மன வீடும்,.மீதமான ஒரு கண்ணாடிச் சில்லும்...

நேற்று  திரு. கே.ஆர்.பி. செந்தில் அவர்கள் வெளியிட்ட கவிதையின் நிகழ்களத்தை மையமாகக் கொண்டு(இரவலாகப் பெறப்பட்டு)
எழுதப்பட்ட  கவிதை இது..



மன வீட்டில் 
நீ கல்லெறிந்து விட்டுப்
போனபின்
மிச்சமிருந்தது 

சில கண்ணாடிச் சில்லுகள் மட்டும்..

சுக்கு நூறாகி தெறித்த 

அத்தனை சில்லுகளிலும்
உன் முகம் தெரிந்தது

அந்த காலம்...

அதில் ஒன்றை மட்டும்
பத்திரப்படுத்தி 

வைத்திருந்தேன்.

தொடர்பின் நரம்புகள் 

பலவீனமாகிப் போனதில்
அதுவும் காலப்போக்கில்
ரசம் தொலைத்து 

வெளிறிப்போனது..

சாலை திருப்பத்தில்
உன்னுடன் 

கைக்குலுக்கிக் கொண்ட
சந்திப்பு நிகழ்ந்த
நேற்றைய நாளின் 

இரவில்
அது 

மிக ஒளிந்ததாய் தெரிந்தது.

கைத்தடுமாறி
தொலைப்பதைப் போன்று
தவறவிட்டேன்,
அந்த ஒற்றைச்சில்லை...

மீண்டும் அதனை தேட
முயற்சிப்பதாய் இல்லை நான்..

என் மன வீட்டில்
வாசல் வரை 

வருவதற்கு மட்டுமே
உனக்கு விதிக்கப்பட்டிருக்கிறது

போலும்.













பூஜை அறை 
அப்படியே
தொடரட்டும் 

பரிசுத்தமாய்...

10 கருத்துரைகள்:

வினோ said...

கவிதை அருமை.... கடைசி வரிகள் நன்று...

செல்ல நாய்க்குட்டி மனசு said...

கடைசி வரிகள் நன்று... //
வரிகள் மட்டும் அல்ல வாழ்விலும் அது தான் நன்று வினோ

தினேஷ்குமார் said...

//என் மன வீட்டில்
வாசல் வரை
வருவதற்கு மட்டுமே
உனக்கு விதிக்கப்பட்டிருக்கிறது
போலும்.//

கவிதை நல்லாருக்கு வாழ்த்துக்கள்

NaSo said...

//சுக்கு நூறாகி தெறித்த
அத்தனை சில்லுகளிலும்
உன் முகம் தெரிந்தது
அந்த காலம்...//

நான் மிகவும் ரசித்த வரிகள்.

சாந்தி மாரியப்பன் said...

அழகான கவிதை..

மணிபாரதி said...

Hi bloggers/webmasters submit your blog/websites into www.ellameytamil.com and to get more traffic and share this site to your friends....


www.ellameytamil.com

எஸ்.கே said...

மிக அழகான அருமையான கவிதை!

Unknown said...

அட .. பிரமாதப்படுத்தி எழுதி இருக்கிறீர்கள்... என் கவிதை விடவும் இது மிகசிறந்த பார்வை.. எழுதியவருக்கு என் வந்தனமும்.. பாராட்டும்...

செல்வா said...

//என் மன வீட்டில்
வாசல் வரை
வருவதற்கு மட்டுமே
உனக்கு விதிக்கப்பட்டிருக்கிறது
போலும்.//


உண்மைலேயே நல்லா இருக்குங்க . அதோட உங்க மாணவர்கள் கவிதையும் போடுங்க ..!!

தினேஷ்குமார் said...

நேற்று ஒட்டு போட மறந்துட்டேன் அதான் இன்றைக்கு வந்தேன்

ஒட்டு போட்டாச்சு

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்