விஜய் டி.வி.ல எனக்கு உயிர் பயத்தைக் காட்டிட்டாங்க பரமா!ஆணிகள் குறைவாக இருந்ததால், நேற்று இரவு கொஞ்சம் முன்னதாகவே நேரத்திலேயே வீட்டிற்கு திரும்பி விட்டதால் தான் இப்படி ஒரு தலைப்பு வைக்கும் கொடுமை நடந்தது எனக்கு.. சீரீயல் நேரம் என்பதால், இந்தியாவின் தேசிய பொழுதுபோக்கான டிவி பார்த்தலில்;  வீட்டிலிருந்தவர்கள் ஏற்கனவே மூழ்கியிருந்தனர்.

ஏதோ ஒரு சீரியல். அதே டிரேட் மார்க் "டொம் டும் டொம்..." பின்ணணி இசையுடன், யாரையோ கவிழ்க்க திட்டம் தீட்டிக்கொண்டிருந்தனர் இரு பெண்கள்.( ஏம்மா...பெண்ணுரிமைவாதிகளே.. இப்படி பெண்களே எப்போதும் மற்றவர்களை கவிழ்க்க திட்டம் போடுவதாகவே சீரியல்களில் காட்டுகிறார்களே... இதை கொஞ்சம் கண்டிக்கக்கூடாதா?)

பெரும் போரட்டத்திற்கு பிறகு ரிமோட் என் கைகளுக்கு வந்தது. வழக்கம் போல ரிமோட்டில் "டைப்" அடிக்க துவங்கினேன். வேகமாய் சேனல் மாற்றிக்கொண்டே வந்ததில், விஜய் டிவி வந்தது.

இளந்தொப்பையை மறைக்க வழக்கமாய் பெரியதொரு கோட் அணிந்து வரும் "நீயா நானா"  கோபிநாத், சின்னதாய் கறுப்புக்கோட் அணிந்து, சற்று பக்கவாட்டில் நின்று பேசிக்கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சி "நடந்தது என்ன? குற்றமும், பின்ணனியும்" என்றார்கள்.

ஓ... கோபிநாத் பெரிய கோட் போட்டிருந்தால் நீயா நானா.... கறுப்பு கோட் அணிந்திருந்தால் நடந்தது என்ன?  பைஜமா போட்டிருந்தால் சூப்பர் சிங்கர்ஸ்....

சரி விஷயத்திற்கு வருகிறேன்.., சில நாள்களுக்கு முன், சூரியனில் உண்டான காந்தபுயல், பூமியை தாக்கியதாம். அதன் காரணமாக ஏற்கனவே காந்தம் போன்று செயல்படும் பூமியின் காந்த விசைக்கோடுகள் பெருத்த மாற்றத்திற்கு உள்ளாகியதாம். இதையெல்லாம் கிராபிக்ஸ் காட்சிகளுடன் வேறு விளக்கினார்கள்.

அடுத்து சொன்ன விஷயம் தான் அதிர்ச்சியில் உறையவைத்து விட்டது. லண்டனில் ஏற்பட்ட கலவரத்துக்கும், அமெரிக்க பங்கு சந்தையில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவுக்கும் சூரியனில் ஏற்பட்ட காந்தப்புயலால்,  நமது பூமியில் ஏற்படுத்திய மாற்றங்கள் தான் காரணம் என்றார்கள்.

அதாவது காந்தப்புயலின் காரணமாக மனிதர்களின் மனநிலையில் தீவிர மாற்றங்கள் உண்டானது தான் காரணம் என்றார்கள்.

அவர்கள் சொன்னதை எந்த அளவுக்கு நம்புவது என்று தெரியவில்லை.

பூமி நெருக்கமான காந்த விசைக்கோடுகளுடன் ஒரு காந்தம் போன்று செயல்படுகிறது என்பது உண்மை தான். சூரியனில் காந்தப்புயல்கள் உண்டாகும் என்பதும் உண்டாகும் என்பது உண்மைதான்.

ஆனால் சூரிய காந்தப்புயல்கள், மனித மனங்களை மாற்றுமா என்பது சந்தேகத்திற்கு உரிய விஷயமாகவே தெரிகிறது. அறிவியலை பொறுத்த வரை எந்த விஷயத்தையும் ஆய்வின் மூலமாக நிருபித்தால் மட்டுமே ஒரு விஷயம் ஏற்றுக்கொள்ளப்படும். ஆய்வு விபரங்களையும் குறிப்பிடவில்லை.

