உலுக்கி எடுத்த உண்மைகளும், இரக்கமில்லா இரவுகளும்...



எனக்கு மனிதர்களைப் பிடிக்கும் என்று லீலா டீச்சர் சொன்னாங்க.
அதன்  தொடர்ச்சியாய் யோசித்ததில்;
என் இரவுகள் உறக்கமில்லாது நீண்டன.சில முரண்பாடுகள் என்னை உலுக்கி எடுத்தன, ஆச்சர்யம்  என்னவென்றால்  சில உடன்பாடுகளும்  அதே வேலையைச் செய்தன.


உண்மைத்தான்.மனிதர்களும்,அவர்தம் மனங்களும் விசித்திரங்கள் நிறைந்தது.

காலம் கருதாது , காரியங்கள் செய்துவிட்டு, பின் காலமெல்லாம் அதை சொல்லிச்சொல்லி மாயும் மனிதர்களும் உண்டு.

எல்லாவற்றிலும் முரண்பாடு இருந்தாலும், வாழ்தல் நிமித்தம்; திருத்தங்கள் இல்லாது நாட்கள் நகர்த்தும் மனிதர்களும் உண்டு.
 
"நான் சொல்லுவது என்னவென்றால் " என்று அவர் சொன்னார். அதையேதான் இவரும் சொன்னார். இருப்பினும் குரல்கள் உயர்ந்தன. வார்த்தைகள் வலுத்தன.

அதிக வருடங்கள் வாழ்ந்தவர்கள் கூட, "ஈகோ" தாண்ட இயலாது. கிணத்துத் தவளையை தேசிய மிருகமாய் அறிவித்தார்கள்.
அருகருகே வாழும் மனிதர்களின்மனங்களிடையான இடைவெளியாய்  மிகப்பெரிய சுந்தரவனக்காடுகள்இருந்தன.அதனில் விதவிதமான விலங்குகளைச் சுதந்திரமாக உலவவிட்டார்கள்.வேளை தவறாது அதற்கு உணவிட்டார்கள், உணவிட்ட பொழுதுகளில் எல்லாம் யார் பகைவர்கள் என்பதையும் ஊட்டிவிட்டார்கள். பின்னொரு நல்ல நாளில் அண்டை மனிதரை  மரணிக்க வைத்தார்கள். பின் ஒன்றும் நடவாததுப் போல, இறுதி ஊர்வலத்தில் சோகமுகமூடி தரித்தனர். அடுத்தது யார் என திரிந்தார்கள்.
அடிக்கடி நல்லது செய்தார்கள்; அவற்றின் பளபளப்பில் விகாரங்களை வெளித்தெரியாது மறைத்தார்கள்.

எது ஆகாது என சூளுரைத்தார்களோ அதன் காலடியிலேயே  கிடந்தார்கள்.
வெற்றி தேடி மூச்சிரைக்க ஓடியவர்களின் போரட்டத்தினை ரசிக்க, ஓய்வுகளை ஏற்படுத்திக்கொண்டார்கள்.ஜெயித்தபின், அதனில் தங்கள் பங்கு அதிகமென்று உலகத்தார்க்கு  முரசரைந்து  அறிவித்தனர். 


நான் இல்லாது இந்த உலகம் இயங்காது என மூளைச்சலவை செய்தார்கள்.
மற்றவர்களை "போன்சாய்"  மரங்களாக்கினார்கள்.

உலகத்தை ரசித்தல் மிகப்பிடிக்கும் என்றார்கள். மற்றவர்களை விழி மூடி ரசிக்க பணித்தார்கள்.

காரணமில்லாது ஏதேனும் செய்துவிட்டு, பின் காரணங்களை அடுக்கி சிலிர்ப்பூட்டினர்.


விளையாட்டுப்போட்டிகளின் வீரர்கள் போன்று இறுதியில் கைக்குலுக்கினார்கள்.
உறவாடிக் கெடுத்தப்பின்..


பெரும்பாலானான நேரங்களில் நடித்ததால்,  எது வேடம்; எது நிஜம்  என கணிக்க இயலாது போனது சக நடிகர்களால் கூட...
எல்லாவற்றிற்கும் ஒரு "பின்புலம்" இருந்தது. ஆனால்  முன்பே  அது
தெரியாமல்  பார்த்துக்கொண்டார்கள்.

