உதயமானது காபி பேஸ்ட் பதிவர்கள் சங்கம்-எங்க ஏரியா உள்ளே வராதே(உள்குத்து மற்றும் வெளிக்குத்து)

உதயமானது எங்கள் காபி பேஸ்ட் பதிவர்கள் சங்கம் (பின்னூட்டத்தில் கும்மி அடிப்போர் சங்கத்தின் ஆதரவு பெற்றது)
காபி, பேஸ்ட் பதிவர்கள் என்ற போர்வையில்;
என்னை, என் சகபதிவர்களை, போர்வை போர்த்தாமலே குதறிக்கொண்டிருப்பதை காண சகிக்காமல், முதலாவதாக களமிறங்கி இருக்கிறோம். (உங்களைப்போல "என்னிடம் சரக்கு இல்லையா", என்னை காபி பேஸ்ட் பதிவர் என்பவர்களுக்கு - என் பதில் !" என்ற தலைப்புகளில் பதிவெழுதிவிட்டு மௌனமாய் இருக்க என்னால் முடியாது, ஆதலால் ரோஜாப்பூந்தோட்டம் உங்களை கோபம் கலந்த டெரர் அன்புடன் எமது சங்கஆரம்ப விழாவிற்கு வரவேற்கிறது)

கண்டனங்களுக்கு எதிர் கண்டனங்களை தெரிவிக்க, சங்கம் வைத்து "தமிழ்" வளர்த்த தமிழ்நாட்டில் இருந்துக்கொண்டு, ஸ்ட்ராங் காபி பதிவர்களுக்கு சங்கம் அமைக்க என்னால் முடியாவிட்டால், அது எதிரிகளுக்கு பூஸ்ட் கொடுத்தது போல் அல்லவா மாறிவிடும்?

ஓகே... மைக் ஆன்....

எதிர்க்கட்சி அன்பர்களை பார்த்து, நான் ஒன்று கேட்டுக்கொள்ள ஆசைப்படுகிறேன், விருப்படுகிறேன். (ரெண்டும் ஒண்ணு தானா, சரி விடுங்க... ஒரு புளோவில் வந்து விட்டது.... அரசியல் நாகரீகத்தோடு கண்டு கொள்ளாமல் விட்டு விடுங்கள்)

நீங்கள் எல்லாம் சொந்தமாகவா பதிவு எழுதுகிறீர்கள். எங்களை கேள்வி கேட்பதற்கு...    இந்த வாழ்க்கையே நமக்கு இரவலாக வந்தது தானே? இந்த வாழ்க்கையே நமக்கு சொந்தமில்லையே? பதிவுகள் மட்டும் எப்படி சொந்தமாக எதிர்ப்பார்க்கலாம்.

ஒபாமா பற்றியும், ஒசாமா பற்றியும் நீ பதிவெழுதினாயே...அது நீயே நேரில் சேகரித்த செய்திகளா? நேரடியாக தெரிந்து கொள்ள ஒசாமா உனக்கு என்ன ரெண்டு விட்ட சித்தப்பாவா? இல்லை ஒபாமா உன்னுடன் வயலுக்கு வந்து நாத்து நட்டவரா? இல்லை களை என்னும் ஆணீயை அசைத்தவரா?

எங்கே படித்த, கேட்ட செய்திகளை கொஞ்சம் இட்டுக்கட்டி, தானே பார்த்தது போல எழுதுவது தானே நடைமுறை. அட அது தானே பதிவுலக வழக்கம்.

அதைவிடுங்கள்...
அஞ்சு லட்சம் விற்கும் வார இதழ்களுக்கும், செய்தித்தாள்களுக்கும் நாங்கள் தானே ஆதரவு கொடுக்க வேண்டியதாக இருக்கிறது.

பாவம் அந்த வார இதழ்கள் - அநாதையாய் கிடக்கும் அவர்களின் எழுத்துக்களை பரப்பவேண்டும் என்று என்றைக்காவது உனக்கு தோன்றியது உண்டா? 

எனக்கு தோன்றினால் உனக்கென்ன.. உனக்கென்ன?

இமய மலை மீது என் கொடி பறந்தால் உனக்கென்ன?

உனக்கென்ன.. உனக்கென்ன?
(யோவ், நான் கரட்டா பேசுறனா?)
(சரி...சரி...தண்ணிய குடி.... தண்ணிய குடி...)
வாரத்திற்கு மூணு பதிவு போட முடியாத நீ எப்படி, தினமும்  மூணு பதிவு போடும் என்னை திட்டலாம்?

