கவிதைக்காரர்களுக்கு ஒரு சவால்...

"நான் இறந்து போயிருந்தேன்..."
இப்படி ஆரம்பிக்க முடியுமா? ஒரு கவிதையை...

நிகழ்காலத்தில் தொடங்கும் அறிவுமதியின்
இந்த வரிகளைத் தொடக்கமாகக் கொண்டு,
இறந்த காலம் கடந்து, எதிர்காலத்தைத்
தொட்டு முடியட்டும் உங்கள் கவிதை..

உங்கள் கவிதைகளை bharathphysics2010@gmail.com
என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.

எங்கள் நண்பரின் கவிதையாய் bharathbharathi.blogspot.com வலைப்பூவில் வெளியிடுகிறோம்;
அல்லது

உங்கள் கவிதைகளை,உங்கள் வலைப்பூவில் வெளியிட்டுவிட்டுஎங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். வந்துப் பார்க்கிறோம் யாரோவாக....

முடியுமா என்பதுதான் கேள்வி. எங்கே வெளியிடுவது என்பதல்ல...
Start MUSIC.......

சவாலுக்கு பதில்-1 RADHA KRISHNAN அவர்களின் கவிதை..

நான் இறந்து போயிருந்தேன் ---கவிதை...
சவாலை ஏற்றுக்கொண்டு கவிதை அனுப்பிய
அதீத கனவுகள் RADHAKRISHNAN... அவர்களின் கவிதை..


நான் இறந்து போயிருந்தேன்
இதை எப்படி எவரிடம்
சொல்லிக் கொள்வது

பதினேழு முறை
நான் கொண்டு சென்று
பதினெட்டாம் முறையாய்
நான் இறந்து போனபின்

அஷ்டோத்திர மந்திரம் கற்று
உலகம் நலம் பெற வேண்டுமெனும்
ஒரு உயரிய உள்ளம் கொண்ட
அடியேன் ராமனுஜதாசன்
கதை கேட்டு

நான் இறந்து போயிருந்தேன்
இதை எப்படி எவரிடம்
சொல்லிக் கொள்வது

யாம் பெற்ற இன்பம்
பெறுக இவ்வையகம்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
உள்ளூர மோதியபோது

நான் இறந்து போயிருந்தேன்
இதை எப்படி எவரிடம்
சொல்லிக் கொள்வது

நான் நான் நான்
என நாணமே இல்லாமல்
செருக்குடன் கிறுக்குப் பிடித்த
நான் நான் நான்

நான் இருந்தபோது
கவலைகள் என்னை
தின்று கொண்டிருந்தது

நான் இறந்தபோது
கவலைகளை
தின்று கொண்டிருந்தேன்.

நான் இறந்து போயிருந்தேன்
இதை எப்படி எவரிடம்
சொல்லிக் கொள்வது



கவிதை வெளியிடப்பட்டுள்ள தளம்
http://www.greatestdreams.com
அதீத கனவுகள்

நான் தோற்று விழமாட்டேன்.

எனது பள்ளி... எனது நம்பிக்கை...

இன்னும் சில நாட்களில்
எங்கள் பள்ளி நாட்கள்
முடிந்து விடும்..
அதன் பின்
வாழ்க்கையை
நேரடியாக சந்திக்கப் போகிறேன்..
இவள் கை களைத்து
தோற்றுப் போய்விடுவாளோ
என கவலைப்பட வேண்டாம்...

வெறும் புத்தகப்புழுவாய்
இருந்து விடாமல்
எதார்த்த வாழ்வின்
நடைமுறை சிக்கல்களையும்;
மனித மனதின் முரண்பாடுகளையும்
எனது பள்ளி
கற்றுக் கொடுத்திருக்கிறது.

வாழ்க்கையின்
சிரமங்கள் எதனையும்
எதிர் கொள்ளும்
வலிமையை
எனது தோள்களுக்கு
என் பள்ளி வாழ்க்கை
தந்திருக்கிறது.

நான் தோற்று விழமாட்டேன்.
வீழ்ந்தாலும்
உடன் எழுவேன்.

சிகரங்கள்
என்னை
பாடமாய்
எடுத்து படிக்குமாறு
எழுவேன்...

மிக உயரமாய்...


எஸ். பாரதீ....