பவுர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில், மனித மனங்களில் மாற்றங்கள் ஏற்படுவது கூட, அறிவியலில் இன்னும் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஏன் இப்படி மீடியாவை வைத்துக்கொண்டு  பீதியை கிளப்புகிறார்கள் என்று தெரியவில்லை.

தற்கொலைகள், நோய் தீவிரமடைதல், கொடூர விபத்துகள் ஏற்படுதல்  போன்றவை பவுர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் அதிகம் நடப்பதாக தமிழகத்தில் பரவலாக நம்பப்படுகிறது. இத்தகைய நம்பிக்கைகளை அதிகப்படுத்துவதற்காகத்தான், தொலைக்காட்சிகள் நிஜம், குற்றம் நடந்தது என்ன போன்ற புலன் விசாரணை நிகழ்ச்சிகளை நடத்துவதாகவே தெரிகிறது.

2012-ல் உலகம் அழியப்போகிறது என்ற பீதி ஏற்கனவே கிளம்பி, குறுஞ்செய்திகள் மூலம் விஸ்ரூபம் எடுத்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில், சூரியனில் 2012-ல் ஏற்பட இருக்கும் காந்த சுனாமி, பூமியை தாக்கி அழிக்கப்போவதாக புதுசா லிங்க் கொடுத்திருக்கிறார்கள் விஜய் டிவி புண்ணியவான்கள்.
(இப்படித்தான் 2000-ல் உலகம் அழியப்போகிறது என்று கிளப்பினார்கள்...நான் கூட, ஒளிந்து கொள்ள பெரியதொரு அட்டைப்பெட்டியை தயார் நிலையில் வைத்திருந்தேன்..ம்ம்ம் ஒண்ணும் நடக்கவில்லை)


டிஸ்கி:


பிரபல விண்வெளி ஆய்வாளர் டாக்டர் ராஜ் பல்தேவ் Two Big Bangs Created the Universe என்ற தலைப்பில் கடந்த 2003ல் ஒரு நூலை வெளியிட்ட புத்தகத்திலிருந்து மேலும் சில தகவல்கள்:


சூரியனிலும் புயல், சோலார் சுனாமி ஏற்படும். இதனை coronal mass ejection என்பார்கள். கடந்த 2005-ம் ஆண்டு மற்றும் 2010-ம் ஆண்டு சூரிய புயல் ஏற்பட்டது. 


சூரிய புயலின் வெப்பம் பூமியை நோக்கி வரும் என்பது உண்மைதான்.ஆனால் பூமிக்கு மேல் இருக்கும் காற்று மண்டலம் உள்பட பல மண்டலங்களை தாண்டிதான் இந்த சூரிய புயல் பூமிக்கு வர வேண்டும். அத்தனை மண்டலங்களும் இந்த சூரிய புயல் வேகத்தின் தாக்கத்தை குறைத்து விடும். மேலும் பூமியை சுற்றி காந்த வளையம் உள்ளது. இந்த சக்தி வெப்பத்தை பூமிக்கு வரவிடாமல் தடுத்து விடும்.


பூமியின் காந்த வளையத்தை அது அடையும்போது வெப்பக் கதிர் வீச்சு புவி காந்தப் புயலாக (geomagnetic storm) மாறும்.


இதனால் செயற்கைக்கோள்கள் முற்றாக அழியக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. தகவல் தொடர்பு முற்றிலும் சீர்குலையும். அதாவது மின்ணனு சாதனங்கள் அனைத்தும் செயல் இழக்ககூடும்.

33 கருத்துரைகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இந்த விஷயம் எனக்கு தெரியாம போயிடிச்சே....

சக்தி கல்வி மையம் said...

இப்படித்தான் 2000-ல் உலகம் அழியப்போகிறது என்று கிளப்பினார்கள்...நான் கூட, ஒளிந்து கொள்ள பெரியதொரு அட்டைப்பெட்டியை தயார் நிலையில் வைத்திருந்தேன்..ம்ம்ம் ஒண்ணும் நடக்கவில்லை)// ரணகலத்திலேயும் ஒரு கிளுகிளுப்பா?

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அப்ப என்பதிவுகள் இண்டிலியில் பிரபலமடையாததற்க்கும் இந்த சூரியன்தான் காரணமா...


