நான் இறந்து போயிருந்தேன்...


நான் இறந்து போயிருந்தேன்...

ஐம்பது வருடம் வெண்ணையாய்
தின்று பாதுகாத்த உடம்பு
அசைவற்று கிடக்கிறது.
நான் என்பது தொலைந்து
"அது" என அடையாளம்
மாறிவிட்டிருந்தது..

மெல்ல தகவல்
பரப்பப் பட்டது.
தங்கள் பயணத்திட்டங்களை
மாற்றி என் இறுதிப் பயணத்திற்காக
குவிந்தனர்.

காற்றில் அசைந்த
சாமியானாவில் காத்திருந்த
மனிதர்களுக்கு
"வரக்காப்பி"
வழங்கப்பட்டது.

நல்ல மனுசன்;
நல்ல சாவு
என உரக்கப்பேசினார்கள்..
மனசுக்குள்
என்ன ஓடிக்கொண்டிருக்கும்
என்னால் அப்போது கூட
கணிக்க முடியவில்லை.

பலர் பரபரப்பாக
நடமாடிக்கொண்டிருந்தனர்.
சிலர் மணி
பார்க்கத்துவங்கியிருந்தனர்..

என் கால் மாட்டில்
மனைவி மயங்கிக்கிடக்கிறாள்.
மகள் செய்வதறியாது கண்ணீர் மல்க..


சேதிக் கேட்ட என் மகன்
விமானம், ரயில் என மாறி மாறி
பயணித்து
வந்துக் கொண்டிருக்கிறான்.

“எப்ப எடுப்பாங்க?”
யாரோ வினவ, வேறு யாரோ
விடையறுத்தார்கள்…

“கொஞ்சம் சீக்கீரம் எடுத்த
பரவாயில்லை…….”

இப்படியாய்….
இன்னுமாய்….
எந்த வித
நிகழ்வுகளையும்
உருவாக்காமல்…
யாருக்கும்
சிரமமின்றி….


எங்கோ அடையாளமின்றி
இறந்து போக வேண்டும்
என்பது என் ஆசை…
 

மீள்பதிவாக இந்த கவிதை...

33 கருத்துரைகள்:

மாத்தி யோசி said...

மனதிலே ஒரு இனம்புரியாத நெருடல் உங்கள் கவிதை படித்து! எல்லாம் உயிருடன் இருக்கும் வரைதான்! இறந்த மறு நொடி நமக்கு பேரே மாறிவிடும்! " பிணம் " என்று!

வெறும்பய said...

நல்லாயிருக்கு.. இது போல ஓன்று எழுத ஆரம்பித்து பாதியிலையே நிற்கிறது.. இந்த கவிதையை படித்த பின் முடித்துவிட வேண்டுமென்று தோன்றுகிறது..

பாரத்... பாரதி... said...

நான் இறந்து போயிருந்தேன் - என்ற தலைப்பில் தமிழ் மீனவனின் ஆத்மா பேசினால்....
கவிதை செய்யமுடியுமா?

மாணவன் said...

இவ்வளவுதான் மனித வாழ்க்கை என்பதை வரிகளில் சிறப்பாக சொல்லியிருக்கீங்க பாரதி

பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிங்க...

சி.பி.செந்தில்குமார் said...

வித்தியாசமான கற்பனை..இதே சாயலில் என் அப்பாவின் சடலம் என ஒரு கவிதை நான் எழுதி இருந்தேன் ஞாபகம் வந்துடுச்சு.. கலக்கல்

ஆமினா said...

நடமாடும் போது கிடைக்கும் மரியாதை இறப்பில்/முதுமையில் கிடைப்பதில்லை. மனிதநேயம் செத்துவிட்டதோ???

ரஹீம் கஸாலி said...

மீள்பதிவு என்றாலும் அருமையான கவிதை. கலக்கல்

வைகை said...

இதில் ஒரு நிமிடம் நான் என்னை இந்த சூழ்நிலையில் நினைத்துப்பார்த்தேன்....நன்றாகவே இருந்தது!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

:)

sakthistudycentre-கருன் said...

கவிதை யதார்த்தமாய் அருமை..

Ramani said...

நல்ல கவிதையை படித்த நிறைவு
குறிப்பாக இறுதியில்" போயிருக்கலாம் "
என இருந்தால் இன்னும் சரியாய் இருக்குமோ?.
தொடர வாழ்த்துக்கள்.

S Maharajan said...

மனித வாழ்கை பற்றிய
அருமையான பார்வை

பாலா said...

//நான் என்பது தொலைந்து
"அது" என அடையாளம்
மாறிவிட்டிருந்தது..

