உன்னை நானறிவேன்..,




உங்களிடம் இருக்கிறதா ஒரு சவாலை எதிர் கொள்ளும் துணிச்சல் என்ற பதிவில் கவிதை ஒன்றின் முதல் பாதியை கொடுத்து, மீதி பாதியை நிறைவு செய்ய  நாங்கள் விடுத்த சவாலை ஏற்று,   கவிதைகள் வழங்கிய

கவிதை காதலன் 
# கவிதை வீதி # சௌந்தர் (மூன்று முடிவுகள் வழங்கியுள்ளார்)
வெண் புரவி (தனி பதிவாக எழுதியுள்ளார்)
சென்னை பித்தன் (மூன்று முடிவுகள் வழங்கியுள்ளார்)
vinu 
Ramani 
வெ.இரா.சிதா (ஐந்து வேறுபட்ட பார்வைகளில் கவிதை வழங்கியுள்ளார்)
VELU.G   

ஆகியோர்க்கு நன்றிகள்.

மேற்கண்ட பதிவர்களின் வரிகளை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

சிறப்பான முடிவுகளை வழங்கிய மேற்கண்ட பதிவர்களுக்கு "வலையுக கவியரசு" என்னும் விருது வழங்கி கௌரவிக்கிறோம்..


கவிதையை நிறைவு செய்வதில் எமது முயற்சி...(நீல நிறத்தில் உள்ளது.)

ஒரு மிகப்பெரிய
யுத்தத்திற்கான
ஆயத்தங்கள்
உன்னிடம் தெரிந்தது.


மெல்லியதாய்
துவங்கிய
உன் வார்த்தைகள்
ஐப்பசி அடைமழையாய்
வலுக்கிறது.


நான் நிராயுதபாணியாய்
மௌனம் காக்கிறேன்.
தற்காப்பு வார்த்தைகள்
மட்டுமே
மனதில் கோர்க்கிறேன்.


என் மௌன நீட்டிப்பு
உன்னை
மேலும்
ஆவேசமடையச்செய்கிறது.


உன் கண்களும்
சுவாசமும்
நிலைக்கொள்ளாது
அலைகின்றன.


வார்த்தைகள்
மேலும் தடிக்கின்றன.
கேடயம் தாண்டி
சில
என் இதயம்
துளைக்கின்றன.


நீ
எல்லை தாண்டிய
போதும்
மேலும்
மௌனம் காக்கிறேன்.
எதையும் பொருட்படுத்தாத
பாவனையில்


ஏனெனில்...

உன்னை நானறிவேன்..,


இன்னும் 
சிறிது நேரத்தில் 
காட்சிகள் 
மாறியிருக்கும்.


என் தோள் சாய்ந்து
ஓய்ந்திருப்பாய்..


மேகங்கள் 
கலைந்து விட்ட 
தெளிந்த வானமாய் 
நிசப்தம் வளர்ப்பாய்...


இருவர் மட்டுமான 
வாழ்க்கை பயணத்தில்


உன் அதிர்வும்
உன் அமைதியும்
"என்னை அன்றி 
வேறு எவரிடம்
செலுத்தக்கூடும்?"

ஈழ போரில் தன் இரண்டு மகன்களையும் இழந்து விட்டு,  இருவர் மட்டுமாய் வாழ்க்கை பயணத்தை தொடரும் ஒரு பெற்றோரின் மனநிலை இங்கே கவிதையின் நிறைவாகியிருக்கிறது.

28 கருத்துரைகள்:

மாணவன் said...

வணக்கம் :)

மாணவன் said...

//கவிதையை நிறைவு செய்வதில் எமது முயற்சி...(நீல நிறத்தில் உள்ளது.)//

இரண்டு ஜீவன்களின் உணர்வுகளை வரிகளில் சிறப்பாகவே நிறைவு செஞ்சீருக்கீங்க வாழ்த்துக்களும் பூங்கொத்தும் ரோஜா பூந்தோட்டத்திற்கு..

மாணவன் said...

கவிதை நிறைவு செய்த மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.. :)

சி.பி.செந்தில்குமார் said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.போட்டி அறிவிக்கும்போதே நான் சவுந்தர் ஜெயிப்பார்னு நினைச்சேன்

வைகை said...

இதுபோலதான் எதிர்பார்த்தேன்... நல்ல நிறைவு.. வாழ்த்துக்கள்!

செங்கோவி said...

அருமையான முடிவு..அனைவருக்கும் பாராட்டுகள்!

Chitra said...

ஈழ போரில் தன் இரண்டு மகன்களையும் இழந்து விட்டு, இருவர் மட்டுமாய் வாழ்க்கை பயணத்தை தொடரும் ஒரு பெற்றோரின் மனநிலை இங்கே கவிதையின் நிறைவாகியிருக்கிறது.