விட்டுருந்தா
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏறப்பட்டது..
விஜயகாந்த் தேர்தலில் ஜெயித்தது..

பாமக- தனித்துப் போட்டி

இதெல்லாம் கூ்ட சூரியனில் ஏற்பட்ட காந்தப்புயல் தான் காரணம்ன்னு சொல்லுவாங்க போல...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நல்ல வேளை அந்த நேரத்தில் நான் போகோ செனல் பார்த்துகிட்டு இருந்தேன்..

Deepan Chakkaravarthy said...

இன்பர்மேஷ்சன் இஸ் வெல்த் நன்றி தல...

தமிழ்வாசி பிரகாஷ் said...

இந்த பதிவை நீங்க எழுத ஒரு வேளை சூரிய புயல் தான் காரணமாய் இருக்குமோ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இதவெச்சு இன்னும் என்னென்ன நடக்க போவுதோ?

கவி அழகன் said...

இதெல்லாம் உண்மையா

சென்னை பித்தன் said...

இன்னும் என்னவெல்லாம் சொல்வார்களோ!

Unknown said...

இன்னமும் இதை வைச்சு ஒட்டுரான்களா???
அவ்வ்வவ்வ்

Unknown said...

இன்று என் பதிவு...இலங்கையின் தலை சிறந்த ஒரு வீரர் பற்றி!!ஹிஹி

நாவலந்தீவு said...

நானும் நிகழ்ச்சியைப் பார்த்தேன். உண்மையில் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. அறிவியல் பூர்வமாக நிருபிக்கப்பட்டு இருந்தால் பரவாயில்லை. அவர்களின் கருத்து ஏற்புடையதாக இல்லை.

இக்கருத்தை பலரையும் சென்றடையச் செய்ததற்கு நன்றிகள் பல.

நிரூபன் said...

இப்படி பெண்களே எப்போதும் மற்றவர்களை கவிழ்க்க திட்டம் போடுவதாகவே சீரியல்களில் காட்டுகிறார்களே... இதை கொஞ்சம் கண்டிக்கக்கூடாதா?)//

வணக்கம் பாஸ்,
உங்கள் கருத்தினை நான் வழி
மொழிகின்றேன்.
பெண்ணுரிமை வாதிகள் போர்க்கொடி தூக்கியிருந்தால் சீரியல் மூலம் பிழைப்பு நடத்துவோர் என்றைக்கோ ஓட்டமெடுத்திருப்பார்கள்.

நிரூபன் said...

ஓ... கோபிநாத் பெரிய கோட் போட்டிருந்தால் நீயா நானா.... கறுப்பு கோட் அணிந்திருந்தால் நடந்தது என்ன? பைஜமா போட்டிருந்தால் சூப்பர் சிங்கர்ஸ்....//

அடப் பாவமே...இந்தக் குழூ நன்றாகத் தான் இருக்கு.

நிரூபன் said...

லண்டனில் ஏற்பட்ட கலவரத்துக்கும், அமெரிக்க பங்கு சந்தையில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவுக்கும் சூரியனில் ஏற்பட்ட காந்தப்புயலால், நமது பூமியில் ஏற்படுத்திய மாற்றங்கள் தான் காரணம் என்றார்கள்//

அடப் பாவமே...இது பெரிய காமெடியாக இருக்கே..
மக்களை வைத்துப் பூச்சாண்டி காட்டலாம் என்று நினைத்திருபார்களோ இந்த டீவி சேனல் நடத்துனர்கள்?

நிரூபன் said...

நான் கூட, ஒளிந்து கொள்ள பெரியதொரு அட்டைப்பெட்டியை தயார் நிலையில் வைத்திருந்தேன்..ம்ம்ம் ஒண்ணும் நடக்கவில்லை//

அவ்.....உட்கார்ந்து யோசித்து, இந்த அட்டைப் பெட்டி ஐடியாவைக் கண்டறிந்திருப்பீங்க என்று நினைக்கிறேன்.

நிரூபன் said...

டாக்டர் ராஜ் பல்தேவ் இன் நூலிலிருந்து பகிரப்ப்ட்ட அறிவியற் தகவல்கள் அனைத்தும் சிறப்பானவை.

செங்கோவி said...

நல்ல அறிவியல் தகவல்கள்..

rajamelaiyur said...

நல்ல தகவல்

மாய உலகம் said...

