அப்ப இனி சசி முதல்வர்.,ஜெ. பிரதமர் - அந்த பிம்பிளிக்கி பிளாக்கி அறிக்கையின் பின்ணணி.



வழக்கமா கலைஞர் ஆட்சியில் இருந்த போது நடக்குற பிரச்சனைகளின்  போது வந்த அறிக்கைகள் தான், "கெடக்குறது கெடக்கட்டும், கெழவியைத் தூக்கி மனையில வை"-ங்கிற ரேஞ்சுல இருக்கும் ஆனா, அதுக்கு கொஞ்சமும் கொஞ்சமும் கொறைஞ்சவங்க இல்லைங்கிற ரீதியில இருக்கு, நேற்று ஜெயா டிவியில் "ப்ளாஷ்" ஆகி அதனால் எல்லா ஊடகங்களிலும் "ப்ளீச்" ஆகியிருக்கிற "உடன் பிறவா" அறிக்கை.

ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் பண்ணின பட்ஜெட்-ல இருந்த, "முதலமைச்சர் அம்மாவின் ஆணைக்கிணங்க" என்ற வார்த்தைகளின் எண்ணிக்கையை, விட அதிக முறை அக்கா... அக்கா.. என்று ஒரே பாசமலர் - பார்ட் 14 ரேஞ்சுக்கு இருந்தது சசிகலாவின் நேற்றைய அறிக்கை.

"கண்கள் பனிக்க, இதயம் இனிக்க" என்ற கலைஞரின் வசன உதவியோடு, இனி கூடிய விரைவில் போயஸ் தோட்டத்தில், "இரட்டை இலையில்,  இரட்டை ரோஜா பூக்கும்" என வானிலை முன்னறிவிப்புகள் சொல்கின்றன.

சசிகலா வெளியேற்றப்பட்ட போது, "எம்ஜிஆரின் உண்மைத்தொண்டர்களுக்கு இனி மதிப்பிருக்கும்" என்று பட்டாசு வெடிச்சு கொண்டாடுனான் பாருங்க.. அவன் தான் இப்ப கிலி அடிச்சு, "விட்டா கிறுக்கனாக்கிடுவாங்க போல"னு புலம்பிக்கிட்டு இருக்கான். (மெய்யாலுமே அப்படி பொலம்புன ஒருத்தரோட தாக்கம் தான் இந்த பதிவு, கடைசியா அவரு மனச தேத்திக்கிட்டு சொன்ன வார்த்தைகள் தான் தலைப்பில், உங்களைக் கடுப்பாக்கிய வார்த்தைகள்.. ஒரு வேளை நடந்தாலும் நடக்கலாம்.. அட.. குஷ்பு முதல்வர் ஆவார்-னு ஒரு கூட்டம் கும்மியடிச்சதையே பாத்தவங்க நாங்க)
 
இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதற்காக, சமீபத்தில் சென்னையில் நடைப்பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.கள் கூட்டத்தில் கூட, "அக்கும்பலை நானே ஒதுக்கிட்டேன். உங்களுக்கு என்ன உறவு வேண்டியிருக்கிறது, இனிமேல் நடவடிக்கை தான்" என்று ஜெயலலிதா எச்சரித்த சில நாட்களுக்குள், ஜெயா டீவியில் சின்னம்மாவின் அறிக்கை.

அதிமுகவில் சின்னதாய் ஒரு விஷயம் நடந்தால் கூட "அம்மாவின் ஆணைக்கிணங்க" தான் நடக்கும். இந்த அறிக்கை மட்டும் எப்படி அம்மாவின்  யாணை இல்லாமல் வெளிவந்திருக்கும்? அதுவும் ஜெயா டீவியில். ( ஒரு வேளை ஜெயா டீவி, கனிமொழியின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? அடபோங்கப்பா அவுங்க கலைஞர் டீவியின் வாசலைக் கூட மிதித்ததில்லையாம்... அப்புறம் எப்படி போய்...  ஜெயா டீவி???  ஹி..ஹி..ஹி..)

