காற்றின் மீதேறி ...
அவ்வைப்பாட்டியோ,
பாரதியோ இன்றில்லை,
அவர்தம் பாடல்களும்
இல்லவே இல்லை
சலிக்காமல்
படம் காட்டும்
சின்னத்திரைகளும்
வலிக்காமல்
உள்ளுக்குள் புகும்
கார்டூன் சித்திரங்களும்
நிரம்பி வழியும்
குழந்தைகள் உலகம்..
இப்போதைய உலகம்
உங்களுக்கு
பாதி வரம் ;
மீதி சாபம்.
வரங்களின் மீதேறி
பயணிப்பதைவிட
சாபங்களுடன்
விளையாட விரும்புகிறீர்கள்..
இனி
உங்களை
கடவுள்களைக் காட்டி
பயமுறுத்த முடியாது,
கண்களை குத்த முடியாத
கடவுள்கள் ;
பவர் ரேஞ்சர்களால்
அழிக்கப்பட்டு விட்டன..
பெற்றோரின்
விருப்பங்களை
புறந்தள்ளி ;
உங்கள் ஆசைகள்
முன்னிறுத்தப்படும்
காலங்கள்
இன்னும் உங்களுக்கு
கனவாகவே இருக்கிறது..
டாக்டர்,
எஞ்சினியர்,
பைலட் ,
ஐ. ஏ.எஸ்,
திணிப்புகளை ,
தகர்த்து எறிந்து
விவசாயி,
தொழிலதிபன் ,
விஞ்ஞானிஎன மாறுங்கள்..
இந்த உலகின்
மாறாத விதிகளை
மாற்றி எழுதி
சரித்திரம் காணுங்கள்..
முதலில்
செவ்வகபெட்டிகளில் இருந்து
வெளியே வாருங்கள்,
டோராவின் பயணத்தில் இருக்கும்
காடுகளை விடவும்
அற்புதமானது நமது வீதிகள்
அதனை விதிகளை மீறாமல்
பயன்படுத்த துவங்குங்கள்..
இப்படி ஆரம்பித்தால்தான்
காற்றின் மீதேறி
விண்ணையும் சாடலாம்..
-- கே.ஆர்.பி.செந்தில். http://krpsenthil.blogspot.com/
9 கருத்துரைகள்:
//காடுகளை விடவும்
அற்புதமானது நமது வீதிகள்
அதனை விதிகளை மீறாமல்
பயன்படுத்த துவங்குங்கள்..//
சத்யமான வரிகள்..... வீதியில் விளையாட வேண்டும் இந்த காலத்து பசங்க
மிக்க நன்றி...
அருமையான கவிதை.. பாராட்டுக்கள்.
நேற்று தொடங்கி , இன்று கடந்து , நாளை என்பதைத் தொட்டு பயணிக்கிறது இந்தக் கவிதை.
அதட்ட முடியாமல், வெறுமனே பார்த்தும், பார்க்காமலும் இருக்க முடியாத முந்தைய தலைமுறையின் ஆசைகளை பேசிச் செல்கிறது கவிதை.
நம்பிக்கையூட்டலுடன் நிறைவடையும் கவிதையில் எமக்கு பிடித்த வரிகள்...
//இனி
உங்களை
கடவுள்களைக் காட்டி
பயமுறுத்த முடியாது,
கண்களை குத்த முடியாத
கடவுள்கள் ;
பவர் ரேஞ்சர்களால்
அழிக்கப்பட்டு விட்டன..//
//முதலில்
செவ்வகபெட்டிகளில் இருந்து
வெளியே வாருங்கள்,
டோராவின் பயணத்தில் இருக்கும்
காடுகளை விடவும்
அற்புதமானது நமது வீதிகள் //
""இப்போதைய உலகம்
உங்களுக்கு
பாதி வரம் ;
மீதி சாபம்.""
ஊக்கமளிக்கும் கவிதை வரிகள்
கே.ஆர்.பி.செந்தில் அண்ணாவுக்கு ஒரு தேசிய வணக்கம்.
சிறப்பித்த ரோசாப்பூந்தோட்டமே உங்கள் தமிழ் உணர்வு மேலும் சிறப்பாக வளர வாழ்த்துக்கள்
வணக்கம் செந்தில். நான் தமிழ்க்காதலன். ஞாபகமிருக்கிறதா?.... இந்த கவிதை இன்றைய சமூக அவலத்தை மிகச் சரியாய் சாடியிருக்கிறது. என் வேதனையாய் உங்களின் வெளிப்பாடு. அருமை. நம்முடைய தலைமுறை கண்ட நல்ல விசயங்கள் இன்றைய தலைமுறைக்கு இல்லை அல்லது சொல்லிக் கொடுக்கப் படவில்லை. தறிகெட்டத் தனமாய் தான்தோன்றியாய்.... பணம் தின்னும் பிணமாய், உயிரோடு இருக்கும் சவங்களாய்.... வாழ கற்றுக் கொண்ட இந்த நிர்மூடம் கலையப் படவேண்டும். மிக்க நன்றி. வருகை தாருங்கள்.... ( ithayasaaral.blogspot.com )
கவி அருமை.
மிக அருமையான கவிதை. தொட்டு நெருடிச்செல்கிறது வரிகள். வாழ்த்துக்கள்..
அருமையாக உள்ளது சார்!
Post a Comment