நான் இறந்து போயிருந்தேன்...


நான் இறந்து போயிருந்தேன்...

ஐம்பது வருடம் வெண்ணையாய்
தின்று பாதுகாத்த உடம்பு
அசைவற்று கிடக்கிறது.
நான் என்பது தொலைந்து
"அது" என அடையாளம்
மாறிவிட்டிருந்தது..

மெல்ல தகவல்
பரப்பப் பட்டது.
தங்கள் பயணத்திட்டங்களை
மாற்றி என் இறுதிப் பயணத்திற்காக
குவிந்தனர்.

காற்றில் அசைந்த
சாமியானாவில் காத்திருந்த
மனிதர்களுக்கு
"வரக்காப்பி"
வழங்கப்பட்டது.

நல்ல மனுசன்;
நல்ல சாவு
என உரக்கப்பேசினார்கள்..
மனசுக்குள்
என்ன ஓடிக்கொண்டிருக்கும்
என்னால் அப்போது கூட
கணிக்க முடியவில்லை.

பலர் பரபரப்பாக
நடமாடிக்கொண்டிருந்தனர்.
சிலர் மணி
பார்க்கத்துவங்கியிருந்தனர்..

என் கால் மாட்டில்
மனைவி மயங்கிக்கிடக்கிறாள்.
மகள் செய்வதறியாது கண்ணீர் மல்க..


சேதிக் கேட்ட என் மகன்
விமானம், ரயில் என மாறி மாறி
பயணித்து
வந்துக் கொண்டிருக்கிறான்.

“எப்ப எடுப்பாங்க?”
யாரோ வினவ, வேறு யாரோ
விடையறுத்தார்கள்…

“கொஞ்சம் சீக்கீரம் எடுத்த
பரவாயில்லை…….”

இப்படியாய்….
இன்னுமாய்….
எந்த வித
நிகழ்வுகளையும்
உருவாக்காமல்…
யாருக்கும்
சிரமமின்றி….


எங்கோ அடையாளமின்றி
இறந்து போக வேண்டும்
என்பது என் ஆசை…
 

மீள்பதிவாக இந்த கவிதை...

பிளஸ் டூ மாணவியுடன் ஒரு சந்திப்பு..


பெயர் & வகுப்பு:  என்.சுகன்யா 12-அ.

பட்டப்பெயர்: பிளாக்கி, லிட்டில் ஹார்ட், சுகா, சுகன், சுகுமா,சுக்கு

பிடித்த விஷயம் : நன்றாக சாப்பிடுதல்.

பொழுதுபோக்கு: தடயவியல் துறை சம்பந்தப்பட்ட விஷயங்களை
                                சேகரித்தல்.


பிடித்தபுத்தகம்: அன்பு செய்வதே அழகு, விவேகானந்தர் மற்றும்
                              சிவானந்தர் புத்தகங்கள்.


பிடித்தபாடல்: சின்ன தாயவள் (தளபதி), ஆடாத ஆட்டமெல்லாம்
                            (மௌனம் பேசியதே)


பிடித்த தமிழ்வரிகள்: வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது 
                                             நாமாக  இருப்போம்.


பிடித்த தோழிகள்:  பத்மா, வினோதினி, பினோலா மெர்சி, அனிதா.


 எதிரிகள்:  குறிப்பிட விரும்பவில்லை.


எதிர்கால லட்சியம்:  இன்ஜீனிரிங்.


PlusTwo-ல் லட்சியம்: நல்ல மதிப்பெண்கள் எடுப்பது.


சமீபத்தியசந்தோஷம்:  என் தோழிகளிடம் பேசியது.


சமீபத்திய வருத்தம்: எதுவுமில்லை.

வாழ்க்கை என்பது...  தோல்வியும், வெற்றியும்
                                            நிறைந்த சுவாரஸியமான பயணம்.


வகுப்பறை என்பது... வாழ்க்கைக்கான பாடங்களை கற்றுத்தருவது.


உங்களிடம்  உங்களுக்கு  பிடித்தது:  மற்றவர்களைப் பற்றி புரிந்து
                                                                           கொள்ளுதல்.


உங்களிடம்  உங்களுக்கு  பிடிக்காதது:  யார் மீதும் சீக்கிரம்
                                                                                 அன்புக்கொள்ளாமல் இருப்பது.


உங்களைப்பற்றி ஒரு வரி:  எல்லோரிடமும் சரியாக
                                                            நடந்துக்கொள்ளுவது.

****************************************************************************

எல்லோருக்கும் மனசு இருக்கிறது, அதில் எல்லோருக்கும் கனவுகள் இருக்கிறது. கனவுகளை பட்டியல் இட்டு வைப்போம், சிகரத்தை நோக்கிய பயணத்தில் து முதல் காலடியாக இருக்கட்டும்.


****************************************************************************

நந்தினி, சண்முகப்பிரியா ஆகிய மாணவிகளின் பேட்டி இந்த வலைப்பதிவில் உள்ளது. வாய்ப்பிருந்தால் படிக்கவும். 

வருங்கால இந்தியா பேசுகிறது...


மாணவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி மாணவர்களே  சொல்றாங்க,  என்னதான் சொல்றாங்க அப்படினு   படியுங்களேன்..



(கருத்துக்கள் தொகுப்பு : +1  அ1, அ மற்றும் ஆ பிரிவு மாணவிகள்)


(மாணவர்கள் என்பது இருபாலருக்கும் பொதுவான வார்த்தை)


ஆசிரியர் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை புரிந்துக்கொண்டு, அதைவிட இரண்டு மடங்கு செய்ய முயற்சி செய்யவேண்டும்.

பாடத்தை புரிந்து படிக்கவேண்டும். மக்கப் பண்ணக்கூடாது.

ஒரு ஆசிரியர் பற்றி இன்னொரு ஆசிரியரிடமோ அல்லது வேறு ஒருவரிடமோ சொல்லக்கூடாது.(விமர்சிக்கக்
கூடாது)


பாடம் நடத்திவிட்ட பின், சார் சொன்னால் தான் படிக்கணும் என்று நினைக்காமல், அடுத்த நாள் வரும்போது படித்துவிட்டு வரவேண்டும்.

படித்ததை எழுதிப்பார்க்க வேண்டும்.




ஆசிரியருக்கு பிடிச்ச மாதிரி நடக்கமுடியாட்டியும் பரவாயில்லை, ஆசிரியருக்கு பிடிக்காததை செய்யக்கூடாது.


படிக்காத மாணவர்களைப் பற்றி தாழ்வாக எண்ணக்கூடாது, அவர்கள் படிப்பதற்கு உதவி செய்யவேண்டும். பிலுக்கிக்கொள்ளாமல் சொல்லித்தர வேண்டும்.


பாடம் நடத்தும் போது முழுகவனத்தையும் செலுத்தவேண்டும். பராக்கு பார்க்கக்கூடாது.


படிக்கும் மாணவர்களிடத்தில் போட்டி இருக்கவேண்டும், பொறாமை இருக்கக்கூடாது.


தேவையில்லாமல் விடுமுறை எடுக்கக்கூடாது.







படிப்பு மட்டுமில்லாது கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளில் கலந்துக்கொள்ளவேண்டும்.


எல்லா பாடங்களிலும் சமமாக கவனம் செலுத்த வேண்டும்.


வீட்டில் நடக்கும் பிரச்சனைகளை பற்றி கவலைப்பட்டுக்கொண்டு படிப்பில் கோட்டை விட்டுவிடக்கூடாது.


ஆசிரியர்களுக்கு மரியாதையை இயல்பாக தரவேண்டும். போலியாக நடிக்கக்கூடாது.


