உங்களிடம் இருக்கிறதா ஒரு சவாலை எதிர் கொள்ளும் துணிச்சல்.




கவிதைக்காரர்களுக்கு ஒரு சவால்..

இங்கே உள்ள கவிதையை நிறைவு செய்ய வேண்டும். 


விதிமுறைகள் ஏதுமில்லை. 


முற்றிலும் புதியதாக எழுதவிரும்பினால், கவிதையின் களம் மாறாமல் இருந்தல் நலம்.


தலைப்பு உங்கள் விருப்பம். உங்கள் வலைப்பூவில் வெளியிட்ட பின், எங்களுக்கு தகவல் சொன்னால் கூட போதும்.


நிறைவு பகுதியுடன் கூடிய எங்களின் கவிதை, வரும் திங்கள் அன்று வெளியிடப்படும். 


பார்க்கலாம்.. கலக்கப்போவது யாரு-னு?

ரு மிகப்பெரிய
யுத்தத்திற்கான
ஆயத்தங்கள்
உன்னிடம் தெரிந்தது.

மெல்லியதாய்
துவங்கிய
உன் வார்த்தைகள்
ஐப்பசி அடைமழையாய்
வலுக்கிறது.

நான் நிராயுதபாணியாய்
மௌனம் காக்கிறேன்.
தற்காப்பு வார்த்தைகள்
மட்டுமே
மனதில் கோர்க்கிறேன்.

என் மௌன நீட்டிப்பு
உன்னை
மேலும்
ஆவேசமடையச்செய்கிறது.

உன் கண்களும்
சுவாசமும்
நிலைக்கொள்ளாது
அலைகின்றன.

வார்த்தைகள்
மேலும் தடிக்கின்றன.
கேடயம் தாண்டி
சில
என் இதயம்
துளைக்கின்றன.

நீ
எல்லை தாண்டிய
போதும்
மேலும்
மௌனம் காக்கிறேன்.
எதையும் பொருட்படுத்தாத
பாவனையில்

ஏனெனில்...

41 கருத்துரைகள்:

ம.தி.சுதா said...

அருமையான வரி.. தொடர ஆர்வமாயிரக்கிறேன் காலம் கூடி வந்தால் கட்டாயம் தொடர்கிறேன்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தமிழுக்காக ஒரு தமிழனால் முடிந்த உதவி (இலகு தட்டச்சு உதவி)

சாந்தி மாரியப்பன் said...

கவிதை நல்லாத்தான் ஆரம்பமாகியிருக்கு.

தமிழ்வாசி பிரகாஷ் said...

யார்யா கவிதைய தொடற பாக்கியசாலி? நல்ல போட்டி தான்.

எல் கே said...

போட்டின்னு சொல்லிட்டீங்க. களம் இறங்காட்டி எப்படி ? சீக்கிரம் போடறேன்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நல்லாவே இருக்கு... முயற்சி செய்கின்றேன்

செங்கோவி said...

தொடர் கதை/அதிவு கேள்விப்பட்டிருக்கேன்..தொடர் கவிதையா...நல்லது நடக்கட்டும்.

ஆர்வா said...

ஏனெனில்
கோபம் தீர்ந்து
என்நிலை உணர்கையில்
அருகே வந்து சாரிடா என்று
சொல்லி உன் இதழால்
என் கண்ணீர்
துடைக்கும்
அந்த ஒற்றை நொடிக்காக..

-------------------------------
ஊடுதல் காமத்திற்கின்பம் அதற்கின்பம்,
கூடி முயங்கப் பெறின்"

---------------------------------

S Maharajan said...

தொடர் கவிதையா...நல்லது
பட் நான் வீக் கவிதைக்கு.
எழுத்தும் மற்ற நண்பர்களுக்கு இப்போதே என் வாழ்த்துக்கள்...

சக்தி கல்வி மையம் said...

நல்லா இருக்கு... முயற்சி செய்கின்றேன்

குறையொன்றுமில்லை. said...

தொடர் கவிதை எழுதும் கவிகளுக்கு வாழ்த்துக்கள்.

sathishsangkavi.blogspot.com said...

..நீ
எல்லை தாண்டிய
போதும்
மேலும்
மௌனம் காக்கிறேன்.
எதையும் பொருட்படுத்தாத
பாவனையில்..

கவிதைகலக்குது...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ஏனெனில்...

