இன்றைய தேதிக்கான TOP TEN பாடல்கள்..


எல்லா மனிதர்களுக்குள்ளும் மீண்டும் குழந்தையாக வேண்டும் என்ற ஆசை உள் மனதில் நிச்சயம் உறைந்திருக்கும்.அதனால் தான் நாம் தூங்கும் போது குறுகி படுக்கிறோம். தாயின் கருவறையில் இருந்த, இருப்பதான ஆள்மன வெளிப்பாடு அது.

மீண்டும் குழந்தையாக மாறுவது என்பது நடைமுறை சாத்தியம் இல்லை என்பதால் குழந்தைகள் பற்றிய திரைப்பட பாடல்களை 'பாடல் வரிசை பத்து' என வரிசைப்படுத்தி ஆறுதல் தேடலே இந்தப் பதிவு.

பாடலும் பிடித்த வரிகளும்...


1. அஞ்சலி, அஞ்சலி.......
( ஆகாயம் பூமியெல்லாம் இறைவன் உண்டாக்கி வைத்து, ஆசை தான் தீராமலே உன்னை தந்தானம்மா...)
படம்:அஞ்சலி. பாடலாசிரியர் : வாலி.



2.பூவே பூச்சூடவா, எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா...
(இந்த பொன் மானை பார்த்துக் கொண்டே சென்று நான் சேர வேண்டும்....மீண்டும் ஜென்மங்கள் மாறும் போது, நீ என் தாயாக வேண்டும்...
இந்த கண்ணீரில் சோகம் இல்லை)  
படம்:பூவே பூச்சூடவா பாடலாசிரியர் :வைரமுத்து.


3.ஒரு தெய்வம் தந்த பூவே.... கண்ணில் தேடல் என்ன தாயே...
(சின்ன இடியும் நீ, செல்ல மழையும் நீ, மரணம் ஈன்ற ஜனனம் நீ..
மற்றும் பல வரிகள்)
படம்:கன்னத்தில் முத்தமிட்டால்.. பாடலாசிரியர் :வைரமுத்து.


4.பிள்ளை நிலா, இரண்டும் வெள்ளை நிலா...
(ஆளான சிங்கம் ரெண்டும் கை வீசி நடந்தால், காலடியில் பூமியெல்லாம் வணங்கும்.. உங்களால் தானே உயிர் சுமந்தேனே..)   
படம்:?  பாடலாசிரியர் :?


5.சின்ன தாயவள் தந்த ராசாவே.. முள்ளில் தோன்றிய ரோசாவே..
(தெய்வக் கோயிலை சென்று சேருமோ..
வெயில் வீதியில் வாடக்கூடுமோ...)
படம்:தளபதி.  பாடலாசிரியர் : வாலி.


6.இது சங்கீத திருநாளோ, புது சந்தோஷம் வரும் நாளோ..
(பூவெல்லாம் இவள் போல அழகில்லை, பூங்காற்று இவள் போல சுகமில்லை, இவள் தானே நம் தேவதை..
செல்லம் கொஞ்சித் தமிழ் பாடுவாள் தோள்களில் கண்களை மெல்ல மூடுவாள் உறங்கும் பொழுதும் என்னைத் தேடுவாள் ..... )
படம்:காதலுக்கு மரியாதை. பாடலாசிரியர் : பழநி பாரதி.


7.இரவு பகலைத் தேட.. இதயம் ஒன்றைத் தேட...
(அன்னை இல்லா பிள்ளைக் கண்டால்,
பிள்ளை இல்லா அன்னை கண்டால்,
அன்பே இல்லா உலகம் கண்டால்..
அச்சச்சோ...)
படம்:கண்ணுக்குள் நிலவு. பாடலாசிரியர் : பழநி பாரதி.

8.சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா..செல்வக்களஞ்சியமே...
(கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளம் தான் கள் வெறி கொள்ளுதடி.. உன்னை நினைக்கையிலே கண்ணம்மா உன்மத்தம் ஆகுதடி...
படம்:?. பாடலாசிரியர் : மகாகவி பாரதியார்.


9.சிந்திய வெண்பனி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா..
(என் மகன் காவிய நாயகனே.. என்னுயிர் தேசத்து காவலனே..)
படம்:பூந்தோட்டக்காவல்காரன் . பாடலாசிரியர் : ?


10.இதனை உங்கள் விருப்பத்திற்காக காலியாக உள்ளது.. நிரப்புங்களேன்...


டிஸ்கி1:இன்று குழந்தைகள் தினம், எனவே  இன்றைய தேதிக்கான டாப் டென் பாடல்கள்.. என்ற தலைப்பு.


டிஸ்கி2: சில பாடல் இடம் பெற்ற படம், பாடலாசிரியர் பெயர் தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் சொல்லவும். 