பெங்களூரூலு கோர்ட்லலூ ச்சே... பெங்களூரு கோர்ட்ல, "ஜெயலலிதா குற்றமற்றவர்., நானே அனைத்திற்கும் பொறுப்பு" என்றார் சசிகலா. சரி ஜெயலலிதாவை வழக்கிலிருந்து தப்பிக்க வைக்க என்பதால் அப்படி சொன்னார் எனில், இப்போது "எல்லாம் எனக்கே தெரியாமல் நடந்தவை" என்கிறார். யார் தப்பிக்க? இது இயக்குனர் திரைக்கதை அமைப்பிலும், கதை வசனத்திலும், கோட்டை விட்ட இடமாகவே தெரிகிறதே!.

இது சசிக்கலாவின் அறிக்கையின் ஒரு பகுதி " என்னுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சிலர், நான் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்ததை அடிப்படையாக வைத்து எனது பெயரை தவறாகப் பயன்படுத்தி, சில விருப்பத் தகாத செயல்களில் ஈடுபட்டனர் என்பதையும், அதனால் கட்சிக்கு பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டன என்பதையும், அவர்களின் தவறான நடவடிக்கைகளால் பல குழப்பங்கள் உண்டாக்கப்பட்டன என்பதையும், கழகத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கப்பட்டடது என்பதையும், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கே எதிரான சில சதித் திட்டங்களும் தீட்டப்பட்டன என்பதையும் அறிந்தபோது, நான் பெரிதும் அதிர்ச்சியுற்றேன். மிகுந்த வேதனை அடைந்தேன்.
இவையெல்லாம் எனக்கே தெரியாமல் நடந்தவை என்பதுதான் உண்மை."

முதலில் ஜெயலலிதா எந்த தவறும் செய்யவில்லை, எல்லாம் சசிகலா தான் செய்கிறார் என்றார்கள். (சட்டமன்ற தேர்தலின் போது, கூட்டணி கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே, 160 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பட்டியல் வெளியான போது, சசிகலா அன் கோ தான் பட்டியலை வெளியிட்டு விட்டது என்று "தமிழின் நம்பர் ஒன், நம்பர் டூ பத்திரிக்கைகள் கூட எழுதின. - தமிழில் ஏதையா நெம்பர் டூ? தமிழில் பத்திரிக்கைகள் எல்லாமே நம்பர் ஒன் தான் என்று நீங்கள் சொல்வது காதில் விழுகிறது. அதுவும் சரிதான். )

சரி விஷயத்திற்கு வருவோம், ஜெயலலிதாவுக்கு ஒன்றும் தெரியாது, சசிகலா தான் என்றார்கள். இப்போது எனக்கு ஒன்றும் தெரியாது, என்னுடைய நண்பர்களும், உறவினர்களும் தான் என்று சசிகலா சொல்கிறார். அதனையும் நம் தமிழ்கூறும் நல்லுலகம் அப்படியே ஏற்றுகொள்வதாக வைத்துகொள்க. நாளை நாங்களும் ஒன்றும் செய்யவில்லை என்று சசிகலாவின் உறவினர்கள் சொல்லிவிட்டால்???

யாரும் எதையும் செய்யவில்லை, எதுவும் நடக்கவில்லை, எல்லாம் ஆரிய,திராவிட மாயை - என்று கலைஞர் பாணியில் தமிழக மக்களை கலாய்க்க தயாராகி விட்டார்கள் என்று தானே அர்த்தம்.

"ஏற்போர் ஆம் என்க, மறுப்போர் இல்லை என்க., ஏற்போர் அதிகம் இருப்பதாக கருதுவதால்.. அதுவே உண்மை என தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்படுகிறது" என சபாநாயகர் ஜெயக்குமாரின் "கட கட" பாணியில் ஏற்றுக்கொள்ள மக்களும் காத்திருப்பார்களா?

ஒரு மிகப்பெரிய கூட்டமே அதிகாரத்தில் தலையிட்டதால் தான் திமுக வீழ்த்தப்பட்டது என்பதை முதல்வர் இன்னும் மறந்திருக்க மாட்டார். ஏனெனில் அதை சொல்லி தானே வாக்குகளை வாங்கி, இன்று அசுர பலதோடு ஆள்கிறார். மீண்டும் அதே தவறு நிகழ காரணமானால், கருணாநிதிக்கு அண்ணாசாலையில் சிறப்பிடம் கொடுத்த பெருமை ஜெயலலிதாவுக்கு வந்து சேரும் என்பதில் ஐயமில்லை.

