

//Jana said.May 2, 2011 8:20 AM
தமிழ் ஈழம் என்பது உலகில் வாழும் அத்தனை தமிழருக்கும் சொந்தமானது என்பதே யாப்பின் முதல் வரி.//

அப்படி ஒரு யாப்பு எப்போது எழுதபட்டது? அது எங்கே உள்ளது? என்பதை தெரியபடுத்த வேண்டியது உங்கள் கடமை.

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்