கோக்கு மாக்கு பதில்கள் தேவை...

விகடன் மேடையில் பிரபலங்கள் பதில் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.
நாம வலையுலக பிரபலங்களுக்கு மேடை அமைத்துக்கொடுக்க வேண்டாமா?.. அதற்காகவே இந்த "வில்லங்க மேடை". அதில் ஜாலியாய் சில கேள்விகள்..

சீரிஸாய் பதில் சொல்பவர்களும் "அட.. உள்ள வாங்க சார்..."


1. நீங்கள் "அம்மா பிள்ளையா"; "அய்யா" பிள்ளையா?

2. நமீதா தமிழ் பேச ஆரம்பித்த பிறகுதான், தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து கிடைத்தது என்பது? (கேள்வி உபயம் விகடன்)

3. 2011ல் அமையவிருக்கும் தமிழக அமைச்சரவையில் உங்கள் வசம் எந்தெந்த துறைகளை வைத்துக்கொள்வீர்கள்?

4. மன்மோகன் சிங்கை திட்டினால் கூட பொறுத்துக்கொள்கிறீர்கள், ஆனால் ராஜபக்சே -வை திட்டினால் மட்டும் உங்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லையே ஏன்?

5. விண்ணோடும், முகிலோடும்..... ஓடாதது என்னவோ?

6. வாய்ப்பாட்டில் நீங்கள் வித்துவானா இல்லை கத்துவானா?

7. அப்புறம் குமுதம் பாணியில் ஒரு கேள்வி...பத்துப்பாட்டு, குத்துப்பாட்டு வேறுபடுத்துக..

8. பணவீக்கத்தை குறைக்க தாங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?

9. அதெல்லாம் சரி அரசே.. மாதம் மும்மாரி பொழிகிறதா?

10. உங்களை பற்றி ஒரு பஞ்ச் பிளீஸ்..

எல்லா கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பதால்... இறங்கி அடிச்சு ஆடுங்க பாஸ், இது உங்க "ஆடு"களம்..

டிஸ்கி :
ஐ.பி.எல்.-க்காக கிரிக்கெட் வீரர்கள் ஏலம் விடப்படுவது போல, பதிவர்களுக்கான ஐ.பி.எல். ஏலம் நடந்தால் எப்படி இருக்கும்?
இதனை பற்றி யாராவது கலாய்ப்பு பதிவு எழுதலாமே...  

61 கருத்துரைகள்:

S Maharajan said...

//நீங்கள் "அம்மா பிள்ளையா"; "அய்யா" பிள்ளையா?//

நான் ஆண்பிள்ளை

வாய்ப்பாட்டில் நீங்கள் வித்துவானா இல்லை கத்துவானா?

"குத்துவான்"

//அதெல்லாம் சரி அரசே.. மாதம் மும்மாரி பொழிகிறதா//

எனக்கு "பூ" பட மாரி தான் தெரியும் அது யாரு மும்மாரி

எப்புடி?

பாரத்... பாரதி... said...

வாங்க மகாராஜன்... உங்களுக்கு வடை கிடைத்தது.. எங்களுக்கு விடையும் கிடைத்தது..

ரஹீம் கஸாலி said...

இருங்க....யோசனை பண்ணிட்டு அப்புறமா வாரேன்

பாரத்... பாரதி... said...

யோசிட்டு வாங்க... ரஹீம் கஸாலி...
ஒரு கேள்வி.. பல வகையான பதில்... இதுதான் எங்கள் கொள்கை..

கூட்டணிக்கு தயாரா... 2011 நம்ம கையில...

கலாநேசன் said...

1. நீங்கள் "அம்மா பிள்ளையா"; "அய்யா" பிள்ளையா?
கிளிப்பிள்ளை (கல்யாணம் ஆனதனால்...)

