இனி நானே நிரந்தர முதல்வர் என்றால்,அது சொந்த செலவில் சூன்யம் வைத்தது போலத்தான்.

 கருணாநிதிக்கு எம்.ஜி.ஆர். உயிருடன் இருந்தவரை, கிட்டத்தட்ட ஒரு நம்பியார் ரேஞ்சுக்கு தான் அடிதட்டு மக்கள் அவரை நினைத்திருந்தனர்.   எம்.ஜி.ஆர்.க்கு பிறகு  கடந்த 2006ல் ஆட்சியை பிடித்த பிறகுதான் ஒரு கிலோ அரிசி மற்றும் இலவசங்களின் புண்ணியத்தால் அந்த இமேஜ் கொஞ்சம் மறக்கப்பட்ட நிலையில் இருந்தது.

நகரங்களில் அதிக ஓட்டு வங்கியை வைத்திருந்த  திமுகவை கிராமங்கள் வரை கொண்டு சேர்த்தது இந்த இலவசங்கள் தான்.இலவசங்களால் கிடைத்த நற்பெயரை கிராமங்களில் நுழைவதற்கான,  ஒரு அடையாள அட்டையாக மட்டுமே திமுக பயன்படுத்தியிருந்தால் கூட திமுக தப்பியிருக்ககூடும். அது மட்டுமே தனக்கான ஒட்டு மொத்த வழி என்று திமுக நம்பியது தான் இன்றைய திமுகவின் பரிதாப நிலைக்கு காரணம்.

இலவசங்கள் என்பது  மக்களுக்கு ஓ.கே. தான் ஆனால் அதற்கு விலையாக, மிகப்பெரும் விலையை  மற்ற பொருள்களுக்கு கொடுக்க வேண்டியிருந்தது தான் கொடூரமாக போய்விட்டது.
 

ஒரு ரூபாய் அரிசி வேகுவதற்குள், மற்ற பொருள்களின் விலை, மக்களை வெந்து போக வைத்தது.
                   
முள்ளை முள்ளால் எடுக்கிறேன் என்று திமுகவின் இலவசங்களுக்கு போட்டியாக இலவசங்களை அறிவித்த ஜெயலலிதாவும் கவனிக்க வேண்டிய விஷயம் இதுதான். இலவசங்கள் உங்களுக்கு எந்த நேரத்திலும் சூன்யம் வைக்கும் விஷயமாக மாறலாம்.


இந்த முறை சொந்த செலவில் திமுக, சூன்யம் வைத்துக்கொண்ட மற்றொரு விஷயம் ஓட்டுக்கு பணம் கொடுத்தது தான்.

இதற்கு முன்  நடைப்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வரை கூட, திமுகவினருக்கு திருமங்கலம் பார்முலா கைக்கொடுத்து தான் வந்ததது. காசு கொடுத்து விட்டு வெத்தலையில் சத்தியம்  வாங்குவது என்பது தான் திருமங்கலம் பார்முலாவின் ஹைலைட்டான விஷயம். வாங்கிய காசுக்கு துரோகம் இல்லாமல் ஓட்டு விழுந்து என்னவோ  உண்மை தான்.

ஆனால் இந்த முறை ஓட்டுக்கு பணம் என்பதற்கு, தேர்தல் கமிஷன் வேட்டைக்காரனாக மாற, இந்த வகை பணப்புழுக்கம் குறைந்தது.

அதையும் மீறி கடைசி சில நாட்களில் வழங்கப்பட்ட பணத்தை வாங்கியவர்களும் சத்தியம் எங்களுக்கு சர்க்கரை பொங்கல்,
என்ற பாணியில், தான் விரும்பிய கட்சிக்கே, வாக்களிக்க இப்போது திருமங்கலம் பார்முலா, 108 ஆம்புலன்சில் எடுத்து செல்லப்ப்பட்டு, அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.

