இனி ஹசராமல் உண்ணுங்கள் பேரறிவாளர்களே...


கிட்டத்தட்ட நாடெங்கும் ஏதேனும் ஒரு போராட்டம் தீவிரமாய் பற்றி எரியும் சூழ்நிலைதான் இப்போது இருக்கிறது.


அன்னா ஹசாரேக்கு ஆதரவு தெரிவித்தும், மரண தண்டனைக்கு எதிராகவும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்த சூழ்நிலையில், நேற்று நாடாளுமன்றத்தில் "வலிமையான லோக்பால்" கோரிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் அன்னாவின் உண்ணாவிரதம் இன்று காலை பத்து மணியளவில் முடிவுக்கு வந்துள்ளது. (ஏம்பா காங்கிரஸ் கனவான்களே... ஊழலுக்கு எதிரான போராடும் அன்னாவிடம் ,பிரதமரின் தூதராக அனுப்ப உங்களுக்கு ஆதர்ஷ் ஊழலில் சிக்கிய விலாஸ்ராவ் தேஷ்முக் தான் கிடைத்தாரா?)

இந்த இரண்டு பிரச்சனைகளிலும், வேறுபட்ட மனநிலையை தமிழக மக்கள் கொண்டிருப்பதாகவே தெரிகிறது. ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு வடநாடு முழுமைக்கும் பெரும்பான்மையான ஆதரவு கிடைத்திருக்க, தமிழகத்தைப் பொறுத்த வரை, அன்னா ஹசாரேக்கு பின் "காவி" வண்ணம் இருக்குமோ? என்ற எண்ணம் பெரும்பானவர்களை முழுமனதுடன் அதரவு தருவதை பின்னுக்கு தள்ளுவதாகவே இருந்தது.

இந்த தேசத்தில், ஊழல் என்பது வேரடி மண்ணாக மாறிவிட்ட நிலையில்,  அண்ணா ஹசாரே செய்திருப்பது ஒரு நல்ல முன் முயற்சி. பாராட்டிற்குரியது.  அதிகம் ஈர்ப்பு இல்லாத 74 வயது முதியவர், தேசத்தின் இளைஞர்கள் தெருவில் வந்து போராட வைத்திருப்பது இந்த தேசத்திற்க்கு நல்ல செய்தி தான்.

ஆனால் இந்த முயற்சிகள்,  எந்த அளவுக்கு அரசியல் தலைவர்களின் சித்து விளையாட்டினை தாண்டி, எந்த அளவுக்கு "இறுதி வெற்றி" பெறும் என்ற கேள்வியை எழுப்பியுள்ளதை மறுக்கமுடியாது.

அன்னாவின் கோரிக்கை வெற்றிக்களிப்பை நோக்கி சென்றுக்கொண்டிருக்க.., தமிழர்கள் என்னும் வகையில், நமக்கு இன்னும் பேரறிவாளன் பிரச்சனை மிச்சமிருக்கிறது.

பெரும்பாலான பதிவர்கள் இந்த இரண்டு விஷயங்களை பற்றி, உறுதியான நிலைப்பாட்டுடன், கருத்து தெரிவிக்காமல் மௌனம் காப்பதற்கும் காரணம் இல்லாமல் இல்லை.

பொதுவாக சாமானிய தமிழர்களிடம், மரண தண்டனை பற்றி குழப்பமான மனநிலையே இன்னும் இருக்கிறது.

பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் மரண தண்டனை தடுக்கப்பட வேண்டும் என்று என்னும் "தமிழன்" என்னும் மனநிலை.., நாடு விட்டு நாடு வந்து, ஒரு பாவமும் அறியாத நம் கொன்று குவித்து,  மும்பை தாக்குதலில் ஈடுபட்ட கசாப்பை மன்னித்து விட்டு விட தயங்குகிறது. (இங்கே இந்தியன் என்னும் மனநிலை தடுக்கிறது)

நான் இந்தியனா, தமிழனா என்று கேள்வியோடு, அடையாளக்குழப்பம்  எழும்போதெல்லாம் , நான் தமிழன் என்று சொல்லவே உள்மனதிலிருந்து தீர்ப்பாகிறது. இது சரியா என்று தெரியவில்லை.