2. நமீதா தமிழ் பேச ஆரம்பித்த பிறகுதான், தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து கிடைத்தது என்பது? (கேள்வி உபயம் விகடன்)
நோ டவுட்டு மச்சான்

3. 2011ல் அமையவிருக்கும் தமிழக அமைச்சரவையில் உங்கள் வசம் எந்தெந்த துறைகளை வைத்துக்கொள்வீர்கள்?
வருமானம் வரும்துறை

6. வாய்ப்பாட்டில் நீங்கள் வித்துவானா இல்லை கத்துவானா?
பாடலைக் கொத்துவான்

8. பணவீக்கத்தை குறைக்க தாங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?
வழக்கம் போல ஒத்தடம்தான்

பாரத்... பாரதி... said...

//நோ டவுட்டு மச்சான்//
ஆஹா... இது நமீதாவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு போல தெரிகிறதே?

ஜாக்பாட்...ஜாக்பாட்... ஜாக்பாட்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

1. நீங்கள் "அம்மா பிள்ளையா"; "அய்யா" பிள்ளையா?

நாங்கள்லாம் மாப்பிள்ளைக..... ஹி...ஹி.... வெளங்குச்சா....? சரி விடுங்க.... நெக்ஸ்ட்...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////2. நமீதா தமிழ் பேச ஆரம்பித்த பிறகுதான், தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து கிடைத்தது என்பது? (கேள்வி உபயம் விகடன்)/////

ஆமா, ஆமா, நமீதா நல்ல செகப்புல்ல, அதான் செம்மொழி ஆக்கிப்புட்டாங்க.....! (நமீ மட்டும் கருப்பா இருந்திருந்தா நம்ம தமிழ் நெலம....?)

பாரத்... பாரதி... said...

அய்யோ... பன்னிக்குட்டியார் வந்தாச்சா.... அப்ப நாங்க அப்பீட்டு... அவரு போனதுக்கு அப்புறம் ரிப்பீட்டு...

பன்னிகுட்டி சார் பாத்து விளையாடுங்க... எங்களுக்கு இருக்குறது ஒரே கடை....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////3. 2011ல் அமையவிருக்கும் தமிழக அமைச்சரவையில் உங்கள் வசம் எந்தெந்த துறைகளை வைத்துக்கொள்வீர்கள்?////

பெருந்துரை, செந்துரை, மதுரை.... அப்புறம்...ம்ம். மாந்துரை..... என்ன எல்லாமே தப்பா..? ஓ நீங்க அமைச்சரவையப் பத்தி கேட்டீங்களா? அதெல்லாம் யாராவது வெவரமானவங்க எடுத்துக்கட்டும், நமக்கு யாராவது ஒரு அமைச்சரோட பீஏ போஸ்ட்டு மட்டும் வாங்கி கொடுத்துட்டீங்கன்னா, அதெ வெச்சி கூழோ கஞ்சியோ குடிச்சி பொழச்சிக்குவேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பாரத்... பாரதி... said...
அய்யோ... பன்னிக்குட்டியார் வந்தாச்சா.... அப்ப நாங்க அப்பீட்டு... அவரு போனதுக்கு அப்புறம் ரிப்பீட்டு...

பன்னிகுட்டி சார் பாத்து விளையாடுங்க... எங்களுக்கு இருக்குறது ஒரே கடை....////

நாங்க மட்டும் என்ன 15 கடையா வெச்சிருக்கோம், சரி சரி, போயிட்டு வாங்க, கடைய நான் பாத்துக்கிறேன்.. ஹி.. ஹி..!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////4. மன்மோகன் சிங்கை திட்டினால் கூட பொறுத்துக்கொள்கிறீர்கள், ஆனால் ராஜபக்சே -வை திட்டினால் மட்டும் உங்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லையே ஏன்?//////

முன்னாடி உள்ளவரு வாயில்லா பூச்சி, எம்புட்டு அடிச்சாலும் தாங்குவாரு, பின்னாடி உள்ளவரு.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////5. விண்ணோடும், முகிலோடும்..... ஓடாதது என்னவோ?////

ஓடாதது...? ஓ.. பெரிய டாகுடரு படமா?

..... said...