நான் உன்னை மட்டுமே
விரும்பி தொலைத்ததினால்...

(ஒரு காதலன் பார்வையில்)

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ஏனெனில்...

நான் என்ன செய்ய
வாங்கிய கடனை திருப்பித்தர
இயலாதவனாய்..

(கடன் பட்ட நெஞ்சனாய்..)

கவிதை வீதி... // சௌந்தர் // said...
This comment has been removed by the author.
கவிதை வீதி... // சௌந்தர் // said...

ஏனெனில்...

காந்தியத்தின் வம்சங்கள் நாங்கள்
கத்தியின்றி.. ரத்தமின்றி...
யுத்தம் செய்ய கற்றவர்கள்..

உன் வன்முறையும்..
உன் ஏச்சுக்குளும்..
உன் குற்றச்சாட்டகளும்..

என்றுமே எங்களை வீழ்த்தி விடாது..

(ஓரு ராணுவ வீரணின் மனதில்)

கவிதை வீதி... // சௌந்தர் // said...

//////(உதா. பன்னிகுட்டி, கோமாளி, அஞ்சா சிங்கம், ரொம்ப நல்லவன்.. பட்டாபட்டி.. டெரர்.. சேட்டைக்காரன்.. ஓட்டவடை)///////

என்ன இது தெரிந்து கொள்ள கவி‌தை வீதி வாங்க...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நண்பர்களுக்கு ஓர் வேண்டுகோள்..
இதன் முடிவை பின்னர் யோசித்து இன்னும் சிறப்பானதான தருவதற்கு முயற்கிக்கிறேன்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தங்களுடைய பக்கத்து தோட்டக்காரர் பட்டியலில்..என்னுடைய தளம் இணைப்பு கொடுத்ததற்கு நன்றி..

தயவு கூர்ந்து அதை
“ஒற்றையடி பாதை” - என்பதை மாற்றி “கவிதை வீதி” என்று திருத்துமாறு அன்புடன் வேண்டுகிறேன்..

Chitra said...

கவிதை எழுதுவது .... நம்ம ஏரியா இல்ல..... :-(

வைகை said...

கவிதை நல்லாயிருக்கு.. பார்ப்போம்..நம்ம கவியரசுகள்..கவிதாயினிகள் என்ன பண்றாங்கன்னு...:))

Anonymous said...

செளந்தர் கமெண்டிலியே போட்டிக்கு குதிச்சிட்டாரா

Anonymous said...

சுவாரஸ்யமான போட்டி

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

I CAN CONTINUE IT.BUT NOW I AM AT WORK.MAY I COME JUST AFTER 15 HOURS.....

Jana said...

நான் நிராயுதபாணியாய்
மௌனம் காக்கிறேன்.
தற்காப்பு வார்த்தைகள்
மட்டுமே
மனதில் கோர்க்கிறேன்.
Superb..

தொடர்ந்து மற்றவர்களும் சவாலுடன் எழுதுங்கள் வந்து பார்க்க நான் ரெடி..

பாலா said...

இந்த சப்ஜெக்ட்ல நான் கொஞ்சம் வீக்கு. அதனால ஓட்டு போட்டுட்டு அப்பீட்டு...

Unknown said...

எனது வலையில் எழுதி இருக்கிறேன்...
இங்கே படிக்கவும்....
http://venpuravi.blogspot.com/2011/02/blog-post.html

ரஹீம் கஸ்ஸாலி said...

வந்ததிற்கு அடையாளமாய் இப்போது ஓட்டு மட்டும் போட்டுக்கிறேன். கவிதையை தொடர முயற்சிக்கிறேன்.

சி.பி.செந்தில்குமார் said...

சவாலுக்கு ரெடி...

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்லாவே இருக்கு

சென்னை பித்தன் said...

மூன்று முடிவுகள் கீழே!

1)” என்னால் பேச முடியாதே!”

2)”உதடுதிர்க்கும் சுடு சொற்கள்
உன் உள்ளம் சொல்லவில்ல
என் கனமான மௌனம் ஒன்றே
கனியச் செய்யும் உன்னை
கரைந்து வரும் உன்னைக் கட்டிக்
காதில் நான் கிசு கிசுப்பேன்
”ஐ லவ் யு டார்லிங்”

3)”உன் அப்பன் தயவில்தானே
ஓடுது நம் குடும்பம் !”

