ஆலோலம் பாடி... ரசனை நேரம்

💥ஒரு பாடலுக்கு உயிரை திருடும் வசியம் இருப்பது இயல்பு. ஆனால், ஆரம்பத்தில் வரும் இசையில் அதை விட வீரியம் வைத்து உயிரை சிதைத்துப்போடுகிறது "ஆலோலம் பாடி., அசைந்தாடும் காற்றே..."
#மொட்டையின் சந்நிதியில் தான் நின்று கொண்டிருக்கிறேன் இப்போதும்.

 💥புல்லாங்குழலிசை உயிரை திருடி, மனசை வசியப்படுத்தி , உயிரில் மிச்சமிருப்பதை எல்லாம் ஒரு புள்ளியாக்கி, இனி "கேளடா மானிடா" என மென்று, தின்று துப்பி ,என்னை அலங்கோலமாக்குகிறது  ஆலோலம்.

 "தனியானால் என்ன துணை இங்கே நான் பாடும் பாட்டுண்டு"

#துணை நீ அல்லாது யாரடா ராஜா!!

💥கங்கை அமரனுக்கு வரலாற்றில் இடம் பிடிக்கும் ஆசை இருந்திருந்து, அதை உத்திரவாதமாக்கிருக்கிறது.

"மண்ணுலகில் வந்தோர்கெல்லாம் இன்ப துன்பம் என்றும் உண்டு.
தாய் இழந்த துன்பம் போலே துன்பம் அது ஒன்றும் இல்லை"

💥 நதியோடு ,மிதந்து விரைந்தோடும் சின்னதொரு பூவைப்போல,  வாழ்க்கையை அதன்  போக்கில், ரசித்துக்கொண்டோட இதையே விதியாய் வைத்திருக்கிறேன்.
#வந்ததுண்டு போனதுண்டு, உன் கணக்கில் ரெண்டும் ஒன்று

வரவும் உண்டு செலவும் உண்டு, உன் கணக்கில் வரவே உண்டு.

💥இல்லை என்று ஏதுமில்லை எனக்கு. எங்கும் நிறைந்து, எனக்குள்ளும் நிறைவாய் இருக்கிறது மனநிறைவு.

"பூமி என்ற தாயும் உண்டு வானம் என்ற தந்தை உண்டு.
நீங்கிடாத சொந்தம் என்று நீறும் காற்றும் எங்கும் உண்டு"

💥எதுவரினும்,எவர் வரினும், எப்படியாயினும், எது வரையிலும்...
"உலகம் உந்தன் சொந்தமென்று எந்தன் உள்ளம் பாடும்"
 -பாரத்

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்