ஏங்க... எனக்கு பதில் சொல்ல தெரியில்லை...
எப்படி இப்படி உள்குத்து குத்துவீங்களோ! தெரியில... ஐயோ... தெரியில...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////6. வாய்ப்பாட்டில் நீங்கள் வித்துவானா இல்லை கத்துவானா?////

ஒப்பிப்பான்....!
நாலாப்பு படிக்கும் போது ஒப்பிச்சது 1-வது வாய்ப்பாடு... இன்னும் நல்லா ஞாபகம் இருக்கு....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////7. அப்புறம் குமுதம் பாணியில் ஒரு கேள்வி...பத்துப்பாட்டு, குத்துப்பாட்டு வேறுபடுத்துக..////

எல்லாம் வெத்துவேட்டு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////8. பணவீக்கத்தை குறைக்க தாங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?/////

இது என்னங்க புதுசா இருக்கு? என் பணம் எதுவும் வீங்குன மாதிரி தெரியலியே, அதே மாதிரிதான் இருக்கு?

ரஹீம் கஸாலி said...

தமிழ்மணம் முன்னணி வலைப்பதிவுகள் பட்டியலில் 14-வது இடம் பிடித்ததற்கு வாழ்த்துக்கள்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////9. அதெல்லாம் சரி அரசே.. மாதம் மும்மாரி பொழிகிறதா?////

அதென்னய்யா மும்மாரி, நாலு தடவ பேஞ்சா ஒத்துக்க மாட்டிங்களா? இல்ல அஞ்சுதடவ பேஞ்சா வேணாம்னு சொல்லிடுவீங்களா?
மழை பேஞ்சா அவனவன் ஓடிப்போயி ஒதுங்கி நிப்பானா அதவிட்டுப்புட்டு நம்பர் போட்டுக்கிட்டு... என்ன வெளையாட்டு இது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////10. உங்களை பற்றி ஒரு பஞ்ச் பிளீஸ்../////

நாங்க எப்பவுமே மத்தவிங்களுக்கு பஞ்ச் வெச்சித்தான் பழக்கம், எங்களுக்கே டிஞ்ச்சு வெக்கப் பாக்குறீங்களா? பிச்சிப்புடுவேன் பிச்சி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////எல்லா கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பதால்... இறங்கி அடிச்சு ஆடுங்க பாஸ், இது உங்க "ஆடு"களம்.. /////

இத பர்ஸ்ட்டே சொல்லியிருந்தா, கொஞ்சம் டேமேஜ் கம்மியா இருந்திருக்கும்ல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////டிஸ்கி :
ஐ.பி.எல்.-க்காக கிரிக்கெட் வீரர்கள் ஏலம் விடப்படுவது போல, பதிவர்களுக்கான ஐ.பி.எல். ஏலம் நடந்தால் எப்படி இருக்கும்?
இதனை பற்றி யாராவது கலாய்ப்பு பதிவு எழுதலாமே... ////

அப்போ அந்த கங்குலி யாருன்னு சொல்லிட்டா.... நான் பாட்டுக்குப் போயிடுவேன்!

பாரத்... பாரதி... said...

அப்பாடா.. பத்து கேள்விக்கும் பதில் சொல்லிட்டாரா... கடைக்கு
ரொம்ப சேதாரமோ? ரைட்டு..
பன்னிக்குட்டி சார், இன்னிக்கு போலியோ தினமாம்... உங்க அம்மா உங்கள தேடுறாங்க...போலியோ சொட்டு மருந்து குடுக்குணுமாம்...

தமிழ் உதயம் said...

சரியான பதிலை சொன்னால் எத்தனை பொற்காசுகள் கொடுப்பீங்க.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////பாரத்... பாரதி... said...
அப்பாடா.. பத்து கேள்விக்கும் பதில் சொல்லிட்டாரா... கடைக்கு
ரொம்ப சேதாரமோ? ரைட்டு..
பன்னிக்குட்டி சார், இன்னிக்கு போலியோ தினமாம்... உங்க அம்மா உங்கள தேடுறாங்க...போலியோ சொட்டு மருந்து குடுக்குணுமாம்...//////

என்னது நான் போயி அம்மாவுக்கு போலீயோ சொட்டு மருந்து கொடுக்கனுமா, ஏன் கொடநாட்ல வேற ஆளே இல்லியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////தமிழ் உதயம் said...
சரியான பதிலை சொன்னால் எத்தனை பொற்காசுகள் கொடுப்பீங்க./////

சரியான பதில் சொன்னா, அது சரியான பதில்னு சொல்லுவாங்க, ஆமா பொற்காசா அப்பிடின்னா என்ன?