மீண்டும் அது கண் விழிக்காத வரை ஜனநாயகத்திற்கு நல்லது.
இனி வரும் காலங்களில் ஓட்டுக்கு பணம் என்பது எடுபடாது என்று நம்பலாம். அரசியல்வாதிகள் நம்மிடம் திருடிய நம் வரிபணத்தை நமக்கு தருகிறார்கள் எனவே இது நமக்கான பணம் தான் என்ற எண்ணவோட்டம் மக்களிடையே வந்து விட்டது.

ஊழல் செய்யும் அரசியல்வியாதிகள் மக்களையும் தங்களைப்போல மாற்ற பரப்பிய தொற்று நோய்  ஓட்டுக்கு பணம் என்பது.

எம்.ஜி.ஆர். காலத்தில் பதினான்கு ஆண்டுகள்  ஆட்சியை இழந்து வனவாசம் இருந்த கருணாநிதி, தமக்கு கிடைத்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்தாமல் விட்டது, அவருக்கு மீண்டும் ஒரு ஓய்வை  ஏற்ப்படுத்தி கொடுத்துவிட்டது. இது நிரந்தர ஓய்வா என்பது இப்போது ஜெயித்த ஜெயலலிதாவின் ஆட்சி முறையில் இருக்கிறது.

ஜெயலலிதாவும் தடம் மாறினால் அவரை ஓய்வெடுக்க
மீண்டும் கொடநாடு அனுப்பி விடுவார்கள் என்பதும் உண்மையே.


டிஸ்கி:

செய்வதை எல்லாம் செய்துவிட்டு, கடைசியில் மக்களை சரி செய்துவிடலாம், நாமே தமிழகத்தின் நிரந்தர முதல்வர் என்று ஏதேனும் ஒரு அரசியல்வாதி நினைப்பார்  என்றால் அவருக்கு விழித்துக்கொண்ட மக்கள் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கள்.

25 கருத்துரைகள்:

rajamelaiyur said...

Vadai

rajamelaiyur said...

Your statement is very very true . . .

தமிழ்வாசி பிரகாஷ் said...

நல்ல அலசல்

தமிழ்வாசி பிரகாஷ் said...

இனி யாரும் நம்ம கிட்ட பீலா விட முடியாது

middleclassmadhavi said...

நல்ல பதிவு, பாராட்டுக்கள்.

சிநேகிதன் அக்பர் said...

//நாமே தமிழகத்தின் நிரந்தர முதல்வர் என்று ஏதேனும் ஒரு அரசியல்வாதி நினைப்பார் என்றால் அவருக்கு விழித்துக்கொண்ட மக்கள் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கள்.
//

சரியான கருத்து.

Prabu Krishna said...

பணம் கொடுத்தா வேலை ஆகாதுன்னு உணர்ந்து இருப்பாங்க.

கவி அழகன் said...

நல்ல அலசல்

இராஜராஜேஸ்வரி said...

விழித்துக்கொண்ட மக்கள் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கள்.//
நல்ல அலசல். பாராட்டுக்கள்.

கவி அழகன் said...

கடைசிப்படம் சூப்பரா இருக்கு

Ram said...

ஒரு ரூபாய் அரிசி வேகுவதற்குள், மற்ற பொருள்களின் விலை, மக்களை வெந்து போக வைத்தது.//

இது சூப்பரு.!!

Ram said...

108 ஆம்புலன்சில் எடுத்து செல்லப்ப்பட்டு, அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.//

இதையும் ரசித்தேன்.!!

Ram said...

இனி வரும் காலங்களில் ஓட்டுக்கு பணம் என்பது எடுபடாது என்று நம்பலாம். //

ஹி ஹி.. தமிழக மக்களை பத்தி உங்களுக்கு தெரியல போலும்.. எங்களுக்கு எல்லாம் காசு கொடுக்காம அவிங்களுக்கு மட்டும் காசு கொடுத்தானே என்னும் கோபத்தில் தான் மக்கள் திமுக வை எதிர்த்தது.!!இது எப்படி இருக்கு.?

Ram said...