வாழ்க்கையில் முன்னேறிய ஒருவரை ரோல்மாடலாக ஏற்றுக்கொண்டு, அவர் போல் முன்னேற முயற்சிக்க வேண்டும்.





இது சம காலக்கல்வி தொடர் பதிவின் பாகம் - 6
*********************************************************************************


சம காலக்கல்வி பற்றிய முந்தைய பதிவுகள்:





கொஞ்சம் காரம்... ரசித்த டிவிட்டர்கள்...



@bharathbharathi
இந்தியாவுக்கு மூணு பக்கம் தண்ணீர் # எங்களுக்கு நாலு பக்கமும் கண்ணீர் # தமிழக மீனவன்.

@Ganesukumar 
நல்லா சிரிச்சு பேசிட்டு இருந்த பயபுள்ளைகிட்ட நாளைக்கு திங்ககிழமைன்னு சொன்னேன். மூஞ்சி வெளக்கெண்ணையை குடிச்ச மாதிரி ஆயிடுச்சு.

@minimeens 
கிராமத்திலிருந்து வந்தவனின் பஞ்ச் டயலாக்: அங்கே யூரியாவக் கலக்குனேன். இங்கே ஏரியாவக் கலக்குறேன்.

@navish_senthil 
ஈழத்தமிழனுக்காகப் பேசினால்தான் 'இறையாண்மை' என்கிறீர்கள். மீனவனுக்காக குரல் கொடுக்க ஏன் தயக்கம்? #TNfisherman #indianfishermen #TNfishermen

@araathu 
சிவனுக்கு ஒரு அடியாள்தான்- எமன். பிரம்மாவிற்கு உலகெங்கும் அடியாட்கள் - நாம்.

@Ganesukumar
ரிங்க்டோனில் சிட்டுக்குருவியின் சத்தத்தை பதிந்து நிஜ குருவியை அழித்தாயிற்று #SaveEarth

@TBCD 
  #TNfisherman #indianfishermen #TNfishermen #நடக்கலாம் தமிழ் நடிகர் நடிகைகள் இராசபக்சே முன்னிலையில் இலங்கை ஆக்ரமித்த தமிழகத்தில் நடனம் !

@Ganesukumar 
தமக்கு இலவச உணவு கிடைப்பதற்காக எதோ ஒரு உணவுவிடுதியில் பேருந்தை நிறுத்திவிட்டு ஊழலைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள் ஓட்டுனரும் நடத்துனரும்

@kolaaru
தன்னுடைய காதல் ஏழாவது காதலாக இருந்தாலும்,முதல் காதல் போலவே உறுகி உறுகி பேட்டி கொடுக்க சினிமாகாரர்களால் மட்டுமே முடியும் # ஃபெர்பாமன்ஸ்


@selvu 
தினம் ஒரு மொக்கை : என்னதான் ஒரு District கோணல் மாணலா இருந்தாலும் , அத தமிழ்ல சொல்லும்போது மா'வட்டம்' அப்படின்னுதான் சொல்லுவாங்க!

@meetmadhan 
எல்லா நிச்சயமின்மைக்கு அப்பால்/ இந்த வானத்தின் நிரந்திரம்/ என்னை திகைப்பூட்டிகொண்டே இருக்கிறது - கருணாகரன்

@BalaramanL 
தமிழர்கள் மீன் வலை வைத்திருக்கிறார்கள். இலங்கைப் படையினர் மீனவர் வலை வைத்திருக்கிறார்களோ?? #tnfisherman #tnfishermen #Indianfishermen


@jill_online 
தமிழக வாக்காளர்களே !! நல்ல ஆளுங்கட்சியை தேர்ந்தெடுப்பது அப்புறம் , ஒரு சிறந்த எதிர்கட்சியையாவது இந்த தேர்தலில் தேர்ந்தெடுங்கள்..

@minimeens 
இப்பல்லாம் குழம்புக் கரண்டியில் சோறு போட்டு, நெய் கரண்டியில் குழம்பூற்றி விட்டு நிறைய பணம் கேட்கிறார்கள்.#காக்கைக்கு இதைவிட அதிகம் வைப்பம்

@settaikaaran 
ஆட்கள் தேவை : சட்டமன்ற தேர்தலில் போட்டியிட 40 பேர் தேவை சாப்பாடு தங்குமிடம் இலவசம் அனுக வேண்டிய முகவரி விஜய டி ராஜேந்தர் M.A தலைவர்

@TBCD 
#நடக்கலாம் #TNfisherman #indianfishermen #TNfishermen இந்திய எல்லை கடற்கரையுடன் முடிகின்றது. அலைகளும் இலங்கைக்கே சொந்தம் !

***********************************************************************************

நவைச்சுவையை எதிர்பார்த்து வந்தவர்கள் இந்த பதிவில்
 பன்னிக்குட்டி ராம்சாமி அவர்களின் பின்னூட்டங்களை படிக்கவும்.
கோக்கு மாக்கு பதில்கள் தேவை. 


இன்னுமொரு ஞானக்குளியல்..



முன்னம் ஒரு காலத்துல

இன்னும் பிறந்திராத
எனக்கும் சேர்த்து
அடிமை விலங்கொடிக்க
போராடிய,
உயிர் துறந்த,

சுயமான குடியரசுக்காக
வீரம் சிந்திய
அத்துணை
தியாக உள்ளங்களுக்காகவது

சாவு வீட்டிலும்
வாக்கு பொறுக்கும்
நிகழ்கால சாக்கடைத்தலைவர்களை
மறந்துவிட்டு;

என் சமர்ப்பணத்தை
உறுதிப்படுத்த,
உணர்விலிருந்து,
உயிரிலிருந்து,
நரம்புகள் புடைக்க
கத்திச் சொல்வேன்

"தாய் மண்ணே வணக்கம்..".

- பாரதி.

இன்றைய வாக்குப்பொறுக்கிகளுக்காக நான் ஏன் என் இந்தியத்திருநாட்டை, கேவலப்படுத்த வேண்டும், அப்படி செய்வது,  நான் பிறக்கும் முன்னம் எனக்கும் சேர்த்து போராடிய தியாக உள்ளங்களை சிறுமைப்படுத்துவதாக ஆகிவிடுமே?

சாப்பாட்டுக்கடை.



அன்னபூர்ணாவிலும், ஆர்யா-சிலும் பெருங்கூட்டம் நிரம்பி வழிந்த, ஒரு
சுபமுகூர்த்தநாளின் காலை நேரத்தில், அந்த சின்னதொரு உணவகத்திற்குள் செல்ல நேரிட்டது. கொஞ்சம் புகை மண்டிக்கிடந்த, பதினாறுக்கு பத்து அறையில் கணவனும், மனைவியும் பரிமாறிக்கொண்டிருந்தனர்.

லேசாக ஆடிக்கொண்டிருந்த, நீண்ட மரப்பெஞ்சில் அமர்ந்தபோது, அங்கு ஒலித்துக்கொண்டிருந்த பண்பலையின் சப்தம் பெரும் இரைச்சலாகவே தோன்றியது. சாப்பிட்டுக்கொண்டிருப்பவரின் இருக்கைக்கு பின் காத்திருக்கும் புது நாகரீகத்தின் காலக்கொடுமையை விட, இந்த கடை உசத்தலாகவே தெரிந்தது. பிரமாண்டமாய் ஏதும் இல்லாதபோதும், ஏதோ ஒன்று ஈர்த்தது.

அதற்கு அடுத்த சில நாட்களிலும் தொடர்ந்து அங்கே தான் என் காலை உணவு என்று விதிக்கப்பட்டிருந்தது போலும். பின் உட்கார்ந்த உடனே இரண்டு ஆப்பம் கொண்டு வந்து வைக்குமளவுக்கு புரிந்துக்கொண்டனர். ஒரு நாள் அல்சர் என்று சொன்னதும், அதன்பின்  கார சட்னி தவிர்த்தனர்.