குஜராத்தில் கூட இப்படித்தான் ஒரு சம்பவம் நடந்தது. என்ன செய்தார்கள் அவர்கள்...

பாவம் இவர்கள் தினமும் மூணு பதிவு போடுகிறார்களே பாவம் என்று சத்துணவில் போடும் முட்டைக்கு நாலு டோக்கன் வாங்கிக்கொடுத்துவிட்டு கலாய்த்தார்கள். அந்த நாகரீகம் கூட இல்லையா உன்னிடம்?

(கூட்டதை பொளந்துட்டு ஒருத்தன் வர்ராணே... ஒரு வேளை ஆர்ட்பிலிம் ரேஞ்சுக்கு பதிவெழுதுவோரின் சங்கத்து ஆளா இருக்குமா?)

ரைட்டு... பின்னூட்ட போட சைத்தான் சைக்கிள்ல வருது...

சரி நண்பர்களே இப்ப நான் அப்பீட்டு... வலி கொறஞ்சதும் ரீப்பீட்டு.

டிஸ்கி:
"சங்கத்து ஆள அடிச்சது எவன்டா"
"போடா தமிழ் மண ஆண்டவனே நம்ம பக்கம்"
என்ற கொள்கை விளக்கப்பாடல்களை பின்னூட்டமாக இட்டு,  சங்கத்துக்கு ஆதரவளிக்க வேண்டுகிறோம்.

38 கருத்துரைகள்:

விமர்சனம் said...
This comment has been removed by the author.
சி.பி.செந்தில்குமார் said...

ஹா ஹா ஹா இது சேம் சைடு கோலா? அட்டாக்கா? ஒண்ணூமே புரியல

சி.பி.செந்தில்குமார் said...

>>>வாரத்திற்கு மூணு பதிவு போட முடியாத நீ எப்படி, வாரத்திற்கு மூணு பதிவு போடும் என்னை திட்டலாம்?


வாரத்திற்கு மூணு பதிவு போட முடியாத நீ எப்படி, தினமும் மூணு பதிவு போடும் என்னை திட்டலாம்?

சக்தி கல்வி மையம் said...

அசத்தல் பதிவு சகோ..

விமர்சனம் said...

சொந்த பதிவு போடறவங்க... யோசனை செய்து போட நேரம் போதாது, திருட்டு பதிவு, ஆனந்த விகடன், ஜீவி, நக்கீரன் போன்ற காப்பி பேஸ்ட் பதிவென்றால் வாரத்திற்கு 300 பதிவு போடலாம்.அனைத்து திருட்டு பதிவுகள் தானே! மத்தவங்க திருடும் முன் சீக்கிரமா திருட வேண்டிய கட்டாயம். பொதுவாக, திருட்டுக்கு அதிகம் நேரம் எடுத்துக்கொள்ளக்கூடாது என்பது திருட்டு பதிவர்களின் லட்சியம்.பாவம்...

Prabu Krishna said...

பதிவு நல்லாதான் இருக்கு. கமெண்ட்களை பார்த்தால் என்ன சொல்வது என்று தெரியவில்லை.

Unknown said...

இது அதில்ல! என்னாமா பிளான் பண்றாங்கப்பா! :-)

விமர்சனம் said...

பாலே பிரபு அவர்களே!
நீங்கள் சொந்தமாக எழுதிய நல்ல பதிவிற்கு 1 ஓட்டும் காப்பி பேஸ்ட் செய்த பதிவிற்கு 30 ஓட்டு வாங்கி உங்களை குப்புற தள்ள வேண்டாமே! அது தான் இங்கே நெருடல். மற்றபடி அவர்கள் காப்பி பேஸ்ட் வாங்கினால் யாருக்கென்ன?

சசிகுமார் said...

உள் குத்து கொஞ்சம் ஓவரா இருக்கு

விமர்சனம் said...
This comment has been removed by the author.
விமர்சனம் said...

பதிவர்கள் தங்களது சொந்த திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்பது தான் முக்கியம். காப்பி பேஸ்ட் செய்வதற்கு அந்த குறிப்பிட்ட தளத்திற்கு இணைப்பு கொடுத்து பதிவின் சொந்தகாரர்களுக்கு உரிய மரியாதை கொடுத்தால் என்ன? யாரோ திறமையை திருடி தங்கள் பதிவுலக ராஜாக்கள் என்ற பட்டத்தை சூடி ஊரை ஏன் ஏமாற்ற வேண்டும்?
இவர்களால் பல தரமான பதிவர்கள் எழுதுவதை நிறுத்தியதோடு, திருட்டு பதிவர்களின் மீது துப்பிய எச்சில் அனைவரின் மீது விழுவதை பொறுத்துக்கொள்ள முடியாது.

