இன்னுமொரு தினமல்ல..
அல்லன கண்டால் விலகிட வேண்டும்..
அன்னை பூமியை காத்திடல் வேண்டும்..
தேனீபோல் உழைத்திட வேண்டும்..
ஒற்றுமையும் இங்கு வளர்த்திட வேண்டும்..
மூடமை கண்டு எதிர்த்திட வேண்டும்..
முதுமையை என்றும் மதித்திட வேண்டும்..
இளமையில் கல்வி கற்றிட வேண்டும்..
எளியோருக்கு இரங்கிடல் வேண்டும்..
வேற்றுமையிங்கே களைந்திடல் வேண்டும்..
பிரிவினை செய்தால் பொங்குதல் வேண்டும்..
பெற்றவர்தன்னை பேணிடல் வேண்டும்..
சோதரமிங்கே வளர்ந்திடல் வேண்டும்..
மனிதத்தையும் கூட வளர்த்திட வேண்டும்..
பதர்களை வேருடன் ஒழித்திடல் வேண்டும்..
ஆணிவேராய் நாங்களிருக்க;
ஆலமரமாய் நீவிர் வளர்வீர்..
நாளைய உலகின் நாற்றங்கால்களே..
வாழ்த்துச்சொல்லி முடிப்பதல்ல..
வாழவைப்பதில் தொடங்கும் இத்தினம்..
பூத்துச்செழிப்பீர் அனுதினம்.
அமைதிச் சாரல்
11 கருத்துரைகள்:
"வாழ்த்துச்சொல்லி முடிப்பதல்ல
வாழவைப்பதில் தொடங்கும்"
அமைதிச்சாரல் என்ற பெயருக்கேற்ப சாந்தமான வரிகளோடு நடைப்போடும் வரிகள் இந்த கவிதை முழுமைக்கும் விரிகிறது.
தினங்களை கொண்டாடுவதை விட்டு விட்டு குழந்தைகளை கொண்டாடுங்கள் என்ற கவிக்கோ அவர்களின் எண்ணத்தை வெளிப்படுத்தும் தலைப்பு ''
இன்னுமொரு தினமல்ல..''
எம்மை வசீரிகரித்த வரிகள்
//பதர்களை வேருடன் ஒழித்திடல் வேண்டும்..
பிரிவினை செய்தால் பொங்குதல் வேண்டும்
எளியோருக்கு இரங்கிடல் வேண்டும்.. //
கவிதையை வெளியிட்டதற்கு நன்றி சகோ :-))
அழகான வரிகள்!
வாழ்த்துக்கள்
இன்னொரு ஆத்திசூடி.. பாராட்டுக்கள் ..
சொல்ல மறந்துட்டேன்.. கவிதைக்கான படம் அருமையான செலக்ஷன் :-))))))
அழகான அருமையான கவிதை!
நல்லாயிருக்கு... நல்லாயிரக்கு ரொம்ப நல்லாயிருக்கு...
Aani Verai Naangal iruka.. AAlamaramai Neengal Valarveergal..
Nice lines..
Good Work..
Best Wishes..
All the entries regarding Childrens Day Are Very Best..
esp. Kavidhaigal- dinesh kumar's Amaidhicharal
-Leele Maheshwari
பாராட்டிய நட்புகளுக்கும் வெளியிட்ட பூந்தோட்டத்துக்கும் நன்றி..
அருமையான கவிதை வாழ்ததுக்்ள்
Post a Comment