ஒரு நாள் மதிய உணவுக்கு வரவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். என் பணி மார்க்கெட்டிங் என்பதால் மதியம் வேறு எங்காவது இருக்க நேர்ந்ததால், இயலாமலேயே போனது.

ஒரு நாள் பதினாறு ரூபாய்க்கு, நூறு ரூபாய் நீட்ட, அவர் வழக்கமான பரபரப்போடு  சில்லறை தேடி, இல்லாமல்போகவே நாளைக்கு குடுங்க என்றார்.

"வராம ஏமாத்திட்டா"    
"சாப்பாட்டுக்காசு. கண்டிப்பா வந்திரும்"

அதெல்லாம் சரிங்க, ஏன் எப்பவும் அழுக்கு பனியனையே போட்டிருக்கீங்க, கேட்க வாய் துடித்தது, ஆனால் தவிர்த்தேன். (சிவாஜி படத்துல வந்த பட்டிமன்ற ராஜாவோட பாதிப்பாக இருக்குமோ?)

அதற்கு அடுத்த சில நாட்கள் அங்கு போகமுடியாதவாறு வெளியூர் பயணமானேன். கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு பிறகு அந்த கடைக்கு போனபோது, கடை வண்ணம் பூசப்பட்டு, தெளிவானதாய் மாறியிருந்தது.

அட ஆச்சர்யமே, எவ்ளோ பளிச்சுனு இருக்கு. அந்த பெண் ஆப்பம் சுட்டுக்கொண்டிருந்தாள். புதியதாய் இருந்த மற்றொரு பெண் இலைப்போட, சிறிது நேரத்திற்கு பிறகு அவங்க ஆப்பம் கொண்டு வரும்போது தான் கவனித்தேன், நெற்றியில் திருநீறு மட்டும் வைத்திருந்ததை.

என்னைப்பார்த்ததும், முகத்தில் அழுகைக்கான ஆயத்தம் தெரிந்தது. அவுங்ககிட்ட பேசியதில்லை என்பதால், நான் தவிர்க்க இயலாது தலைக்கவிழ்ந்தேன்.        

"நீங்க கொடுக்குற அஞ்சு லட்சம் எத்தன நாளு எங்கூட இருக்கும், அந்த காசு எம்புருஷனுக்கு ஈடாகுமா? இரண்டு நாளு எனக்காக பாவபட்டு பேசுவீங்க, அப்புறம் நாந்தானே தனியா அல்லாடனும்? உங்க அரசியல் விளையாட்டுல நான் அனாதையா ஆயிட்டேனே"  கணவனை, இலங்கை கடற்படையிடம் பறிக்கொடுத்த பெண் தொலைக்காட்சியில் கதறியது ஏனோ தொடர்பில்லாது நினைவுக்கு வந்தது. யாரால் பகிந்து கொள்ள முடியும் ஒரு மரணத்தின் உண்மையான வலியை...

தயக்கத்தோடு சாப்பிட்டு முடித்து, பணம் கொடுத்து மௌனமாய் வெளியேறினேன்.

அந்த கடையில் அதுவரை நான் எதிர்பார்த்த சுத்தம் அன்றிருந்தது, அந்த சுத்தத்தால் ஒரு மனிதர் இல்லாத வெறுமையை நிரப்ப முடியாமல் போனதைதான் வலியாய் உணர்ந்தேன்.  

எஸ்.ராமகிருஷ்ணன் @ நீயா? நானா?



சென்ற வாரம் விஜய் டி.வி.யின்-  நீயா? நானா?  நிகழ்ச்சியில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள், புத்தகம் வாசித்தல் என்பது வெறும் பொழுது போக்கு அல்ல,  கதை என்பதும் வெற்று விஷயங்களை பேசுதல் அல்ல என்பதை வலியுறுத்திச் சொன்ன விஷயங்கள் இப்போது எமது வார்த்தைகளில்...

கதை, நாவல் என எளிதாக சொல்லிவிட முடிந்தாலும், எழுத்தாளனாக இருப்பது சாதாரணமான விஷயமல்ல. நாவல் என்பது ஒருவரின் வாழ்க்கை. மனிதர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை உள்வாங்கி எழுதப்படுகிற ஒன்று.

எழுத்து என்பது வாழ்க்கைத்தொகுப்பு.

என் எழுத்து என்பது என் வாழ்க்கையோடு தொடர்புடையது.
என் வாழ்க்கை என்பதும் இந்திய மக்களின் வாழ்க்கையோடு தொடர்புடையது.

புத்தகம் என்பதை வெறும் கதை வாசித்தல் என்று ஒதுக்குகிறார்கள்.

புத்தகம் என்பதன் ஆரம்பம் கதை கேட்டல்.
நானும் புத்தகம் படிக்கும் முன் கதை கேட்டேன்.

இங்கே எல்லாவற்றிலும் ஒரு கதை இருக்கிறது. உடல் மட்டுமல்ல, உணவு மட்டுமல்ல, பள்ளி,இலக்கியம் என எல்லாவற்றிலும் கதை என்பது ஒளிந்து இருக்கிறது. கதைக்கு என்று ஒரு இதயம் இருக்கிறது.

கதைகளின் உலகம் என்பது கற்பனை உலகம் அல்ல, அது இருப்பதில் இருந்து உருவாவது.

காக்கா வடையை எடுத்த கதை உங்களுக்குத் தெரியும், அது 2000 ஆண்டுகளைத் தாண்டி வந்துள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஒரு ஊர்ல ஒரு நரியாம், அதோட கதை சரியாம். இவ்வளவு தான் கதை.

காக்காவும், வடையும் கதை கூட கிரேக்கம், பிரெஞ்ச், அரபு நாடுகளைத் தாண்டி இங்கே வந்திருக்கிறது. ஒவ்வொரு ஊரைத்தாண்டி வரும்போது, அந்த ஊரின் கலாச்சாரத்தை எடுத்து வந்திருக்கிறது.

இங்கே காக்கா தூக்கியது வடையை,  ஆனால் கிரேக்கத்தில் வெண்ணைத்துண்டை தூக்கியதாகத் தான் சொல்லப்படுகிறது .(காக்கா திருடியதாக கிரேக்கத்தில் இல்லை, எடுத்தது) பிரெஞ்ச் இலக்கியத்தில் அது இனிப்பு, அரபு நாடுகளில் அது மாமிசம், வட இந்தியாவில் அது ஜாங்கிரி, தென் இந்தியாவில் வடை.

காக்கா தூக்கிய பொருள் கூட, ஒவ்வொரு நாடுகளிலும் அங்குள்ள மனிதர்களின் விருப்பப்பொருளை வெளிப்படுத்துவதாகவே இருக்கிறது.

முதலையும், குரங்கும் கதையும் கூட இப்படித்தான், பல்வேறு நாடுகளைத் தாண்டி, மாற்றங்களோடு மக்களிடையே பரவியிருக்கிறது.

கதைகள் என்பவை யாத்திரிகர்கள் போல, நீண்ட தூரம் பயணம் செய்து, மற்றொரு நாட்டிற்கு அறிமுகமாகிறது.

கதைகள் படிக்கும் நேரத்தில், பாடபுத்தகத்தை படிக்கலாமே என்பவர்களுக்கு ஒரு விஷயம்.

இங்கே ஜெயித்தவர்கள் எல்லாம் பாடத்திட்டத்தை தாண்டி சிந்தித்தவர்கள் தான்.

