புத்தர் மீண்டு(ம்) வந்தார்.
"தாங்கள் ஞானம் பெற்றது எங்கு?" ஆர்வமுடன் வினவினேன்.
"போதி மரம்" என்றார்.
"ஏராளமான கிளைகளில் ஏராளமான பறவைகள் இளைப்பாறுமே?"
"இளைப்பாறும் பறவைகள் அடிக்கடி எச்சமிடுமே?"
"ஓ... எச்சங்களை பொருட்படுத்தாது, அமர்ந்திருந்தால் தானோ என்னவோ உங்களுக்கு ஞானம் கிட்டியது...!"
வரிசையாய் வினாக்களை எழுப்பி, நானே விடையைக் கண்டுகொண்டேன்.
நீதி:
அவமானங்களைத் தாண்டு, ஞானம்/ஞாலம் வசப்படும்.
டிஸ்கி:
இரண்டு நாட்களுக்கு முன்பு, நண்பர் ஒருவரின் ட்விட்டை கருவாக கொண்டு யோசித்த போது வந்து விழுந்த வார்த்தைகள் இது.