சாமானியனாக எமது விருப்பம்.., ஆட்சி செய்ய மக்கள் வாய்ப்பளித்தவர்கள் மட்டும் ஆட்சி செய்க.. அவர்களை அண்டிப் பிழைப்போர், ஆட்சியிலிருந்து தள்ளி நிற்க..

விகடன் பாணியில் இது வலைபாயுதே - கலக்கல் ட்விட்டுகளின் தொகுப்பு.


இந்த வாரம் ட்விட்டரில் கண்டெடுத்த பல்சுவை அதிரடி ட்விட்டுகளின் தொகுப்பு இது. உங்களை மிக ஈர்த்த ட்விட் ஒன்றை பின்னூட்டத்தில் குறிப்பிட்டு பாராட்டலாமே...

 "வெந்தயம் போட்டு ஆட்டினால் இட்லி மிருதுவாக இருக்கும்" என்ற டிப்ஸை சர்வரிடம் சொன்னேன், சர்வர் டிப்ஸ் கேட்டபோது !

 கட் பண்ணி ஓப்பன் பண்ணா கரண்ட் போயிருது....


 நம்மை நிராகரித்த செம ஃபிகர்களின் தகர டப்பா தலை கணவர்களை பார்க்கும்போது நமக்கு ஏற்படும் சந்தோஷம் அளவிட முடியாது:) # தமிழன்



 வீட்டில் மனைவியை கோபப்படுத்தாமல் இருந்தாலே பாதியளவு உலக வெப்பமாதலை தடுக்கலாம்!


 பந்தின்னா பந்திதான்! வாழையிலை, ச்சீவீட்டு, இட்லி,தோசை,பொங்கலு....ஹி..ஹி! ~இதையெல்லாம் கண்டுபிடித்த முன்னோர்கள் வாழ்க!


 கர்நாடகாவில் இருந்து வந்தாலும் அட்சர சுத்தமாய் தமிழ் பேச முடியும் என்பதை ரஜினி பிரகாஷ்ராஜிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்
 டிராபிக் ஜாமை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திக் கொண்டிருக்கிறோம். இன்று பெட்ரோல் பங்கில் டிராபிக் ஜாம் #எகொசா


 திருமணமாகி வீட்டிற்கு வரும் மகளிடம் எப்டிம்மா இருக்கன்னு அம்மா கேட்பது,எப்டியாவது இருந்துவிடு என்ற பதிலையும் உள்ளடக்கியுள்ளது.


  : பேஸ்டுல உப்பு இல்லாட்டி கூட திரிஷா, அனுஷ்கா வராங்க; நாட்டுல பல பேரு சோறு இல்லாம இருக்கான், எவனும் வரமாட்டேன்கிறான்.!!!


 தற்காலிக சுகமென்றாலும் கொள்ளிக்கட்டையால் சொறிந்துக்கொள்வது மனித இயல்புதான்.


: கிழிந்த ரூபாய் நோட்டை மாத்தும் ஒவ்வொருவரும் சிறந்த நடிகர்களே ..."



 உங்களுக்கு யாருடனும் கருத்து வேறுபாடு வரவில்லை என்றால், நீங்கள் எல்லோருக்கும் ஜால்ரா அடிக்கிறீர்கள் என்று அர்த்தம்

 இங்க்லீஷ்ல பல இடங்களில் சில வார்த்தைகள் சைலன்ட்டா வந்தாலும்,எல்லா இடங்களிலும் இங்க்லிஷ்ன்னாலே நான் சைலன்ட் தான்...
 ”சிலர் என்னிடம் பிச்சை கேட்கும்போது, என்னை, அவன், கிண்டல் செய்கிறானோ என்று அஞ்சுகிறேன்!”

: துன்பமற்ற முதல் மனிதன் இறந்தே பிறந்தான்.



@iPorukki: ஆயிரம் முறை தேவதையென்று வர்ணிக்கும் போது தேவதையாய் உருமாறாத மனைவி, பேயென்று திட்டும்போது, அரை நொடியில் உருமாறுகிறாள்.