என்னங்க நீங்க சொல்றீங்க.? மக்கள் என்னைக்குமே விழிக்க மாட்டாங்க.. அரசியல் கட்சிகளின் அடக்குமுறையிலிருந்து மீடியாக்களின் போதையில் இருக்கின்றனர் மக்கள்.. தாங்கள் விரும்பி பார்க்கும் மீடியா என்ன சொல்கிறதோ அது அவர்களுக்கு வேத வாக்காய் மாறிவிட்டது.!! சொல்வதை அழுத்தி சொன்னால் மக்கள் மாறிவிடுகிறார்கள்.. மக்கள் விழிக்கவில்லை.. இடம் மாறி தூங்குகின்றனர்..

Anonymous said...

///அவருக்கு மீண்டும் ஒரு ஓய்வை ஏற்ப்படுத்தி கொடுத்துவிட்டது. இது நிரந்தர ஓய்வா என்பது இப்போது ஜெயித்த ஜெயலலிதாவின் ஆட்சி முறையில் இருக்கிறது./// மீண்டு வருவது ரொம்ப கஸ்ரம் எண்டு தான் நினைக்கிறேன்

vetha (kovaikkavi) said...

பரத் பாரதி !...ஓஓஓ!!!!அரசியலா?....???எனக்கு ஆர்வம் மிகக் குறைவு... மன்னிக்க வேண்டுகிறேன். ஒன்றிரண்டு வலையில் செய்தி பார்த்து விட்டு விலகி விடுவேன். வாழ்த்துகள்....
Vetha. Elangathilakam.
Denmark.

ராஜ நடராஜன் said...

//சத்தியம் எங்களுக்கு சர்க்கரை பொங்கல்//

ரொம்ப நல்ல ரிதம்!

அதுவும் அழகிரி கோட்டையிலேயே சர்க்கரைப் பொங்கல் சாப்பிட்டிருக்காங்கன்னா:))))

ராஜ நடராஜன் said...

//Vote 4 Cash//

நாலு காசுக்கு ஓட்டுப் போடுங்கன்னு பேனர் வச்சிகிட்டு மக்களை குத்தம் சொல்றது அப்புறமா:)

ராஜ நடராஜன் said...

பாதிக்கு பாதி சம பங்கு ஓட்டுன்னு பார்த்தா இரண்டு பக்க சார்பு ஓட்டுன்னு எடுத்துக்கலாம்.ஆனால் வெல்லும் தகுதி பெறும் ஓட்டுக்கள் யாருடையது என்று கண்டு பிடிக்க வேண்டியது மிக முக்கியம்.

சரியில்ல....... said...

தெளிவான கருத்துக்கள்... வாழ்த்துக்கள்...

Anonymous said...

மிகச் சரியாக சொன்னீர்கள். தமிழக மக்கள் முட்டாள்கள் அல்ல. மேலும் சிங்கப்பூரை போலவும் குஜராத்தை போலவும் நம் தமிழ் நாடு ஆக முடியும். இப்பொழுதே தேர்தல் ஆணையம் நன்றாக செயல் பட்டதே. செல்வி ஜெயலலிதாவுக்கு திறமை குறைவில்லை. வாய்பை நன்றாக பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.
amas32

test said...

Nice post!

ரஹீம் கஸ்ஸாலி said...

ஒரு ரூபாய் அரிசி வேகுவதற்குள், மற்ற பொருள்களின் விலை, மக்களை வெந்து போக வைத்தது.
அருமை

சசிகுமார் said...

பதிவு நன்றாக இருந்தது. விலைவாசி,மின்வெட்டை கட்டுபடுத்தினாலே மக்களின் பிரச்சினைகளை பாதியாக குறைத்து விட முடியும். பார்ப்போம் என்ன செய்கிறார்கள் என்று.

Anonymous said...

/திருமங்கலம் பார்முலா, 108 ஆம்புலன்சில் எடுத்து செல்லப்ப்பட்டு,அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.//

வரியை நன்றாக கோர்த்து உள்ளீர்கள். தேர்தல் கமிசன் கட்டுப்பாடா இல்லை மக்களின் மனமாற்றமா (பணம் வாங்க மறுத்தல்) எது சரியான காரணம் என்று புரியவில்லை.

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்