டிஸ்கி3:இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மறவாமல் இன்ட்லியில் ஓட்டுப் போடவும், எங்கள் பதிவுகள் பிரபலப்படுத்தப்பட்டு ஒரு நூற்றாண்டு ஆகி விட்டது...

27 கருத்துரைகள்:

Admin said...

அனைத்தும் ரசிக்கக் கூடிய தெரிவுகள் நண்பரே..

எனது தெரிவு : வியட்னாம் வீடு திரைப்படத்தில் வரும் " உன் கண்ணில் நீர் வழிந்தால், என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி... " பாடல்

தினேஷ்குமார் said...

நல்ல பதிவு
தங்கள் சிந்தனைகள்
சுழலுகின்றன தரணியெல்லாம்.....

அம்மாவும் நீயே அப்பாவும் நீயே அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே..

சின்ன சின்ன ரோசாபூவே செல்ல கண்ணே நீ யாரு.....

அம்மா உன் பிள்ளை நான் அறியாதது ஏனோ.....

இனி உங்கள் விருப்பம்..........

Unknown said...

நன்றி சர்ஹீன்.
அரபா நோன்பு சிறக்க வாழ்த்துக்கள்.
பெருநாள் வாழ்த்துக்கள்.

Unknown said...

நன்றி தினேஷ் குமார்...
//அம்மாவும் நீயே அப்பாவும் நீயே அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே..

சின்ன சின்ன ரோசாபூவே செல்ல கண்ணே நீ யாரு.....//
நல்ல தேர்வு..

அம்மா உன் பிள்ளை நான் அறியாதது ஏனோ.....

இந்த பாடலைக் கேட்டதில்லை.

Anonymous said...

சின்ன சின்ன எனக்கு பிடிச்ச பாட்டு

Unknown said...

வருகைக்கு நன்றி சதீஷ் ஸார்..
//சின்ன சின்ன எனக்கு பிடிச்ச பாட்டு
என்பது எந்தப்பாடல்? //

சின்ன சின்ன ரோசாபூவே செல்ல கண்ணே நீ யாரு.....
இதுவா?

NaSo said...

ராஜா சின்ன ரோஜாவோடு - ராஜா சின்ன ரோஜா

இது எனக்குப் பிடித்த குழந்தைகள் பாடல்.

Unknown said...

நன்றி நாகராஜசோழன் MA
//ராஜா சின்ன ரோஜாவோடு - ராஜா சின்ன ரோஜா//
நல்ல தெரிவு. அந்த பாடலில் -- "தீமை செய்வதை விட்டு விட்டு, நன்மை செய்வதைத் தொடருங்கள்" பிடித்த வரிகள்.

Unknown said...

"இந்த பச்சைகிளிக்கொரு செவ்வந்தி பூக்களில் தொட்டிலைக் கட்டிவைத்தேன்.."

இந்தப்பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் ...

Unknown said...

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது...
//"இந்த பச்சைகிளிக்கொரு செவ்வந்தி பூவில் தொட்டிலைக் கட்டிவைத்தேன்.."

இந்தப்பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் ...//

ஆகா அருமை. ஜேசுதாஸ் மற்றும் ஜி.வரலட்சுமியின் மனதை ஈர்க்கும் குரலில் உண்மையிலேயே அருமையான தேர்வு.
பிடித்த வரிகள்... எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே... அவன் நல்லவன் ஆவதும்....

தினேஷ்குமார் said...

அம்மா உன் பிள்ளை நான் அறியாதது ஏனோ.....

இந்த பாடலைக் கேட்டதில்லை.

என்னது கேட்டது இல்லையா
அப்ப 0091-99942௦7748 என்ற நம்பருக்கு போன் செய்து கேட்டுப்பாருங்க
என் நம்பரில்லை எங்க அம்மாவின் நம்பர் பெயர் சுந்தராம்பாள்
பேசிப்பாருங்க.......

என் நம்பருக்கு வரணும்னா ஐ எஸ் டி தான் போகணும்

Unknown said...

நன்றி தினேஷ் .. இந்த பதிவுக்கு வாக்களித்தீர்களா?

தினேஷ்குமார் said...

பாரத்... பாரதி... said...
நன்றி தினேஷ் .. இந்த பதிவுக்கு வாக்களித்தீர்களா?

ஓட்டெல்லாம் போட்டுட்டேன் ஆனா கள்ள ஓட்டுதான் போடமுடியல

Unknown said...

நன்றி.. நன்றி.. தினேஷ் ..

சரி. காலையிருந்து ஆன் லைனிலேயே இருக்கீங்க, கையில் உள்ள குழந்தையுடன் விளையாடாமல்... //இன்று குழந்தைகள் தினம்//

இருங்க அம்மாவுக்கு போன் செய்து வெடி வைக்குறேன்...

