ரசித்த கவிதையும் காரணமும் - மனுஷ்ய புத்திரனின் ஒரு கவிதை

💥சில வேளைகளில் கவிதை என்பது நெற்றிப்பொட்டில் அடிப்பது போல உக்கிரம் காட்டுவது உண்டு. சில வேளைகளில் மெல்லிய மயிலிறகால் வருடிக்கொடுப்பதும் உண்டு.

💥மனுஷ்யபுத்திரனின் இந்த கவிதையை , இருவகையிலும் சேர்க்கலாம்.

💥வாழ்க்கையில் கடந்து வந்த, கடக்க இருக்கும் அத்துணை விஷயங்களையும் உள்ளுக்குள் வைத்து மிரள வைக்கிறது.

💥நம் செயல்கள் நமக்கே புதிராய் இருக்கும் தருணங்கள் விசித்திரமானவை. அப்படி நினைக்காதவர்கள் இருப்பின் ஆச்சர்யம் தான்.

💥சிலவற்றை நாகரீகம் கருதி மறைத்திருக்கிறேன்.

இருப்பினும் எதுவும் குறைந்ததாய் தோன்றாது. அது கவிதையின் வெற்றி.

💥இன்னும் ஏதேனும் இருக்கிறது என்று தோன்றினால் அது உங்களின் வெற்றி.

அப்படி தோன்றினால் சொல்லுங்கள்.

இதோ கவிதை...



