இரயில் சினேகம்...


உறவு....

இரயிலை உறவாய்
நினைத்து,
கையசைத்து
மகிழும் மழலை,
வளர்ந்ததும்,
உறவை இரயிலாய்
நினைத்து
ஏன் சென்றது
தாயைப் பார்க்க...

முதியோர் இல்லம்...
******************************************************************************
 
இரயில் சினேகம்...

ஏறும் போது
வணக்கம் சொல்லும்.
இறங்கும் போது
மறந்து போகும்.
இரயில் சினேகம்
மட்டுமல்ல
வாழ்க்கையும் அப்படித்தான்....

********************************************************************************
வாழ்க்கை..
இரயில் கிளம்பும் ஓசை,
மனிதர்கள் இருக்கை தேடி
அலையும் ஓசை,
இடையில்,

தண்டவாளத்தின் அருகில்
செடியின் மீது
சலனமின்றி
தேன் குடிக்கும்
வண்ணத்துப்பூச்சி...

இரயிலின் இருக்கையில்
அமர்வது போல் தான்
வாழ்க்கையும்.

பலரும் வருவோம், போவோம்

எதுவும் சிலகாலம்,


அதுவரை,
வண்ணத்துப்பூச்சியின்
வண்ணம் ரசிப்போம்.
அதுசுவைக்கும்
தேன் சுவை
உணர்வோம்....


"வசித்து வாழ்வது அல்ல..
ரசித்து வாழ்வதே வாழ்க்கை..."

விருந்தினர் பக்கம் - 

கவிதைப்பூக்களை
வழங்கியவர்...  பெ.ஜெயராமன்...

6 கருத்துரைகள்:

தினேஷ்குமார் said...

கவிதை அருமை சிந்திக்கவும் வைக்கிறது சில நொடிகள்

வசித்து வாழ்வதல்ல
ரசித்து வாழ்வதே வாழ்க்கை
சிலர் ருசித்து
வாழ்கிறார்களே
கொடூரங்களை
என் செய்வது/////////

ஹரிஸ் Harish said...

கடைசி இரண்டு வரிகள் மிகவும் அருமை

வினோ said...

/ எதுவும் சிலகாலம்/

உண்மை தான்..

கவிதை அருமை...

ஆமினா said...

நல்ல கவிதை!
ஒவ்வோர் வரியும் ரசித்தேன்

எஸ்.கே said...

//"வசித்து வாழ்வது அல்ல..
ரசித்து வாழ்வதே வாழ்க்கை..."
// சிறப்பான வரிகள்!
அருமையான கவிதை!
எழுதியவருக்கும் வெளியிட்ட தங்களுக்கும் வாழ்த்துக்கள்!

அருண் பிரசாத் said...

என்னப்பா ஒரே தத்துவ மழையா இருக்கு? ;)

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்