மிரட்டல்.. By ஜன்னத்துள் பிர்தௌஸ் எட்டாம் வகுப்பு-ஈ பிரிவு.

ஒரு முன் கதைச் சுருக்கம்:

"இது வரைக்கும் எத்தன கவித குடுத்துருக்கேன். 

ஏ(ன்)  இன்னும் ஒரு கவித கூட போடல..."

"இல்லமா ... ஜன்னத்துள், டைமே கிடைக்கல,  கண்டிப்பா வெளியிட்டறோம்,

நீ நாளாக்கி வந்து பாரு, வலைப்பூவில் வெளியான கவிதை-னு  உங் கவிதை நாளக்கி நம்ம ஸ்கூல் நோட்டிஸ் போர்ட்-ல இருக்கும்"

(கவிதை நல்ல இல்லைனா, பின்னூட்டத்தல்  பின்னி எடுக்கப் போறது, என்னத்தானே,
கவித வெளியானா அவுங்க திட்டுவாங்க.. இல்லைனா நீ திட்டுவே, என்ன தா(
ன்) பண்ணறது...  அவ்வ்வ்வ்வ்...)   
********************************************************************************************

அழகு...

மயிலுக்கு தோகை அழகு,
முள்ளுக்கு மலர் அழகு,
சொல்லுக்கு செயல் அழகு,
பெண்ணுக்கு புகழ் அழகு!

மலர்...
வாசம் இல்லாத மலர்,
வசந்தத்தை தேடும்...
மலர்களில் மணம் வீசுவது மல்லிகை:
நட்பின் மீது வைப்பேன் புன்னகை...

தோழி...
நூறு கோடி , நூறு கோடி மக்கள் கூட்டத்தில்
என் தோழிகளே ரோஜாக்கூட்டம்....

கல்வி...
கடவுள் கொடுத்த வரம் கல்வி
அதை அழகாக்குவதும்
அறிவாக்குவதும்
நம் கையில்...

பூக்களில் மணம் உண்டு!
கடலில் வண்ணமீன்கள் உண்டு!
வானில் விண்மீன்கள் உண்டு!
என் மனதில் கல்வியும் உண்டு!...

அறிவுக்கு அழகு கல்வி
கல்விக்கு அழகு மனிதன்...


பூக்கள்....

பூவே உன்னைப் பார்க்கும் போது
என் தோழியைப் பார்க்கிறேன்!
பூவே உன் போல் அவளும் மலர் தான்
மணம் வீசி, மகிழ்ச்சியை
அனைவருக்கும் பரப்புவதால்...  





18 கருத்துரைகள்:

சாந்தி மாரியப்பன் said...

அருமையான கவிதைகள் ஜன்னத்துள்.. மென்மேலும் எழுதி சிறப்புற வாழ்த்துக்கள் :-))

ராஜவம்சம் said...

எட்டா வகுப்பே இந்த போடு போடுது
வாழ்த்துக்கள்.

அருண் பிரசாத் said...

@ ஜன்னத்துள்

உங்கள் கன்னி முயற்சிக்கு பாராட்டுக்கள்... தொடர்ந்து பல நல்ல கவிதை எழுத வாழ்த்துக்கள்

@ பாரத்...பாரதி
//கவிதை நல்ல இல்லைனா, பின்னூட்டத்தல் பின்னி எடுக்கப் போறது, என்னத்தானே//

இவ்வளவு நாள் ஒரு கவிஞரை வளரவிடாமல் தடுத்த உங்களுக்கு ஒரு பலமான குட்டு

ஹரிஸ் Harish said...

@ ஜன்னத்துள்.,
கலக்குறீங்க..வாழ்த்துக்கள்.

எம் அப்துல் காதர் said...

வாழ்த்துகள் ஜன்னத்துல் ஃபிர்தௌஸ்!! இன்னும் நிறைய எழுதுங்க!!

வினோ said...

ஜன்னத்துள் - கவிதைகள் அருமை... இன்னும் எழுதுங்கள்..

தினேஷ்குமார் said...

ஜன்னத்து கவிதை அருமை வாழ்த்துக்கள்

தினேஷ்குமார் said...

மீச என்ன ஆளையே காணோம் கொஞ்சம் கடைக்கு வரவும்

ஆமினா said...

8ம் வகுப்பு படிக்கும் பெண்ணா? நம்பவே முடியல.எல்லாமே அருமை!

வாழ்த்துக்கள்

NaSo said...

ஒரு புதிய கவிஞர் உருவாகிறார். எனது வாழ்த்துக்களை சொல்லிடுங்க.

தினேஷ்குமார் said...

ரோசா பூந்தோட்டமே என் எதிர் கவிதைஇதோ

பெண்ணுக்கு புகழ் அழகு
நீ புகுந்த வீட்டிலும்
உனக்கொரு தாயும் தந்தையும்
உள்ளோர் புரிந்து நடந்துகொண்டால்
நின் புகழ் பாடும் இப்புவி....


இக்கவி பாடபெற்று விட்டது
வாசமில்லா மலர் இது
வசந்தத்தை தேடுது

ரஹீம் கஸ்ஸாலி said...

கலக்கல் ஜன்னத்துல் பிர்தவுஸ். . வளரும் பயிர்......

Arun Prasath said...

புதிய தலைமுறைக்கு வாழ்த்துக்கள்

செல்வா said...

//கவித வெளியானா அவுங்க திட்டுவாங்க.. இல்லைனா நீ திட்டுவே, என்ன தா(ன்) பண்ணறது... அவ்வ்வ்வ்வ்...)//

அப்படியெல்லாம் பயப்படாதீங்க ., யாரும் திட்ட மாட்டோம் .. அத விட எனக்கெல்லாம் கவிதையே எழுத தெரியாது ..

செல்வா said...

/தோழி...
நூறு கோடி , நூறு கோடி மக்கள் கூட்டத்தில்
என் தோழிகளே ரோஜாக்கூட்டம்....//

இந்தக் கவிதை உண்மைலேயே கலக்கலா இருக்குது தங்கச்சி .. நீ கலக்கும்மா ., உன் கவிதைய போஸ்ட் பண்ணுறதுக்கு யாரவது இடைஞ்சல் பண்ணினா சொல்லு .. !!

எஸ்.கே said...

கவிதை மிக மிக நன்றாக உள்ளது! மாணவிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! தொடர்ந்து சிறக்கட்டும்!

அந்நியன் 2 said...

பெண்ணுக்கு கூந்தல்தாமா அழகு.
நல்ல முறையில் கவிதை எழுதி இருக்கே, வாழ்த்துகிறேன்.
மிடிக்கானா இருந்துக்கிட்டு எவ்வளவு யோசிச்சு இருக்கே

R. Gopi said...

குழந்தை, நல்லா இருக்கு கவிதை.

இன்னும் நிறைய எழுது.

வாழ்த்துக்கள்

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்