நீரோடை மலிக்கா அவர்கள் எழுதிய சவால் கவிதை.

நீரோடை மலிக்கா அவர்கள் எழுதிய சவால் கவிதை.
 குழந்தைகள் பற்றி நாங்கள் அழைத்திருந்த
அதிரடி கவிதை போட்டிக்கு நீரோடை மலிக்கா அவர்கள்
அனுப்பிய கவிதை ....

உன்னத மலர்கள்...

சின்ன மலர்களே! செல்ல மலர்களே!
சிரித்து மகிழ்ந்திடும் சிவந்த மலர்களே!

அன்பும் பாசமும் நிறைந்து இருக்கனும்
ஆலைபோலவே தழைத்து வாழனும்
இரக்கம் ஈகையும் நிறைந்து இருக்கனும்
உழைப்பும் ஊக்கமும் தொடர்ந்து இருக்கனும்
எளிமை ஏற்றமும் சகித்து வாழனும்
ஐயமின்றியே துணிந்து வாழனும்
ஒழுக்கம் ஓர்மையும் சிறந்து இருக்கனும்


தாய் தந்தையை மதித்து வாழனும்
தரணி போற்றவே தலை நிமிரனும்
துயரங்கள் வந்தால் தூளாக்கனும்
துணிந்த காரியம் வெற்றியாக்கிடும்


கெடுதிகள் கண்டால் தூர விலகனும்
கேடு நினைபோரை நல்வழிப்படுத்தனும்
கல்வி கற்பதில் சிறந்து விளங்கனும்
காலம்கடந்தும் உங்கள் பெயர் நிலைக்கனும்


தீமைகள் களைந்து நன்மை சேர்க்கனும்
தெளிவான பாதையை உணர்ந்து நடக்கனும்
உங்கள் எண்ணங்கள் உயர்ந்து இருக்கவே
உள்ளன்போடு இறைவனை வணங்கனும்...

அன்புடன் மலிக்கா.


24 கருத்துரைகள்:

ராஜவம்சம் said...

சவால் போட்டி இதல்லாம் சகோதரிக்கு அல்வா சாப்பிடரது போல்

வாழ்த்துக்கள் மலிக்கா மேடம்.

இத்ரூஸ் said...

Paadal arumai.pillaikalai ookkuvippadharkku vazhthukkal

dineshkumar said...
This comment has been removed by the author.
dineshkumar said...

அருமையான வரிகள்

அன்பாக அமைதியாக அம்மாவின் அறிவுரைகள்

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃஃகெடுதிகள் கண்டால் தூர விலகனும்
கேடு நினைபோரை நல்வழிப்படுத்தனும்ஃஃஃஃஃ

அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்..
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
http://mathisutha.blogspot.com/

வினோ said...

கவிதை நல்லா இருக்குங்க...

எஸ்.கே said...

superb!

அபிநயா said...

குழந்தைமனதுக்கு புரியும்படி கவிதைபோல் பாட்டு எழுதிய கவிதாயினியே. அருமை.
சொல்லவாவேணும் உங்களுக்குசவாலை சமாளிக்க

மிக அருமையான அன்பான அறிவுரை கவிதைப்பாடல்
வாழ்த்துக்கள்..

அபிநயா
+2 மாணவி..

நடராஜன் said...

ஆகா பாடல் வெகு பிரமாதம்.

வரிகள் அத்தனையும் வலிமைசேர்க்கும் விதமாய் அமைததுதான் வெகு அருமை.

குழந்தைகளுக்கு தகுதார்போல் புதிக்கள் சொல்வதில் வல்லவரோ நீங்கள்..

உங்கள் திறமையை எங்களுக்கும் அறியத்தந்த இக்குழுவிற்குபாராட்டுக்கள்.

மலிக்கா நீங்க முரசொலியில் கவிதை எழுதியவங்களா? ஏனெனில் அதில் நான் பார்த்தேன். மலிக்காஃபாரூக் அப்படின்னு இருந்திச்சி அது நீங்களாயிருக்குமோன்னு கேட்டேன்..

சுகந்தி.. said...

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் கவிதை ரொம்ப நல்லாவந்திருக்கு மல்லி.