: இரண்டாவது முறை செய்யப்படும் தவறு, முதல் முறை போல கவனிக்கப்படுவதில்லை. #பாஜக-பிட்டு

 ஆனா ஒண்ணு குஷ்பக்கா பத்துவிரலை முறிச்சு சொடக்கு போட்டு விட்டசாபம் பலிக்குது,10 மாசத்துல#அனுபவிப்பீங்கடா ஓட்டு போட்டதுக்கு:)

 திடீர்ன்னு ஒருநாள் லெட்டர் எழுதி வெச்சுட்டு கலைஞர் காணாமல் போனா என்ன நடக்கும்??# தேடுவாங்களா இல்ல கட்சிய புடிப்பாங்களா?



 ராஜபக்சே வும் அவனது மகன்களும் ஏன் எய்ட்ஸ் லோகோவை கழுத்தில் மாட்டிக்கொண்டு அலைகின்றனர் ..... டவுட்டு!!! 


 :தசாவதாரம் பற்றி இன்னும் புரியாத ஒரே கேள்வி... அசினாகவும் ஏன் கமலே நடிக்கலை?



 பெப்ருவரி சம்பளத்தில் ரூ.200 பாக்கி இருக்கிறது. குறைந்த விலைக்கு டாக்டர் பட்டம் கிடைக்குமா என இணையத்தில் தேடிக்கொண்டிருக்கிறேன்.

  மதம் வேண்டாம்; இறைவன் போதும் எனக்கு!


writernaayon அருங்காட்சியக பழங்கால ஓலைச்சுவடி எழுத்துக்களைப் பார்த்து திகைத்து நின்றேன் #தற்போதைய என் எழுத்துக்களைப்போலவே இருக்கிறது!




 நமது இடத்தை இன்னொருவரால் நிரப்ப முடியுமெனில் நாம் தோற்றுக் கொண்டிருப்பதாக அர்த்தம் !

 புத்தகங்கள் படிக்கும் போது மூலையை மடக்கி வைப்போர் மூளை முடங்கியோரே!”


 நீங்க முன்னால வந்துடுங்க சார்னு சற்றுமுன் என் ஒழுக்கத்தை சந்தேகித்தவர் ஷேர் ஆட்டோ ஓட்டுநர் #இதயம் கிழியும் ஒலி கேட்டேன்


 இதை புரிய வைக்க ரொம்ப நேரமாகுன்னு மேனேஜர் சொன்னாருன்னா, அவருக்கே இன்னமும் விளங்கலைன்னு அர்த்தம்.!


 கொள்ளயர்கள் எல்லாம் ஆந்த்ராவுக்கு போயிட்டதா சொன்னாங்க அப்பிடியே கரண்ட்டு எந்தஸ்டேட்டுக்கு போச்சு-னு கண்டுபிடிச்சு சொல்லுங்க


 ஏழாவது ரவுண்ட் முடிஞ்சும் கேப்டன் நாலாவது இடமா? ஓ...சங்கரன்கோவில் இடைத்தேர்தல்  ஓட்டு எண்ணிக்கையைப் பத்தி பேசுறீங்களா...


 சில காதலர்களுக்கும் மேதகு தமிழக மக்களுக்கும் அட்வான்ஸ் ஏப்ரல் 1 வாழ்த்துக்கள் :‍)


 நான் வணங்கும் கோவிலில்தான் என் எதிரியும் பிரார்த்திக்கிறான்


: நீ சாப்பிடும் தட்டை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும் நாயை நம்பாதே.! #பழமொழி


 ஒருமணி நேரத்திற்கெல்லாம் கோபப்பட முடியாது என்னால் ; என்னுடையது தணியாதது; அது என்னோடு எப்போதுமிருக்கும் !


 அப்படி முந்திக் கொண்டு போய் எமனை பார்ப்பதில் என்ன சுகமோ..


: வாழ்க்கைல நாம தப்பு பண்ணிட்டா ஒரு பத்து நிமிஷம் கண்ணா மூடிகிட்டு பொறுமையா யோசிக்கணும்.. பழிய யார் மேல போடலாம்னு..


