ஊழல் - ஒரு சுவையான பயோ-டேட்டா.



பெயர்: ஊழல்.
இயற்பெயர்:ஊ...ழலலல...
(பொருள்:கட்சி பாகுபாடற்றது).
சின்னம்: பெருச்சாளி (எங்கும் இருப்பது).
பலம்:மக்களின் மறதி (அடுத்த ஊழல் வரை).
பலவீனம்: ஊடகங்களின் கண்கள்.
சமீபத்திய சாதனை: வாக்காளர்களுக்கு பணம்.
நீண்ட கால சாதனை: விசாரணை "கமிஷன்"
எதிரிகள் : மனசாட்சியுள்ள மனிதர்கள்.
பிடித்தவசனம்:அரசியல்காழ்ப்புணர்ச்சி காரணமாக.
பிடித்த கேள்வி : நீ மட்டும் யோக்கியமா? 
பிடித்த TOP 5 பாடல்கள்:
5)''ராசா''வின் மனசிலே...
(படம்: "அலை"கள் ஓய்வதில்லை).
4)"கல்"லிலே கலை வண்ணம் கண்டார்.
(படம்:டெல்லி ஸ்பெஷல்).
3)மாடி மீது மாடி கட்டி...விஸ்வநாதன் வேலை வேணும்.
(படம்:மும்பை எக்ஸ்பிரஸ்).
லேட்டஸ்ட் ஹிட்:
2)குருவா"யூரப்பா"...குருவா"யூரப்பா"...
(படம்: பி குவாட்டர் "கட்டிங்".
B FOR பெங்களூரு).
ஆல் டைம் ஹிட்:
1)கறுப்பு தான் எனக்கு பிடித்த கலரு....
(படம்: சம்திங் சம்திங்.. எனக்கு மட்டும்).




யோசனை : மிஸ்டர் பொது ஜனம்.
( விருந்தினர் பக்கத்திற்காக).






13 கருத்துரைகள்:

Thenammai Lakshmanan said...

உங்கல் பகிர்வு அருமை.. முதன் முதல் வாசிக்கிறேன்.. பாராட்டுக்கள்..

அன்பரசன் said...

Top..
:)

Unknown said...

ஊழலை ஒழிக்கவே முடியாது நான் நினைக்கிறேன்...

Unknown said...

முன்பு பொய் என்பதை மிக தவறான விஷயமாக நம் சமூகம் பார்த்தது. பின்னர் பொய் என்பது இயல்பான விஷயமாக மாறிப்போனது.

அது போல இப்போது ஊழலும் ஆகி விட்டது. அட இவ்வளவு தான் திருடினானா? ரொம்ப கம்மி... என்ற மனநிலைக்கு மக்களும் வந்துவிட்டனர்...
அரசியல்ல இதெல்லாம் சகஜம் என்ற மனநிலை வந்து விட்டது, இது நம் நாட்டின் மிகப்பெரிய சாபக்கேடு.

தினேஷ்குமார் said...

அறுவடை செய்யா விளைபையிர்

தினேஷ்குமார் said...

வந்தாச்சு மீசகாரரே

அருண் பிரசாத் said...

இது இதைதான் நான் எதிர்பார்த்தேன்... சூப்பர்

அந்நியன் 2 said...

அரசியல் வாதிகளின் அங்கங்களை பிரித்து மேய்ந்து இருக்கிர்கள் அதிலும் ஊழல் செய்தவரின் பெயரை துணிச்சலாக வெளியிட்டு இருக்கிர்கள் பாடல்கள் மூலமாக.
பெருச்சாளிக்குப் பதிலாக பச்சோந்தியை சேர்த்திருக்குலாம் அதுதான் ஊழல் பேர் வழிகளுக்கு பொருந்தும்,இடத்திற்கு ஏற்றவாறு கலரை மாற்றிக் கொள்ளலாம்.

விசித்திரமான யோசனை வாழ்த்துக்கள் !

அந்நியன் 2

சாந்தி மாரியப்பன் said...

மலிஞ்சுபோன ஊழலின் பயோடேட்டா ஒண்ணொண்ணும் வாழைப்பழத்தில் ஊசி!!!

ஆர்.கே.எல். மீசைக்காரரை இங்கே அனுப்பிவெச்சிட்டார் போலிருக்கு :-)

Unknown said...

கருத்துரை வழங்கிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கு மிக்க நன்றிகள்.. அன்பு தொடர வேண்டுகிறோம்..

NaSo said...

ஊழலை ஒழிக்க எனக்கு வாக்களியுங்கள். (அப்படியே உங்க கமிசனையும் வாங்கிக்கங்க)

♔ℜockzs ℜajesℌ♔™ said...

நான் இதுவரை என்னோடைய எந்த பதிவையும் வந்து படியுங்கள் என்று யாரையும் அழைத்தது இல்லை . ஆனால் என்னுடைய , சாதி = எய்ட்ஸ் (part- 1) பதிவை படிக்க தாழ்மையுடன் அழைக்கிறேன் . நேரம் இருந்தால் வாருங்கள் நண்பரே .

http://rockzsrajesh.blogspot.com/2010/11/1.html

பணிவுடன் ,
ராக்ஸ் . . . .

எஸ்.கே said...

Very Nice!

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்