அப்சல் குரு மற்றும் கசாப் ஆகியோரை இணைத்து குழம்பிக்கொண்டிருந்த நானும் கூட, மரண தண்டனைக்கு எதிரான மனநிலைக்கு வந்து விட்டேன்.

மனிதம் என்ற கணக்கில் இனி தூக்கு தண்டனை என்பதே இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற நிலைப்பாடு தான் சரி  எனத்தோன்றுகிறது. (என்னது ராஜபக்சே-வா? அது எந்த வகை ஜீவராசி என்று தெரியவில்லையே?)

தமிழகம் முழுவதும் சட்டக்கல்லூரி மாணவர்கள்,  சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரின் மரண தண்டனையை நிறைவேற்றக்கூடாது என்று போராட்ட களத்தில் குதித்துள்ளனர். கல்லூரி மாணவர்கள் போராட்டம் அடுத்தடுத்த நாள்களும் கட்டாயம் தொடரும் என்றே தெரிகிறது.

தமிழக முதல்வர் நினைத்தால், சட்டமன்றத்தில் இந்த மூவரின் மரண  தண்டனையை நிறுத்தி வைக்க முடியும் என்று வரலாற்று ஆதாரங்களையும், சட்ட விதிகளையும் சுட்டிக்காட்டி சன் டிவி.., ஜெயலலிதாவுக்கு "செக்" வைத்திருக்கிறது. இன்னும் எந்த விதமான சமிக்கையும் தமிழக அரசிடமிருந்து இதுவரை வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஈழத்தமிழர்கள் பிரச்சனை, தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை மீனவர்களால் தாக்கப்படுதல் அகிய தமிழர்நலன் சார்ந்த விஷயங்களில் உறுதியான நிலைப்பாடுகளை எடுத்த தமிழக முதல்வருக்கு, பேரறிவாளன் விஷயத்தில் ஏன் முடிவெடுக்க, அதிக தேவைப்படுகிறது என்று தெரியவில்லை.

உண்ணா ஹசாரேவின் போராட்டம் முடிவுற்ற நிலையில்,  பேரறிவாளன் மற்றும் மூவரை மரண தண்டனையிலிருந்து மீட்க, தமிழர்கள் தங்கள் முழுகவனத்தை செலுத்த வேண்டும் என்பதே எம் எதிர்பார்ப்பு.

29 கருத்துரைகள்:

சாமக்கோடங்கி said...

என் உள்மனப் பிரதிபலிப்பு இந்தப் பதிவு..

இராஜராஜேஸ்வரி said...

ஆனால் இந்த முயற்சிகள், எந்த அளவுக்கு அரசியல் தலைவர்களின் சித்து விளையாட்டினை தாண்டி, எந்த அளவுக்கு "இறுதி வெற்றி" பெறும் என்ற கேள்வியை எழுப்பியுள்ளதை மறுக்கமுடியாது.

rajamelaiyur said...

Your statement is very true

Prabu Krishna said...

இந்தியனாய் இருப்பதைக் காட்டிலும் தமிழனாய் இருப்பது மேல்.

தூக்குதண்டனை யாருக்கும் கூடாது என்பது என் எண்ணமும்.

Anonymous said...

உங்களின் வாதம் வலிமையானதா இருக்கிறது....

Unknown said...

அவர்கள் விரும்பும் வரை வேண்டுமெனில், சிறையில் அடைத்துக் கொள்ளட்டும்! தூக்கிலிட்டு எந்த நீதியை நிலை நாட்டப் போகிறார்கள்?

நாய் நக்ஸ் said...

நல்ல பதிவு, பாராட்டுக்கள்.