பிஞ்சுக்கேள்வி....

அதை
கோவில் இருந்த இடம்
எங்களிடம் தாருங்கள்
என்கிறார்கள் சிலர் ,

மசூதி இருந்த இடம்
எங்களிடம் தாருங்கள்
என்கிறார்கள் சிலர்,

இரண்டு பேருக்கும்
வேண்டாம் ,
எங்களிடம் '
தாருங்கள்.
நாங்கள்
வீடு கட்டிக்கொள்கிறோம்;
எங்களுக்குத்தான்
வீடில்லையே
என்கிறாள்
பாரதி (ஆறாம் வகுப்பு ஆ பிரிவு).

என்ன பதில்
சொல்லக்கூடும்
நான்?
என்னச் சொல்லி
புரிய வைக்க நான் ?

சின்னதொரு சொர்க்கம்.

ரஷ்ய இலக்கியங்களில் எல்லாம் மிக பெரிய சந்தோஷத்தை ஒருவன் அடைந்தான் என்பதை விளக்க அதிக அளவில் பயன் படுத்தப்பட்டிருக்கும் உவமை என்னவென்றுத் தெரியுமா?.."பள்ளியை விட்டு வரும் மாணவன் போலே...

நடிகர் சூர்யா கூட அவரின் பள்ளி வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சியை ஒரு முறைச் சொன்னார், அவர் பள்ளியில் படிக்கும் போது ஒரு நாள் பள்ளி முதல்வரின் மகன் திடீரென இறந்து விட்டதால், இன்று பள்ளி விடுமுறை என்றவுடன் மாணவர்கள் அனைவரும் சந்தோஷமாக கைத்தட்டினார்கள்.

பள்ளி என்பது சின்னதொரு திகார் சிறையாகவே பெரும்பாலான மாணவர்களுக்குத் தோன்றுகிறது. ஆனால்எங்களுக்கு சொர்க்கமாகவே தோன்றுகிறது.

மாணவர்களை புரிந்துக் கொண்ட ஆசிரியர்களும், ஆசிரியர்களை புரிந்துக் கொண்ட மாணவர்களும் இருக்கும் இடத்தை சொர்க்கம் என்று தானே சொல்ல வேண்டும்.

அரசுப் பள்ளி என்றாலே ஔவையார் காலத்தில் இருப்பதைப் போன்று இருக்கும் என்ற எண்ணத்தை மாற்றுங்கள். எங்கள் வகுப்பறை "எந்திரன்" யுகத்து வகுப்பறை.

லேப் டாப், புரஜெக்டர் என நவீன தொழில்நுட்பங்களை கற்பித்தலுக்கு பயன்படுத்தும் ஆசிரியர்கள் எங்களுக்கு கிடைத்திருக்கிறார்கள். எங்கள் வகுப்பறையின் Window -வில் சின்னதொரு அறிவிப்பு பலகையில்இடம் பெற்றுக் கொண்டிருந்த, எங்களின் கவிதைகள், கட்டுரைகள் இப்போது Microsoft Windows வழியாக, இந்த வலைப்பூ வாயிலாக, இப்போது உலகம் முழுவதும் பார்க்கப்படுகிறது என்பதே இதற்கு சான்று.

சாகிற நாள் தெரிஞ்சு போச்சு-னா வாழ்ற நாள் நரகம்...
எங்களைப் பொறுத்தவரை சாகிற நாள் தெரிஞ்சு போச்சு-னா வாழ்ற நாள் சொர்க்கம்.. எங்கள் பள்ளி வாழ்க்கை(+2 வாழ்க்கை) இன்னும் வெறும் 150 நாள்கள் தான். இருப்பினும் மிச்சம் இருக்கிற நாட்களை ரசனையோடு இருக்கப்போகிறோம்..
எங்கள் ஆசிரியர்களையும், பாடங்களை கொண்டாடி மகிழப்போகிறோம்..

இடவசதி குறைவு போன்ற நடைமுறைச் சிக்கல்களைத் தாண்டி; எங்கள் பள்ளி வெற்றி நடைப்போடுகிறது. சென்ற மார்ச்-2010 பொதுத்தேர்வில் எங்கள் மாணவியர்கள் 200-க்கு 198 மதிப்பெண்கள் வரை பெற்றுள்ளனர். மாநில முதல் இடத்திற்கும் எங்களுக்கும் இடைவெளி வெறும் இரண்டு மதிப்பெண்கள் தான்..

