காஞ்சியில் தீக்குளித்த செங்கொடி - கூடுதல் தகவல்களுடன் ஒரு அலசல்.
"நிரபரதித் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கச் செய்வோம்" என்ற போராட்ட வாசகத்தை ஏந்தி நிற்கும் இளம்பெண் தான் செங்கொடி.

பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து, காஞ்சிபுரம் வட்டாச்சியர் அலுவலகம் முன் இன்று மாலை, தீக்குளித்த செங்கொடி, தனது தீக்குளிப்பதற்கு முன்னதாக கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார்.

"தோழர் முத்துக்குமாரின் உடல் தமிழகத்தை எழுப்பியது போல், என்னுடைய உடல் இந்த 3 தமிழர்களின் உயிரை காப்பாற்ற பயன்படும் என்ற நம்பிக்கையுடன் செல்கிறேன்- இப்படிக்கு தோழர் செங்கொடி" என்று அந்த கடிதத்தில் அவர் எழுதியுள்ளார்.

முத்துக்குமாரைப் போலவே, தாய் இல்லாமல் வளர்ந்த செங்கொடி வறுமையான சூழ்நிலையிலும், கொள்கை உணர்வோடு வாழ்ந்து வந்தவர். இருபத்தி எழு வயது நிறைந்த இந்த பெண்ணை கல்லூரி படிப்பை படிக்க வைத்தது காஞ்சிபுரத்தில் உள்ள மக்கள் மன்றம் என்ற அமைப்பு தான்.

மக்கள் மன்றம் இப்போது ராஜீவ் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்டு, வரும் ஒன்பதாம் தேதி தூக்குத்தண்டனையை எதிர் நோக்கி காத்திருக்கும் பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகியோரை, மரணத்திலிருந்து மீட்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட செங்கொடியின் மரணம் இப்போது,  பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகியோரது மரண தண்டனையை தகர்க்க போராடும் தமிழ் உணர்வாளர்களை மட்டுமில்லாது, அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மூன்று தமிழர்களின் உயிரை காப்பாற்ற நடந்து வரும் போராட்டத்தில், இப்போது ஒரு இளம்பெண் உயிர் பலியாகி இருப்பது வருத்ததை ஏற்படுத்தும் விஷயமாகி விட்டது.

இலங்கை தமிழர்களின் பிரச்சனையின் போது, முத்துக்குமார் தீக்குளித்தபோதே, இது தவிர்த்திருக்கபட வேண்டும் என்று கருதப்பட்ட நிலையில், இப்போது செங்கொடியின் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.

தமிழர்களுக்காக களத்தில் நின்று போராடுவதற்கு தான் இப்போது இளைஞர்கள் தேவைப்படுகிறார்களே அன்றி உயிரை மாய்த்துக்கொள்ள அல்ல என்பதை தான் தமிழ் இயக்கங்களை சார்ந்தவர்கள் கருத்து.

செங்கொடியின் போராட்டம், மரண தண்டனைக்கு எதிரான போராட்டத்தின், அனைத்து தரப்பு மக்களின் கவனத்தை ஈர்த்து, போராட்டத்தை தீவிரமாக்கும் என்றாலும் கூட,
ஒரு மரணத்துக்கு, மற்றொரு மரணம் தீர்வாகி விடாது என்னும் சூழ்நிலையில், இது போன்ற தற்கொலைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்பது தான் எம் கருத்து.

தீக்குளித்த செங்கொடியின் ஆத்மா, மூவரின் உயிர் மீட்பால் சாந்தியடையட்டும்.

27 கருத்துரைகள்:

செங்கோவி said...

//தமிழர்களுக்காக களத்தில் நின்று போராடுவதற்கு தான் இப்போது இளைஞர்கள் தேவைப்படுகிறார்களே அன்றி உயிரை மாய்த்துக்கொள்ள அல்ல. //

இதையே நான் சொல்ல நினைத்தேன்..இது மிகவும் தவறான செயல்..வருந்துகிறேன்.

Anonymous said...