தினேஷ்குமார் said...

பாரத்... பாரதி... said...
நன்றி.. நன்றி.. தினேஷ் ..

சரி. காலையிருந்து ஆன் லைனிலேயே இருக்கீங்க, கையில் உள்ள குழந்தையுடன் விளையாடாமல்... //இன்று குழந்தைகள் தினம்//

இருங்க அம்மாவுக்கு போன் செய்து வெடி வைக்குறேன்...

என்னாது வெடியா வச்சாலும் வெடிக்காதே .....

கையில் உள்ள குழந்தை எங்க அண்ணன் மகள் அஞ்சனாதேவி

Unknown said...

அஞ்சனா தேவிக்கு குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்..

தினேஷ்குமார் said...

பாரத்... பாரதி... said...
அஞ்சனா தேவிக்கு குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்..

குழந்தைகிட்ட இபடியா மீசைய முருக்கிகிட்டு வால்த்துசொல்றது புள்ள பயபடுது பாருங்க நீ அழாதடா செல்லம் மீச கார தாத்தா மிட்டாய் வாங்கி கொடுப்பாரு...........

அந்நியன் 2 said...

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்களமே
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்களமே
ஒவ்வொரு விடியலுமே .. சொல்கிறதே
இரவான பகல் ஒன்று வந்திடுமே

நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதிவிடு.


இவர் முகத்தில் கறுப்புக் கண்ணாடி போட்டிருந்தால் இந்தப் பாட்டு பொருத்தமாக இருக்கும்.

Movie - Autograph
Music - Bharathwaj
Lyrics - Pa. Vijay
Singer - K. S. Chithra
Director - Cheran
Year – 2004

அன்பரசன் said...

சிந்திய வெண்பனி பாடலை எழுதியவர் வாலி நண்பரே.

http://tamillyrics.hosuronline.com/ProductsD.asp?pID=4119&PCat=917

செல்வா said...

உண்மைலேயே கலக்கிட்டீங்க .,
அதிலும் எனக்கு அந்த ஒரு தெய்வம் தந்த பூவே பாட்டு அவ்ளோ பிடிக்கும் , அதோட இசையும் வரிகளும் . வாய்ப்பே இல்ல .. இப்போவே அத தரவிறக்கி என்னோட மொபைல் ல போட்டு கேக்கணும் ,, நன்றிங்க ..

அருண் பிரசாத் said...

நல்ல பாடல் தேர்வுகள்....

எனக்கு பிடித்த பாடல்கள்:

கற்பூற பொம்மை ஒன்று...

சந்திரரே சூரியரே நட்சத்திர நாயகரே...

வரம் தந்த சாமிக்கு பதமான லாலி....

(இதை பத்தி ஒரு பதிவு போட்டு இருக்கேன் பாருங்க. வழக்கம் போல பல்பு வாங்கினதுதான். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்)
http://arunprasathgs.blogspot.com/2010/08/blog-post_30.html

Unknown said...

தினேஷ் குமார் சொன்னது..
//மீச கார தாத்தா மிட்டாய் வாங்கி கொடுப்பாரு...........//

பேத்திக்கு நிச்சயம் மிட்டாய் உண்டு..மகன் தினேஷ்க்கும் கட்டாயம் உண்டு. எவ்வளவோ பண்றோம்.. இதை பண்ண மாட்டோமா?

Unknown said...

http://arunprasathgs.blogspot.com/2010/08/blog-post_30.html
சென்று பார்த்தேன். ஒரு கடையே வெக்கலாம். அவ்வளவு பல்ப் வாங்கியிருக்கீங்க அருண் சார்...

Unknown said...

கற்பூர பொம்மை ஒன்று...

சந்திரரே சூரியரே நட்சத்திர நாயகரே...

வரம் தந்த சாமிக்கு பதமான லாலி....
அருமையான தேர்வுகள்..

நன்றி அருண் சார்...

Unknown said...

//சிந்திய வெண்பனி பாடலை எழுதியவர் வாலி நண்பரே.//

என்ற அன்பரசன் அவர்களுக்கும்,

//உண்மைலேயே கலக்கிட்டீங்க //

என்ற ப.செல்வக்குமார் அவர்களுக்கும் நன்றிகள்..(மெய்யாலுமா?)

Unknown said...

sir...i like "VAA VAA EN DEVATHAIYAE.." from abiyum naanum...unga top ten songs list fantastic ah iruku sir...

shabi said...

4.பிள்ளை நிலா, இரண்டும் வெள்ளை நிலா.../// PADAM NEENGAL KETTAVAI... ILAYARAJA MUSIC .... BALUMAHENDRA DIRECTION.... THIYAGARAJAN, BANUCHANDAR,ARCHANA,SILK NADITTHA PADAM

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்