"தங்கம் எனக்கு வேண்டாம்... தங்கப்புதையல் எனக்கு வேண்டும் என்று எங்கள் ஆசிரியர்கள் சொன்னபோது, நாங்கள் "ரின்" விளம்பரத்தில் வருவதுப் போல , இரண்டு மார்க் தானே அதுவும் இந்த முறை வந்துவிடும் என்று அவர்களுக்கே நம்பிக்கையூட்டியிருக்கிறோம்.

இந்த முறை நிறைய பொறியியல் , மருத்துவ மாணவர்களை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்...

எங்கள் எண்ணங்கள் கைக்கூட நீங்களும் எங்களுக்காக இறைவனை வேண்டிகொள்ளுங்கள்.

12-அ1,அ,மற்றும் ஆபிரிவு மாணவிகள்.
நகரவை மகளிர் மேல் நிலைப்பள்ளி,
மேட்டுப்பாளையம்.



வினாக்களின் நீட்சி..

அங்கே இல்லாதவனுக்கு
வறுமையால் பட்டினிச்சாவு;

இங்கே இருப்பவனுக்கோ
முறையற்ற உணவால் மாரடைப்புச்சாவு;

அங்கே இல்லாதவனுக்கு
மழலையை பெற புதிய மருத்துவயுக்தி

இங்கே அதிகம் இருப்பவனுக்கோ
கள்ளிப்பால் யுக்தி;

அங்கே இல்லாதவனுக்குப் புகலிடம்
தெருவோர நடைப்பாதை

இங்கோ இருப்பவனுக்கு புகலிடம்
எட்டடுக்கு மாடி, எட்டிப்பிடிக்க வானம்;

ஏனிந்த பேதம்? ஏனிந்த பிரிவினை?
ஏனிந்த பாகுபாடு?

பகுத்துண்ணல் என்பது உணவுக்கு மட்டுமா?
வாழ்க்கை முறையில் இல்லையா?

- உமா மகேஸ்வரி.ம.

"ரௌத்திரம் பழகு"

இந்த உலகில் தனித்திறமை உள்ளவர்கள் மட்டுமே ஜெயிக்க இயலும்.

தனித்திறமை என்பது தன்னைப் புரிந்துக் கொள்ளுதல், அனைவரிடமும் உள்ள சிறப்பு பண்புகளை (Plus Points) உற்று நோக்கி; அதனை தனக்கு சொந்தமாக்கிக் கொள்ளுதல், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை ஒருவாறு யூகித்தல், வார்த்தைகளின் முக்கியத்துவத்தை உணர்தல், இவையனைத்திறகும் மேலாக நம்பிக்கை.

படி எங்கிருக்கிறது என்று தெரியாத போதும்
முதல்அடி எடுத்துவைப்பதற்குப் பெயர் தான் நம்பிக்கை!

நம்பிக்கையை பாதுகாப்பாக வைத்துக் கொண்டால், இன்று நம்மை எள்ளி நகைக்கும் இவ்வுலகம் நிச்சயம் திரும்பிப் பார்க்கும்.

இவ்வுலகில் ஏசுநாதரைப் போல் வாழ்வது என்றால் நம்மை பாதாளத்தில் தள்ளி விடுவார்கள். எனவே தேவைப்பட்டால் மறுகன்னத்தில் மட்டுமல்ல, இரு கன்னத்திலும் திருப்பி அறைய வேண்டும். "ரௌத்திரம் பழகு" என்பது பாரதியின் வார்த்தைகள். நல்லவனாக வாழுதல் தவறல்ல. நல்லவனாக மட்டும் வாழ்தல் என்பது இன்றைய சூழலில் " பிழைக்கத் தெரியாதவன்" என்ற பட்டத்தை பெறுவதற்கு மட்டுமே உதவும்.

நமது சுற்று வட்டாரம் எப்படிப்பட்டது, நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் திறம், என்பவையும் முக்கியம். இவை சமுதாயத்தால்மதிக்கப்படக்கூடியநிலையை உருவாக்கும்.

