பரம்பரை கவிதை...
அப்பாவோட தாத்தா பேரு
தாத்தா கூட
பொறந்தவங்க பேருன்னு
மொத்தப் பரம்பரையும்
அத்துப்படியாச்சு
அப்பா மேல
சித்தப்பா போட்ட
சொத்து வழக்கை
படிச்சு படிச்சு
-க.ஆனந்த்
---------------------------------------------------------------------------------
வாழ்க்கையை , கிராமங்களை,மனிதர்களைப் படிக்காம படைப்பாளி ஆகமுடியாது. ஒரு சினிமா கோடிப் பேர் அண்ணாந்து பார்க்கும் விஷயம். நீங்க எல்லோரையும் பாதிக்கணும். அப்போ எவ்வளவு அனுபவம் வேணும். அதற்குப் புத்தகம் படிக்கணும். தன்னைப் புதுப்பிக்காத, கற்றுக்கொள்ளாத எந்தத் துறையும் விளங்காது.
-இயக்குநர் மிஷ்கின்.
---------------------------------------------------------------------------------
ஒபாமா25
---------------------------------------------------------------------------------
அழகிய அனுமார் சிலை
பாரக் ஒபாமாவின்
பாக்கெட்டில்! ஆம்;
கறுப்புக்குப் பிறந்தவன் பையில்
காற்றுக்குப் பிறந்தவன்.
வெள்ளை இருட்டு
வீற்றிருந்த இடத்தில் கறுப்பு வெயிலைக்
காற்றுதான் உட்கார்த்தியது
என்று ஒருவேளை
ஒபாமா எண்ணியிருக்கலாம்.
நம்பிக்கைதான் மனிதனை
நகர்த்துகிறது
முடமாக இருந்தாலும்.
அது மூடமாக இருந்தாலும்.
-கவிஞர் வாலி நினைவு நாடாக்கள்.
-------------------------------------------------------------------------------------------------------------
"எந்திரன்"
------------------------------------------------------------------------------------------------------------
மோர் உடலுக்கு நல்லது, ஆனாலும் அதை ஓடி ஓடி விற்பனை செய்தாலும் வாங்க ஆள் இல்லை. கள் தீங்கு தரக் கூடியது. அதுவோ இருந்த இடத்தில் விற்றுப் போகிறது.-கபீர்.
-------------------------------------------------------------------------------------------------------------
யாருக்குத் தான் துன்பம் இல்லை இந்தஉலகத்தில்? துன்பத்தைச் சந்திக்காத எவரும் இன்பத்தைச் சந்திக்கப் போவது இல்லை.
-கலீல் ஜிப்ரான்.
5 கருத்துரைகள்:
பரம்பரை கவி அருமையோ அருமை.
அனைத்தும் ரசிக்க வைக்கிறது. வாழ்த்துக்கள்
எல்லாமே சூப்பர்! ரசித்தேன்! வாழ்த்துக்கள்!
நல்ல தேடல் ரசிக்கவும் ருசிக்கவும் வைத்து விட்டீர்கள். என் தள வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி..
எம் உறவு தொடரட்டும்.
அன்பின் பாரத் பாரதி - படிததவைகளில் மனதில் தைத்தவைகளைப் பகிர்ந்தமை நன்று - முதல் கவிதை ஆனந்த் எழுதிய கவிதையின் கருத்து - அட்டா - என்ன சிந்தனை - வலி தெரிகிறது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
Post a Comment