கொளத்தூர் மணி அவர்களின் அறிக்கை:
(நன்றி:கீற்று)
ஈழத்தமிழர் உரிமைப் பார்வையில் போர்க்குற்றவாளிகளைத் தண்டிக்க தமிழக மக்களும் தமிழக அரசும் வலியுறுத்தி வந்த நிலையில், தமிழர் உணர்வுகளை உதாசீனப்படுத்தியதல்லாமல் மனிதமே அதிர்கிற வகையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் கழித்துவரும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு மரணதண்டனையை நிறைவேற்ற மைய அரசு ஆணை பிறப்பித்துள்ளது. தமிழர்களுக்கும் மனித உரிமை ஆர்வலர்களுக்கும் இது பேரதிர்ச்சியாகவே இருந்தது.

அதற்கென மக்கள்திரள் போராட்டங்களும் சட்டப்போராட்டமும் நடந்துவருகிற இவ்வேளையில் இக்கோரிக்கையை வலியுறுத்தி காஞ்சி மக்கள் மன்றத் தோழர் செங்கொடி அவர்கள் தீக்குளித்ததாக வந்துள்ள செய்தி அனைவரையும் மேலும் அதிரவைத்துள்ளது.

கோரிக்கையின் நியாயத்தை வலியுறுத்த ஆயிரம் வழிமுறைகள் இருக்க, போராடும் சக்திகள் தங்களையே அழித்துக்கொள்ளும் இம்முறையை அருள்கூர்ந்து யாரும் தொடர வேண்டாம் என வலிறுத்தி வேண்டிக்கொள்கிறோம்.

அவர்களது உணர்வுகள் நமக்குப் புரிகிறது. ஆனால் அதிகார வெறிகொண்ட மத்திய பாசிச ஆட்சியாளர்களுக்கு இது சிறு அசைவையாவது ஏற்படுத்துமா என்பது அய்யமே.

நாம் தொடர்ந்து நமது தமிழ்நாட்டு ஆட்சியாளர்களை வலிறுத்திப் போராடுவோம்.

Anonymous said...

@poadiyan said மூவரை மீட்டாலும் மகிழ்ச்சி கொள்ள முடியாத அளவுக்கு தாளத துயரத்தில் தள்ளிவிட்டாயே தங்கையே!! #salutetosengodi #stopdeathpenalty

அந்நியன் 2 said...

தமிழகத்தில் முதன் முதலாக ஒரு பெண் தீக்குளித்து மரணம் எய்தது கல்லாய் போன மனமும் உருகிறது ஆனால் கல்லால் செதுக்கபட்ட சிலைகளைப் போல் தலைவர்கள் சும்மா இருப்பது வேதனை அளிக்கின்றது இன்று செங்கொடி நாளை பூங்கொடி மூன்று உயிர்களை காப்பாற்ற இன்னும் எத்தனை உயிர்கள் வேண்டும் உங்கள்களுக்கு?

20 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலத்தை சிறையில் கழித்த இந்த மூவரையும் தூக்கிலிடக் கூடாது என்று மனித உரிமை அமைப்புக்களும்,சில அரசியல் தலைவர்களும் தமிழக பொது மக்கள்களும் கோரிக்கை விடுத்தும் செவி சாய்க்காத சொரனை அற்ற அரசு நாளை நமக்கு என்ன செய்திடப் போகின்றது ?

மனிதாபிமானம் செத்துப் போன இந்தியாவில் ஏன் பிறந்தோம் என்று சிந்திக்க வைத்து விடக்கூடாது என்ற நல்லென்ன நோக்கத்தோடு குரல் கொடுத்த ஒரு சில தலைவர்களையும் கண்டு கொள்ளவில்லை தமிழ் பேசும் சட்டமன்ற உருப்பினர்கள்.

தண்டனை நிறுத்தப் படவேண்டும் அநீதிக்கு குரல் எழுப்பபட வேண்டும் இவர்களின் உயிரை பறிப்பதினால் ராஜிவ் காந்தி திரும்ப வந்துவிட போவது இல்லை செய்த குற்றத்திற்கு இருபது வருடம் சிறை தண்டனையே அதிகம்தான் இனி திருந்தி வாழ்வதற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்க படவேண்டும்.

பிடித்த அன்றே தூக்கிலிட்டிருந்தால் அன்று உள்ள சூல்நிலையில் யாருமே மறுப்பு தெரிவித்து இருக்கமாட்டார்கள் வேனுமென்றே இருபது வருடம் வழக்கை இழுத்து தண்டனையையும் கொடுத்து இப்போ தூக்கு என்று சொன்னால் மக்கள் என்ன முட்டாள்களா?