திருட்டுப்பதிவிலும், காப்பி பேஸ்ட் பதிவிலும் தமிழ்மணத்தில் ஓட்டி வாங்கி சிறந்த பதிவர்களாக தங்களை காட்டிக்கொள்ளும் சிறுபுத்திக்காரர்களைத்தான் சுட்டிக்காட்டுகிறோம். இதை செய்யாதவர்கள் இதை செய்தவர்களுக்காக வக்காலத்து வாங்க வேண்டாம்.காரணம், இந்த அசிங்கமான கலாச்சாரத்தில் அழியப்போகப்போவது எல்லோரும் தான்.

இதை ஏணியாக வைத்து மேலே ஏற வாய்ப்புகள் உள்ள போது அந்த மாதிரியான பதிவர்களை குறுக்கு வழியில் கிழே தள்ளினால் உண்மையான திறமை வாய்ந்தவர்களின் எப்படி முன்னேறு வார்கள்?

காப்பி பேஸ்ட் பதிவர்களுக்கு இது தான் பொழைப்பு என்றால் திறமைசாலிகளுக்கு வழி விடுவது தானே உத்தமம்!
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம். அதனால் யாரும் வக்காலது வாங்கி மேலும் மேலும் காப்பி பேஸ்ட் திருட்டு பதிவர்களை ஊக்குவிக்க வேண்டாம்

நிரூபன் said...

நம்ம சகோவை ரெண்டு நாளா காணமே என்று நினைத்தால்,
ஒரு அதிரடிப் பதிவுடன் வந்திருக்காரே..!

வாழ்க சகோ பாரத்.

நிரூபன் said...

மாப்பு, சங்கத்துக்கு தலைவர் யாரு?
ஹி...ஹி...

எதிர்ப்பு ஆர்ப்பட்டம், கண்டன ஊர்வலம் எல்லாம் இருக்கா...

நிரூபன் said...

பதிவின் ஒவ்வோர் வரிகளும்- சரமாரியான சொல்லடிகள் சகோ.

NKS.ஹாஜா மைதீன் said...

இதுதான் வஞ்சபுகழ்ச்சி அணி என்பதா?ஹி ஹி...

சென்னை பித்தன் said...

சங்க உறுப்பினர் சேர்க்கை மும்முரமாக நடக்கிறதா?சந்தா மற்ற விவரங்களென்ன என்பது பற்றித் தெரியப் படுத்துங்கள்!

பாலா said...

உள்குத்தோ, வெளிக்குத்தோ, குத்துங்க எஜமான் குத்துங்க...

Anonymous said...

ரோஜாப்பூந்தோட்டதில் புயல் 150 கி.மீ. வேகத்துல வீசுது டோய்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உண்மையில இதை யாராச்சும் தடை பண்ணனும். கொடுமை பண்றாங்கடா சாமி. ஆனந்த விகடன்,குமுதம், ஜுவி ரிபோர்ட்டர் இப்படி ஒரு புக் விடாம் பதுவு ஏத்துனா புக் வாங்கி படிக்கிற மூடி போயிடுது. இனிமே இந்த மாதிரி கொடுமையான பதிவுகளை படிக்கிறதில்லைன்னு முடிவு பண்ணிட்டேன். இவங்க பதிவ யாராச்சும் திருடினா குய்யோ முய்யோன்னு கத்துறது. ஆனா புக் ல இருந்து நோகாம காப்பி பண்ணி போஸ்ட் போடுவாங்களாம்.

விட்டா மருதம்,சரோஜாதேவின்னு அதையும் பதிவு ஏத்துவாங்க போல!!

Unknown said...

ரைட்டு!

middleclassmadhavi said...

ஜு.வி., ரிப்போர்ட்டர் எல்லாம் நான் இப்போ புத்தகமா படிக்கறதே இல்லை! ப்ளாக்களிலேயே படித்து விடுகிறேன்!! :-))

விமர்சனம் said...

எல்லாருக்கும் தெரிகிறது, காப்பி பேஸ்ட் செய்வது திருட்டு வேலை என்று.இருந்தாலும் ஓட்டு அதிகம் இருப்பதை பார்த்தால் திருட்டு ஓட்டும் அதிகமாக போடுவார்கள் போல....

