ஒரு விஷயத்தை, முதிர்ந்த வயதில் கற்றுக்கொள்ளும் போது வரும் பயமும், படபடப்பும் சின்னஞ்சிறு வயதில் இருக்காது என்பதால், "பயமறியாத இளங்கன்றுகள்" கற்றுக்கொண்ட விஷயங்கள் ஏராளம்.
சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் போன்றவற்றை இப்போது பழகுவதற்கும், சின்ன வயதில் பழகுவதற்கும் எத்தனை வித்தியாசங்கள் இருக்கிறது?
இளம் வயதில் உங்கள் வீட்டில் கார் இருந்திருந்தால், நிச்சயம் நீங்கள் மிக விரைவாக, எளிதாக கார் ஓட்ட பழகி இருப்பீர்கள். (மிக குறைந்த சேதாரங்களோடு....)
அது மாதிரி, இந்த கால பள்ளிக்குழந்தைகளுக்கு சின்னஞ்சிறு வயதில் கணிணியை "நோண்டி" பார்க்கும் வாய்ப்பு இப்போது கிடைத்திருக்கிறது, தமிழக அரசின் விலையில்லா மடிக்கணிணி வழங்கும் திட்டத்தால்.
கணிணிச் சார்ந்த மிகப்பெரிய விஷயங்களை அவர்கள் இப்போதே பழக போவதில்லை என்றாலும் கூட, கையாளும் அளவிற்காவது இப்போது வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது தான் மகிழ்ச்சிக்குரிய விஷயம்.
இலவசமாக கொடுப்பதால், "கம்பியூட்டர் என்ற பெயரில் பெரிய சைஸ் கால்குலேட்டர் தான் குடுப்பாங்க" அப்படி-னு சொன்னது பொய்யாக மாறுமளவிற்கு தமிழக அரசு மிக கவனமாக, மடிக்கணிணி தரும் நிறுவனங்களை தேர்வு செய்து ஒப்பந்தம் தந்திருப்பது நம்பிக்கையூட்டுகிறது.
இனி வரும் காலம் கணிணியின் காலம் என்பது, எப்போதோ முடிவாகி விட்ட சூழ்நிலையில், நமது பள்ளி மாணவர்களும் குறைந்தபட்சம் விளையாட்டுத்தனம் என்ற அளவிலாவது கணிணியை கையாள வாய்ப்பு கிடைத்திருப்பது, கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சி பெற்று வீட்டுப்பாடங்களை கண்ணியில் செய்து வரும் அளவுக்கு இப்போதைய நிலை மாறும்.
தற்போதைய சூழ்நிலையில் பில்கேட்ஸின் மைக்ரோசப்ட் நிறுவனம் மட்டுமல்லாது, அனைத்து "பொட்டி தட்டும்" பணிகளிலும் இந்தியர்கள் தான் அதிகம் கலக்குகிறார்கள் என்ற சூழ்நிலை மாறி, தமிழர்கள் கை கணிணி துறையில் ஓங்க, இந்த இலவச மடிக்கண்ணி வழிவகுக்கும். யார் கண்டது பில் கேட்ஸ் கூட, ஒரு தமிழக மாணவனுக்கு சலாம் வைக்கும் நிலை உண்டாகும் வகையில், நம் தமிழகத்திலிருந்தும் பல பில்கேட்ஸ்கள் உருவாகி, உலகை வலம் வரலாம்.
டிஸ்கி:
இலவசங்கள் கொடுப்பது சரியா தவறா?, அரசியல் கட்சிகளுக்கு கிடைக்க இருக்கும் லாப நஷ்டங்கள் என்பதை தாண்டி, எளிய மக்களின், மகன் மகளுக்கு கணிணியை கையாள கிடைத்திருக்கும் மகிழ்ச்சியே இந்த பதிவின் அடிப்படை.
கணிணி மூலம் இணையத்தினை தவறாக பயன்படுத்துவார்களே என்ற கவலையும் உண்மைதான். ஆனால் இந்த விஷயங்களில் சரியான வழிகாட்டுதலை வழங்க முடிந்தால், நிச்சயம் இனியெல்லாம் சுகமே.(விரைவில் வலைப்பூக்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரிக்கும் என்பது நமக்கான இப்போதைய சந்தோஷம்... பதிவுக்கு ஓட்டு போட ஆள் கிடைக்குமே..)