படிக்கும்போதே அழகாயிருக்கு அருமை பாராட்டுக்கள் உங்களுக்கும் உங்களை எழுததூண்டியவர்களுக்கும்..

EllameyTamil said...

உங்கள் பதிவுக்கு நன்றி !!!

Hi bloggers/webmasters submit your blog/websites into http://www.ellameytamil.com and to get more traffic and share this site to your friends….

http://www.ellameytamil.com

இப்பகுதியில் செய்திகள், தொழில்நுட்பம், தமிழ் வரலாறு, தமிழ் சினிமா, நகைச்சுவை, கதை, கவிதை, சினிமா பாடல்கள் மற்றும் நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்தும் இங்கே கிடைக்கும்…

http://www.ellameytamil.com

யாதவன் said...

நல்ல திருப்தி

அன்புடன் மலிக்கா said...

http://niroodai.blogspot.com/2010/11/blog-post_23.html//

அழைப்பை ஏற்று தொடரோ தொடர் எழுதிட்டோமுல்ல வந்துபாருங்க. ஆனா என்ன கானத்தின் விமர்சனங்கள்
அதிகம் எழுதலை சாரிம்மா.. எனக்கு அவ்வளவுதான் மூளை..

நாகராஜசோழன் MA said...

வாழ்த்துக்கள் :)

Jaleela Kamal said...

அ்ுமையா கவிதை மலிக்்ா வெற்றி பெற வாழ்்்துக்கள்.

கே.ஆர்.பி.செந்தில் said...

திரைப்பாடல் ஆககூடிய சந்தத்துடன் இருக்கிறது .. பாராட்டுக்கள்...

வெறும்பய said...

arumaiyaana kavitha..

அன்புடன் மலிக்கா said...

வாழ்த்துக்களுக்ம் கருத்துக்களும் தெரிவித்த அத்தனை நெஞ்சங்களுக்கும் என்மனார்ந்த நன்றிகள்.. தொடர்ந்த தாங்களின் ஊக்கத்திற்க்கும் மிக்க மகிழ்ச்சி

அன்புடன் மலிக்கா said...

மலிக்கா நீங்க முரசொலியில் கவிதை எழுதியவங்களா? ஏனெனில் அதில் நான் பார்த்தேன். மலிக்காஃபாரூக் அப்படின்னு இருந்திச்சி அது நீங்களாயிருக்குமோன்னு கேட்டேன்.//

அதுநாந்தான் நடராஜன். கவிதை நல்லயிருந்ததா?
ரொம்ப நன்றிங்க தாங்களின் பகிர்வுக்கும் கருத்துக்கும்..

அன்புடன் மலிக்கா said...

ரோஜாப்பூந்தோட்டத்திற்க்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றிகளும். தொடருங்கள் உங்கள் சவால்களையும் சாதனைகளையும்..

ஜெய்லானி said...

சவால் போட்டின்னாலே சிக்ஸர் அடிக்கக்கூடியவங்களாச்சே..!! சொல்லனுமா என்ன .? சூபப்ர் கவிதைப் பாடலா இருக்கு :-))

Lakshmi said...

அருமையாக உள்ளது கவிதை.
வாழ்த்துக்கள்.

அன்புடன் மலிக்கா said...

ஜெய்லானி said...
சவால் போட்டின்னாலே சிக்ஸர் அடிக்கக்கூடியவங்களாச்சே..!! சொல்லனுமா என்ன .? சூபப்ர் கவிதைப் பாடலா இருக்கு :-))//

ஏன் அண்ணாத்தே இப்படி கொளுத்திபோடுறீங்க.
கவிதை யெழுதுறவாளெல்லாம் சேர்ந்து என்னை மொத்தபோறாங்க.
கிறுக்களுக்கெபேரெல்லாம் கவிதையின்னு சொல்லிகிட்டு அலையிறேன்னு..

ஆனாலும் நன்றிங்க அண்ணாத்தே..
மணிய டிராப்டா அனுப்பிடவா..

அன்புடன் மலிக்கா said...

Lakshmi said...
அருமையாக உள்ளது கவிதை.
வாழ்த்துக்கள்.//

ரொம்ப சந்தோஷம் லக்‌ஷி மா. தாங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி..

Blog Archive

Follow by Email

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்