வாழ்க்கையின்இறுக்கம் தாண்டி, நல்ல விஷயங்களை ரசிக்கும் மனதையும் பெற்று விட்டால் இனி எல்லாம் சுகமே....

-- நந்தினி . B. 12- A1


----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------





எங்கோ படித்தது... ரசித்தது.

இன்று தலைகுனிந்து படிப்பதெல்லாம்
நாளை தலைநிமிர்ந்து நடப்பட்ப்பதற்கே...
இன்று பெற்றோர் இகழ்வதெல்லாம்
நாளை மற்றொர் புகழ்வதற்கே...
இன்று முகம் கவிழ்ந்து போவதெல்லாம்
நாளை முகம் மலர்ந்து வாழ்வதற்கே...
இன்று வலியாய் இருப்பதெல்லாம்
நாளை சிலையாய் மாறுவதற்கே...
--- கீர்த்தனா. நா. 12 - அ1




அகரம் தொடங்கி சிகரம் வரை..

ன்பென்னும் பாலை ஊட்டி

சையாய் பிள்ளை வளர்த்து

ன்பமாய் இல்லம் நடத்தி

கையை செயலில் காட்டி

ண்மையாய் பாசம் செலுத்தி

மையாய் பொறுமை காத்து

ல்லாம் கற்றுக் கொடுத்து

ணியை போல் ஏற்றம் தந்து

யம் தீர்த்து நாகரீகம் பயில்வித்து

வ்வொரு நாளும் துயர் துடைத்து

டையைப் போல் ஓய்வின்றி ஓடி

டதம் போல் உதவுபவள்

து வேறு யாருமில்லை

அகரம் தொடங்கி சிகரம் தொட வழிகாட்டும்

அன்னை என்னும் அன்பு தெய்வம்.

-------வி.ஸ்டெல்லா.. 12-அ1

நல்லவன் வாழ்வான்

சினிமாசெய்திகள்இருந்தால்மட்டுமேஎடுபட முடியும்
என்றஇன்றையஊடகஉலகின்எழுதப்படாதநடைமுறையைத்
தாண்டி,ஓராண்டினைநிறைவுச்செய்து சாதித்திருக்கிறது
புதிய தலைமுறை வார இதழ்.(puthiyathalaimurai.com)

வலியவன்வாழ்வான் என்பதைத் தாண்டி,
நல்லவன்வாழ்வான்என நிரூபித்திருக்கிறது
புதிய தலைமுறை.

எங்கள் வகுப்பறைக்கு தினதோறும் வந்து
ஆசிரியர்கள்அறிவூட்டுகிறார்கள். வாரம்தோறும்
எங்கள் வகுப்பறைக்கு வந்து வலுவூட்டுகிறது புதியதலைமுறை.

எங்கள்வகுப்பறைத்தோழியாகவே மாறிவிட்டபுதிய தலைமுறை
வார இதழுக்கு எங்கள் வகுப்பறையின் சார்பில்
முதலாம் ஆண்டு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

12-அ1,அ,மற்றும் ஆ பிரிவு மாணவிகள்.
நகரவைமகளிர்மேல் நிலைப்பள்ளி,
மேட்டுப்பாளையம்.

feedback@puthiyathalaimurai.com

ஏழையின் செல்வங்கள்...

(குழந்தைகள் குறித்த அறிஞர்களின் கூற்றுக்களில் இன்றைய சூழ்நிலைக்கு மிகவும் பொருத்தமானதாக,உங்களைக் கவர்ந்த ஒன்றை தேர்ந்தெடுத்து,எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்...)

நீ குழந்தையைப் போலவே இருக்க பாடுப்படு. ஆனால் உன்னைப் போல் அவர்களை ஆக்க முயலாதே..
--- கலீல் கிப்ரான்.

குழந்தைகளை குறை சொல்வோரை விட, அவர்களுக்கு வழிகாட்டுவோரே அதிகமாக தேவை.
---- ஜோபர்.

குழந்தைகள் வாழ்க்கையில் புதிய கவலைகளை அறிவிக்கின்றனர். ஆனால் பழைய கவலைகளை மறக்கடிக்கின்றனர்.
----- பேகன்.