17 கருத்துரைகள்:
))யார் கண்டது பில் கேட்ஸ் கூட, ஒரு தமிழக மாணவனுக்கு சலாம் வைக்கும் நிலை உண்டாகும் வகையில், நம் தமிழகத்திலிருந்தும் பல பில்கேட்ஸ்கள் உருவாகி, உலகை வலம் வரலாம்.))
உண்மைதான் எம்; மாணவாகளின் சக்தி வெளிப்படும் நாள் தொலைவில் இல்லை
//பதிவுக்கு ஓட்டு போட ஆள் கிடைக்குமே..)//
போது நலத்திலும் ஒரு சுயநலம் ஹா ஹா
உதாரண மனிதர்கள் உருவாகட்டும்!
இலவசங்கள் கொடுப்பது சரியா தவறா?, அரசியல் கட்சிகளுக்கு கிடைக்க இருக்கும் லாப நஷ்டங்கள் என்பதை தாண்டி, எளிய மக்களின், மகன் மகளுக்கு கணிணியை கையாள கிடைத்திருக்கும் மகிழ்ச்சியே இந்த பதிவின் அடிப்படை.//
சரியாக சொன்னீர்கள் மக்கா...!!!
என்னய்யா ஆச்சு ரொம்பநாளா ஆளையே காணோம்...?
இலவச தொலைக்காட்சியையும், இலவச கணினியையும் ஒப்பிடவே முடியாது. கண்டிப்பாக மிக பயனுள்ள ஒரு இலவசம் இது.
இலவச டிவியை விட இது எவ்வளவோ பெட்டர் தான்.
நல்ல பயன் பெறட்டும் இளைய சமுதாயம்!
உழைத்து வாங்கிய கணினி மூலம்...-:)
யார் கண்டது பில் கேட்ஸ் கூட, ஒரு தமிழக மாணவனுக்கு சலாம் வைக்கும் நிலை உண்டாகும் வகையில், நம் தமிழகத்திலிருந்தும் பல பில்கேட்ஸ்கள் உருவாகி, உலகை வலம் வரலாம்.
காலம் எதையும் மாற்றும் தன்மை கொண்டது..
யார் கண்டது பில் கேட்ஸ் கூட, ஒரு தமிழக மாணவனுக்கு சலாம் வைக்கும் நிலை உண்டாகும் வகையில், நம் தமிழகத்திலிருந்தும் பல பில்கேட்ஸ்கள் உருவாகி, உலகை வலம் வரலாம்.
காலம் எதையும் மாற்றும் தன்மை கொண்டது..
வணக்கம் பாஸ்..
எப்படி இருக்கிறீங்க..
அடிக்கடி லீவெல்லாம் எடுக்கிறீங்க.
(வலைப் பூவிற்கு,
பள்ளிக்கு அல்ல)
குழந்தைகளின் அறிவினைப் பெருக்குவதற்கேற்ற அருமையான திட்டத்தினைத் தான் மத்திய அரசு செய்கின்றது...
டிஸ்கியைப் பார்த்தாலே...எகிறுதே...
மற்ற இலவசங்களுக்கு இது எவ்வளவோ நல்லதுதான். ஆனால் இணையத்தில் கிடைக்கும் கட்டுப்பாடற்ற சுதந்திரத்திற்கு இன்னும் நம் பெரியவர்களே தயாராகாத நிலையில் பள்ளி குழந்தைகளை பற்றி நினைக்கையில் அச்சமாகத்தான் உள்ளது...
கிராமப்புற பள்ளி மாணவர்கள் கணினியை காணக்கிடைப்பதே கல்லூரிக்கு போன பின்புதான்!
நானும் அரசுப்பள்ளியில் ஒரு கிராமத்தில் படித்து வளர்ந்தவன்!
நான் படிக்கையில் இப்படி ஒரு திட்டம் அம்மாவுக்கு தோனாமப்போச்சே!
இந்த நேரத்தில் ஐயா கலைஞருக்கும் நன்றி சொல்லணும்.ஏன்னா இலவசங்களை அறிமுகப்படுத்தியதற்கு!
இலவசங்களே கூடாது என்ற கொள்கை கொண்டவன் நான்... இருந்தாலும் இது போன்ற இலவசங்களை வரவேற்கலாம்...
பகிவிற்கு நன்றி தோழர்!
நிச்சயமாக ,இது ஒரு நல்ல விஷயம் , உங்கள் கருது எனக்கு சரியாக படுகிறது.
http://unmaikaga.blogspot.com/2011/09/blog-post_16.html
Post a Comment