விண்வெளி ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டதெல்லாம் கற்பனை மூலம் வந்தது.

பாடத்திட்டத்தை மட்டும் படிப்பவனுக்கு நல்ல வேலைக்கிடைக்கும்,
பாடத்திட்டத்தைத் தாண்டி படித்தால் மற்றவர்களுக்கு வேலை கொடுக்கலாம்.

எந்த மதமானாலும் அதில் ஏராளமான கதைகள் உண்டு.
எல்லா கடவுள்களும் கதைகளின் வழியே தான் மக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டார்கள்.

கதைகள் என்பதை வெறும் பொழுதுப்போக்கு என்று ஒதுக்கி விடமுடியாது. கதை என்பது அறிதல்.  கதை சொல்பவர் மூலம் கற்றுக்கொள்வது. தெரிந்த கதையை மீண்டும் மீண்டும் கேட்பதில் கூட ஒரு அறிதல் இருக்கிறது. புதிதாக சில விஷயங்கள் சேர்க்கப்பட்டு மீண்டும் அதே கதை, புதிய சூழலுக்கு ஏற்ப வழங்கப்படுகிறது.
    

சாப்பாடு ஊட்டும் போது, கதை சொல்லிகொண்டே ஊட்டுவது நம்மூர் வழக்கம். இன்னும் கொஞ்சம் சாப்பிடுவதற்காக, கதையும் ஏழுகடல் தாண்டி, ஏழு மலை தாண்டி நீளும்.

நோயாளிகளிடன் பேசிப்பாருங்கள் அவர்களிடம் ஆயிரம் கதைகள் இருக்கும். கதை சொல்ல எல்லா மனிதர்களும் விரும்புகிறார்கள்.

கதை என்பது பாடம்,  ஐரோப்பாவில் Bed Time Stories  என்றே வைத்திருக்கிறார்கள். இந்த கதைகள், கனவுகளைத் தூண்டும், வாழ்க்கையை வழிநடத்தும்.

வாசித்தலை குறைச்சொல்லுபவர்களை பற்றி ஒன்றும் வருத்தமில்லை, அவர்களுக்கும் படிக்க சந்தர்ப்பம் கொடுத்தால், விருப்பமில்லாதவர்களும் படிப்பார்கள்.

வாசித்தலால் நேரம் வீணாகிறது என்பதும் சரியல்ல, அலுவலகத்தில் தொடர்ந்து நீங்கள் வேலை செய்வதாக   சொல்லிக்கொண்டாலும் கூட, கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் வீணடிக்கப்படுகிறது. (செயல்பாட்டின் பாதி  முன் தயாரிப்புக்காக செலவிடப்படுகிறது)

வாசித்தலும் எளிமையான,ஈர்ப்பான விஷயம் தான்.

புத்தகம் வாசிக்க வீடு அனுமதிப்பதில்லை என்பதை தாண்டி தான் வாசிக்க வேண்டியிருக்கிறது. இன்று சாதித்துள்ள பெண்கள் அனைவரும் போராடித்தான் தடைகளை தாண்டி வந்துள்ளனர். எல்லாவற்றிலும் போராடித்தான் ஜெயிக்க வேண்டியிருக்கிறது, புத்தகம் வாசிக்கவும் அப்படியே.

மதிப்பெண் வாங்கி விட்டு பின் புத்தகங்களை வாசிக்கலாமே, மறைச்சாவது வாசிக்கலாமே..

நல்ல விஷயத்தை சில சமயத்தில் மறைத்துத்தான் செய்ய வேண்டியுள்ளது. நல்ல புத்தகங்களை திருட்டுத்தனமாக கூட படிக்கலாம்.

புத்தக வாசிப்பு என்பது பெரிய அனுபவம்.  எந்த புத்தகங்களை படிக்கலாம் என்று ஒரு பட்டியல் என் இணையதளத்தில் கிடைக்கிறது.


இணைப்பு :


கோக்கு மாக்கு பதில்கள் தேவை...

விகடன் மேடையில் பிரபலங்கள் பதில் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.
நாம வலையுலக பிரபலங்களுக்கு மேடை அமைத்துக்கொடுக்க வேண்டாமா?.. அதற்காகவே இந்த "வில்லங்க மேடை". அதில் ஜாலியாய் சில கேள்விகள்..

சீரிஸாய் பதில் சொல்பவர்களும் "அட.. உள்ள வாங்க சார்..."


1. நீங்கள் "அம்மா பிள்ளையா"; "அய்யா" பிள்ளையா?

2. நமீதா தமிழ் பேச ஆரம்பித்த பிறகுதான், தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து கிடைத்தது என்பது? (கேள்வி உபயம் விகடன்)

3. 2011ல் அமையவிருக்கும் தமிழக அமைச்சரவையில் உங்கள் வசம் எந்தெந்த துறைகளை வைத்துக்கொள்வீர்கள்?

4. மன்மோகன் சிங்கை திட்டினால் கூட பொறுத்துக்கொள்கிறீர்கள், ஆனால் ராஜபக்சே -வை திட்டினால் மட்டும் உங்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லையே ஏன்?

5. விண்ணோடும், முகிலோடும்..... ஓடாதது என்னவோ?

6. வாய்ப்பாட்டில் நீங்கள் வித்துவானா இல்லை கத்துவானா?

7. அப்புறம் குமுதம் பாணியில் ஒரு கேள்வி...பத்துப்பாட்டு, குத்துப்பாட்டு வேறுபடுத்துக..

8. பணவீக்கத்தை குறைக்க தாங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?

9. அதெல்லாம் சரி அரசே.. மாதம் மும்மாரி பொழிகிறதா?

10. உங்களை பற்றி ஒரு பஞ்ச் பிளீஸ்..

எல்லா கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பதால்... இறங்கி அடிச்சு ஆடுங்க பாஸ், இது உங்க "ஆடு"களம்..

டிஸ்கி :
ஐ.பி.எல்.-க்காக கிரிக்கெட் வீரர்கள் ஏலம் விடப்படுவது போல, பதிவர்களுக்கான ஐ.பி.எல். ஏலம் நடந்தால் எப்படி இருக்கும்?
இதனை பற்றி யாராவது கலாய்ப்பு பதிவு எழுதலாமே...  

டிவிட்டரில் ரசித்தவை...



http://twitter.com/araathu 
தமிழ்நாட்டின் சாபக்கேடு- ஆன்மீகத்தின் அத்தாரிட்டி ரஜினி.நாத்திகத்தின் அத்தாரிட்டி கமல்.பெண்ணுரிமையின் அத்தாரிட்டி குஷ்பு.


http://twitter.com/LathaMagan
”2011ல நம்மகையில” னு சொன்னவங்கல்லாம் நியூ இயர் கேலண்டர் வாங்கிட்டாங்களான்னு செக் பண்ணுங்கப்பா!



http://twitter.com/araathu
நான் உன் அடிமை என்பவரிடமே அடிமையாகிவிடும் வினோத மனநிலை பெண்களிடம் ஆச்சரியமான ஒன்று.


http://twitter.com/mail2mesaru 
எல்லோரிடமும் சொல்லுவதற்கு ஏதோ இருக்கத்தான் செய்கிறது அதேபோல் சொல்லாமல் மறைத்து வைப்பதற்கும் ஏதோ ஒன்று இருக்கிறது...

http://twitter.com/vivaji 
பெட்ரோல் விலை ஏத்தியிருக்காங்களே போராட்டம் பண்ணலையா? வாரத்துக்கு நாலு தடவை ஏத்தினா எப்படிய்யா போராடுறது?  