MANO நாஞ்சில் மனோ said...

இந்த போட்டிக்கு கவிதை வீதி'தான் லாயக்குப்போ....
நான் எஸ்கேப்பு...

Unknown said...

நல்லா இருக்கு

கடைக்கு வராததிட்க்கு கண்டனங்கள் ஹி ஹி!!

vinu said...

ஒரு மிகப்பெரிய
யுத்தத்திற்கான
ஆயத்தங்கள்
உன்னிடம் தெரிந்தது.

மெல்லியதாய்
துவங்கிய
உன் வார்த்தைகள்
ஐப்பசி அடைமழையாய்
வலுக்கிறது.

நான் நிராயுதபாணியாய்
மௌனம் காக்கிறேன்.
தற்காப்பு வார்த்தைகள்
மட்டுமே
மனதில் கோர்க்கிறேன்.

என் மௌன நீட்டிப்பு
உன்னை
மேலும்
ஆவேசமடையச்செய்கிறது.

உன் கண்களும்
சுவாசமும்
நிலைக்கொள்ளாது
அலைகின்றன.

வார்த்தைகள்
மேலும் தடிக்கின்றன.
கேடயம் தாண்டி
சில
என் இதயம்
துளைக்கின்றன.

நீ
எல்லை தாண்டிய
போதும்
மேலும்
மௌனம் காக்கிறேன்.
எதையும் பொருட்படுத்தாத
பாவனையில்

ஏனெனில்...


ilavasap bus paasai
maranthu vanthathu
enathu thavaru....

Yaathoramani.blogspot.com said...

.ஏனெனில்
உன்னுடைய கோபத்திற்கான
காரணங்களில்
ஒரு நியாயம் இருப்பதால்...
ஏனெனில்
என்னுடைய மனட்சாட்சியே
என்னை
எட்டி உதைப்பதால் ....

Pranavam Ravikumar said...

Very Nice thoughts.. well written too. My wishes

சக்தி கல்வி மையம் said...

நம்ம பக்கம் வரலாமே..
http://sakthistudycentre.blogspot.com/

சிதா said...

எனது ஐந்து முடிவுகளை இப்பொது தருகிறேன்.மீண்டும் முயற்சிக்கிறேன்.

1.நீ
என் கருவறையின்
வெளி நடப்பு...

2.கடைசிகால
கஞ்சிக்கு
தவமிருக்கும்...
தாய்
நான்.

3.வீதியோரம்
வீசியெறியப்பட்ட...
மக்கி போன
மனைவி
நான்...

4.குடி போதையில்
நீ
இருக்கிறாய்...

5.பிறக்கும் போதே
பிறழ்ந்த பிறவியானவன்...
நீ

செல்வா said...

கவிதையா ? நானா ? ஹி ஹி ..
வேண்டாம்க .. நீங்க முடிவு திங்கள் கிழமை சொல்லுங்க .. நான் வந்து பார்த்திக்கிறேன் .. அதுவும் இல்லாம கடைசில பல்பு படம் போட்டிருக்கீங்க ..

VELU.G said...

ஏனெனில்
உன் கோபத்தின்..
ஆவேசத்தின்..
அலைமோதலில்..
கொப்பளிக்கும்
அலைகடலின்
அழத்தில்
இருக்கும் அமைதி
எனக்கான
அன்பை எப்போதும்
வெளிப்படுத்திக்
கொண்டேயிருக்கிறது
உன்னையறியாமல்.

Rabbani said...

அருமையான என்னை கவர்ந்த முயற்சி.... நல்ல பதிவு, பாராட்டுக்கள்.

Vijayan Durai said...

"காதல் என்பது
முத்தத்தில் மட்டுமல்ல
முறைப்பிலும் உள்ளதென
கோபத்தின் போர்வைக்குள்
தெரியாமல் மறைந்திருக்கும்
உன் காதல் சொல்லுதடி...
ஒரு மிகப்பெரிய
யுத்தத்திற்கான
ஆயத்தங்கள்
உன்னிடம் தெரிந்தது.
யுத்ததின் முடிவை
உன்
கண்ணுக்குள் பார்த்தபடி
அமைதியாய் காத்திருக்கிறேன்
உன் அணைப்பை நாடும்
என் மனதோடு"


என் கவிதை வலைப்பூவின் முகவரி:www.kavithaicorner.wordpress.com

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்