Vinayagan said...

போகிற போக்கில்...

ஹிட்சுக்காக

என் மனைவியின் கவர்ச்சி படம்.
என் தங்கையின் கவர்ச்சி படம்

என்று போட்டும் எழுதுவார்கள் இந்த தரம் கெட்டவர்கள்.

Vinayagan said...

//எல்லாருக்கும் தெரிகிறது, காப்பி பேஸ்ட் செய்வது திருட்டு வேலை என்று.//

இது எல்லோருக்கும் தெரிகிறது தல. நார்மலா இவர்கள் முக்காடு போட்டு கொண்டுதான் செய்வார்கள்.

தனக்கு ஒட்டு போடுகிறான் என்று ''காப்பி பேஸ்ட்'' மண்டையங்களுக்கு ஓட்டும் பின்னூட்டமும் போடுபவர்களை சொல்ல வேண்டும்.

இதில் பல வயதான, சமூகத்தில் நல்ல பொறுப்பில் உள்ள மனிதர்களும் உள்ளனர்.

இந்த களவாணிகள் நாட்டில் உள்ள அரசியல்வாதிகளை நொட்டை சொல்லுவதுதான் காமெடி.

செங்கோவி said...

செம குத்து..ஆனா எந்தப் பக்கம் குத்தி இருக்கீங்கன்னு தான் தெரியலை..சூப்பர்!

Jana said...

இதிலை எது உள் குத்து எது வெளிக்குத்து என்று சத்தியமாகப்புரியலைங்கோ..
ங்கே....

மங்குனி அமைச்சர் said...

yov sangaththula yennaiyum seththukkangappaa ...... thakkaali mandaila ippai yellaam karpanai varandu pochchu

MANO நாஞ்சில் மனோ said...

ஹா ஹா ஹா ஹா கலக்குங்க எஜமான் கலக்குங்க....

MANO நாஞ்சில் மனோ said...

பாரதி பொங்கிட்டார்டோய்.....

Unknown said...

நல்ல பதிவு, உங்கள் ஆதங்கம் எல்லாம் சரி, ஆனா ஒண்ணு மட்டும் புரிய மாட்டேங்குது, ஏன் வெப்சைட்-ல "send this to your friends" இல்ல "share this to your friends" அப்படின்னு எல்லாம் லிங்க் குடுக்குறாங்க? யாரவது கொஞ்சம் சொல்லுவீங்களா?

Mahesh & Team, Jawahar Science and Arts College, Neyveli said...

கல்லூரி மாணவர்கள் நாங்கள் ஒரு குழு அமைத்து கடந்த 20௦ நாட்களாக தமிழகத்தின் பல தொகுதிகளில் மக்களை சந்தித்து சேகரித்த முடிவின் படி கணிப்பு இது.

சர்வே குழு - 38 ,
மொத்த தொகுதிகல் சென்றது - 110
மொத்த மக்கள் - 12000+

3 கேள்விகள் தான் முன் வைத்தோம்

1. எந்த கட்சிக்கு வாக்களித்தீர்
2. யாருக்கு வாக்களிப்பதாக நினைத்திருந்தீர்
3. முக்கிய பிரச்னை எது

முடிவுகள்

தி மு க விற்கு வாக்களித்தோம் - 40%
அதி மு க விற்கு வாக்களித்தோம் - 51௧
ப ஜ க - 6
மற்றவை - 3

தி மு க விற்கு வாக்களிக்க நினைத்து அதிமுக விற்கு மாறியவர்கள் - 17%

அதிமுக விற்கு வாக்களிக்க நினைத்து திமுக விற்கு மாறியவர்கள் - 9%

திமுக அதிமுக விற்கு வாக்களிக்க நினைத்து ஆனால் இரண்டும் பிடிக்காமல் மற்ற கட்சிக்கு வாகளிதவர்கள் 6%

தொகுதிகள்

தி மு க 28
அதிமுக 81
BJP 1

இதன் படி பார்த்தல் தி முக 60௦ம் அதிமுக 172௦ம் , BJP -2

முக்கிய பிரச்சனையாக மக்கள் சொன்னது :

மின் வெட்டு, விலையேற்றம்

spectrum , ஈழம் ஒரு சில தொகிதிகளில் மட்டுமே பிரச்சனையாக சொல்லப்பட்டது.. பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை

மதிமுக வெளியேற்றப்பட்டதால் அதிமுகக்கு வாக்களிக்க நினைத்ததில் 4% பேர் வேறு கட்சிகளுக்கு வாகளித்துள்ளனர்

