ஸ்பெக்ட்ரம்(SPECTRUM) ; அட இது வேறங்க...



பூ மாலை என்பது பூக்களின் தொகுப்பு எனில் நிறமாலை என்பது என்னவாக இருக்கமுடியும்?
ஆம். நிறமாலை என்பது நிறங்களின் தொகுப்பு.
ஸ்பெக்ட்ரம்(SPECTRUM) என்பது நிறமாலை என்பதன் ஆங்கிலபதம்.

வெள்ளை நிறம் என்பது பல்வேறு நிறங்களின் தொகுப்பு, அதாவது ஊதா முதல் சிவப்பு வரையுள்ள வண்ணங்களின் தொகுப்பு. ஒவ்வொரு வண்ணத்திற்கு அலைநீளம் என்பது உண்டு. அலைநீளம் அடிப்படையில் சொல்லுவதென்றால் வெள்ளை என்பது பல்வேறு அலைநீளங்களின் தொகுப்பு.

வெள்ளை நிற ஒளியை ஒரு முப்பட்டகம் வழியாக அனுப்பும் போது, அது  VIBGYOR என்று சொல்லக்கூடிய ஊதா(VIOLET),கருநீலம்(INDIGO), நீலம்(BLUE), பச்சை(GREEN), மஞ்சள்(YELLOW), ஆரஞ்சு(ORANGE) மற்றும் சிவப்பு(RED) வண்ணங்களாக பிரிகையடைகிறது. இந்த நிகழ்ச்சிக்கு நிறப்பிரிகை என்று பெயர்.

இந்த வண்ணங்களில் ஊதா குறைந்த அலைநீளமுடையது, சிவப்பு அதிக அலைநீளமுடையது.

சூரிய ஒளியும் கூட வெள்ளை நிற ஒளியே. மழைத்துளியின் வழியே சூரிய ஒளி செல்லும் போது நிறப்பிரிகை ஏற்படுவதன் காரணமாக தான் வானவில் உண்டாகிறது. இவ்வாறு  சூரிய ஒளி சிதறலடிக்கப்படும் நிகழ்ச்சியை ஒளிச்சிதறல் என்றும் அழைக்கிறார்கள்.

ஊதா நிறம் குறைந்த அலைநீளமுடையதாக இருப்பதால், அதிக அளவில் சிதறலடிக்கப்படுவதால் வானம் நீலநிறமாக காணப்படுகிறது.

சர்.சி.வி. ராமன் இத்தகைய ஒளிச்சிதறலை பற்றி ஆய்வு செய்துதான் நோபல் பரிசு பெற்ற கண்டுபிடிப்பான ராமன் விளைவினை உருவாக்கினார்.

வானம் நீலநிறமாக காணப்படுவதன் காரணமும் இதுதான்.

உதிரிப்பூக்கள்:

ஸ்பெக்ட்ரம் என்பதை அதிர்வெண் அடிப்படையில் அதிர்வெண்களின் தொகுப்பு என்றும் கூறலாம்.

ஊதாவிற்கு அலைநீளம் குறைவு ஆனால் அதிர்வெண் அதிகம்.
சிவப்பு வண்ணத்திற்கு அலைநீளம் அதிகம்,ஆனால் அதிர்வெண் குறைவு. (குழப்பமா இருக்கா, சுத்துதே சுத்துதே பூமி-னு பாடத்தோணுதா?)

வானவில் உண்டாகும் நிகழ்வில் முழு அக எதிரொளிப்பு நிகழ்ச்சியும்
நடைப்பெறுகிறது.

மின்காந்த அலையிலிருந்து பெறப்படும் நிறமாலைக்கு மின்காந்த நிறமாலை என்று பெயர்.

கட்புலனாகும் நிறமாலை என்பது, மின்காந்த நிறமாலையில் உள்ள மனிதக் கண்ணால் பார்க்கக்கூடிய நிறமாலைப் பகுதியாகும்.இந்த அலைநீள எல்லையுள் அடங்கும் மின்காந்தக் கதிர்வீச்சு "கட்புலனாகும் ஒளி" அல்லது வெறுமனே "ஒளி" எனப்படுகின்றது.

கேள்வி நேரம்:

வானம் காலை மற்றும் மாலை வேளைகளில் சிவப்பாக காணப்படுவதன் காரணத்தை யூகிக்க முடிகிறதா?

தபால் பெட்டி சிவப்பு வண்ணத்தில் இருப்பதற்கான காரணம் என்ன?

வாகனங்களின் பின்புறத்தில் சிவப்பு விளக்கு பயன்படுத்தப்படுவதன் காரணம் என்வென்று சொல்லமுடியுமா?