http://twitter.com/kolaaru 
ஒரே சமயத்தில் 12 & 21ம் நூற்றாண்டுகளில் இருக்கிறேன்,காய்சலுக்கு அலோபதியும் எடுத்துக்கொண்டு,அம்மாவின் மத்திரிச்ச தாயத்தையும் கட்டிக்கொண்டு...

http://twitter.com/raghuji 
சிலபேர் பெட்ரோல் விலையேற்றத்தைப் பற்றிக் கவலைப்படுகிறார்கள். சில பேர் ரோட்டை எப்படிக் கடப்பது என்று கவலைப்படுகிறார்கள்.

http://twitter.com/jill_online 
கடைசி நிறுத்தம் வந்ததும் தூங்கிக்கொண்டிருப்பவரை எழுப்பிவிடும் சகபயணி, மனிதத்தின் வடிவம் தான்

http://twitter.com/navish_senthil 
இந்த வாழ்க்கையை வாழ்வதைவிட, வாழ்வது போல நடிப்பதில்தான் நாட்கள் பல கழிகின்றன. #உண்மை.

http://twitter.com/swamiomkar 
சிஷ்யன் : குருவே தினமும் ஏன் சத்து மாவு சாப்பிடுகிறீர்கள்? குரு : அப்பொழுது தானே நான் ‘சத் குரு’ ஆக முடியும்? #குருகதை.

http://twitter.com/Sangakavi 
ராசா பெட்ரோல் மந்திரியாக ஆகியிருந்தால் முந்தைய ஆட்சியில் இருந்த விலைக்கே பெட்ரோல் கொடுத்திருப்பாரோ ## டவுட்டு

http://twitter.com/araathu 


தேவையில்லாத உரிமைகளை எடுத்துக்கொள்ளும்போது இருப்பவற்றையும் இழக்க நேரிடுகிறது.

http://twitter.com/raghuji 
விக்கிலீக்ஸ் வெளியிடப் போகும் சுவிஸ் வங்கி கணக்கு லிஸ்ட் பயமின்றி தரமணி சிக்னலில் பிச்சையெடுத்துக்கொண்டிருக்கிறார்கள் சில பிச்சைக்காரர்ஸ்.

http://twitter.com/v4vetri 
விட்டுக்கொடுப்பதுதான் காதல்..! அது என்றும் நீயாக இருக்க வேண்டும் என்பதில் ஆரம்பிக்கிறது மோதல்..!!

http://twitter.com/selvu 
மொக்கை : பள்ளிக்கூடத்துலேயே பிறந்து வளர்ந்தாலும் பல்லிக்கு எழுதப் படிக்கத் தெரியாது;அதுமாதிரிதான் நாம எங்க பிறக்கிறோம்கறது முக்கியம் இல்ல.

http://twitter.com/vivaji 
நம்ம குடும்பத்துக்குத்தானே உழைக்கிறேன் -குடும்பஸ்தான் சொன்னா பொறுப்பானவர். இதையே அரசியல்வாதி சொன்னா தப்பு. என்னாங்கடா டகால்டி உலகம் இது.

http://twitter.com/Thaamiraa 
மானம், மரியாதை, சூடு, சுரணை இருப்பவர்கள் செய்யமுடியாத வேலை என்று ஒன்று இருக்கிறது. கணவனாகவோ, மனைவியாகவோ இருப்பதுதான் அது. 

http://twitter.com/bharathbharathi
சைனிக் பள்ளி காலண்டரில் ராஜபக்ஷே படம் # எதுக்குடா இவ்வளவு விசுவாசமா இருக்கீங்க

http://twitter.com/vivaji 
விஜயின் படம் "கண்டிப்பா தோல்விலிருந்து" , வெற்றியா தோல்வியாங்கிற நிலைக்கு வந்ததே வெற்றிதான். கொடைச்சல் sms கம்மியாகிரும்ல

http://twitter.com/sairam2000 
வெறுமை படர்ந்த கண்களும் சலித்து கிடக்கும் இதழ்களுமாய் பெருங்கூட்டம் முண்டியடித்து மெல்ல மெல்ல நகர்கிறது. எங்கு என தெரியாமல் அவர்களுடன் நான்.  

http://twitter.com/kolaaru 
இருமல் இருக்கோ இல்லையோ,சிகரெட் பழக்கம் இருக்கோ இல்லையோ ஹால்ஸ் மிட்டாய் எப்பவும் பாக்கெட்ல்ல இருக்கு # 50 பைசா தட்டுப்பாடு

http://twitter.com/bharathbharathi

கலாச்சாரக்காவலர்கள் மன்னிக்கவும்.


விலைவாசி உயர்ந்திருக்கிறதே என்று அரசியல்வாதிகளிடம் கேட்டால், மக்களின் வாங்கும் சக்தி உயர்ந்திருக்கிறது என்று சொல்கிறார்கள். வாங்கும் சக்தி உயர்ந்திருக்கிறதோ இல்லையோ, மக்களிடம் சில கொடுமைகளை தாங்கும் சக்தி உயர்ந்திருக்க்கிறது.

ந்த வகையில் இன்னும் ஒரு மாற்றமும், இன்றைய தமிழ்ச்சூழலில் நிகழ்ந்திருக்கிறது. காதலிக்கும் வயது குறைந்திருக்கிறது.

முன்பெல்லாம் சில பிஞ்சுகள் மட்டுமே பழுத்தன. இப்பொழுதெல்லாம் பழுத்த பின் தான், பிஞ்சுகளாகவே மாறுகின்றன.

வகுப்பறையில் ஒரே டெஸ்கில் அமர்ந்திருப்பவருக்கும் ஐவரில், ஒரு மாணவி திசை மாறும் போது, அது தொற்று நோயாக, மற்ற நால்வருக்கும் பரவுகிறது.

பின் இப்படி இருந்தால் தான் "கெத்து" என்று மாறி விடுகிறது. சனி,ஞாயிறு ஆகிய நாள்களில், இளவரசனும்; இளவரசியும் "நகர் வலம்"
போக, பர்தா கொடுத்து உதவும் தோழிகளும் உண்டு.

நூறு ரூபாய் கொடுத்து, அப்பன் ஆத்தா வாங்கிக்கொடுக்கும் செயினை விட, சுடிதாரை விட, எவனொ ஒருவன் வாங்கிக்கொடுக்கும், ஐந்து ரூபாய் "பைவ் ஸ்டார்" உசத்தியாய் தெரிகிறது, அந்த சாக்லேட்டின் காகிதம் கூட பாதுகாக்கப்படுகிறது. மற்ற மாணவிகளிடம் காட்டி, பெருமையடிக்க காரணமாகிறது. அந்த பெருமைக்கு இன்னும் ஒருத்தி ஆசைப்படும் போது, அந்த தொற்றுநோய்க்கான பலி எண்ணிக்கை உயருகிறது.

முன்பெல்லாம் பெண்ணை பெற்றவர்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு இருந்தனர், இப்போதோ வயிற்றில் எரிமலையைக் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

டகங்கள் இதற்கு காரணம் என்ற "வழக்கமான" காரணமும் உண்மைதான். முன்பெல்லாம் திரைப்படங்கள், கல்லூரிக்காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டன. பரிமாண வளர்ச்சியின் படி, இப்பொழுதோ "பள்ளியில் காதல்" என்பது தான் திரைப்பட களமாகி இருக்கிறது.

ந்த வலைப்பூவில் இப்படியொரு பதிவா என சவுக்கு வீச தயாராகும், கலாச்சாரக்காவலர்களே மன்னியுங்கள். நாங்கள் வரம்பு தாண்டி பதிவெழுதுகிறோம் என்று கண்டிக்க வேண்டாம். "குறைந்து விட்ட காதலிக்கும் வயது" என்பது தான் இந்த பதிவுக்கான எல்லை.