சென்னை பித்தன் said...

அருமையான கருத்தை முன் வைத்திருக்கிறீர்கள்!உண்மை.

மாய உலகம் said...

பதிவு வலிமையுள்ளது... காத்திருப்போம் நன்மைக்காக

மாய உலகம் said...

தமிழ் மணம் 6

தமிழ்வாசி பிரகாஷ் said...

தமிழ்மணம் ஏழு.... உங்கள் கருத்து சரி தான் நண்பா

Unknown said...

நல்லதே நடக்கும் நண்பா!

ஊரான் said...

கரங்கள் இணையட்டும் (அ)நீதிக்கு எதிராக.

முனைவர் இரா.குணசீலன் said...

நான் இந்தியனா, தமிழனா என்று கேள்வியோடு, அடையாளக்குழப்பம் எழும்போதெல்லாம் , நான் தமிழன் என்று சொல்லவே உள்மனதிலிருந்து தீர்ப்பாகிறது. இது சரியா என்று தெரியவில்லை

இயல்புதானே இது!!!!!!

shanmugavel said...

அனைவரும் சிந்திக்க வேண்டிய கருத்துக்கள்.

Unknown said...

ஹசாரே பற்றி காங்கிரஸ் கண்டுக்க வில்லை போலும்...ஆனால் உலகம் அவதானிக்கிறது தான் உண்மை!!

அருள் said...

அண்ணா அசாரே: உண்ணாவிரதத் திடலை குப்பை மேடாக்கிய கூட்டம் நாட்டை சுத்தப்படுத்தப் போகிறதாம்

http://arulgreen.blogspot.com/2011/08/blog-post_28.html

Unknown said...

மூன்று உயிர்களுக்கும் ஆபத்து நேர்ந்தால் அது நிச்சயம் தமிழர்கள் மத்தியில் கடுமையான வன்மத்தை விளைவிக்கும்.நம்பிக்கை மட்டும் போதாது,போராட்டமும் தேவை.

செங்கோவி said...

அம்மையார் ஈழப் பிரச்சினையில் தன் நேர்மையை பறைசாற்ற வேண்டிய நேரம் இது..செய்வாரா?

கோகுல் said...

பேரறிவாளன் மற்றும் மூவரை மரண தண்டனையிலிருந்து மீட்க, தமிழர்கள் தங்கள் முழுகவனத்தை செலுத்த வேண்டும் என்பதே எம் எதிர்பார்ப்பு.

நிச்சயம் செய்வோம்!

Anonymous said...

நல்ல பதிவு....
இனிய பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்...
ரெவெரி...

பச்சை தமிழன் said...

தமிழர்கள் என்பதற்க்காக என்ன தவறு வேண்டும் செய்யலாம் அவர்களை மன்னித்து விட்டுவிட வேண்டும் என்பது நியாயமல்ல. அன்று கொல்லப்பட்ட 15 உயிர்களை நாம் ஏன் மறந்துவிடுகிறோம்.
ஹ்ம்ம் ஆனாலும்... இவர்கள் நிரபராதிகளென்றால் இவர்களின் விடுதலைக்காக போராடுவதில் தவறில்லை ! இவர்கள் குற்றம் செய்தவர்கள் என்றால் இரண்டு காரணத்திற்க்காக இவர்கள் விடுதலையை நான் ஆதரிக்கிறேன்.. ஒன்று இவர்கள் ஏற்கனவே 20 ஆண்டுகள் சிறையில் இருக்கிறார்கள் அதுவே பெரிய தண்டனை. இன்னொன்று மனிதாபிமானம். என்ன தான் பெரிய தவறு செய்திருந்தாலும் ஒரு உயிர் பறிக்கப்படுகிறது என்று சொல்லும்போது மனது பதறதான் செய்கிறது...!
இந்த இரண்டு காரணங்களை தவிர, ஒரு நாட்டின் பிரதமரை கொல்ல துணைபோனவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்டவர்களை(குற்றம் செய்திருந்தால்) ஆதரிப்பது சரியல்ல...

