அதிரடி அரசியலில் தற்சமயம் சோனியா ஒதுங்கியிருக்கும் சூழ்நிலையில், தற்போதைய தேசிய அரசியலில் மிகப்பெரிய கட்சிகளாக இருக்கும் காங்கிரஸ், பாரதீய ஜனதா இரண்டும் பலவீனமான நிலையிலேயே இருக்கிறது.
செயலற்ற பிரதமர் என்று மன்மோகனை சாடினாலும், பாஜக தலைமையும் அந்த செயலற்ற பிரதமரை கூட; சமாளித்து அரசியல் செய்யத்தெரியாமல் பிரதான "சொதப்பல் எதிர்கட்சியாக" கலங்கி வருகிறது.
அத்வானிக்கு போட்டியாக நரேந்திர மோடி - நரேந்திர மோடிக்கு போட்டி அத்வானி - நரேந்திர மோடிக்கு அத்வானி ஆதரவு என்பது தான் பாரதீய ஜனதாவின் நேற்று - இன்று - நாளை- நிலவரமாக இருக்கிறது.
இப்பொதெல்லாம் அத்வானி, நரேந்திர மோடிக்கு நேரடியாகவே, ஆதரவு தெரிவித்து வருகிறார். தனது ரத யாத்திரை தேரின் அச்சு முறிந்து, நடுத்தெருவில் நின்று விட்டதால் கூட இந்த முடிவுக்கு அத்வானி வந்திருக்ககூடும்.
"மோடி, அமெரிக்கா செல்ல திட்டமிட்ட நிலையிலேயே , மோடிக்கு விசாவை மறுத்தது ஏன்? அதுவும் மோடி விசாவுக்கு விண்ணப்பிக்காத போது?" அமெரிக்க அண்ணனுக்கு அத்வானி கேள்வி எழுப்பி இருக்கிறார். 2002 குஜராத் கலவரத்திற்கு உச்சநீதிமன்ற தீர்ப்பை மோடியை விட, அதிகமான சந்தோஷமாக வரவேற்று இருக்கிறார்.
தனது பிரதமர் கனவினை அத்வானி குழி தோண்டி புதைத்துவிட்டு, இனி துணைப்பிரதமர் அளவுக்கு சிந்திக்க தயாராகி விட்டார் போல.
நெடுஞ்செழியன், அன்பழகன், ஓ.பன்னீர் செல்வம் போன்ற ரேஞ்சில் மிஸ்டர் இரண்டாம் இடமாக, இனி தேசிய அரசியலில், அத்வானி பளப்பளக்க இருக்கிறார்.
நடுநிலை அரசியல் விமர்சகர்களை பொறுத்தவரை இந்த மாற்றத்தினை கூர்ந்து கவனிக்க வேண்டும் என்ற எண்ணமே உண்டாகியிருக்கிறது.
அத்வானியை விடுத்து, தாம் அடுத்த பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படும் போது, தன் முகத்தில் இருக்கும் "குஜராத் கலவர கறை" நீக்கப்படிருக்க வேண்டும் என்பது தான் நரேந்திர மோடியின் தற்போதைய ஆசை.
அதனால் தான் தற்போதைய உச்சநீதிமன்ற தீர்ப்பை, இறுதி தீர்ப்பைப் போல காட்ட துடிக்கிறார். அதற்காகவே, தன் மூன்று நாள் உண்ணாவிரதத்தில் முஸ்லீம்கள் பங்கேற்பதை அதிக அளவில் விளம்பரப்படுத்தி இருக்கிறார்.
மோடி தன்னுடைய வித்தையால் தான்; நிலநடுக்கம், கலவரம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட குஜராத்தை மீட்டெடுத்தார் என்ற தரப்பை பிரபலப்படுத்தவும் இந்த மூன்று நாள் உண்ணாவிரதத்தை பயன்படுத்திக்கொண்டுள்ளார் மோடி.(இதே போல, இந்தியாவையும் மாற்றுவார் என்று மக்கள் நம்ப வைப்பது தான் மோடியின் அடிப்படை சூத்திரம்)
தேசிய அரசியலில் தனது தாக்கம் இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஜெயலலிதாவின் ஆதரவையும், தனது சொந்த கட்சிகாரர்களின் ஈர்ப்பையும், பெற்றியிருப்பது மட்டுமே மோடியின் தற்போதைய வெற்றி. (ஒரு வேளை பிரதமர் பதவிக்கான போட்டியில் மோடிக்கு வாய்ப்பு மறுக்கப்படும் போது, ஏதெனும் ஒரு சூழலில் மோடி, தன்னை ஆதரிப்பார் என்பது ஜெயலலிதாவின் மனக்கணக்காக இருக்கக்கூடும்)
ஆனால் தனது உண்ணாவிரததால், அன்னா ஹசாரே அளவுக்கு மீடியாக்களின் பளபளப்பிலும், மக்கள் மனதிலும் இடம் பிடித்து விடலாம் என்ற மோடியின் எண்ணம் முழுமையாக நிறைவேறவில்லை என்பது தான் தற்போதைய நிலவரம்.