யினும் யாரேனும் உங்களிடம் கேட்கக்கூடும், ஒரு கேள்வியை..

நோட்டிற்குள் மயில் தோகையை வைத்து, குட்டி போடுமா என பார்த்துக்கொண்டிருக்க வேண்டிய வயதில்; அவர்களே "குட்டி" போடுகிறார்களே.. அதற்கு என்ன பதில் உங்களிடம் இருக்கிறது. (தமிழகத்தில் இது மூன்றாம் நிகழ்வு.)

Reference பதிவுகள்:

1.குறட்டை புலி - மாணவி பிரசவம்;யாருக்கும் வெட்கமில்லை!

2.எங்கே செல்லும் இந்த பாதை - நட்பு- பயோடேட்டா.

3.கோமாளி - செல்லத்திற்கு ஒரு கடிதம்.
(கடைசி சில பத்திகள்)


கடவுளுக்கு ஓர் கட்டளை.


ணிகம் செய்து
களைத்து
வகுப்பறையில்
ஓய்வெடுக்க வரும்
ஆசிரியர்களைக்
கண்டு
ஆத்திரம் கொண்டேன்...

"ன் வாத்தியார்
இப்படி
இருந்திருந்தால்
நீ எப்படி
இப்படி?"

"ந்நேரம்
உன் தோலை உரித்து
வாத்தியமாக
அல்லவா
அடித்துக்கொண்டிருப்பார்கள்"

வாமனா...
உன் மூன்றாவது அடியை
இந்த ஆ"சிறியர்களின்"
தலையில் வை...

சம காலக்கல்வி தொடர் பதிவின் பாகம் -5 
கவிதையின் பின்புலம் பற்றி ஆராயும் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன.



********************************************************************************

பொங்கல் பரிசாக பல்சுவை விருந்து,

இந்த வாரம்: ரசித்தவைகளும், யோசிக்கவைத்தவைகளும்.





இந்த வார செய்தி:

இந்தியாவில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 3.20 வழக்குகள் முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ளன. 9927 சி.பி.ஐ. வழக்குகள் நிலுவையில் உள்ளன. (தாமதமாகும் நீதி அநீதியாம்)

சீனாவில் குற்ற வழக்குகள் 3 மாதங்களிலும், சிவில் வழக்குகள் 6 மாதங்களிலும் முடிக்கப்படுகின்றன. வழக்கு பற்றிய அனைத்து வழக்குகளும் கணிணிமயமாக்கப்படுவதால் விரைவில் வழக்குகள் முடிக்கப்படுகின்றன.
கொசுறு:
சீனாவில் ஒருவர் நீதிபதியாக ஆக வேண்டுமென்றால் அவர் வழக்கறிஞராக இருக்க வேண்டிய அவசியமில்லை. தேசிய நீதித்துறை தேர்வில் வெற்றி பெற்று, உரிய பயிற்சிகளை முடித்தால் 23 வயதில் ஒருவர் நீதிபதியாகி விட முடியும்.

விடை தெரியா விஷயம்:
இந்த ஆண்டு தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பிற்கு நுழைவுத் தேர்வு நடக்குமா இல்லை +2 மதிப்பெண்களின் அடிப்படையில் சேர்க்கை நடைப்பெறுமா என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு இன்று வரை பதில் இல்லை.

இந்த வார தமிழன்:

துபையிலிருந்து ஒலிபரப்பாகும் மலையாள வானெலியான ஏஷியா நெட்டில் தினசரி ஒரு மணி நேர தமிழ் நிகழ்ச்சியில், கடந்த 4 ஆண்டுகளில் இரண்டே இரண்டு ஆங்கில சொற்களை மட்டுமே பயன்படுத்தியுள்ள ஆசிஃப் மீரான் அவர்களை  இந்த வார தமிழனாக அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.
திரு. ஆசிஃப் மீரான் அவர்களின் வலைப்பூ சாத்தான் குளத்து வேதம்.

இந்த வார தகவல்:

தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் (TNPSC) நடத்தும்
VAO எனும் கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான தேதி பிப்ரவரி 20 என
http://www.tnpsctamil.in/2011/01/blog-post_08.html
அறிவிக்கப்பட்டுள்ளதால், தட்டச்சு தேர்வுகள் பிப்ரவரி 26, 27 தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு மனிதர் ஒரு நூல்:
ஒரு மனிதர் நேரம் கிடைக்கும் போதெல்லாம், லண்டனிலுள்ள பிரிட்டிஷார் நூலகத்திற்கு சென்று பல்வேறு நூல்களைப் படித்தார். அவ்வாறு படித்து 28 நோட்டுப்புத்தகங்களில் குறிப்புகளை எழுதி வைத்தார். அந்த குறிப்புகளை வைத்து அவர் எழுதிய ஒரு புத்தகம், உலக மதங்களின் வேதப்புத்தகங்களுக்கு அடுத்த நிலையில் வைத்துப்படிக்கப்படுகிறது.
அந்த புத்தகம்: கேபிடல். அந்த மனிதர்: காரல் மார்ஸ்.

இந்த வார வலையுலக அரட்டை:
ganesukumar@twitter.com
உடம்புக்கு எந்த நோவுன்னாலும் முதலில் நெத்தியில் விபூதி வைத்துவிடும் அப்பத்தாவிடம் நாத்திகம் பேச மனம் வருவதில்லை.
kolaaru@twitter.com
வலியில் "அம்மா" எனக் கதறும் நாம், வலி தீர்ந்ததும் "அப்பா" எனப் பெருமூச்சு விடுவதன் உளவியல் என்ன?

இந்த வார அரசியல்:
மன்மோகன் சிங்: ஹலோ, நீரா ராடியாவா?  மத்திய அமைச்சரவையில் ஏதோ மற்றம் அப்படினு சொன்னாங்க,  என்ன மாற்றம்-னு சொன்னீங்கனா நல்லாயிருக்குங்க..


தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்பதால், ராசா அப்பழுக்கற்றவராகி விட்டார், சி.பி.ஐ. விசாரணை புஸ்வாணமாகி விட்டது. - ஜெயலலிதா. (சீச்சீ.. இந்த பழம் புளிக்கும்...)


இந்த வார கவிதை:
"அம்மாவென அழைத்தது குழந்தை
அடுத்த நிமிடம் விழுந்தது அடி
கால் மீ மம்மி"
-வசீகரன் அவர்களின் குட்டியூண்டு ஹைக்கூ தொகுப்பிலிருந்து.

இந்த வார விருது :
பொங்கல் விடுமுறை நாட்களில், தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகளை பார்க்காமல், உயிர் வாழ முடியாது என்ற நிலையிலுள்ள தமிழர்களுக்காகவே, வழக்கமான மின்தடையை செய்யாமல்,தை முதல் மூன்று நாட்களுக்கு தடையில்லா மின்சாரத்தை வழங்கிய தமிழ்நாடு மின்வாரியத்திற்கு இந்த வார பொங்கல் விருது வழங்கப்படுகிறது.

சென்னை சங்கமம் - ஒரு மாறுபட்ட அதிரடி விமர்சனம்.

விஜய் நடித்த காவலன் போன்று வெளிவருமா, வராதா என்ற சந்தேகங்களைத் தாண்டி, பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்துள்ளது சென்னை சங்கமம். தமிழ் மையம் மற்றும் முத்தமிழர் கலைக்கூடத்தின் கூட்டுத்தயாரிப்பில்  மிகுந்த பொருட்செலவில் உருவாக்கப்பட்டது இந்த படம்.

