இந்த வார ஹிட் செய்தி:
விருந்தாளிகள் கிளம்பிவிட்ட நிலையில் காமன்வெல்த் போட்டிகள் டெல்லி-2010 ன் இரண்டாம் பாகம் துவங்கிவிட்டது. டெல்லி முதல்வர், ஏ.ஆர்.ரஹ்மான், உயர்மட்ட விசாரணைக் குழுத் தலைவர் வி.கே.சங்கலு
ஆகியோரின் பேட்டிகள் பரபரப்பைக் கூட்டுகின்றன.
பிரதமர் வழங்கிய விருந்தில் சுரேஷ் கல்மாடி புறக்கணிப்பு.
{முற்பகலில் "செ(ய்)யின்" பிற்பகலில் "விலங்கு"}
இந்த வார ஹைக்கூ:
"சிறியது தான் புல்லாங்குழல்
கேலி செய்த மூங்கில்
பிணம் சுமக்கும் பாடை"
-துறவி.
இந்த வார கவிதை:
"காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடிகளைப்
பதிக்க விரும்பினால்,
உனது கால்களை,
இழுத்து,இழுத்து நடக்காதே...."
--ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்.
(அக்-15 கலாம் அவர்களின் பிறந்தநாள்.)
இந்த வார தகவல்:
தமிழகத்தில் 39 ஆயிரம் ஏரிகள் இருப்பதாகக் கணக்கு சொல்லப்படுகிறது. ஆனால் அவற்றில் சில ஆயிரம் ஏரிகள் காணமலே போய்விட்டன. இருக்கும் ஏரிகளில் பெரும்பாலானவை தூர்ந்து போய் கிடக்கின்றன. பல ஏரிகள் ஆக்ரமிக்கப்பட்டு வீட்டுமனைகளாக மாறிவிட்டன.
இந்த வார மனிதர்:
ஐ.சி.சி. டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் சச்சின்,
8 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் முதலிடம்
(ரிட்டன் ஆப் தி டிராகன்).
தரவரிசையில் சச்சின் முதலிடம் பிடிப்பது இது ஒன்பதாம் முறை.
இந்த வார கருத்து:
ஆஸ்திரேலியா மிக அழகான நாடு. ஆனால், அதை புத்திசாலித்தனமாக பயன்படுத்திக்கொள்ள அந்த நாடு தவறி விட்டது. இந்தியர்களின் மீது நடத்தப்பட்ட இனவெறித் தாக்குதல்களால் அந்நாட்டின் நன்மதிப்பு வெகுவாகக் குறைந்துள்ளது.
--பிரிட்டிஷ் நிபுணர் சைமன் அன்ஹோல்ட்.
(இந்தியர்கள் அதிகம் விரும்பும் நாடுகளில் முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலியா, இப்போது மூன்றாம் இடத்தில்)
இந்த வார குழப்பம்:
கலாய்க்கும் பாணியில் நாங்கள் எழுதிய
"பிரபல வலைப்பதிவர்க்கு கொலை மிரட்டல்" வாசிக்கப்பட்ட அளவுக்கு, நல்ல பதிவாக நாங்கள் கருதிய "உலுக்கி எடுத்த உண்மைகளும், இரக்கமில்லா இரவுகளும்" வலைஉலகவாசகர்களால்
கவனிக்கப்படவில்லை.
{ஒண்ணுமே புரியல (வலை) உலகத்திலே...}