டிஸ்கி:
தொடர்ந்து ஊழல், குண்டுவெடிப்பு, பொருளாதார சிக்கல், விலைவாசி உயர்வால் கோபமாகியிருக்கும் மக்கள், தமிழக மக்கள் ஸ்டைலில் "மாற்றம் வேண்டும்" என்று ஆளுங்கட்சியை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள் எனில் எதிர்தரப்பில் நிறுத்தப்படும் நரேந்திர மோடிக்கு யோகம் அடிக்கும் ஆபத்து இருப்பதையும் மறுத்து விட முடியாது.
20 கருத்துரைகள்:
ஆறுமுகம் அடிச்சு ஆடுகிறார்
மோடிக்கு பிரதமர் வாய்ப்பு அதிகமாவே தெரியுது, மன்மோகனை உடனே இத்தாலிக்கு ச்சே ச்சே வீட்டுக்கு அனுப்பவேண்டும்....
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை நண்பரே! ஆட்சியை சரியாக தேர்ந்தெடுப்பதில் வல்லவர்கள் என்று தமிழக மக்கள் நிரூபித்துவிட்டனர்!
சரியாக சொல்லியுள்ளீர்கள்
இதை பற்றி நான் ஒரு கட்டுரை எழுதி உள்ளேன் .
மோடியை முன்னிறுத்தும் காரணங்களை விளக்கி உள்ளேன் .
பார்த்து பதில் சொல்லவும் ...
தேசிய அரசியலில் தனது தாக்கம் இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஜெயலலிதாவின் ஆதரவையும், தனது சொந்த கட்சிகாரர்களின் ஈர்ப்பையும், பெற்றியிருப்பது மட்டுமே மோடியின் தற்போதைய வெற்றி. // ஆம் இதுதான் உண்மை...
ரைட்டு...TM 7
வணக்கங்களும்,வாழ்த்துக்களும் பின்னே வாக்குகளும்..
நல்ல பதிவு, பாராட்டுக்கள்.
பகிர்வுக்கு நன்றிகள், தொடருங்கள்.
இன்னும் நன்றாக எழுதியிருக்கலாம்.
நல்லாவே இல்லை, என்ன பண்றது தலையெழுத்தேனு படிக்க வேண்டியிருக்கிறது.
!@#$%^&*()_
அப்படின்னா அத்வானியின் பிரதமர் கனவு அவ்வளவுதானா? மோடியின் நாடகம் பலிக்குமா என்று பொருத்திருந்து தான் பார்க்கனும்.
மோடி தன் இமேஜை மாற்ற எடுக்கும் முயற்சிகளில் ஒன்றாக இதை எடுத்துக்கொள்ளலாம். இப்போதைக்கு பலன் பூஜ்யம் தான்.
என்னத்த சொல்ல???
இவரெல்லாம் பிரதமரா வந்துட்டா எல்லாருக்கும் நாமம் போட்டு தான் மத்தவேல பாப்பாரு :-(
இது.. நரகாசுரன் கொண்டாடும் தீபாவளி..! http://pinnoottavaathi.blogspot.com/2011/09/blog-post_18.html
உண்ணாவிரதம் இருந்தா ஹசாரே ஆயிட முடியுமா?
சரியாக சொல்லியுள்ளீர்கள் நண்பரே...
ரைட்டு ஆறுமுகம்.
ஓவர் பில்டப்பு உடம்பிற்கு ஆகாது என்பது தான் இங்கே மோடி விடயத்திலும் நிகழ்ந்துள்ளது.
ஆழ்ந்த சிந்தனையோடு எழுதப்பட்ட நல்ல கட்டுரை. உங்கள் கருத்துக்களை ஆதரிக்கிறேன்.
பகிர்வுக்கு நன்றிகள்,
குஜராத்தை தவிர்த்து எனைய பகுதி முஸ்லீகளுமக்கும்,காங்கிரஸ்காரர்களுக்கும்,காம்ரேட்- கம்யூனிஸ்ட்டுகளுக்கும் உங்கள் பதிவு சந்தோஷத்தைக் கொடுக்கும்...
வணக்கங்களும்,வாழ்த்துக்களும் பின்னே வாக்குகளும்..
ரொம்பவும் அக்கறைப்பட்டுக் குப்புற விழுந்துறாதிக
Post a Comment