கிலானி : டேய் அப்ரிடி, என்னையை கூப்பிட்டு வச்சு, காமெடி, கீமெடி பண்ணலயே?
********************************************************************************
நிருபர் : இந்தியா வெற்றி பெற்றது குறித்து உங்கள் கருத்து?
மன்மோகன் சிங் : (வழக்கம் போல) எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் நடந்தவைகளுக்கு நான் பொறுப்பேற்கிறேன்.
********************************************************************************
மன்மோகன் சிங் : இந்தியா - பாகிஸ்தான் விளையாடின அரையிறுதிப்போட்டியை ஏன் மொஹாலியில வைச்சாங்க தெரியுமா?
கிலானி : ஏன்?
மன்மோகன் சிங் : இங்கிருந்து உங்க நாட்டுக்கு, சீக்கிரம் போயிறலாம் அதனாலதான், சரி..சரி.. கிளம்புங்கப்பா?
********************************************************************************
ஏர்போர்ட் அதிகாரி : என்ன, அப்ரிடி இன்னும் கிளம்பாம வெயிட் பண்ணிட்டு இருக்கீங்க..,
அப்ரிடி : சங்ககரா, இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துருவாரு, அதான் இருந்து கூட்டிட்டு போயிரலாமுன்னு காத்திருக்கேன்.
********************************************************************************
நிருபர் : இந்தியா வெற்றி பெற்றது குறித்து உங்கள் கருத்து?
சோனியா: இந்தியா- இலங்கை மேட்ச் பார்க்க வாங்க-னு, ராஜபக்சேவை கூப்பிட்டு, தமிழர்களை கொன்னதுக்கு விருந்து இன்னொரு தடவையும், விருந்து வைச்சு விசுவாசத்தை காட்டிரலாம்.
********************************************************************************
சோனியா : இறுதிப்போட்டியில் இலங்கை, இந்தியாவை ஜெயித்தால், கட்சத்தீவை இலங்கைக்கே கொடுத்துவிடலாம். இந்தியா ஜெயித்தால் கருணாநிதிக்கு விற்றுவிடலாம். எப்படினாலும் நமக்குத்தான் லாபம்.
********************************************************************************
நிருபர் : உங்க இந்திய பயணத்திட்டம் என்ன?
ராஜபக்சே : மும்பையில மேட்ச் பாத்துட்டு அப்படியே மயிலாப்பூருக்கு போய், தம்பி தங்கபாலுவுக்கு பிரச்சாரம் பண்ண போலாமின்னு இருக்கேன். ஒரு நன்றி கடனுக்காக.
********************************************************************************
இந்த வரிகள் உண்மையா?
S - SRI LANAKA.
P - PAKISTHAN.
I - INDIA.
N - NEWZELAND
இதில் என்பது I மட்டும் தான் உயிரெழுத்து எனவே இந்தியா தான் கோப்பையை வெல்லும்.
1983 காலண்டரும், 2011 காலண்டரும் ஒன்று போலவே இருப்பதாக சொல்லப்படுவதால், அப்போது வென்ற இந்தியாதான், இப்போதும் வெல்லுமா?
*****************************************************************************
ட்வுட் தங்கமணியின் கேள்விகள் :
இந்தியா, இலங்கை கிரிக்கெட் போட்டி பார்க்க, ராஜபக்சே இந்தியா வந்தால் நம்ம டக்ளஸ் அண்ணன் கூட வருவாரா? # ட்வுட்.கிரிக்கெட்டில் தோற்ற கேப்டன் பதவிய ராஜினாமா பண்ணுறாங்க. தேர்தலில் தோற்றால் ஏன் கட்சி தலைவர் பதவியை ஏன் ராஜினாமா பண்ண மாட்டேங்கிறாங்க. # ட்வுட்.
சச்சின் செஞ்சுரி அடிக்காததால் தான் , இந்தியா ஜெயித்தது அப்படினு சொல்லுறவங்க - கேப்டனோட ஆளுகளா? # (தேர்தல் விதிமுறை மீறல் ஏதேனும் இதில் இருக்கிறதா? )
இந்தியா - பாகிஸ்தான் போட்டியை உலகப்போர் போல வடநாட்டு பத்திரிக்கைகள் சித்தரித்ததை போல, இந்தியா - இலங்கை போட்டியை தென்னிந்திய பத்திரிக்கைகள் சித்தரித்து ரணகளமாக்குமா? # ட்வுட்.
இந்தியா இலங்கை விளையாடும் போட்டியில், புலம் பெயர்ந்த தமிழர்கள் யாருக்கு ஆதரவளிப்பார்கள்? #ட்வுட் # இலங்கை தாய் நாடு , இந்தியா தந்தையர் நாடு. ஆனால் இரண்டுமே அவர்கள் வாழ்க்கையில் "விளையாடி" இருக்கிறது.