பாரத்... பாரதி... said...

//எத்தனை பொற்காசுகள் கொடுப்பீங்க//
செக்கு தான் தருவோம்... மாரியம்மன் இன்டியன் பேங்கில் குடுத்து மாத்திக்குங்கோ...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பாரத்... பாரதி... said...
//எத்தனை பொற்காசுகள் கொடுப்பீங்க//
செக்கு தான் தருவோம்... மாரியம்மன் இன்டியன் பேங்கில் குடுத்து மாத்திக்குங்கோ.../////

அப்போ அந்த செக்க தங்கத்துலேயே செஞ்சு கொடுத்துடுங்க... !

பாரத்... பாரதி... said...

//அப்போ அந்த செக்க தங்கத்துலேயே செஞ்சு கொடுத்துடுங்க... !//

ஸாரிங்க.. நீங்க கெளம்பிட்டீங்கனு நெனைச்சு கடைக்குள்ள வந்துட்டேன்...
நீங்க பதில் சொல்லுங்க..

பாரத்... பாரதி... said...

பன்னிக்குட்டி சார்..
நல்ல வேள தனியா வந்தீங்க... உங்க கும்மி கூட்டத்தோட வந்திருந்தா, கடைய காலி பண்ணிட்டு காசிக்கு தான் போகணும்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////6. வாய்ப்பாட்டில் நீங்கள் வித்துவானா இல்லை கத்துவானா?////

ஒப்பிப்பான்....!
நாலாப்பு படிக்கும் போது ஒப்பிச்சது 1-வது வாய்ப்பாடு... இன்னும் நல்லா ஞாபகம் இருக்கு....!///

ஊர்ல உள்ள பிளாக்குகேல்லாம் போயி நான் படிச்சிருக்கேன் அப்டின்னு பொய் பிரச்சாரமா பண்ற..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////6. வாய்ப்பாட்டில் நீங்கள் வித்துவானா இல்லை கத்துவானா?////

ஒப்பிப்பான்....!
நாலாப்பு படிக்கும் போது ஒப்பிச்சது 1-வது வாய்ப்பாடு... இன்னும் நல்லா ஞாபகம் இருக்கு....!///

ஊர்ல உள்ள பிளாக்குகேல்லாம் போயி நான் படிச்சிருக்கேன் அப்டின்னு பொய் பிரச்சாரமா பண்ற..//////

படுவா... என்னையவிட ஒரு வகுப்பு ஜாஸ்தியா படிச்சிட்டோம்னு தெனாவெட்டுல பேசுறீயா, ராஸ்கல்.. உனக்கு ஏன் இந்த வேல? அந்த 1-வது வாய்ப்பாடு கூட உனக்கு தெரியாதுன்னு நான் சொன்னேனா?

ரஹீம் கஸாலி said...

நான் சொல்ல நினைத்த பதில்களை பதிவர்களின் விடிவெள்ளி வருங்கால முதல்வர் அண்ணன் பண்ணிக்குட்டியார் சொல்லிவிட்டபடியால், நான் அப்பீட்டு ஆகிக்கொள்கிறேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரஹீம் கஸாலி said...
நான் சொல்ல நினைத்த பதில்களை பதிவர்களின் விடிவெள்ளி வருங்கால முதல்வர் அண்ணன் பண்ணிக்குட்டியார் சொல்லிவிட்டபடியால், நான் அப்பீட்டு ஆகிக்கொள்கிறேன்/////

அடுத்த மந்திரிசபைல கண்டிப்பா ஒரு எடம் உண்டு தம்பி, இதப்பத்தி நாளைக்கு டெல்லி போகும் போது ஹோம் மினிஸ்டர்கிட்ட நான் பேசுறேன்!

