கத்துக்குட்டிகளின் அட்டகாசம்-2 ரம்லா பானு,புவனேஸ்வரி.

சுமையா? சுவையா? -ஏ.ரம்லா பானு

அம்மா என்பது
எலும்பும், சதையும் கொண்ட
ஓர் உடல் அல்ல…

உலகையே ரட்சிக்கும்
உன்னத உணர்ச்சி.
சகல பெண்களிடமிருந்தும்
ஜனிக்கிற மகா சக்தி.
கருணை மழை கொட்ட காத்திருக்கும் கார்மேகம்.,

பூ மண்டலத்தையே
குளிர்விக்கும் தாவர மணம்.
சகல உயிர்களையும்
தாங்கும் பூமியின் பலம்.
 - ஏ.ரம்லா பானு. 
   பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி.

ஆயிரமாயிரம் ஆசைகள் - -எம்.புவனேஸ்வரி.
அன்னையின் மடியில் உறங்க ஆசை
வாயில்லா உயிர்களுடன் பேச ஆசை
யாருமில்லா உலகில் வாழ்ந்திட ஆசை
பூக்களுடன் பூக்களாக சிரிக்க ஆசை
பறவை போல் வானில் பறக்க ஆசை
பனித்துளியில் நனைந்திட ஆசை
வானத்தை பூமிக்குக் கொண்டு வர ஆசை
உலகம் முழுவதும் பச்சையாக ஆசை
பச்சை புல்வெளியில் படுக்க ஆசை
தென்றலுடன் இயற்கையை ரசிக்க ஆசை
இதுபோல ஆயிரமாயிரம் ஆசைகள்!
இவை எல்லாம் நடந்து விட
அன்றே நான் இறந்துவிட ஆசை.

-எம்.புவனேஸ்வரி.
பதினொன்றாம் வகுப்பு மாணவி.
                                         
                                          உங்கள் கருத்துக்கு..


22 கருத்துரைகள்:

middleclassmadhavi said...

அட்டகாசம்!

கோகுல் said...

நல்ல பகிர்வு!
அவங்க ரெண்டு பேருக்கும் எங்க எல்லோருடையவாழ்த்துக்களையும் சொல்லிடுங்க!

சென்னை பித்தன் said...

நன்று.
வளரும் கவிதாயினிகளுக்கு வாழ்த்துகள்.
எங்க ரொம்ப நாளா விடுப்பு எடுத்திட்டீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இரு கவிதைகளும் அருமை.... வளரும் கவிஞர்களுக்கு வாழ்த்துக்கள்!

MANO நாஞ்சில் மனோ said...

வளரும் கவிஞர்களே உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...!!!

aotspr said...

மிக அருமையான கவிதை........


நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

rajamelaiyur said...

//
அம்மா என்பது
எலும்பும், சதையும் கொண்ட
ஓர் உடல் அல்ல…

உலகையே ரட்சிக்கும்
உன்னத உணர்ச்சி.
சகல பெண்களிடமிருந்தும்
ஜனிக்கிற மகா சக்தி.
கருணை மழை கொட்ட காத்திருக்கும் கார்மேகம்.,

//

உண்மையான வரிகள்

சி.பி.செந்தில்குமார் said...

வணக்கங்களும்,வாழ்த்துக்களும் பின்னே வாக்குகளும்..

நல்ல பதிவு, பாராட்டுக்கள்.

பகிர்வுக்கு நன்றிகள், தொடருங்கள்.

இன்னும் நன்றாக எழுதியிருக்கலாம்.

நல்லாவே இல்லை, என்ன பண்றது தலையெழுத்தேனு படிக்க வேண்டியிருக்கிறது.

சி.பி.செந்தில்குமார் said...

சும்மா ஜாலிக்கு அந்த கமெண்ட்.. கவிதைகள் அழகு.. வளரும் கவிஞர்களுகு வாழ்த்து

சக்தி கல்வி மையம் said...

வாழ்த்துக்கள் இளம் கவிஞர்களுக்கு.,

Anonymous said...

Data Entry Jobs இப்பொழுது இலவசமாகவும் கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com

ஆச்சி ஸ்ரீதர் said...

இருவருக்கும் வாழ்த்துகள்

குறையொன்றுமில்லை. said...

நல்ல திறமை இருக்கு. மேலும் வளரட்டும் அந்தக்குழந்தைகள். வாழ்த்துக்கள்.

அ.முத்து பிரகாஷ் said...

//பூ மண்டலத்தையே
குளிர்விக்கும் தாவர மணம்//

வளர்ந்த கவிஞர்களுக்கே வாய்க்கும் உருவகம்..
வாழ்த்துகள் ரம்லா பானு சகோதரிக்கு!

சுவை நமக்கு ஒரு போதும் சுமையாகிவிடக் கூடாது.. அப்படித் தானே ரமலா..?!

//வாயில்லா உயிர்களுடன் பேச ஆசை//
//உலகம் முழுவதும் பச்சையாக ஆசை//
என்ன அழகு ஆசைகள்..
முன்னது கற்பனை எனில் பின்னது தேவை..அத்யாவசிய தேவை..அவசர தேவை..

புவனாவின் ஆசைகள் அனைத்தும் கைகொள்ளக் கடவது..அந்த கடைசி ஒன்றைத் தவிர!(அன்றே நான்..)

Anonymous said...

இரு கவிதைகளும் அருமை...

ரெண்டு பேருக்கும் வாழ்த்துக்களையும் சொல்லிடுங்க...

Unknown said...

மாப்ள இளம் கவிஞர்களுக்கு வாழ்த்துக்கள்!

Karthikeyan Rajendran said...

அன்பு பதிவருக்கு தீபாவளி வாழ்த்துக்கள் எனது தளத்தை தரிசித்தமக்கு, நன்றி!!!!!!!!!!

அம்பாளடியாள் said...

அருமை!...அருமை!..தாய்க்குலத்தின் பெருமை சொல்லும் கவிதை வரிகள் அருமை!..சகோ வாழ்த்துக்கள் தொடர்ந்தும் கலக்குங்க .மிக்க நன்றி பகிர்வுக்கு ......

தினேஷ்குமார் said...

ரமலா பானு, புவனேஸ்வரி இருவருக்கும் வாழ்த்துக்கள் சொல்லிடுங்க சகோ...

இருவரின் கவிதையும் அருமை வரிகள் மனதைத் தழுவி செல்கிறது இருவருக்கும் நல்ல கவித்திறம் உள்ளது இன்னும் செதுக்குங்கள் ஆயிரமாயிரம் கவி படைப்பார்க்கள் ....

Kavipuyal said...

வணக்கங்களும்,வாழ்த்துக்களும் பின்னே வாக்குகளும்..

நல்ல பதிவு, பாராட்டுக்கள்.

அன்புடன் மலிக்கா said...

அருமையோ அருமை குட்டீஸ்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
இன்னும் தொடர்ந்து நல்ல சிந்தனைகள் வளர்த்துக்கொள்ள அதை மென்மேலும் பெருக்கிக்கொள்ள வகை செய்வதுபோல் தொடர்ந்து எழுத்தச்சொல்லுங்கள்..

இராஜராஜேஸ்வரி said...

உலகையே ரட்சிக்கும்
உன்னத உணர்ச்சி.
சகல பெண்களிடமிருந்தும்
ஜனிக்கிற மகா சக்தி.
கருணை மழை கொட்ட காத்திருக்கும் கார்மேகம்.,


சிறப்பான ஆக்கங்களை வழங்கி
மனம் நிறைத்த
அருமையான குழந்தைகளுக்கு
இனிய பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்