நமது நாட்டில் ஏழைக்கு ஒரு சட்டம் பணக்காரனுக்கு ஒரு சட்டம் என்று பிரித்து பார்க்கின்றார்கள் இது நிறுத்தப் படவேண்டும் அக்கிரமத்தை எதிர்த்து எல்லா தமிழர்களும் போர்கொடி தூக்கனும் அந்த செங்கொடி ஆன்மாவிற்க்காக.

நம்மால் இயன்றவரை எல்லோருக்கும் மெயிலினை அனுப்புவோம்.

மக்கள் சக்தியை ஒன்று திரட்டுவோம் அநீதிக்கு எதிராக.

புகல் said...

தமிழ்நாடு இந்தியா என்னும் கூட்டாட்சியில் இருக்கும்வரை,
தமிழனுக்கு உரிய பாதுகாப்பும், உரிமைகளும் கிடைக்கபோவதில்லை.
இந்தியா என்னும் துரோகியை தமிழன் என்று இனம் காண்கிறானோ அன்றுதான் அவனுக்கு விடிவுகாலம்.
நாம் பல வகையில் இந்திய தேசியத்தால் ஏமாற்ற பட்டாலும்
மறந்து மீண்டும் அடுத்த எமாற்றத்துக்கு ஆயத்தமாகிறோம்.
இந்தியா என்னும் அடிமை மோகத்தில் இருந்து விடுபடு தமிழா
இந்தியா தமிழனின் துரோகி

இவன்,
புகல் - pugal.na@gmail.com

Unknown said...

முத்துக்குமாரை ஹீரோவாக்கியவர்கள் தான் செங்கொடியின் முடிவுக்கும் காரணம்! இதுவும் ஒரு வன்முறையே! உணர்ச்சிகளைத் தூன்டி, தற்கொலைகள் நிகழ்வது, போராட்டத்திற்கு இழுக்கு!

தற்கொலை தற்குறித்தனமானது! இத்தகையத் தற்கொலைகளை ஆதரிப்போர் முதலில் தண்டிக்கப் பட வேண்டும்!

முத்துக்குமாரும், சென்கொடியும் முட்டாள்கலே, ஹீரோக்கள் அல்ல!

தூண்டிவிடப்பட்ட உணர்ச்சிகளின் அடிப்படையில் இனி ஒரு தற்கொலை சம்பவம் நடக்கக் கூடாது!

மாய உலகம் said...

மிகவும் வருந்த தக்க விஷயம்.... இனிமேலும் உயிர்களை காவு வாங்காமல் அரசு நமது சகோதரர்களின் உயிரை காப்பாற்றட்டும்.... சகோதரர்கள் மரண தண்டைனையிலிருந்து விலகி சகோதரி செங்கொடியின் ஆதமா சாந்தியடையட்டும்... இனிமேலும் தற்கொலைகள் நடக்காமல் இருக்கட்டும் நல்ல உயிர்களின் மதிப்பு எண்ணிலடங்காதது

Unknown said...

பகிர்வுக்கு நன்றி தவறான முன்னுதாரணம்...இந்த குழந்தை ஒரு வித உணர்ச்சி வசப்பட்டு செய்து விட்டதாகவே எண்ணுகிறேன்...தீர்வு தேடும்போது அதற்க்கு உயிரை கொடுத்து தேடுவது சரியானதல்ல!

Riyas said...

உயிரைக்காக்க இன்னோர் உயிரை விலையாக கொடுப்பதா..

rajamelaiyur said...

I agree with vikyulakam and ramme 's statement

Unknown said...

அன்பரே!
கருத்தெழுத இயலவில்லை
கண்ணீர் கண்களை மறைக்கிறது
மன்னிக்க!

புலவர் சா இராமாநுசம்

Unknown said...

//தமிழர்களுக்காக களத்தில் நின்று போராடுவதற்கு தான் இப்போது இளைஞர்கள் தேவைப்படுகிறார்களே அன்றி உயிரை மாய்த்துக்கொள்ள அல்ல//
உண்மை!!
அதிர்ச்சி! வருந்துகிறேன்!

Anonymous said...

மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் தனக்கு இல்லை என்று முதல்வர் ஜெயலலிதா இன்று விளக்கம் அளித்தார்.


சட்டப்பேரவையில் இன்று 110-ன் கீழ் அவர் வெளியிட்ட அறிக்கையில், "மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் எனக்கு இல்லை. ஜனாதிபதி நிராகரித்த மனுவை ரத்து செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு கிடையாது.

தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் முதல்வருக்கு இருப்பதாக தவறான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூவரும் மீண்டும் ஜனாதிபதியைத் தான் அணுக வேண்டும்.

காஞ்சி செங்கொடியைப் போன்று தீக்குளிக்கும் செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்," என்றார் முதல்வர் ஜெயலலிதா.

பாலா said...

அவசரப்பட்டுட்டாங்கன்னு தோணுது. ஆத்மா சாந்தி அடையட்டும்.

அம்பலத்தார் said...

உரிமைக்காக உயிரைக் கொடுப்பதைவிட அதற்காக இறுதிவரை போராடுவதே சிறந்தது.

Unknown said...

பகிர்வுக்கு நன்றிகள், தொடருங்கள். உயிர் மாயத்தால் அவசியமில்லைதான் - தவறுதான். ஆனால் உயிர் மாய்த்தாலும் இங்கே கண்டு கொள்ள யாரும் இல்லை என்பதுதான் இன்னும் அதிகமான வேதனை.

தமிழ்வாசி பிரகாஷ் said...

போராட்டம் உயிர் நீத்தலில் இருக்க வேண்டாமே...

Yoga.s.FR said...

தீக்குளித்த செங்கொடியின் ஆத்மா, மூவரின் உயிர் மீட்பால் சாந்தியடையட்டும்.

Yoga.s.FR said...

தமிழ் நாட்டில் இப்போது நல்ல வேளையாக க(கொ)லைஞர் ஆட்சி இல்லை!அவ்வாறு இருந்திருந்தால்,காவல்துறை இந்த உயிர்க் கொடையையும் வேறு மாதிரி சிலாகித்திருக்கும்!

சக்தி கல்வி மையம் said...

சகோதரியின் ஆத்மா சாந்தி அடையட்டும்..

சாகம்பரி said...

இது போலவே நாளை வேறு ஒரு பிரச்சினைக்காக வேறு ஒருவர் - தீக்குளிப்பை பற்றி நாடு முழுவதும் நாள் முழுவதும் பேசாமல் இருப்பது நல்லது. ஒவ்வொரு போராட்டமும் பகடை உருட்டல்களாலும் அப்பாவி உயிர்களின் பலிகளாலும்தான் பதிந்து நிற்கிறது.

நிரூபன் said...

தண்டனையை நிறுத்த இன்னோர் கொலை தீர்வாகாது...
நெஞ்சில் கேள்விக் குறிகளாய் உன் ஞாபகங்களை விதைத்து விட்டுச் சென்று விட்டாயே தங்கையே!

நிரூபன் said...

சகோதரா, உங்கள் அனுமதியோடு, உங்களின் வலையில் உள்ள படங்களை நான் எழுதும் ஓர் கவிதைக்காக எடுத்துக் கொள்ளவா?

Anonymous said...

ரம்மி சொன்னது போல இவர்கள் கோழைகளே.அதற்கு பதில், வாழ்ந்து தமிழ்நாட்டில் உள்ள துரோகிகளையும் காட்டிக்கொடுக்கும் கும்பலையும் வேரறுக்க செய்திருக்கலாம்.

Anonymous said...

வருந்துகிறேன்..சகோதரியின் ஆத்மா சாந்தி அடையட்டும்...

மாய உலகம் said...

உயிரை எடுக்க வேண்டாம் தானே இந்த போராட்டம் சகோதரி.. இதற்காக நீ உயிரை விட்டால் போராட்டம் செய்யும் அனைவருக்கும் மன வருத்தத்தை தராதா... இந்த நாடு உயிர் தியாகம் செய்தவர்களை மறந்து செய்தியை வேறு ஒரு பிரச்சனையால் மறைத்து இப்பெரும் தியாகத்திற்கு அர்த்தம்ற்றதாகி விட்டுவிடும்... பாவிகளின் கையில் அதிகாரம் இருக்கும் வரையில் நாம் மேலும் போராட வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது எனவே இனியும் சகோதரர்களே சகோதரிகளே உயிரை மாய்க்க வேண்டாம் ஒற்றுமையுடன் போராடுவோம்....

virutcham said...

http://www.virutcham.com/2011/08/அஞ்சலி-அல்ல-கண்டனம்/

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்