எது நிஜம், எது போலி என எல்லாவற்றையும் சந்தேகிக்க;எல்லாமே போலியாகவே  தெரிகிறது.

இப்படியாய் இன்னுமாய் மனிதர்களும், அவர்தம் மனங்களும் விசித்திரங்கள் நிறைந்ததாய் இருப்பதால் லீலா டீச்சருக்கு மனிதர்களை பிடித்திருக்கக்கூடும்.

அது சரி. எனக்கு என்ன பிடிக்கும் என நீங்கள் கேட்கவேயில்லையே...

எனக்கு என்னை பிடிக்கும்;

மேலே சொன்ன    அத்துணை விசித்திரங்களும், முரண்பாடுகளும்,உடன்பாடுகளும்   எனக்குள்ளும்  நிரம்பி வழிவதால்....
எனக்கு என்னை பிடிக்கும்....  



(இது ஒரு மீள்பதிவு)

36 கருத்துரைகள்:

குறையொன்றுமில்லை. said...

எஸ், எனக்கு என்னைப்பிடிக்கும்.

சி.பி.செந்தில்குமார் said...

அடடா வட போச்சே..?

சி.பி.செந்தில்குமார் said...

>>>>காலம் கருதாது , காரியங்கள் செய்துவிட்டு, பின் காலமெல்லாம் அதை சொல்லிச்சொல்லி மாயும் மனிதர்களும் உண்டு.

எல்லாவற்றிலும் முரண்பாடு இருந்தாலும், வாழ்தல் நிமித்தம்; திருத்தங்கள் இல்லாது நாட்கள் நகர்த்தும் மனிதர்களும் உண்டு.>>>>

ரொம்ப சரி...

R. Gopi said...

சி பி செந்திலுக்கு ரிப்பீட்டு

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

"காலம் கருதாது , காரியங்கள் செய்துவிட்டு, பின் காலமெல்லாம் அதை சொல்லிச்சொல்லி மாயும் மனிதர்களும் உண்டு."
எல்லாவற்றிலும் முரண்பாடு இருந்தாலும், வாழ்தல் நிமித்தம்; திருத்தங்கள் இல்லாது நாட்கள் நகர்த்தும் மனிதர்களும் உண்டு.

உண்மை...

மாணவன் said...

//மேலே சொன்ன அத்துணை விசித்திரங்களும், முரண்பாடுகளும்,உடன்பாடுகளும் எனக்குள்ளும் நிரம்பி வழிவதால்....
எனக்கு என்னை பிடிக்கும்.... //

மிக சரியாக சொன்னீர்கள்...

Chitra said...

நான் இல்லாது இந்த உலகம் இயங்காது என மூளைச்சலவை செய்தார்கள்.
மற்றவர்களை "போன்சாய்" மரங்களாக்கினார்கள்.


....பதிவு முழுவதும், சிந்திக்க வைக்கும் விஷயங்கள் நிறைய இருக்கின்றன. அந்த ஒரு வரி, இன்னும் அதிகமாகவே சிந்திக்க வைத்தது.

Sathish said...

//"காலம் கருதாது , காரியங்கள் செய்துவிட்டு, பின் காலமெல்லாம் அதை சொல்லிச்சொல்லி மாயும் மனிதர்களும் உண்டு."//

wow..

வைகை said...

எனக்குள் முரண்பாடுகளே இல்லை! ஆனால் இதற்க்கு நான் உடன்படமாட்டேன்!

வைகை said...

காலம் கருதாது , காரியங்கள் செய்துவிட்டு, பின் காலமெல்லாம் அதை சொல்லிச்சொல்லி மாயும் மனிதர்களும் உண்டு./////


நான் அவன் இல்லை!

S Maharajan said...

"காலம் கருதாது , காரியங்கள் செய்துவிட்டு, பின் காலமெல்லாம் அதை சொல்லிச்சொல்லி மாயும் மனிதர்களும் உண்டு."

உண்மை...

Yaathoramani.blogspot.com said...

கவித்துவம் வழியும் பதிவு
மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டியது
வாழ்த்துக்கள்

MANO நாஞ்சில் மனோ said...

ஆஹா அமர்க்களம்....

செங்கோவி said...

மேற்கோள் காட்டி கமெண்ட் போடுவதென்றால், மொத்தப் பதிவையும் போடணும் போலிருக்கே..அருமை..

சாந்தி மாரியப்பன் said...