Lakshmi said...

ஐயோ, பெரிய தலைகளெல்லாம் பின்னூட்டம்ங்க்ர பேர்ல பிச்சி மேயராங்களே? நா என்னத்தைச்சொல்ல இங்க.அப்பீட்டு.

பாரத்... பாரதி... said...

ஹலோ... யாருங்க அது... கடைக்கு வர்ற கஸ்டமர பூச்சாண்டி காட்டி மிரட்டுறது... எல்லாரும் போய்ட்டாங்க..நீங்க வாங்கம்மா..

(எல்லாரும் என்ன மாதிரியே பயந்த ஆளா இருந்தா எப்படித்தான் சமாளிக்கிறது?)

middleclassmadhavi said...

1.நீங்கள் "அம்மா பிள்ளையா"; "அய்யா" பிள்ளையா?

ம்.. அனாதைப் பிள்ளை

2. நமீதா தமிழ் பேச ஆரம்பித்த பிறகுதான், தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து கிடைத்தது என்பது?

அப்ப குஜராத்தி என்ன மொழி?

3. 2011ல் அமையவிருக்கும் தமிழக அமைச்சரவையில் உங்கள் வசம் எந்தெந்த துறைகளை வைத்துக்கொள்வீர்கள்?

ஊழல் ஒழிப்புத் துறை

4. மன்மோகன் சிங்கை திட்டினால் கூட பொறுத்துக்கொள்கிறீர்கள், ஆனால் ராஜபக்சே -வை திட்டினால் மட்டும் உங்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லையே ஏன்?

அடுத்த நாட்டுக்காரரைத் திட்டுவது தமிழ்ப் பண்பாடு இல்லை!

பாரத்... பாரதி... said...

ஆ..மாதவி கொஞ்சம் கோபக்காரர் போல தெரியுதே...

middleclassmadhavi said...

5. விண்ணோடும், முகிலோடும்..... ஓடாதது என்னவோ?

விண் தான்! மேகம் நகருமே!

6. வாய்ப்பாட்டில் நீங்கள் வித்துவானா இல்லை கத்துவானா?

ஹிஹி, நமக்கு கால்குலேட்டர் தான்!

7. அப்புறம் குமுதம் பாணியில் ஒரு கேள்வி...பத்துப்பாட்டு, குத்துப்பாட்டு வேறுபடுத்துக..

ப/கு !!

8. பணவீக்கத்தை குறைக்க தாங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?

பர்ஸைச் சின்னதாக்கிட்டேன்!

9. அதெல்லாம் சரி அரசே.. மாதம் மும்மாரி பொழிகிறதா?

உலகத்துக்கே அரசனா இருந்தா, எங்கியாவது மாரி மாறி மாறி பொழிஞ்சி்ட்டுத் தான் இருக்கும்!!

10. உங்களை பற்றி ஒரு பஞ்ச் பிளீஸ்..

middleclassmadhavi said...

10. உங்களை பற்றி ஒரு பஞ்ச் பிளீஸ்..

இங்கே பார்க்கவும்

பாரத்... பாரதி... said...

// middleclassmadhavi said...
10. உங்களை பற்றி ஒரு பஞ்ச் பிளீஸ்..

இங்கே பார்க்கவும்//

பயங்கரமான பஞ்ச்... அம்மாடியோவ்....

நீங்களும் ரவுடிதான் நம்புறேன்... நம்பித்தானே ஆகணும்...

மாணவன் said...

இங்கயும் பதில் சொல்லனுமா???

அய்யோ எஸ்கேப்........

பாரத்... பாரதி... said...

//இங்கயும் பதில் சொல்லனுமா???//

இங்கியுமா ?.. அப்படினா இதுக்கு முன்னாடி எங்கேயோ அடி வாங்கியிருக்கீங்க... ரைட்டு...

MANO நாஞ்சில் மனோ said...

நல்லா கேக்குறாங்கய்யா கேள்வி...

கக்கு - மாணிக்கம் said...

எப்பா ..... தாங்கல , சாமிகளா.... என்ன போல வரும் அப்பாவிகள இப்படி அடிச்சி தொரத்தலாமா?