குழந்தைகள், நீங்கள் சொல்லும் அறிவுரைகளிலிருந்து கற்றுக் கொள்ளுவதை விட, உங்களுடைய செய்கைகளைப் பார்த்து நிறைய கற்றுக் கொள்கின்றன.
----- ஸ்மித்.

கடவுள், இன்னும் மனிதன் விஷயத்தில் நம்பிக்கை இழக்கவில்லை என்ற செய்தியுடன், ஒவ்வொரு குழந்தையும் உலகிற்கு வருகிறது.
--- தாகூர்.

குழந்தைகளை திருத்த நல்ல வழி , அவர்களைப் பாராட்டுவது தான்.
---- செரிடன்.

நீங்கள் கொடுக்கும் வெகுமதிகளை விட, உங்களுடன் சேர்ந்து இருப்பதைத் தான் உங்களுடைய குழந்தைகள் விரும்புகின்றன.
--- ஜெம்ஸி ஜேக்ஸன்.

சிறிது அன்பை குழந்தைகளிடம் காட்டினால், அது கொள்ளை கொள்ளையாய் திரும்பவும் கொட்டும்.
---- ரஸ்கின்.

ஏழையின் செல்வங்களுக்குக் குழந்தைகள் என்று பெயர்.
---- காஸ்விட்.

காலை நேரம் ஒரு நாளை காட்டுவதைப் போல,குழந்தை பின்னால் வளரும் மனிதனைக் காட்டுகிறது.
---- மில்டன்.

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...

குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான், ஏன் மற்ற உயிரினங்களிடமிருந்து; சிங்கத்திலிருந்து, நாயிடமிருந்து, நரியிடமிருந்து, குதிரையிடமிருந்து பிறக்கவில்லை...

குரங்குதான் அடுத்த கட்டத்திற்கு மாறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டது.நின்றது, நடந்தது, குதித்தது, மரம் ஏறியது, நிமிர்ந்தது. பரிமாணம் பெற்றது.

முயற்சி செய்ததால் ஒரு விலங்கு இனம், பரிமாண வளர்ச்சி பெற்று மனிதனாக மாற முடிந்தது. எனில் ஏன் மனிதனால் தெய்வமாக மாறமுடியாது.

அறிந்துக் கொள்ளுதலும், புரிந்துக் கொள்ளுதலும் முழுமைப்பெற, முயற்சி செய்தால் நிச்சயம் இது நிகழும்.

முயற்சி என்பது சுவாசம் போல் எப்போதும் இருக்க வேண்டும். முயற்சி நின்று போகும் போது ஒருவன் உயிர் இழந்தவனாகிறான்.

தோற்றுப்போனவனை பாராட்டுங்கள். முயற்சி செய்யாதவனை விட , தோற்றவன் நூறு மடங்கு சிறந்தவன்.

நின்று கொண்டிருக்கும் நீரில் தான் அழுக்குகள் சேரும். நீரோட்டம் என்பது நதிக்கு உயிரோட்டம். முயற்சி என்பது வாழ்க்கைக்கு உயிரோட்டம்.


"நின்ற இடத்தில் நிற்க வேண்டுமா? ஓடிக்கொண்டே இரு " என்பது ஒரு பழமொழி.

மனிதன் தெய்வமாக முயற்சிக்காவிட்டால் கூட
பரவாயில்லை, மீண்டும் மிருகமாக மாறாமல் இருந்தாலே போதும்.

- பாரதீ..

பழங்களின் மருத்துவ பயன்கள்.

கொய்யாப்பழம்-குழந்தைகளின் பசிமந்தம்,
மலச்சிக்கல், பல் வலி.

எலுமிச்சை-களைப்பு,வயிற்றுப்போக்கு
பித்தம்,நீர்ச்சுருக்கு.

திராட்சை-ரத்தக்குறைவு,நரம்புத்தளர்ச்சி,
ஒற்றைத்தலைவலி.

விளாம்பழம்-நெஞ்சுவலி,சொறிசிரங்கு.

தக்காளி-ரத்தக்குறைவு,கண்,வயிற்றுக்கோளாறுகள்.

பேரீச்சை-பித்தம்,மூளை,நரம்பு பலவீனம்,தாதுக்குறைவு.

நாவல்பழம்-ரத்தபேதி,உடல்சூடு,கண்எரிச்சல்.