டிரைலர் டைம்:

அடுத்த பதிவாக "கலவரபூமியில் காத்து வாங்க வந்த ரஞ்சிக்கோட்டை வாலிபன்" - ட்விட்டரில் வலது கால் வைத்து அடியெடுத்து வைத்திருக்கும் ச்ச்ச்சுவாமிசீ நித்தியானந்தா பற்றிய ஒரு சீரியஸான காமெடி பதிவு ..(சன் டிவியில் தமிழ் டப்பிங் ஹாலிவுட் படத்தின் டிரைலரின் பின்ணணியில் ஒலிக்கும் "ஹஸ்கி - பஸ்கி வாய்சில்" படிக்கவும்)

ட்விட்டரில் நித்தியானந்தா - ஒரு கலகல லைவ் ரிப்போர்ட்.



"கதவைத் திற; காற்று வரட்டும்" தொடர், குமுதத்தில் வந்த போது மிக அதிகமான பேர்களை ஈர்த்ததாக சொல்லப்பட்டது. அதை நித்தியானந்தா எழுதவில்லை, வலம்புரிஜான் தான் எழுதினார் என்று மற்றவர்கள் சொல்லும் அளவுக்கு அந்த தொடர் நன்றாக இருந்தது. நித்தியானந்தாவின் ஆசி உரைகளிலும் "தத்ஸ்" ததும்பி வழிந்து பாயும்.

ஆனால் அத்துணை விஷயங்களையும், நித்தியானந்தா பற்றிய "வீடியோ காட்சி" தூக்கி சாப்பிட்டு விட்டது. நித்தியானந்தா என்றாலே வேறு எதுவும் மண்டைக்கு வருவதில்லை. அது நம்முடைய தவறும் அல்ல.

இத்துணை நிகழ்விற்கு பிறகு, கூச்சமே இல்லாமல் அதே ":பளீர்" சிரிப்புடன் சத்சங்கம் நடத்தும் துணிச்சலை பாராட்டியே ஆக வேண்டும்.

அதே துணிச்சலுடன் ட்விட்டரிலும் வலது கால் வைத்து, கணக்கு ஆரம்பித்திருக்கிறார் நித்தியானந்தா.

ட்விட்டர் என்பது பெரும்பாலான நாத்திகர்களின் உறைவிடமாகவே இருந்து வருகிறது. அதுவும் இலங்கையில் கொடூரமாக தமிழ்மக்கள் கொன்று குவிக்கப்பட்ட பின் கடவுள் மறுப்பாளர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகவே இருக்கிறது. (தெய்வம் என்று ஒன்று இருந்தால் இதனையெல்லாம் நின்றோ அல்லது அன்றோ அல்லது அதற்கு அடுத்த நாளோ தட்டிக்கேட்டிருக்க வேண்டுமல்லவா?)

"இயேசு நாதரே வந்தாலும் எங்க ஆளுக ஓட்டி எடுத்துடுவாங்க, நீயெல்லாம் எம்மாத்திரம்" என்கின்ற அளவுக்கு நித்யானந்தாவை நித்யகண்டம் பண்ணிவிட்டார்கள் "ட்விட்டார் வாழ்" கலாய்ப்பாளர்கள்.

ஆரம்பத்தில் @SriNithyananda என்பது ராஜன் லீக்ஸ்-ன் ஃபேக் ஐடி-ன்னு கெளப்பி விட்டாங்க. அப்புறம் ராஜன் "நாலு நாள் தொடர்ந்து அவன் டைம் லைன் ஃபுல்லா நாறடிச்சு உட்ரணும்!" வீராவேசமாக வீச்சருவாளோடு கிளம்பிய பிறகு தான் "ம்யூஜிக்" ஸ்டார்ட் ஆனது.

இன்றைய நிலவரப்படி, நித்தியானந்தாவை பாலோ பண்ணும் ட்விட்டர்களின் எண்ணிக்கையை விட, அவர் கடுப்பில் ஃபிளாக் செய்தவர்களின் எண்ணிக்கையே அதிகம்.

ஆனால் நித்தியானந்தாவின் டைஹார்ட் "பேன்"கள் பலர், ச்ச்சுவாமீசீ யிடம் தங்கள் கேள்விகளை கேட்டு,  அருளாசி பெற்றுவருவதை பார்க்க முடிந்தது.

அந்த பாணியில் களமிறங்கி, சுமார்ஜியின் குண்டலினி யோகத்தை கலைத்து, கடுப்பாக்கி ஃபிளாக் செய்யப்பட்டவர்களில் @gpradeesh ,  @thoatta , @RajanLeaks @iLoosu ,@vandavaalam  முதல் வரிசை ஆட்டக்காரர்கள்.