நிறமாலைமானி என்பது என்ன கருவி என சொல்ல முடியுமா?(எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனைக்கால்கள்?)

35 கருத்துரைகள்:

Unknown said...

முத அருவா

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அறிய தகவல்..
வாழ்த்துக்கள் மற்றும் வாக்குகள்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இரவில் யார் வீட்டு சுவரவாது ஏறி குதித்ததுண்டா..

விவரம் அறிய கவிதை வீதி வாங்க..

செங்கோவி said...

//சிவப்பு வண்ணத்திற்கு அலைநீளம் அதிகம்// இதுதான் காரணமா..தபால் பெட்டி தெரியலையே..

Unknown said...

//சிவப்பு வண்ணத்திற்கு அலைநீளம் அதிகம்//

சரியான பதில் தான். சிவப்பு அதிக அலைநீளமுடையது என்பதால் குறைவாக சிதறடிக்கப்படும். இதன் காரணமாக நீண்ட தொலைவுக்கு சிவப்பு வெளிச்சம் பயணம் செய்யும்..

Speed Master said...

கவிதை அருமை

இது கவிதை தானே

NaSo said...

:))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நடக்கட்டும் நடக்கட்டும், அந்த உபகரணம், +2 இயற்பியல்/பிசிக்ஸ் பிராக்டிகலில் வரும்..... ஒரு க்ளுதான்.....ஹஹஹா

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃஊதா நிறம் குறைந்த அலைநீளமுடையதாக இருப்பதால், அதிக அளவில் சிதறலடிக்கப்படுவதால் வானம் நீலநிறமாக காணப்படுகிறது.ஃஃஃஃ

நல்ல விளக்க இடமோன்று சகோதரா இந்த இடத்தில் பலருக்கு குழப்பமிருக்கு... நன்றாக விளக்கியுள்ளீர்கள்..


அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம் (கண்டுபிடிப்பு)

செல்வா said...

ஸ்பெக்ட்ரம் பத்தி சொல்லிட்டீங்க .. நானும் படிச்சிருக்கேன் .. அந்த ப்ரிசம் எங்க பள்ளிக்கூடத்துல வச்சு விளையாடுவோம் .. ஹி ஹி

செல்வா said...

//வானம் காலை மற்றும் மாலை வேளைகளில் சிவப்பாக காணப்படுவதன் காரணத்தை யூகிக்க முடிகிறதா?//

அது கோபமா இருக்கு ..

//தபால் பெட்டி சிவப்பு வண்ணத்தில் இருப்பதற்கான காரணம் என்ன?//

அதுமேல யாரோ தக்காளி சட்டினிய ஊத்திட்டாங்க..

//வாகனங்களின் பின்புறத்தில் சிவப்பு விளக்கு பயன்படுத்தப்படுவதன் காரணம் என்வென்று சொல்லமுடியுமா?/

எல்லாம் ஒரு பந்தாவுக்குதான்..

//நிறமாலைமானி என்பது என்ன கருவி என சொல்ல முடியுமா?(எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனைக்கால்கள்?)//

எட்டுக்கால் பூச்சி என்பது என்னவென்று சொல்ல முடியுமா ?

ம.தி.சுதா said...

என்னங்க இன்ட்லி ஏமாத்துது..

Unknown said...

//ஊதா நிறம் குறைந்த அலைநீளமுடையதாக இருப்பதால், அதிக அளவில் சிதறலடிக்கப்படுவதால் வானம் நீலநிறமாக காணப்படுகிறது.//

ஊதாவிற்கு அலைநீளம் குறைவு(பலம் குறைவு) , அதனால் அதிக அளவில் சிதறடிக்கப்படுகிறது. ஊதா மற்றும் நீலம் கலந்து வானம் நீல நிறமாக காணப்படுகிறது.

Unknown said...

//அந்த ப்ரிசம் எங்க பள்ளிக்கூடத்துல வச்சு விளையாடுவோம் ..//

வெளையாடுவீங்களா? அப்ப நீங்க எங்க இனம்...

சிதா said...

ஒளிச்சிதறல் தான் 'டிண்டால் விளைவு'என்று சேர்த்து விடுங்கள்.இல்லையென்றால், கிறுக்கி என்னிடம் சந்தேகம் கேட்பாள்.

சக்தி கல்வி மையம் said...

ஒரு கணிணி ஆசிரியரை இயற்பியல் ஆய்வுகூடத்திற்கு அழைத்துப் போய் வகுப்பு எடுக்கமாதிரியே உணர்வு விட்டது எனக்கு.. நன்றி தெரிந்த தகவல்களை நியைவூட்டியதற்கு...

