எத்தனை அசிங்கங்களைத்தான் கண்டும் காணாமல் செல்வது?

சைல்ட் ஹெல்ப் லைன் 1098 என்பது என்ன என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கக் கூடும் , வீட்டிலோ, வெளியிலோ தங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படும் போது, குழந்தைகள் இந்த எண்ணுக்கு அழைத்து, தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைக் கூறலாம் என்பதே இந்த எண் உருவாக்கப்பட்டதன் நோக்கம்.




ஆனால் இந்த சைல்ட் ஹெல்ப் லைனுக்கு வரக்கூடிய அழைப்புகளில் நான்கில் ஒரு பங்கு அழைப்புக்கள் மௌனமாகவே இருக்கிறதாம். இந்த மௌனம் பற்றி கண்டிப்பாக நாம் பேசியே ஆக வேண்டும்

குழந்தைக்களுக்கு எதிரான கொடுமைகள் சமீபத்தில் பெருகி விட்டன என்பது நிதர்சனமான உண்மை. ஆனால் இவ்வாறு நிகழும் பெரும்பாலான கொடுமைகள், அவர்களின் குடும்பத்தாராலோ அல்லது குடும்பத்தினரின் நம்பிக்கையைப் பெற்றவர்களாலோ நிகழ்த்தப்படுவதாக முன்பு ஒரு முறை இந்தியா டுடே இதழில்,படித்தப்போது, நம்பமுடியாத செய்தியாக இருந்தது.





ஆனால் சமீபத்தில் கோவை தொழில் அதிபரின் குழந்தைகள் ரித்திக்(7) மற்றும் மகள் முஸ்கின்(11) ஆகியோர் கடத்தப்பட்டு கொடூரமாக கொலைச் செய்யப்பட்ட நிகழ்விலும், கொலைக்காரன் மோகன் அந்த குடும்பத்தினருக்கும் , அந்த குழந்தைகளுக்கும் நன்கு பழக்கமானவர்களே என்பது யோசிக்க வேண்டிய விஷயமாகும்.




பணத்திற்காக கடத்தியவர்களிடம் குழந்தைகள் ஏற்கனவே தெரிந்தவர்கள் என்பதால் அமைதியாகவே இருந்துள்ளனர்.பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்து பின்னர் கொல்லப்படும் வரை குழந்தைகள் முரண்டு பிடிக்காமல் இருந்துள்ளனர்.




ஒரு குழந்தையை வளர்க்க ஒரு கிராமமே வேண்டும் என்பது சொல்வழக்கு . ஆனால் குழந்தையை வளக்கும் போது அனைவரையும் சந்தேகப்படு என்பது நிகழ்கால நிகழ்வுகள் உணர்த்தும் பாடம்.

 


குழந்தைகள் மீதான அத்துமீறல்கள் அவர்களுக்கு மிக நன்றாகத் தெரிந்த மனிதர்களாலே நிகழ்த்தப்படுவதாக உங்களுக்குக் கூட தெரிந்திருக்கக்கூடும்

அசிங்கம், அசிங்கம் என சிலவற்றை நாம் பேச மறுத்தால், நம் வீட்டுக் குழந்தைக்கும் இது நேரட்டும் என காத்திருப்பதாகத் தான் அர்த்தம். .



குழந்தைகளொடு நெருங்கிப் பழகும் அனைவரையும் கண்காணிக்க வேண்டும் என்று அந்த இந்தியா டுடே கட்டுரையில் படித்ததாக நினைவு. அப்போது அதிகபடியாக எழுதியிருக்கிறார்கள் என எண்ணியது இப்போது யோசிக்க வைக்கிறது.

ஆள் கடத்தல், இன்று குழந்தைகள் கடத்தல் என உரு மாறி,இதற்கு பாலியல் பலாத்கார பின் புலமும் சேர்ந்திருப்பதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.

விலங்குகள் தங்கள் குட்டிகளையே பசிக்கு இரையாக்குவதைப் போன்று, மனிதர்கள் தங்கள் அடுத்த தலைமுறையையே தங்களின் உடல், மன பசிக்கு இரையாக்குவது வெட்கக்கேடு.



எந்த வகையிலும் இது போன்ற நிகழ்வுகள் இனி நடைப்பெறக்கூடாது என்பது தான் இந்த பதிவின் விருப்பம் கோபம். (இந்த கோபம் நியாயமானதாகவே எமக்குத் தோன்றுகிறது).


குழந்தைகளின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கையும் , அவர்களின் மன ஆவேசமும் இப்படிப்பட்ட நிகழ்வுகள் இனி நிகழக்கூடாது என்பதையே உலகத்திற்கு உணர்த்தும் உண்மையாகும்.

குழந்தைகள் இருவர் கடத்திக் கொலைச் செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்காக ஆஜராகப் போவதில்லை என கோவை பெண் வழக்கறிஞர்கள் முடிவு செய்திருப்பதும் அவர்களின் மனக்குமுறலைத் தான் வெளிப்படுத்தியிருக்கிறது.


6 கருத்துரைகள்:

ராஜவம்சம் said...

மனித உருவில் அரக்கன்.

இவன்களுக்கு மரணதண்டனைக்கூட குறைந்தபட்சனைதான்.

செல்வா said...

//விலங்குகள் தங்கள் குட்டிகளையே பசிக்கு இரையாக்குவதைப் போன்று, மனிதர்கள் தங்கள் அடுத்த தலைமுறையையே தங்களின் உடல், மன பசிக்கு இரையாக்குவது வெட்கக்கேடு. ///

ரொம்ப கொடுமைய இருக்குதுங்க .. இந்த மாதிரியான மனிதர்களை என்ன செய்தாலும் தகும் ..!!

எஸ்.கே said...

மனம் கனக்கிறது!

நிலாமதி said...

மரண தண்டனை தான் சிறந்தது .இவர்களின் தண்டனை மற்றும் கொடியவர்களை சிந்திகக் வைக்கும்.

அன்பரசன் said...

ரொம்ப கொடுமைங்க.
மரணதண்டனைதான் தரனும்.

cheena (சீனா) said...

கொடூரமான செயல் - அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் - குழந்தைகளிடம் நெருங்கிப் பழகுபவர்களைக் கண்காணிக்க வேண்டும்

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்