சி.பி.ஐ. ரெய்டு வரும் ஆரம்ப காட்சிலேயே ரசிகர்களை அதிர வைத்து, சீட்டின் நுனியில் உட்கார வைப்பது படத்திற்கு பிளஸ் பாயிண்ட்.

சென்ற வருடம் வெளியாகி சக்கைப்போடு போட்ட "ஸ்பெக்ட்ரம்" படத்தின் இரண்டாம் பாகமோ என ஆரம்பக்காட்சிகள் நினைக்க வைத்தாலும், அடுத்தடுத்த காட்சிகளில் திரைக்கதையின் திசை மாறுவது ஆறுதல் அளிக்கிறது. தனது முந்தைய நான்கு படங்களில் கதாநாயகன் வேடத்தோடு, இயக்கும் பொறுப்பையும் ஏற்றிருந்த ஜிகத் பஸ்பர் இந்த படத்தில் இயக்கத்தில் மட்டும் கவனம் செலுத்தியிருப்பது கூடுதல் பலம்.

கிராமத்து கலைப்பண்பாடுகளை, பட்டணத்து மக்களுக்கு மறு அறிமுகம் செய்ய எண்ணுகிறாள் கதாநாயகி. கதாநாயகியின் லட்சியம் நிறைவேறியதா என்பதை சுவையான சம்பவங்களோடு காட்சியாக்கி இருக்கிறார் இயக்குநர்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ள திரைக்கதைக்கு, தன்னுடைய அழுத்தமான நடிப்பால் மேலும் மெருகூட்டியுள்ளார் கதாநாயகி பனிமொழி. முந்தைய படங்களில் இவர் அலட்டலாக நடித்துள்ளார் என ஊடகங்கள் விமர்சித்ததால் இந்த முறை முகபாவங்களில் அதிக கவனம் செலுத்தியிருப்பது நன்றாகத் தெரிகிறது.

"திருவிழா, நம்ம தெரு விழா" என்ற பாடலில், கிராமத்து நாட்டமையாக வரும் இளைஞர், துள்ளாட்டம் போட்டியிருக்கும் காட்சிகளில் ரசிகர்களின் விசில் சத்தம் காதை கிழிக்கிறது.

பாட்டின் முடிவில், "இளைஞர் இங்க வந்து, வழக்கிருக்கிற வீட்டில் கை நனைப்பது ,பஞ்சாயித்து தீர்ப்புபடி தப்பு" என பழைய நாட்டமை பயலலிதா கனல் கக்குவது திரைக்கதையில் நல்ல திருப்பம்.

இறுதிக்காட்சிக்கு முன்பு வரும் "ஆட்சி, ஆட்சி" என்ற பாடல், ஆடுகளம் படத்தின்  "யாத்தே யாத்தே"  பாடலை நினைவுறுத்தினாலும், ரவை முத்து பாடல்வரிகளில் சிலிர்க்க வைக்கிறது. "ஞாயிறு போற்றுதும்,ஞாயிறு போற்றுதும்" பாடல் மெலடியாக மனசை வருடுகிறது.
  
வரமணியின் பிண்ணனி இசை தேவையான இடங்களில் மட்டுமே ஓங்கி
ஒலிப்பது நிறைவாக உள்ளது.

வசனம் ஜொலித்திருக்கும் இடங்கள்:


"தமிழ்ப்புத்தாண்டு நம்ம புத்தாண்டு.. அத நாம தானே கொண்டாடனும்.."

"ஐயாயிரம் கலைஞர்களுக்கு ஒரு மாச சாப்பாடு இது".
மற்றும்
இடையிடையே "மதுரைக்கார குரலில்" ஒலிக்கும் பின்புல எதிர்ப்பு வசனங்கள்.
பிளாஷ்பேக்கில் வரும் நாரா வாடியாவின் உரையாடல்கள்.

மொத்தத்தில் பொங்கல் ரேசில்,  கிராமத்து ஆடுகளத்தில், சிறுத்தையாய் சீறி, கலாச்சாரக் காவலனாய் மாறியிருக்கிறது இளைஞனின் தயாரிப்பில் வந்துள்ள சென்னை சங்கமம்.

ஏ   சென்டர்களில் 100.5 நாட்கள், பி   சென்டர்களில் 75.5 நாட்கள், சி சென்டர்களில்  55.5 நாட்கள் ஓடலாம்.

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 57.5

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - நன்று.

கோமாதா.... எங்கள் குலமாதா...



காங்கேயம் (தமிழ்நாடு)

 அமிர்த மகால் (கர்நாடகா)

 பச்சூர் (பிகார்)

 பர்கூர் (தமிழ்நாடு)

 தாங்கி ((மகாராஷ்டிரா)

 தியோனி (மகாராஷ்டிரா)

 கவொலாவோ (மகா)

 கீர் (குஜராத்)

 ஹல்லிகர் (கர்நாடகா)

 ஹரியானா (ஹரியானா)

 காங்ரெஜ் (ராஜஸ்தான்)

 கேன்கதா (உத்திரப்பிரதேசம்)

 கேரிகார்க் (உத்திரப்பிரதேசம்)

 ஹில்லார் (மகாரஷ்டிரா)

 கிருஷ்ணா வாலி (கர்நாடகா)

 மால்வி (ராஜஸ்தான்)

 மேவாதி (உத்திரபிரதேசம்)

நகோரி (ராஜஸ்தான்)

நிமாரி (மகா)

ஓங்கோல் (ஆந்திரா)

 பொன்வார் (உத்திரபிரதேசம்)

 புங்கனூர் (ஆந்திரா & தமிழ்நாடு)

 ரதி (ராஜஸ்தான்)

 சிவப்பு காந்தாரி (மகா, குஜராத்)

 சிவப்பு சிந்தி (பஞ்சாப்)

 சாஹிவால் (பஞ்சாப்)

 சிறி (மேற்குவங்கம் & சிக்கிம்)

 தார்பார்க்கர் (ராஜஸ்தான்)

 உம்பளச்சேரி (தமிழ்நாடு)

 வச்சூர் (கேரளா)

 கங்காத்திரி ( உ.பி & பீகார்)

 மல்நாட் ஹிடா (கர்நாடகா)

 தோ தோ (நாகாலாந்த்)

பட்டியலில் உள்ள அனைத்து வகை மாட்டு இனங்களுக்கும்  இனிய மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.


(விடுபட்ட இனங்களுக்கும் சேர்த்துத்தான் வாழ்த்துக்கள். பட்டியலில் பேர் வரலியேனு சாணியடிச்சுடாதீங்க... கோமாதாக்களே....)

***********************************************************************************

படங்கள் மற்றும் தகவல்கள்: 
அருள்மிகு கூகுள் நாச்சியார் உடனுறை கூகுள் ஆண்டவர்.

பில்டிங் ஸ்ட்ராங், ஆனா பேஸ் மட்டம் வீக்.


வாசிக்கவும், எழுதவும் தெரியாத மாணவர்கள், பத்தாம் வகுப்பில் கூட உள்ளனர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

நீங்கள் வேண்டுமானாலும் உங்களின் அக்கம்பக்கம் உள்ள அரசு பள்ளிகளில் விசாரித்துப்பாருங்களேன்.

இடை நிற்றலை தவிர்க்கும் விதத்தில் எட்டாம் வகுப்பு வரை கட்டாய
ஆல்-பாஸ் முறையை அரசு அறிமுகப்படுத்தியது. ஆனால் அதன் பின் விளைவுகள் இப்படி இருப்பது இன்னும் உலகத்தாரின் கண்களுக்கு தென்பட வில்லை என்பது உண்மை.

அனைவரும் தேர்ச்சி என்பதால் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது என்பது ஒரு புறம் சரியான விஷயமாக இருந்தபோதிலும், கல்வியின் தரம் உயர்ந்திருக்கிறதா என்றால் அது கேள்விக்குறியே.