நம்ம டியூசனுக்கு தொடர்ந்து வாங்க..அப்பதான் நிறைய மார்க் வாங்கமுடியும்..

http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_24.html

தமிழ்வாசி பிரகாஷ் said...

இன்னைக்கு இயற்பியல் பாடம் நடத்தியிருகிங்க... நாளைக்கு கணக்கு பண்ற பாடமா?

இதையும் படிங்க: கடி..கடி...கடி.. இது செம காமெடி...

சக்தி கல்வி மையம் said...

தமிழ்10 தவிர எந்த ஓட்டு பட்டையும் வேலைசெய்யவில்லை..

Unknown said...

//ஒளிச்சிதறல் தான் 'டிண்டால் விளைவு'என்று சேர்த்து விடுங்கள்.இல்லையென்றால், கிறுக்கி என்னிடம் சந்தேகம் கேட்பாள்.//



டின்டால் விளைவு என்பது கூழ்மங்களில் நடைபெறும் ஒளிச்சிதறல் நிகழ்ச்சி.(கூழ்மத்துகளால் ஒளியானது சிதறடிக்கப்படுதல்)
கிறுக்கி எந்த சந்தேகம் கேட்டாலும் மறுக்காம பதில் சொல்லுங்க...
வினாக்களால் அறிவு வளருமாமே..

Unknown said...

/தமிழ்10 தவிர எந்த ஓட்டு பட்டையும் வேலைசெய்யவில்லை.//


எங்களுக்கு கஷ்ட காலமோ?

மங்குனி அமைச்சர் said...

hi,hi,hi............padam nadaththitaanga ......exam yethuvum vappaangalo ????......avvvvvvvv

மாணவன் said...

அறிவியல் பாடப்பகிர்வுக்கு நன்றிங்க :)

MANO நாஞ்சில் மனோ said...

தகவல் சூப்பரா இருக்கே...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

USEFUL INFORMATIONS

பாலா said...

அடப்பாவிங்களா ஸ்கூல்ல பிசிக்ஸ் வாத்தியார் தொல்ல தாங்க முடியாம ஓடி வந்தா இங்கேயும் அதே நிறமாலை. உங்களுக்கு மனசாட்சியே இல்லையா?

Unknown said...

வர வர எங்களுக்கும் பாடம் நடத்த ஆரம்பிச்சிட்டீங்க

தினேஷ்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
நடக்கட்டும் நடக்கட்டும், அந்த உபகரணம், +2 இயற்பியல்/பிசிக்ஸ் பிராக்டிகலில் வரும்..... ஒரு க்ளுதான்.....ஹஹஹா


கவுண்டரே நான் இன்னும் +2 படிக்கல இப்ப போய் படிக்கச்சொல்றீரே சரிவருமா அது .... யாரும் சேர்த்துக்க மாட்றாங்கையா ஸ்கூல்ல ....

அஞ்சா சிங்கம் said...

வானம் காலை மற்றும் மாலை வேளைகளில் சிவப்பாக காணப்படுவதன் காரணத்தை யூகிக்க முடிகிறதா?...........////////////////////

வளிமண்டலத்தில் அது கடந்துவரும் கோணம்தான் காலை மற்றும் மாலை வேளைகளில் சூரியன் பக்கவாட்டில் இருக்கும் வளிமண்டலத்தில் ஒளி பயணிக்கும் பொது காலை மற்றும் மாலை வேளைகளில் சூரியஒளி சிதறடிக்க படுகிறது .......

அஞ்சா சிங்கம் said...

மற்ற கேள்விகளுக்கெல்லாம் பதி ஒன்றுதான் சிகப்பு வண்ணம் அலைநீளம் அதிகம் அதனால் தான் எளிதாக சிதறடிக்கப்படும் அதனால் தான் .

மஞ்சள் நிறம் தான் மிக அதிகமாக சிதறடிக்க முடியாது நீலம் அதிர்வெண் அதிகம் டப்ளர் விதி இதற்கும் பொருந்தும்

Chitra said...

Very informative. நல்ல பதிவு. பகிர்வுக்கு நன்றி.

வைகை said...

நீங்கள் நல்ல மாணவர்கள் என்பதை நிரூபிச்சுகிட்டே வர்றீங்க... நாங்க வெறும் வாசகன் மட்டுமே என்பதி நிரூபிச்சுகிட்டே வர்றோம்!

சசிகுமார் said...

spectrum ன்னா இது தான் அர்த்தமா

போளூர் தயாநிதி said...

அறிவியல் பாடப்பகிர்வுக்கு நன்றிங்க

குறையொன்றுமில்லை. said...

மிகவும் நல்லபதிவு. வாழ்த்துக்கள்.

Jana said...

சிறப்பான தகவல்கள்.

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்