கடைசி பத்தியை ரிப்பீட்டுகிறேன் :-))

மதுரை சரவணன் said...

ungkal itukai enakku remba piduththullathu. பகிர்வுக்கு நன்றி.வாழ்த்துக்கள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Present

middleclassmadhavi said...

கவிதையான பதிவு.

Practical exams overஆ?

Anonymous said...

சித்ரா, செந்தில் குமார் கருத்துக்களோடு உடன்படுகிறேன்.. கடைசி வரிகள் படு எதார்த்தம்...எனக்கும் என்னை ரொம்ப பிடிக்கும்..

ஆனந்தி.. said...

//அது சரி. எனக்கு என்ன பிடிக்கும் என நீங்கள் கேட்கவேயில்லையே...

எனக்கு என்னை பிடிக்கும்; ///

ofcourse..It is true..

அஞ்சா சிங்கம் said...

விளையாட்டுப்போட்டிகளின் வீரர்கள் போன்று இறுதியில் கைக்குலுக்கினார்கள்.
உறவாடிக் கெடுத்தப்பின்..

/////////////////////////

எனக்கு இந்த வரிகள் பிடித்திருக்கிறது .............

test said...

//மேலே சொன்ன அத்துணை விசித்திரங்களும், முரண்பாடுகளும்,உடன்பாடுகளும் எனக்குள்ளும் நிரம்பி வழிவதால்....
எனக்கு என்னை பிடிக்கும்...//
Super! :-)

செல்வா said...

என்னமோ சொல்லுறீங்க ,
ஆனா எனக்கு புரிஞ்ச மாதிரி தெரியல ..
ஆனா எனக்கும் என்னை ரொம்பப் பிடிக்கும்

Good citizen said...

முரண்பாடுகள் நிறைந்த்வன் மனிதன் என்பதை தெளிவாக சொல்லிவிட்டீர்கள்,
அருமை,வாழ்த்துகள்

மங்குனி அமைச்சர் said...

Present

போளூர் தயாநிதி said...

"காலம் கருதாது , காரியங்கள் செய்துவிட்டு, பின் காலமெல்லாம் அதை சொல்லிச்சொல்லி மாயும் மனிதர்களும் உண்டு."
மிக சரியாக சொன்னீர்கள்...

பொன் மாலை பொழுது said...

ஏன், இரவுகளில் தூக்கம் குறைவோ? நிறைய யோசிப்பீர்கள் போல. ஆனாலும் வரிகளில் ஒரு கவிதைத்தனம் இருப்பதை ரசித்தேன்.
ஆம், எனக்கும் என்னைபிடிக்கும்.

மதுரை சொக்கன் said...

//எனக்கு என்னை பிடிக்கும்;//
எனக்கு என்னைப் பிடிக்காது என்று சொல்லும் ஒரு மனிதனைக் காட்டுங்கள்!
அருமை பாரதி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வரிகள் முழுதும் யதார்த்ததின் அவலமான முகம் தெரிகிறது... எனக்கும் பிடிக்கும்....

அருள் சேனாபதி (பவானி நம்பி) said...

எங்கே பிடித்தீர்கள் இந்த வரிகளை?

ஒவ்வொரு வரியும் வெகு நிதர்சனம் , முகத்தில் அறைந்தது போன்று இருந்தது .

Jaleela Kamal said...

ஆமா எனக்கும் என்னை பிடிக்கும்

போளூர் தயாநிதி said...

நான் இல்லாது இந்த உலகம் இயங்காது என மூளைச்சலவை செய்தார்கள்.
மற்றவர்களை "போன்சாய்" மரங்களாக்கினார்கள்.


....பதிவு முழுவதும், சிந்திக்க வைக்கும் அந்த ஒரு வரி, இன்னும் அதிகமாகவே சிந்திக்க வைத்தது.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நானும் உள்ளே வந்துட்டேன்..

Jana said...

மிக அருமை..பல யதார்த்தங்களும் கூட.

ஆயிஷா said...

//Jaleela Kamal said...

ஆமா எனக்கும் என்னை பிடிக்கும்.//

ரிப்பீட்டு

இராஜராஜேஸ்வரி said...

.மனிதர்களும்,அவர்தம் மனங்களும் விசித்திரங்கள் நிறைந்தது.//
தினமும் தரிசித்தே வருகிறோம்!!

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்