பப்பாளி-குடல்பிணி, பல்நோய்,மூலம்.

பலாப்பழம்-உடல் பலவீனம்.

பேரிக்காய்-எலும்பு, பல்பலவீனம்,பசியின்மை.

முந்திரிப்பழம்-தாகம்,பல்-எலும்பு பலவீனம்.

தர்பூசணி-தாகம்,உடல் சூடு.

ஆரஞ்சு-தொண்டைப்புண்,பசியின்மை.

சாத்துக்குடி-காய்ச்சல்,அல்சர்.

மாதுளை-பித்தம்,குடல்புண்,சிறுநீரகக் கற்கள்,
எலும்பு, பல் பலவீனம்.

இலந்தை-ஜலதோசம்,உடல் சூடு,பல்பலவீனம்.

சீத்தப்பழம்-வயிற்று வலி,இதய பலவீனம்.

நெல்லிக்கனி-இதயகோளாறு,நீரிழிவு,கணைய
நோய்.
அன்னாசிப்பழம்-சிறுநீரகக் கற்கள்,பித்தம்,
இதய பலவீனம்.

வாழைப்பழம்-மலச்சிக்கல்,ரத்தசோகை,கண் கோளாறு,பித்தம்.

ஆப்பிள்-மூளைகோளாறு,வயிற்றுக்கோளாறு.

முலாம் பழம்-சொறிசிரங்கு,மலச்சிக்கல்.

மர நெல்லி-முடி உதிர்தல்..

தொகுப்பு--- கீர்த்தனா.அ. 12-அ.

முதல் தெய்வம்...

இறைவனும் தவமிருந்து

மானிடராய் பிறந்திட விரும்பும்

தூய்மையான கருவறையில்;

நம்மை சுமையென கருதாமல்

சுகமாய் பத்து திங்கள் சுமந்து

மரணத்தை விட கொடிய வேதனையில்

நம்மை ஈன்றெடுத்த அன்பின் வடிவம்

நம் அன்னையே முதல் தெய்வம்.

நம்மை கருவில் சுமந்தவளை

நாம் கடைசி வரை காப்போம்!

பெண்மையைப் போற்றுவோம்!

நம் மனித பிறவியை உணந்திடுவோம்
.
---ரேணுகா.கா. 11-ஆ பிரிவு.

வரிகளில் சரித்திரம் ....

சினிமாவுக்கு பாட்டெழுத திருரங்கத்திலிருந்து சென்னைக்கு
கிளம்பினார் ரங்கராஜன். கட்டுக்கட்டாய் கவிதைகளொடும், 
மெட்டுக்குப் பாட்டெழுதும்கனவொடும். ஒருஇசைத்தட்டுப் 
போல கோடம்பாக்கத்தைச்  சுற்றிவந்தார். திறக்கப்படத 
கதவுகளும்  இரக்கப்படாத சென்னையும்  திறமைச்சாலி
ரங்கராஜனை சோர்ந்து போக வைத்தன."எட்ட 
 முடியவில்லையே  எதிர்பார்த்த  உயரம்.  எத்தனை 
நாள்  தான்  இப்படியோர்  துயரம்"  என்ற  எண்ணம் 
மனதைத்  தைத்தது. "சரி...  சொந்த ஊருக்கே போய்ச் 
சேரலாம்" என முடிவெடுத்தார்.

சென்னை யிலிருந்து  கிளம்புவதற்க்கு  முன்;  ரோட்டோர 
டீக்கடையில்  ஒரு டீ சாப்பிடப்போனார். சூடான டீயோடு 
சுடசுடவந்தது கண்ணதாசனின் அந்த பாட்டு..
."மயக்கமா?கலக்கமா? வாழ்க்கையில் நடுக்கமா?" 
பாடலைக்கேட்டதும்  ரங்கராஜனுக்குள்  புது  ரத்தப்பாய்ச்சல். 
அது  சுற்றி  மிரட்டுகிற  தடைகளை  சுக்குநூறாக உடைத்தது.  
 இன்னும்  புதியவேகத்தோடு  கணைகளைத்  தொடுத்தார்.  
 அதன் பின் அவர் பெற்ற புகழ்  அன்றைய திரையுலகையே அதிர வைத்தது.
பாடல் வரிகளாலே தனக்கான  வரலாற்றைப் படைத்த 
இவர்  நடையில்  முத்தமிழும்  பூச்சொரியும்.