டி- டோன்டி ரேஞ்சுக்கு அடித்து ஆடி ஃபிளாக் ஆனாவர்கள் ட்விட்டர் சூப்பர் ஸ்டார் தோட்டாவும்,  கலாய்யோ கலாய் ராஜனும்.

இன்னும் மேட்ச் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

அய்யோ அந்தாளு பாவங்க.., என சக ட்விட்டர்களே பரிதாபப்படும் அளவுக்கு, கலாய்ச்சி காய்ச்சி கய்வி ஊத்திட்டாங்க..

இது மாதிரியான தனிமனித தாக்குதல்களில், ட்விட்டரில் எழுதுபவர்கள் ஈடுபடலாமா என்று நீங்கள் கேட்கலாம். உங்கள் கேள்வி நியாயமும் கூட.

நித்தியானந்தா என்பவர் தனிமனிதராக பார்க்கப்படுவர் அல்ல. மக்களின் நம்பிக்கை சார்ந்த ஒரு விஷயத்தை காட்டி, மக்களை ஏமாறிய மோசடி நபராகவே பார்க்கப்படுகிறார். இறைவன் தண்டிப்பான் என்ற உணர்வு கூட இல்லாத அவரால் எப்படி மற்றவர்களை நெறிப்படுத்தும் பணியை செய்ய முடியும்?

எத்தனையோ ஆண்டுகள் தாண்டி வந்த இந்து மதம், இறைவனை விட இறைவன் அடியார்களுக்கு மிக உன்னதமாக மதிப்பு கொடுத்து வந்த மதம். நாயன்மார்களும், ஆழ்வார்களும் சமயத்தோடு தமிழையும் வளர்த்த பெரியவர்களையும் கொண்டிருந்த மதம்.

அதனையும், தன்னை நம்பி வந்த தனிப்பட்ட மக்களையும்,. "ஆராய்ச்சி செய்கிறேன்" என்ற சமாளிப்பிகேஷனோடு கோமாளிகள் ஆக்கிய ரஞ்சிக்கோட்டை வாலிபனை, மதத்தின் பெயரால் "தனியார் நிறுவனம்" நடத்தி வந்தவரை, கலாய்ப்பது தவறல்ல என்பது எம் துணிவு.

கூடங்குளம் போராட்டம் ஒரு 'அங்கிட்டு இங்கிட்டு' அதிரடி பார்வை



கூடங்குள அணு உலை திறந்தது சரிதான் என்கின்ற மனநிலைக்கு தமிழகத்தின் மற்ற பகுதி மக்கள் வந்துவிட்ட நிலையில்,  தற்போது இடிந்தகரையில் சுமார் ஐயாயிரம் மக்களுடன் அணு உலை திறப்புக்கு எதிரானவர்களின் உண்ணாவிரத போராட்டம் நடத்து வருகிறது.

"தமிழக முதலமைச்சரை மட்டுமே நம்பியிருக்கிறோம்" - சமீபத்தில் முதல்வரை பார்த்து விட்டு வந்த பின்னர் கூடங்குள போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் சொன்ன வார்த்தைகள் இது.

ஆனால் அரசியல்வாதிகளுக்கே உரிய ராஜதந்திரத்தோடு, அணு உலையை திறந்து விட்டார் ஜெயலலிதா. ஒருவேளை கலைஞர் முதல்வராக இருந்திருந்தாலும் கூட இதை தான் செய்திருப்பார். இருவரின் ராஜ(?!?)தந்திரங்களுக்கும் பெரிய வேறுபாடு இருப்பதாக கூட தெரியவில்லை.

அணுசக்தியின் ஆக்கம் நாட்டின் நலனுக்கு மிக முக்கியம் என்று 'சாதா' விஞ்ஞானிகளும், 'அரசியல்' விஞ்ஞானிகளும் சொல்லி விட்ட நிலையில், தற்போது கூடன்குளத்தில், 8வது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது.

இந்த போராட்டத்தை அரசும், ஒரு  சில பத்திரிக்கைகளும் கையாண்ட விதம் சரியா என்பதை ஆராய்வது தான் இந்த பதிவின் நோக்கம்.