Chitra said...

ஐ.பி.எல்.-க்காக கிரிக்கெட் வீரர்கள் ஏலம் விடப்படுவது போல, பதிவர்களுக்கான ஐ.பி.எல். ஏலம் நடந்தால் எப்படி இருக்கும்?


.....மொக்கையாக இருக்கும். ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.....

ஜீ... said...

//பணவீக்கத்தை குறைக்க தாங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?//
ஹலோ! பணம் எப்பவுமே வீங்காது...பணம் நிறைய இருந்தா பர்ஸ் தான் வீங்கும்!

Jana said...

3. 2011ல் அமையவிருக்கும் தமிழக அமைச்சரவையில் உங்கள் வசம் எந்தெந்த துறைகளை வைத்துக்கொள்வீர்கள்?


இதில் என்ன கேள்வி! பொதுப்பணித்துறையும் நிதித்துறையும்தான்.

KANA VARO said...

1. நீங்கள் "அம்மா பிள்ளையா"; "அய்யா" பிள்ளையா?//

நான் குழப்படியில்லாத அச்சா பிள்ளை.

//ஐ.பி.எல்.-இதனை பற்றி யாராவது கலாய்ப்பு பதிவு எழுதலாமே...//

ட்ரை பண்ணலாம் போல கிடக்கே!

தமிழ்வாசி - Prakash said...

ஒன்னும் தெரியாதவிங்க கிட்ட இத்தனை கேள்விகளா கேட்பது?


சர்தார்ஜியும், (க)டிஸ்கியும்

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//ஆமா, ஆமா, நமீதா நல்ல செகப்புல்ல, அதான் செம்மொழி ஆக்கிப்புட்டாங்க.....! //

ha....ha....ha....
pannikutti rocks!!!!!!!!!!

(copy paste pannuvor sangam)

யாதவன் said...

அருமை அருமை தோழா....
பின்னிட்டிங்க.

ஆனந்தி.. said...

//1. நீங்கள் "அம்மா பிள்ளையா"; "அய்யா" பிள்ளையா?//

கை புள்ளை :))

சசிகுமார் said...

உங்கள் கேள்விகளுக்கு பன்னிகுட்டியாரின் பதில்களை படித்து மிகவும் ரசித்தேன் திறமையான பதிகள் பன்னிக்குட்டி சார்

இரவு வானம் said...

ஒன்பது கேள்விக்கும் பதில் தெரியல, அதனால, பத்தாவது கேள்வி

10. உங்களை பற்றி ஒரு பஞ்ச் பிளீஸ்..

ஹி ஹி நான் ஒரு கமர்சியல் பதிவருங்கோ....

A.சிவசங்கர் said...

பத்தாவதுக்கு மட்டும்

எனக்கு கேள்வி கேக்குறதும் பிடிக்காது அதுக்கு பதில் சொல்லுறதும் பிடிக்காது


எப்பிடி பஞ்ச

Madurai pandi said...

"No comments" nu sollalaama?

sakthistudycentre-கருன் said...

தாமதமாக வந்ததற்கு மன்னித்துவிடுங்கள் சார். உண்மையிலேயே அருமையான பதிவு இது வாழ்த்துக்கள் சார்.
லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட்டா ஓட்டு போட்டுட்டேன் தலைவரே...

சி.பி.செந்தில்குமார் said...

>>>1. நீங்கள் "அம்மா பிள்ளையா"; "அய்யா" பிள்ளையா?


KAIPPUllA

சி.பி.செந்தில்குமார் said...

>>>நமீதா தமிழ் பேச ஆரம்பித்த பிறகுதான், தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து கிடைத்தது என்பது? (கேள்வி உபயம் விகடன்)WHO IS NAMEEDHAA?

சி.பி.செந்தில்குமார் said...

உங்களை பற்றி ஒரு பஞ்ச் பிளீஸ்..


THE NAME OF MY BLOG IS ADRA SAKKA

BUT ALL POSTS R PADU MOKKA.HI HI

Blog Archive

Follow by Email

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்