மதிமுகவினர் பலரும் திமுக விற்கும், சிலர் பாஜக விற்கும் வாக்களித்துள்ளனர், குறிப்பிட்ட சதகிவிததினர் வாகளிக்கவே இல்லை

விஜயகாந்த் பிரச்சாரம் எடுபட வில்லை - விஜயகாந்த் அதிமுக கூட்டணி வைத்தது பிடிக்காமல் தேமுதிக வாக்குகள் சில ப ஜ க விற்கு சென்றுள்ளது

ஜெயலலிதா போக்கில் மற்றம் இல்லை எனினும் இன்றைய சூழலுக்கு அவரே சரியானவர் என்று பலர் சொன்னார்கள்

கருணாநிதி நல்லவர் சுற்றி இருப்பவர்கள் சரி இல்லை என்ற கருத்தும் உள்ளது

இலவச திட்டங்கள் கிராமங்களில் நல்ல வரவேற்பு ஆனால் மின்தடை விலை வாசி ஆகியவை பலனை குறைத்துள்ளது

வடிவேலு பிரசாரம் சில தொகுதியில்
எடுப்பட்டுள்ள போதிலும்.. பல இடங்களில் அவரை வேடிக்கை பார்க்க மட்டுமே கூட்டம்

கிராமபுரத்தில் திமுகவிற்கு சற்று வலு கூடியுள்ளது
நகர்ப்புறங்களில் அதிமுக முந்துகிறது.

பிரசாரத்தில் பிடித்தது - கலைஞர், ஸ்டாலின், நல்லகண்ணு, நெப்போலியன்.

ஊனமுற்றோர் பலர் தி மு க விற்கு வாகளித்துள்ளனர்

மதுரையில் இந்த முறை ஆசாகிரிக்கு இறங்கு முகம்
கொமுக பெரிய அளவில் தி மு கவிற்கு உதவிட
வில்லை

அதே போல ச ம க மற்றும் புதிய தமிழகம் அதிமுகக்கு உதவிடவில்லை

Note: Any bloggers can make this as a seperate post in their blog, please

Unknown said...

@Mahesh :
நண்பர் மகேஷ் அவர்களுக்கு, இதை எங்கே இருந்து காப்பி பண்ணீங்க பாஸு. இதை காப்பி பண்ணி போடுறது ஒரு மேட்டர் இல்லை. ஆனா தேர்தல் ஆணைய உத்தரவு படி பத்தாம் தேதி வரை கருத்து கணிப்பு போட முடியாது, வேனுமின்ன என் ப்ளாக்-ல அதுக்கப்பறம் நானே போடுறேன். ஆனா நீங்க கலெக்ட் பண்ண ரிப்போர்ட்டோட ஒரிஜினல் வேணும்.

Mahesh said...

Dear Mr Ramesh BAbu - This is not a copy paste. We the students from Jawahar Arts and Science colleg, Neyveli do these kind of surveys on various occassions. The reports are their in our college library.

owr own survey done by 38 of us.

we made 9 teams of 4 members per team.

each team spent 2 days in a constituency and every team reported on 10 - 13 constituencies each depending upn the size of the constituency

the reports are to be submitted to HOD Public Administration department and will be added to the library archive along with our previous survey polls

Anonymous said...
This comment has been removed by the author.
R. Gopi said...

ஒரு பள்ளிக்கூடக் குழந்தைகளுக்காக என்று ஆரம்பிக்கப்பட்ட இந்த வலைப்பூவில் இது போன்ற பதிவுகள் வருவதில் எனக்கு உடன்பாடில்லை. இது என் கருத்து மட்டுமே. தவறாகப் பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மன்னிக்கவும். நன்றி.

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃவாரத்திற்கு மூணு பதிவு போட முடியாத நீ எப்படி, வாரத்திற்கு மூணு பதிவு போடும் என்னை திட்டலாம்?ஃஃஃஃ

ஐயோ என்னப்பா நடக்குது பதிவுலகத்தில... என்னை சொல்லல தானே...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
அளவுக்கதிகமான பரசிட்டமோல் என்ன செய்யும்.. (Paracetamol Poisoning)

Unknown said...

எனக்கு ஒரு ஆயுட்கால சன்தா வேணும்.

என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலையே!

Unknown said...

ஹை! இது நல்லா இருக்கே!

சங்க உறுப்பினர்களின் வசதிக்காக பதிவு மாதிரிகள்.

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்