"அணு உலை ஆபத்தில்லை என்று சொல்பவர்கள் தங்கள் ஊரில் அணு உலையை அமைத்துகொள்ள முன் வருவார்களா?" என்ற அந்த பகுதி அப்பாவி மக்களின் ஐயம் அர்த்தமுள்ள கேள்வியாகவே தெரிகிறது.

தங்கள் வாழ்வாதாரம் அழிந்து விடுமோ என்று அச்சம் கொள்கின்ற சாமானிய மக்களின் ஐயத்தை நீக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை அல்லவா?

ஆரம்பத்தில் போராட்டத்தை ஒடுக்க போராட்டத்திற்கு மதசாயம் பூச நினைத்தார்கள். இயலவில்லை.

அடுத்து போராட்டக்காரர்கள் வெளிநாட்டு சக்திகளின் கைக்கூலிகள் என்றார்கள்.

வெளிநாட்டு நிதியுதவியின் மூலமாக தான் இந்த மக்களின் போராட்டம் நடத்தப்பட்டு வருவதாக சொன்ன அதே மத்திய (உளறல் துறை) இணை அமைச்சர் நாராயணசாமி.., சில நாட்களுக்கு பிறகு, வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு நிதியுதவி வந்தது பற்றி இது வரை நிரூபிக்க இயலவில்லை என்று மாநிலங்கவையிலேயே பல்டி அடித்தார்.

இந்த பருப்பு எல்லாம் வேகாமல் போனதால், இப்போது "நக்சலைட் பின்ணணி" என்ற பீதியை கிளப்பி விட்டிருக்கிறார்கள்.

மேற்கு வங்களத்தின் நந்திகிராம் கிராமத்தில், டாடா நானோ தொழிற்சாலைக்கு எதிராக கிராம மக்கள் போராட்டம் நடத்திய போது, அந்த போராட்டம் நீண்ட நாள்களுக்கு இடைவெளியில்லாமல் நடந்ததற்கு நக்சலைட்கள் தான் காரணம்., அதே போன்று இடிந்தகரை மக்களுக்கு நக்சலைட்டுகள் பின் புலமாக இருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.

தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய போராட்டத்தை நடத்தும் அளவுக்கு நக்சலைட்டுகள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்  என்பதை தமிழக அரசு ஒப்புக்கொள்ளுமா?

அப்படியெனில் தமிழகத்தில் நக்சலைட்டுகளே இல்லை என்ற தமிழக காவல் துறையின் வாதம் பொய்யா?

இதில் தினமலரின் கடுமையான தாக்குதல் பிரச்சாரம் வேறு. உண்மையின் உரைக்கல் என தங்களை சொல்லிக்கொள்பவர்கள், போராட்டக்காரர்களை "உதயகுமார் கும்பல்" சொல்லுவதும், தினமும் போராட்டக்காரகளைப் பற்றி  ஜோசியம் சொல்வதும், அபாண்டபழிகளை சுமத்துவதும்  நியாயமான முறையாகத்தெரியவில்லை.

இந்திய எல்லையில் படைகளை குவிக்கும் பாணியில் இடிந்தகரையில் காவல்துறை குவிப்பு, ராதாபுரம் பகுதியில் ஊரடங்கு உத்தரவு, வஜ்ரா போன்ற பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுப்பு போன்ற அத்துணை விஷயங்களையும் தாண்டி போராடிக்கொண்டிருக்கும் அந்த பகுதி மக்களின் வாழ்வாதார, ஜீவாதார பயத்தை நீக்குவது மத்திய, மாநில அரசுகளின் கடமை.

அணு உலையை ஆதரிக்கும் மக்கள் கூட, அறவழியில் போராடும் மக்கள் மீது திணிக்கப்படும் கொடுமைகளை கட்டாயம் கண்டிக்க வேண்டும்.

சில நாட்கள் மின்தடையால் வெப்பத்தில் புழுங்கியதற்கே, "ஐய்யோ அணு உலை தேவை" என கூக்குரலிட தொடங்கிய நமக்கு, வாழ்க்கைப்போராட்டத்தை, உயிர் வாழும் உரிமைக்காக போராடும் கிராம மக்களின் போராட்டத்தை கிண்டலடிக்க என்ன தகுதி இருக்கிறது?

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்