ராஜ நடராஜன் said...

//செங்கோவி said...

அம்மையார் ஈழப் பிரச்சினையில் தன் நேர்மையை பறைசாற்ற வேண்டிய நேரம் இது..செய்வாரா?//

நான் பெரும்பாலும் நேர் பார்வை கொண்ட்வன்.இந்த விசயத்தில் ஜெயலலிதா மீது நம்பிக்கையில்லை.

வேலிக்கு ஓணான் சாட்சி மாதிரி ஆட்சி காலத்தில் நளினியின் விடுதலைக்கு மௌனம் சாய்த்து விட்டு மரணதண்டனைக்கு எதிராக கருணாநிதி குரல் கொடுப்பது விசித்திரமாக இல்லை?

பூங்குழலி said...

ஜெவை சிக்கலில் மாட்டவே இந்த நேரத்தில் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டிருப்பதாக சீமான் ஒரு தொலைக்காட்சியில் பேசிக்
கொண்டிருந்தார் .இதை பற்றிய ஒரு கருத்தாடல் சனிக்கிழமை இரவு மக்கள் டிவி சங்கப்பலகையில் பேசப்பட்டது .இந்த வழக்கு நடந்த
விதத்தில் இருந்த பல குறைபாடுகள் இதில் சுட்டிக்காட்டப்பட்டன .ஜெ இதில் பெரிதும் ஏதும் உதவுவார் என்ற நம்பிக்கை இல்லை .

சி.பி.செந்தில்குமார் said...

ஜெ எந்த உதவியும் செஞ்சு சிக்கலில் மாட்டிக்க மாட்டார்

நிரூபன் said...

ஹசாரேயின் போராட்டம், சிறிய அளவிலாவது லோக்பால் தீர்மானம் மூலம் வெற்றி பெற்றிருக்கிறது.

ஜெ இன் முடிவில் தான் எல்லாமே தங்கியுள்ளது என்று தெரிந்தும், அம்மா மௌனமாக இருப்பது வேதனையை அளிக்கிறது,.

shaik said...

தமிழர்கள் என்பதற்க்காக என்ன தவறு வேண்டும் செய்யலாம் அவர்களை ஒன்றும் செய்ய கூடாது என்கின்றகளே, தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் முன்று மரண தண்டனை கைதிகளை மன்னித்து விட்டுவிடலாம காரணம் அவர்களும் தமிழர்கள்தானே,

சூனிய விகடன் said...

தூக்குத் தண்டனை மட்டுமல்ல ...எந்த ஒரு தண்டனையுமே ...அது ஆறு மாத கடுங்காவல் தண்டனையாக இருந்தாலும் அது அரச அங்கீகாரம் பெற்ற சாடிசம் தான். ஒரு மனிதனைத் துன்புறுத்தவோ ....அடைத்து வைக்கவோ அரசாங்கத்துக்கு எந்த ஒரு உரிமையுமில்லை. நமது அடுத்த கட்ட போராட்டம் இதை மையப்படுத்திதான் இருக்க வேண்டும். தண்டனை மனிதர்கள் தமக்குள்ள ஒருத்தருக்கொருத்தர் கொடுத்துக்கொள்ளலாமே தவிர அரசாங்கம் தண்டனை கொடுக்க அனுமதிக்கக்கூடாது

சூனிய விகடன் said...

இந்த எழுச்சி முன்பே இருந்திருந்தால் நாம் தூக்கிலிட்டுக்கொல்லப்பட்ட ஒன்றுமறியா அப்பாவியான ஆட்டோ சங்கரைக் காப்பாற்றியிருக்கலாம்....என்ன செய்வது ....அந்த குற்றமற்ற ஆட்டோ சங்கர் என்ற மறத்தமிழன் இன்று நம்மிடையே இல்லை

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்