நாம் ஏன் இப்படி இருக்கிறோம்-
மனுஷ்ய புத்திரன்

நாம் ஏன் இப்படி
இருக்கிறோம்

சதா முணுமுணுத்துக்கொண்டு

எப்போதும் துணிகளை மடித்துக்கொண்டு

எதையாவது சுத்தம் செய்துகொண்டு

யாரையாவது சபித்துக்கொண்டு

எதையாவது அடைய முயற்சித்துக்கொண்டு

எதனிடமாவது தோல்வியடைந்துகொண்டு

எப்போதும் நம்மை நிரூபித்துக்கொண்டு

ஒரு சிகரெட்டைப்போல எரிந்துகொண்டு

தேவையற்ற பொருட்களால் நம் தனிமையை நிரப்பிக்கொண்டு

யாரிடமாவது நம்மைப் பிணைக்க முயற்சித்துக்கொண்டு

ஒரு அபத்தமான சினிமாவின் முதல் காட்சியைப் பார்த்துக்கொண்டு

கடற்கரையில் கூட்டத்தோடு கூட்டமாய் நின்றுகொண்டு

நம் குழந்தைகளை சந்தேகித்துக்கொண்டு

நம் வீட்டிலேயே திருடிக்கொண்டு

மலிவான பொருட்கள் எங்கே கிடைக்கின்றன என்று எப்போதும் யோசித்துக்கொண்டு

பொறுக்கிகளுக்குப் பயந்துகொண்டு

புகழுள்ள மனிதர்களை அனாவசியமாய்த் தெரிந்துகொண்டு

சதா எதேனும் ஒரு நோயைப்பற்றி பேசிக்கொண்டு

எப்போதும் பருவநிலையினைப் பற்றி புகார் செய்துகொண்டு

சிறிய வருமானத்திற்கான சிறிய கணக்குகள் எழுதிக்கொண்டு

அதிர்ஷ்டத்தின் வருகையை எதிர்நோக்கிக்கொண்டு

யாருடைய சாவுக்காவது காத்துக்கொண்டு

நமது தூக்குக் கயிற்றின் உறுதியைச் சோதித்துக்கொண்டு

முட்டாள்களின் கவிதையைப் படித்துக்கொண்டு

குடிக்கும்போது அழுதுகொண்டு

அடுத்த முதல்வர் யார் என்று யோசித்துக்கொண்டு

பௌர்ணமி தினங்களில் மனம் உடைந்து அழுதுகொண்டு

எதையாவது தொலைத்துக்கொண்டு
எதையாவது தேடிக்கொண்டு

தவறான முடிவுகளுக்காக வருந்திக்கொண்டு

தவறிப்போன சந்தர்ப்பங்களுக்காக ஏங்கிக்கொண்டு

யாருடைய அன்புக்காகவாவது ஏங்கிக்கொண்டு

யாரையாவது இணங்கச் செய்துகொண்டு

கடன் கொடுப்பவர்களிடம் நட்பு பாராட்டிக்கொண்டு

சிறிய தவறுகளுக்கு பெரிய தண்டனைகள் கொடுத்துக்கொண்டு

பிறரது கடிதங்களைத் திருடிப் படித்துக்கொண்டு

தன் வழியே போகும் எறும்புகளை நசுக்கி அழித்துக்கொண்டு

 கூண்டுகளில் பறவைகளை அடைத்து வைத்துக்கொண்டு

போலிக் கடவுள்களிடம் கண்ணீர் சிந்திக்கொண்டு

எதிர்காலத்தை அவ்வளவு உறுதியாய் திட்டமிட்டுக்கொண்டு

தூக்க மாத்திரைகளை விழுங்கிக்கொண்டு

மற்றவர்களின் கடமைகளை நினைவூட்டிக்கொண்டு

நமது இயலாமையை மறைக்க யாரையாவது சவுக்கால் அடித்துக்கொண்டு

பூனைகளுக்கு உணவுதர மறுத்துக்கொண்டு

யாரையாவது இறுகப் பற்றிக்கொண்டு

உடல் குறைபாடுகளைப் பற்றி சிந்தித்துக்கொண்டு

மலிவான வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்திக்கொண்டு

பொது அறிவை வளர்த்துக்கொண்டு

எதற்காவது பயன்படுமென்று எல்லாவற்றையும் பாதுகாத்துக்கொண்டு

சொற்பொழிவுகளில் கைதட்டிக்கொண்டு

நிழல்களுக்குப் பயந்துகொண்டு

எப்போதும் யாரையாவது கண்காணித்துக்கொண்டு

உடல் பயிற்சியினால் மரணத்தை வெல்ல முயற்சித்துக்கொண்டு

எளிய இரக்கங்களால் நம் மனிதத் தன்மையை நிரூபித்துக்கொண்டு

தங்க முலாம் பூசப்பட்ட போலி ஆபரணங்களை அணிந்துகொண்டு

அவமதிப்புகளைப் பொருட்படுத்தாமலிருக்க கற்றுக்கொண்டு

புகைப்படங்களைப் பாதுகாத்துக்கொண்டு

திறக்க மறுக்கும் கதவுகளைத் தட்டிக்கொண்டு

வேலைகளுக்குள் நம்மை நாமே மறைத்துக்கொண்டு

நம் பால்யத்தை நினைவுகூர்ந்துகொண்டு

 ஒரு மூலையில் சுருண்டு படுத்துக்கொண்டு

வேறு வழியில்லை என்று எழுந்துகொண்டு

யாருக்காகவோ தியாகம் செய்துகொண்டு

எளிய உணர்ச்சிகளுக்காகப் பலியிட்டுக்கொண்டு

எப்போதோ நன்றாக இருந்தோம் என்று நினைத்துக்கொண்டு

எப்போதோ நன்றாக இருப்போம் என்று
 நினைத்துக்கொண்டு

சாதாரணமானவற்றை சிறந்ததென ஏற்றுக்கொண்டு

மன்னிக்க முடியாதவற்றை
மன்னித்துக்கொண்டு

நாம் ஏன்
இப்படி இருக்கிறோம்?

திமுக இந்து எதிர்ப்பு கட்சியா? - ஒரு இரு தரப்பு வாத தொகுப்பு

💥"திமுக இந்து எதிர்ப்புக் கட்சி என்ற தொணியில் திட்டமிட்ட பிரச்சாரம் சமீப காலமாக பரப்பப்பட்டு வருகிறது. ஆனால், எனது குடும்பத்தினரும் சரி கட்சித் தொண்டர்களின் குடும்பத்தினரும் சரி இறை நம்பிக்கை கொண்டிருக்கின்றனர்.

என் மனைவி தமிழகம் முழுவதும் இருக்கும் பல்வேறு கோயில்களுக்கும் சென்று வருகிறார். அவரிடம் ஒருமுறைகூட இதுதொடர்பாக நான் கேள்வி எழுப்பியதில்லை. ஏனெனில் மதத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள் யாருடைய பாதையிலும் நாங்கள் குறுக்கிடுவதில்லை" எனக் கூறியுள்ளார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்.

இது குறித்து, ஒட்டியும், வெட்டியும் இருவகையில் அலசி ஆராயும் ஒரு மினி விவாத மேடை:

💥சரி என்ற பார்வையில்:

இதை  சாமி கும்பிடுபவர்கள் வரவேற்கவேண்டும்.
கவிஞர் கண்ணதாசன் கூட வெறி பிடித்த நாத்திகவாதியாக இருந்து அதே வெறி பிடித்த ஆதிக்கவாதியாக மாறினார். எனவே இதில் உள் நோக்கம் கற்பிக்காதீர்கள்.

பல்வேறு மதங்களும் பாகுபாடுகளும் நிறைந்த இந்தியா போன்ற பன்முகத்தண்மை கொண்ட சமூகத்தில் அரசியல் தலைமை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று காட்டியிருக்கும் திரு ஸ்டாலினின் முதிர்ச்சி பாராட்டத்தக்கது.

காலம் மாறும்போது கருத்துகளும் மாறலாம் ,,எல்லோரும் மனிதர்கள்தானே நம்பிக்கைகள்' வரலாம் ,மூட நம்பிக்கைகள் வரகூடாது .

நடுநிலையில் உள்ள ஓட்டுக்களைக் கவர, அவர்களின் திமுக பற்றிய இமேஜை மாற்ற இந்த பேட்டி அவசியம் பயன்படும். ஸ்டாலினுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாமே என்று அவர்கள் நினைக்கலாம்.


💥இனி இது போலி என்ற பார்வையில்...

அப்ப பெரியார் சொன்ன கடவுளை வணங்குகிறவன் அயோக்கியன் காட்டுமிராண்டி என்று சொன்னதை தற்பொழுது ஸ்டாலின் ஏற்கவில்லை என்று தெரிகிறது

தேர்தல் ஜுரம் வந்துவிட்டதால் எல்லாம் மாறிவிடும் . இன்னும் என்ன மாற்றங்கள் எல்லாம் வரபோகிறதோ.அடுத்து நெற்றியில் பட்டை போட்டுகொண்டு கூட வருவார்கள்.

விரைவில் இவரின் அங்கப்ரதட்சனை ..பால் குடம் ..காவடி ….எல்லாம் வரும் காண தயாராகுங்கள். காட்சி இலவசம்.

ஓடினாள் ஓடினாள் வாழ்கையின் எல்லைக்கே ஓடினாள்.வசனம் ஞாபகம் இருக்கிறதா.
தற்பொழுது தி மு க எங்கே ஓடுகிறது.ஆட்சிக்காக தனது கொள்கையின் எல்லைக்கே ஓடுகிறதோ.

💥எது எப்படியோ சதுரங்க வேட்டை ஆரம்பம்.





ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்