எப்படி படித்தாலும் பாஸ் தானே என்பதால் மாணவர்கள், படிப்பில்
முழு கவனம் செலுத்துவதில்லை.

ஏற்கனவே மாணவர்களை கண்டிக்கக்கூடாது என்று இருப்பதாலும், பொதுத்தேர்வு, அதன் தேர்வு முடிவுகள் என்ற நெருக்குதல்கள் இல்லாதாலும் சில ஆசிரியர்கள் கண்டுக்கொள்ளாமல் இருக்கிறார்கள்.

பத்தாம் வகுப்பு வரும் போது பார்த்துக்கொள்ளலாம் என்று பெற்றோர்களும் கவனியாமல் இருக்கிறார்கள்.எப்படியும் பாஸ் என்பதால் தன் குழந்தைகள் விடுப்பு எடுப்பதையும் அலட்சியமும் செய்கிறார்கள்.

வெறுமனே பாஸ் பாஸ் என்று, வருடங்களை மட்டும் கடந்து, பத்தாம் வகுப்பு வந்து ஒண்ணும் தெரியாமல் வந்து நிற்கும் மாணவர்களுக்கு நாங்கள் பாடம் நடத்துவதா, வாசிக்க பழக்குவதா என பத்தாம் வகுப்பு ஆசிரியர்கள்,பழியை எட்டாம் வகுப்பு ஆசிரியர்கள்  மீது  தள்ளி விடுகிறார்கள். அவர்கள் சின்ன வகுப்பு ஆசிரியர்களை சரியில்லை என குற்றம் சாட்டுகிறார்கள்.

முன்பெல்லாம் பள்ளிக்கு போக முடியாதவர்கள் மட்டும் கல்வியறிவு இல்லாதவர்களாக இருந்தனர், இப்போது பள்ளி போகிறவர்கள் கூட கல்வியறிவு இல்லாதவர்களாக இருக்கிறார்கள். இது தான் வளர்ச்சியா?

இப்போதைய கல்வியின் நிலவரம் "பில்டிங் ஸ்ட்ராங், ஆனா பேஸ் மட்டம் வீக்" என்பது தான்.

இந்த பிரச்சனையை சரி செய்யாவிடில், உலகிலேயே இளைஞர்களைக் கொண்ட நாடு என்ற புள்ளிவிபரம் மட்டுமே மீதமிருக்கும், நிதர்சனத்தில் அவர்கள் அனைவரும் எண், எழுத்து என்னும் இரண்டு கண்களும் இல்லாத புதியவகை மாற்றுத்திறனாளிகளாகவே இருப்பார்கள்.

அப்புறம் எங்க போயி வல்லரசாவது?

***********************************************************************************

இது சம காலக்கல்வி தொடர் பதிவின் பாகம் 4.


***********************************************************************************

சம காலக்கல்வி பற்றிய முந்தைய பதிவுகள்:


வடை ஸாரி, சாக்லேட் போச்சே. 


ஐயோ.. யாராவது தெளிய வைய்யுங்களேன்.


இப்படித்தான் இருக்க வேணும்...



குறட்டை புலியின் சவாலுக்கு, ஒரு பெண் சிங்கத்தின் பதில்..

மிக நேசித்த ஒருவர், ஒரு கட்டத்தில் "யார் நீ" கேட்க நேரிடும் சூழலை தந்து, கவிதை எழுத பதிவர்களுக்கு சவால் விடுத்த "குறட்டை புலி" அவர்களின் கவிதை போட்டிக்கான கவிதை இது.
      

இருந்தவள் பேசுகிறேன்...

யார் நீ
என்ற
உன் கொடூர கேள்விக்கு
என்ன பதில் சொல்வேன்?

உன் உறவு என
சொல்லிக்கொள்ளவும்
இயலாது.
உன் மனப்புத்தகத்தில்
என்னைப்பற்றிய
அத்துணை  வரிகளையும்
அழித்து விட்டாய்.

வேறு யாரையும்
வைத்தும் என்னை
அடையாளம்
காட்ட முடியாது.
ஏனெனில்
யாரோடும்
நானில்லை.
என்னோடும்
யாருமில்லை.

இருப்பென்று
ஏதுமில்லை
இருந்த இதயத்தை
உனக்கென்று
தந்து விட்டாயிற்று.

முள்ளில் விழுந்த
சேலையைப்போல
என்னிலிருந்து
உன்னை கவனமாய்
பிரித்து போன பின்
எனக்கென்று
தனி அடையாளம்
ஏதுமில்லை.

நிலைமை
இப்படி இருக்க
"யார் நீ"
என்ற
உன் கொடூர கேள்விக்கு
என்ன பதில் சொல்வேன்?

வேண்டுமெனில்
இவ்வாறு சொல்லலாம்..
"உன்னால்
இறந்து போனவள்"

-பாரதி.


டிஸ்கி: கவிதை எழுதும் கவிதைக்கு அழைத்த குறட்டை புலிக்கு நன்றி. வேறு யாராவது இதே சூழல் கொண்டு கவிதை எழுதினால், எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். ரசிக்க வருகிறோம்.

பஸ்கி: எங்கள் வலைப்பூவில் வெளியாகும் முதல் காதல் கவிதை இது.


படம்:
http://marabinmaindanmuthiah.blogspot.com/2010_04_01_archive.html

வீரத் துறவியும், தெருவோர இளைஞனும்...

கால்பந்து ஆட்டக்களத்தில் 
உடலுக்கு உரம்
சேர்க்கச் சொன்னது 
உனது உரைகள்...

தொலைக்காட்சித் தவத்தால்
வயிறுப் பெருத்து, 
வாழ்க்கைச் சிறுத்து, 
மானாட, மயிலாட களத்திற்கு 
உரம் சேர்ப்பது 
எங்களின் "கெமிஸ்ட்ரி"

"தேசம், மக்கள் 
இவையே நம் தெய்வங்கள்; 
மற்றெல்லா தெய்வங்களும் 
மனதை விட்டு அகலட்டும்" 
இவை உன் வார்த்தைகள்.

அரிதாரம் பூசுபவர்களையும் 
அவதாரங்களில் சேர்த்து 
தெய்வங்களின் பட்டியலை
நீட்டித்துக்கொண்டது
எங்களின் நிகழ்காலம்...

உன்னுடைய 
"சித்தாந்த முகவரி"யிலிருந்து 
அரசியல் முடிவுகள் 
வந்தது அந்தகாலம்....

"பவர் புரோக்கர்"
பெண்மணியின் 
நுனி நாக்கு ஆங்கிலத்திலிருந்து 
முடிவுகள் 
வருவிக்கப்படுவது 
எங்கள் காலம்.

எழுமின், விழிமின் என 
கொதித்த சில உத்தமர்களுக்கு 
ரத்தக்கொதிப்பு வந்தது மட்டும் 
மீதம்.


குருஷேத்திரத்தில் 
இது  மாயக்கண்ணன்களின் காலம்;
நாங்கள் வீர அபிமன்யுவாக
மாற்றப்பட்டு,
மரிக்க வேண்டியிருக்கிறது.

தலைவர்களால்
முதுகெலும்பு உருவப்படாமல் 
மிச்சமிருக்கும் 
நூறு பேர் 
இப்போது தயார்..

அடுத்த போர் என்பது 
அது எந்த தலைவரின் கீழும் அல்ல;

எங்கள் போரே 
தலைவர்களை 
எதிர்த்து தான்...


***********************************************************************************
தொடர்புடைய மற்ற பதிவர்களின் படைப்புக்கள்:



Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்