கலைஞரின் தீவிர சிகிச்சை பிரிவில் ரஜினி & வடிவேலு - ஒரு அதிரடி கலாய்ப்பு ரிப்போர்ட்.


அரசியலில் ஒருவர் எதிரியாகி விட்டார் என்றால் அவரை கண்டு கொள்ளாமல் விடுவது அல்லது ஆட்டோ அல்லது கஞ்சா கேஸ் வரை  கட்டம் கட்டுவது ஜெயலலிதாவின் ராஜதந்திரம். ஆனால் எதிரியை உறவாடியே செயல்படவிடாமல் மொன்னையாக மாற்றுவது கருணாநிதியின் ராஜ தந்திரம். இப்போதும் அதுதான் நடந்திருக்கிறது

கருணாநிதியின் டைரிக்குறிப்பில் நேற்று திரைப்படத்துறை போல, தொடர்ந்து மூன்று சினிமா சம்பந்தப்பட விஷயங்களில் செய்தியாகியிருக்கிறார்.(சினிமா பற்றிய அறிக்கை, வடிவேலு, ரஜினியுடன் சந்திப்பு)
                                       

இந்த தேர்தலில் ரஜினி, ஊடக வெளிச்சத்தோடு இரட்டைஇலைக்கு வாக்களித்திருந்தாலும், ராணா படப்பிடிப்பிலிருந்து மருத்துவமனையில் சேர்ந்த ரஜினியை வீல் சேரில் ஓடோடி சென்று பார்த்திருக்கிறார் கருணாநிதி. ரஜினிக்கு மூச்சுத்திணறல் என்று ஆரம்பத்தில் செய்திகள் பரவினாலும் பின்னர் லதா ரஜினிகாந்த் வெறும் அஜீரணக்கோளாறு தான் என்று சொல்லியிருக்கிறார்.

இப்போது "மாற்றம்" வேண்டி ரஜினி வாக்களித்திருந்த போதும், ரஜினியின்  வெளியிலிருந்து"அரசியல்" என்னும் நிலைக்கு மாற்றம் வரக்கூடாது, தன் காலத்தில் மட்டுமல தன் பேரப்பிள்ளைகளின் காலத்தில்(???) கூட ரஜினி இடைஞ்சல் பண்ணாத அளவுக்குத்தான் கலைஞரின் நடவடிக்கைகள் இருக்கின்றன. 
 
இப்போது ரஜினி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிவிட்டார், கருணாநிதி ரஜினியை சந்தித்த செய்தி இன்னும் வீடு திரும்பாமலே தமிழக வீதிகளில் சுற்றிக்கொண்டிருக்கிறது. இது தான் கலைஞரின் தீவிர சிகிச்சை கைங்கர்யம்.
                                                          

கையை காலா நினைக்கும் வடிவேலு, ரஜினியின் ராணா இல்லை கானாவிலிருந்து என்னை தூக்கினாலும் கவலையில்லை என்று தன்னைத்தானே உஷார் படுத்தியிருக்கிறார். திமுக கூட்டணிக்கு இருநூறு இடத்திற்கு மேல் கிடைக்கும் என்று ஜோதிடம் கூறியிருக்கிறார்.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு என்று நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் அதுபோல இது தேர்தலுக்கு பிந்தைய பிரச்சாரம். வடிவேலுவுக்கு அழகிரி கொடுத்த அசைன்மெண்ட் இன்னும் முடியவில்லை என்று என்பதையே இது காட்டுகிறது.

ஸ்பெக்ட்ரம் கலவர காட்சிகள், கனிமொழி கைது பீதி என துவண்டு போயிருக்கும் திமுக கூடாரத்தை, குஷி படுத்த ஹெட்லைன்ஸ் டுடேவின் திமுகவுக்கே வெற்றி என்னும் பிந்தைய கருத்துக்கணிப்பு    சற்று ஆறுதல் படுத்தியிருக்கிறது. காங்கிரஸ் தலைமை கூட சற்று பொறுத்திருக்க வேண்டியது அளவு காலம் "கனி"ந்திருக்கிறது.

இதே நம்பிக்கையை மக்களிடையே, கொண்டு சேர்ப்பதற்கு இப்போது வடிவேலு பிரச்சாரம் செய்திருக்கிறார்.

ராணா படப்பிடிப்பு துவங்கும் நாளில் திருமணம் செய்திருப்பதால் இங்கிலாந்து இளவரசர் வில்லியம் - கேட் மிடில்டன் திருமணம் நடைந்திருப்பதால், அவர்களுடன் ரஜினியை இணைத்து வேறு ஒரு பீதியும் கிளம்பியிருக்கிறது.