......அந்த பெற்றோரின் உணர்வுகளை நன்கு வெளிப்படுத்தும் கவிதைதான்.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

முடிவு அருமை..
வாழ்த்துக்கள்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

மனிதனின் உணர்வுகளை சொல்ல..
மனிதத்தின் உண்மைகளை சொல்ல..
வலியில்லாமல் யுத்தம் செய்ய..
சப்தமில்லாமல் புரட்சி செய்ய..
இயதங்களை ரணமாக்க விட...
அந்த ரணத்தை ஆற்றி விட..

கருத்து சொல்.. காவியம் சொல்ல..
உலகம் அத்தனையையும் வியக்க வைக்க..
விவரித்து வைக்க..

இந்த கவிதையை விட்டால் வேறேது..

கவிதையை விதைப்போம்..
பிறகு ஆயுதத்திற்கும்..
அணுவுக்கும் கூட வேலையில்லை..

இணைந்திருப்போம்.. கவிதையால்..

sathishsangkavi.blogspot.com said...

அருமையான முடிவு..

குறையொன்றுமில்லை. said...

நல்ல நிறைவு வாழ்த்துக்கள்.

Anonymous said...

அருமையான முடிவு..அனைவருக்கும் பாராட்டுகள்

Harini Resh said...

அருமையான முடிவு
நான் முதல் பதிவை பார்க்க தவறிவிட்டேன் :(
வாழ்த்துக்கள்

சென்னை பித்தன் said...

உங்கள் முடிவு ,நிறைவான முடிவு!
நன்றியும்(விருதுக்கு!) வாழ்த்துகளும்(உங்கள் முடிவுக்கு.)

S Maharajan said...

அருமையான முடிவு..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

/////
சிறப்பான முடிவுகளை வழங்கிய மேற்கண்ட பதிவர்களுக்கு "வலையுக கவியரசு" என்னும் விருது வழங்கி கௌரவிக்கிறோம்..////////

தாங்கள் தந்த கௌரவத்திற்கு நன்றி..

செல்வா said...

இருவரின் மனநிலையைப் படம் பிடித்துக் காட்டிருகீங்க ..

MANO நாஞ்சில் மனோ said...

அருமையான முடிவு அனைவருக்கும் என் பாராட்டுக்கள்...

ஆச்சி ஸ்ரீதர் said...

நல்ல களம்,கவிதையின் கருத்துக்களும் அருமை,வாழ்த்துக்கள் .

ஹேமா said...

மிக மிக அருமை.வாழ்த்துகள்.

இந்தப் போட்டி எனக்குத் தெரிந்திருக்கவில்லையே !

Jana said...

வாழ்த்துக்கள்!

அன்புடன் நான் said...

உணர்வுக்கும் ... இந்த முயற்சிக்கும் என் நன்றியும் வாழ்த்தும்.

VELU.G said...

என்னுடைய வரிகளையும் தேர்ந்தெடுத்தற்கு மிக்க நன்றி

தங்கள் விருதினையும் ஏற்றுக்கொள்கிறேன்

மீண்டும் எனது நன்றிகள்

Yaathoramani.blogspot.com said...

என்னையும் தேர்தெடுத்தமைக்கு மிக்க நன்றி
ஆயினும் தாங்கள் கொடுத்த முடிவுதான்
மிகப் பொருத்தமாய் இருக்கிறது.வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

என்னையும் தேர்தெடுத்தமைக்கு மிக்க நன்றி
ஆயினும் தாங்கள் கொடுத்த முடிவுதான்
மிகப் பொருத்தமாய் இருக்கிறது.வாழ்த்துக்கள்

நிரூபன் said...

வணக்கம் சகோதரம், இன்று தான் இந்த வலையினைத் தரிசித்தேன். நல்லதொரு முயற்சி. அதுவும் பதிவர்களின் கற்பனைக் குதிரைகளைத் தட்டி விட்டுக் கவி படைக்க வைக்கும் நல்ல செயல். வாழ்த்துக்கள் கவிஞர்களுக்கு, கவிதையினைப் புனைந்த வடிவமும் சிறப்பு, ஒரு கவியில் இரு பொருள் தரும் வகையில் கவிதையினை நகர்த்திச் சென்று இறுதியில் அக் கவியின் முடிவினை ஈழப் பக்கம் நகர்த்தியுள்ளீர்கள். உண்மையில் இக் கவிதையின் தார்ப்பரியத்தை உண்ர்ந்து கவி படைத்த, கவிதையினை நிறைவு செய்த உள்ளங்கள் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர்களே. அவர்களுக்கு மீண்டும் வாழ்த்துக்கள்.

ம.தி.சுதா said...

அருமையாக வடித்திருக்கிறார்கள்... அவர்களுக்கும்.. தங்களுக்கும் வாழ்த்துக்கள்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
காணாமல் போன 2 பதிவர்கள், மறைமுக பணம் பறிக்கும் தொலைத் தொடர்பு சேவையும்.

yuvarekha said...

adutha kavithaiku kathirukiren. savaaluku thayaar.

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்