ஹய்யோயோ...இதுவாவது பரவாயில்லை நண்பரே...நிஜம் என்ற நிகழ்ச்சியில் காட்சிகளை விட பிண்ணனியில் விளக்கம் கொடுத்து கோண்டிருப்பார் .. ஒன்னுமே இருக்காது மொத்தக்குரலில் கதிகலங்க வைப்பார் பாருங்கள்... மக்களை இன்னும் முட்டாள் என நினைத்து கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள்... அருமையான பகிர்வு நண்பரே. வாழ்த்துக்கள்

Anonymous said...

இதெல்லாம் ஜூஜூபி.
நாங்க எல்லாத்தையும் கண்டுபிடிக்கறதுக்கு ஒரு புத்தகம் வச்சிருக்கம்ல..

வந்துதான் பாருங்களேன்.

pagadu.blogspot.com

கவிக்கா... said...

2012ல் மிகப்பெரிய ”சூரிய” புயலால் பூமிக்கு ஆபத்து இருப்பது என்பது உண்மைதான்... பூமிக்கு மேலுள்ள காற்று மண்டலம் போன்றவற்றை கூட அழிக்கும் சக்தி கொண்ட மிகப்பெரிய சூரியப்புயல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது...! விஜய் டிவி சொன்ன விடயத்தை ஒரு சர்வதேச ஊடகம் சொன்னால் நம்புபவர்கள், நம்ம ஊரு சேனல் சொன்ன நம்ப மறுக்கிறோம்...! எது எப்படியோ 2012 வரை பொறுத்திருந்து பார்ப்போம்...!

MANO நாஞ்சில் மனோ said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.........

ஆமினா said...

பீதி கிளப்புறதே வேலையா போச்சு....

சுதா SJ said...

இப்படி ஏதாவது புதுசு புதுசா யோசிச்சே குட்டையை குழப்பு
மீன் பிடிப்பதே இவங்களுக்கு தொழிலா போச்சு,

Unknown said...

அப்போ அது நம்ம நோக்கி வந்துட்டு இருக்கா....கொல்றாங்களே....ச்சே இது அதுல்ல!

Jay Rajamanickam said...

இப்படியெல்லாம் பீதியை கிளப்பினால் தான் காந்தக்கல் மோதிரம் அது இது என்று மக்களை ஏமாற்ற முடியும் :)

Anonymous said...

hi But it is widely known fact that during new mooon and full moon days people with mental sickness have diturbance. I am sharing this with my expeirence and my fellow workers of shetlers wo have warned me manytimes when we were in the night shifts. I live in canada ,in the shelter different racial and ethnic people stayed and workforce is also multi cultural; lingual ; multi ethnic

நெல்லி. மூர்த்தி said...

ஸ்டார் டி.வி.யில் எப்படியெல்லாம் பீதியைக் கிளப்பி கட்டுக் கதைகளை பரபரப்பாக்கி பார்வையாளர்களைக் கவர்கின்றனரோ...அதே பாணியில் இங்கு கோபிநாத்தை வைத்து கும்மியடிக்கின்றனர். எப்படி திரைப்பட முன்னோட்டத்தில் “இப்படத்தில் வரும் யாவும் கற்பனையே!” என்பது போல இவர்களையும் ஏதேனும் ஒரு தணிக்கைத் துறை வாயிலாக சின்னத் திரைகளை கண்காணித்து கட்டுக் கதைகளை கட்டுப் படுத்தவேண்டும்.

ராஜ நடராஜன் said...

கோபிநாத் நிகழ்ச்சிகளை நன்றாகத்தானே நடத்துகிறார்!அவரோட இளம் தொப்பையை மறைக்கத்தான் கோட் போடுகிறாரென்று உங்களுக்கு வத்தி வச்சது யாரு:)

//அறிவியலை பொறுத்த வரை எந்த விஷயத்தையும் ஆய்வின் மூலமாக நிருபித்தால் மட்டுமே ஒரு விஷயம் ஏற்றுக்கொள்ளப்படும்.//

இதையும் சொல்லிட்டு நிஜம்,நடந்தது என்ன, புலன் விசாரணை யெல்லாம் சொன்னா என்ன அர்த்தம்:)

சிவப்பு எழுத்துக்கள் பிடித்தன.

Anbu said...

மக்களை முட்டாளாக்கும் நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று..

Unknown said...

நாங்க தான் உலகம்........

Unknown said...

நாங்க தான் உலகம்........

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்