அந்த  ரங்கராஜன் இன்றும், எழுபத்தொரு வயதிலும்அசர வைக்கிற  "காவியக்கவிஞர்  வாலி"  

             ---  நந்தினி  .B.    12-ஆ1  
SOURCE: புதிய  தலைமுறை  Weekly.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கல்வி தந்தவர்களே….

வறண்டு போன பாறையாய் இருந்தேன்;

வாழ்க்கை பாதையில் உருண்டொடியதால்

கல்லாய் மாறினேன்.

அப்படியே விட்டிருந்தால் எப்படியோ

போயிருப்பேன்.- உங்கள்

கை பட்டதால் இன்று பலபேர் வணங்கும்

சிற்பமாய் வடிவெடுத்தேன்.

உடல் மட்டும் கொண்டிருந்த எனக்கு

உயிர் தந்த உங்களுக்கு

நான் எதை தரக்கூடும்?

என் ஆனந்த கண்ணீரை தவிர...

- சமீமா பர்வீன்.M.K.

கவிதைகள்...

விடியல் தொடங்கி உடலுக்கு

வேலை கொடுத்தவனே;- உன்

மனசுக்கும் கொஞ்சம் வேலை கொடு;

மனசிறையிலிருந்து விடுதலையாகு.

ஊமை விழிகளால் உறங்கியது போதும்;

இயந்திர வாழ்க்கையை மறந்து

இனிமைக்கு திரும்பு.

எழில் கொண்ட இயற்கையை

வெறுமனே ரசிக்காதே மூச்சென சுவாசி.
------- படைப்பு---------
 - சித்ரா.பூ.
----------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------
கல்லறையில் உறங்க

சொன்னால்கூட உறங்குவேன்.
அம்மா....

நீ வந்து தாலாட்டு பாடினால்...

 
நாம் நுழைவதற்கு முன்வெற்றிடங்கள்...

நாம் நுழைந்த பின்

வெற்றி இடங்கள்....

------- படைப்பு---------

மசூதா பானு.....
----------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------
அன்னையைப் பார் அன்பு புரியும்;
குழந்தையைப்பார் அதன் தூய்மை புரியும்;

நட்சத்திரங்களைப் பார் ஒற்றுமை தெரியும்;

நிலவைப் பார் உண்மை அழகு புரியும்;

இயற்கையைப் பார் புதிய எண்ணங்கள் தோன்றும்;

நெருப்பை பார் அதன் கோபத்தின் நியாயம் தெரியும்;

இதையெல்லாம் பார்த்தாலுன்மனதில் மாறுபாடுகளை ஏற்படுத்தும்.

அதில் நம்பிக்கை என்னும் விதையை விதையை விதைத்து

சாதனை என்னும் விளைச்சலை அறுவடை செய்.

------- படைப்பு---------
சஃதானா பேகம்.M.

உங்கள் சிந்தனைக்கு...

வானம் உயரத்தில் இருப்பதால்
அதை நம்மால் அளக்கமுடியவில்லை;

நம் மனம் நம்மிடம் தானே இருக்கிறது.

அதை ஏன் நம்மால் அளக்க முடியவில்லை?.


-சுதா.M.

கவிதைகள்...

பூமிக்கு அழகு இயற்கை வளங்கள்;

வானிற்கு அழகு நட்சத்திரங்கள்;

கடலுக்கு அழகு அலைகள்;

குழந்தைக்கு அழகு புன்னகை;

பெண்களுக்கு அழகு தாய்மை;

ஆண்களுக்கு அழகு பொறுமை;

கல்விக்கு அழகு ஆசிரியர்கள்;

கவிதைக்கு அழகு கற்பனை;

வாழ்க்கைக்கு அழகு சாதனை;

மானிடர்க்கு அழகு கல்வி.

- ஆயிஷா பர்வின்.


-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கவிதைகள்...

உனக்கும் எனக்கும் வேண்டுமானால்

தாஜ்மகல் அதிசயமாக இருக்கலாம்.

ஏழை விவசாயிக்குத் தண்ணீர் தான்

உலக அதிசயம்.

------- படைப்பு---------


ஷாலினி.V. -


--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்