"என்னோட ராசி நல்ல ராசி.. என்னால அனா மட்டும் எல்லோருக்கும் லாபம்" என்ற ரஜினி பாட்டுக்கேற்ப, ராணா துவக்க நாளில், திருமண நாளில் திருமணம் செய்திருப்பதால், வில்லியம் வாழ்வாங்கு வாழ்வாராம்.(இது உலக கோப்பை வெற்றிக்கு பிறகு பரவியிருக்கும் மேனியா!)

தன்னைவிட ஒரு வயது மூத்தவரை திருமணம் செய்திருக்கும் இங்கிலாந்து இளவரசருக்கு 29 வயது தான் என்றாலும் வழுக்கையோடு இருப்பதால் அதிக வயதானது போல தெரிகிறார். ஒரு வேளை இங்கிலாந்து பாரம்பரிய உடையை அணிந்திருப்பதால் அப்படி தெரிகிறதோ? (பேண்ட் மாஸ்டர் போல டிரஸ் போட்டிருக்கார் அது பாரம்பரிய உடையாம்... பாவங்க)

ரஜினியின் ராசிப்படி, இங்கிலாந்து இளவரசரின் வாழ்க்கையும்
சிறக்கட்டும், அவரின் தலைமுடியும் செழிக்கட்டும்.

டிஸ்கி :
இந்திய இளவரசர் ராகுல் காந்திக்கு எப்போது இது போல பிரமாண்ட திருமணம் நடத்தி, அதன் பின் முடிசூட, இந்திய-இத்தாலிய கலவை பேரரசியார் முடிவு செய்துள்ளாரோ?

தமிழக இளவரசர் ஸ்டாலினுக்கு எப்போது, பட்டாபிஷேசகம் நிகழ்த்த, பொதுக்குழு கூட்ட நாள்குறித்திருக்கிறாரோ திருவாரூர் முதல்வர்.. (மதுரை இளவரசர் கவனிக்க...)

 
இப்போதைக்கு வாய் மூடிக்கிறேன்.. வரவேண்டிய நேரத்தில் வருவேன்..

11 கருத்துரைகள்:

சசிகுமார் said...

சுடச் சுட செய்திகள் நன்றி பாரதி

பாலா said...

ரஜினி என்ன செய்தாலும் அது செய்தி ஆகி விடுகிறது. என்ன கொடுமைங்க இது...

MANO நாஞ்சில் மனோ said...

//இது தான் கலைஞரின் தீவிர சிகிச்சை கைங்கர்யம்.///

சூப்பரான வார்த்தை சிலம்பம்....

சி.பி.செந்தில்குமார் said...

நீங்கள் போட்ட பதிவுக்கும், இன்று மாலை மலரில் வந்த ரஜினி ஹாஸ்பிடலில் அட்மிட் நியூஸ்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றாலும் உங்கள் நாக்கு ஹ்ஜ்ஹி ஹி ஹி ( நாங்களும் கோர்ட்து விடுவோம் இல்ல?)

Speed Master said...

//இப்போதைக்கு வாய் மூடிக்கிறேன்.. வரவேண்டிய நேரத்தில் வருவேன்..


வந்த வேலை முடிந்ததா நாரயாணா


தேவையான ஆணி !! ? முன்னெச்சரிக்கைப் பதிவு

http://speedsays.blogspot.com/2011/04/blog-post_30.html

ரஹீம் கஸாலி said...

ரானாவிளிருந்து வடிவேலு நீக்கப்பட்டதை பற்றி கவலைப்பட வில்லையாம் வடிவேலு

கிருது said...

ஒன்னும் புரியவில்லை ஏன் கலைஞரை அனைத்து வலைதளங்களும் எதிர்கிறார்கள் என்று. அப்படி என்றால் ஜெயா நல்லவரா??? ஒன்று மட்டும் நிச்சயம் விஜயை தாக்கி எழுத்யவர்கள் அதை மறந்து விட்டு எப்போது மு. க பக்கம் திரும்பி உள்ளார்கள். கலைஞரை தாக்கி எழுதுவது எப்போது ஒரு புது பேஷன், எது வலைதளத்தில் மட்டும். கண்டிப்பாக மே 13க்கு பிறகு காட்சிகள் மாறும்.

சிங்கக்குட்டி said...

ரஜினி பக்கத்தில் காமிடி பீசுகள் பெயரை எல்லாம் போட்டு வடிவேலு போல "டக்லஸ்"களை எல்லாம் இணையத்தில் வளர்த்து விடாதிர்கள்.

மைந்தன் சிவா said...

நல்லா இருக்கு பாஸ்..
இனி தொடர்ந்து வருகிறேன் உங்க கடைப்பக்கம்

யாதவன் said...

புதிய முயற்ச்சி

Jana said...

உண்மைதான்..எப்போதும் உறவாடிக்கெடுப்பதில் கலைஞர்தான் டாப்.

Blog Archive

Follow by Email

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்