மறுக்க முடியாத நிதர்சனம். இதை கூட புரிந்து கொள்ளாமல் நாம் போடும் ஆட்டம் இருக்கிறதே...

செங்கோவி said...

மற்றவருக்குத் தொந்தரவில்லாமல் போய்ச் சேர்வது பெரிய விஷயம்தான்..

விக்கி உலகம் said...

அருமையான கவிதை.

இது தான் வாழ்கையின் சாராம்சம் என்பதை வலியுடன் கூறியுள்ளீர்கள்

Chitra said...

நல்ல மனுசன்;
நல்ல சாவு
என உரக்கப்பேசினார்கள்..
மனசுக்குள்
என்ன ஓடிக்கொண்டிருக்கும்
என்னால் அப்போது கூட
கணிக்க முடியவில்லை.


......ஒரு நிமிடம் யோசித்து பார்த்தால், .......ம்ம்ம்ம்....... ஆழமான அர்த்தங்கள் உடைய வரிகள்!

VELU.G said...

சிந்திக்க வைக்கும் கவிதை

வாழ்த்துக்கள்

பிரியமுடன் பிரபு said...

நல்லாயிருக்கு..
REALY NICE'

SEE MY POST
NEARLY UR THOUGHT

http://priyamudan-prabu.blogspot.com/2009/12/blog-post_7234.html

Jana said...

ஏற்கனவே நான் கண்வைத்த ஒரு கவிதை! ஒத்த எண்ணம்போல மீள்பதிவாகவே போட்டுட்டீங்க.. எம்மைக்காக்க தேவதூதன் வானிலிருந்து வரப்போவதில்லை. நம்மை காப்பாற்ற நாமே குரல்கொடுக்கவேண்டும். தொடர்ந்து ஒலிக்கட்டும் குரல். அவற்றின் ஒருமித்த பலத்திலாவது எமக்கு நல்லது நடக்கட்டும்.

தினேஷ்குமார் said...

ஐம்பது வருடம் வெண்ணையாய்
தின்று பாதுகாத்த உடம்பு
அசைவற்று கிடக்கிறது.
///நான் என்பது தொலைந்து///

ஆழமிகுந்த வரிகள் சகோ

தினேஷ்குமார் said...

"நான்" நம்மில் இறந்தால் தான் நலம் காண முடியும் உலகில்

கோமாளி செல்வா said...

//“எப்ப எடுப்பாங்க?”
யாரோ வினவ, வேறு யாரோ
விடையறுத்தார்கள்…//

மகன் வந்ததும் எடுப்பாங்க ..

ஆனா கவிதைல ஒரு பீலிங் இருக்குங்க .

MANO நாஞ்சில் மனோ said...

நெஞ்சம் கனக்குதுப்பா.........

அருண் பிரசாத் said...

கவிதை நல்லா இருக்கு...


சரி என்ன திடீருனு இதை மீள்பதிவா போட்டு இருக்கீங்க!?

இன்றைய கவிதை said...

”யாருக்கும்
சிரமமின்றி….


எங்கோ அடையாளமின்றி
இறந்து போக வேண்டும்
என்பது என் ஆசை…”

இது தான் முதல் முறை உங்கள் பதிவை படிக்கிறேன் ஆச்சர்யம் இதே போல் நானும் ஒன்று எழுதியிருந்தேன்

கனவும் நிஜமும்!
என் மரணத்தை நானே
கண்டேன் கனவினில்

கண் மூடி கால் நீட்டி
நடுக்கூடத்தில் நான்!

இதோ சில மணியில்
நான் பஸ்பமாவது உறுதி!

சுடும் நெருப்பின் பயம்
கனவை கலைத்தது!

இன்று கனவில், நாளை
நிஜத்தில்!

இடையில் கனவாய் நிஜ
வாழ்க்கை!!
Posted by இன்றைய கவிதை at 11:27 AM

எல்லோரும் சற்றேரகுறைய ஒரே நோக்கில் தான் இருக்கிறோமோ? யாருக்கும் சிரமமில்லாமல் இறப்பது ஒரு யோகம் , கவிதையில் வாய்க்கட்டும் நிஜத்தில் வாய்த்தாலும் காண இயலாது

மிகவும் ரசித்தேன்
நன்றி தோழரே

ஜேகே

யாதவன் said...

நான் இறந்தால்

தூக்குவதற்கு

நாலுபேர் இல்லை

நான் இறந்தால்

கவலைப்பட

மூன்றுபேர் இல்லை

நான் இறந்தால்

அழுவதற்கு

இரண்டுபேர் இல்லை

நான் இறந்தால்

கொள்ளிவைக்க

ஒருமகன் இல்லை

நான் இறந்தபின்

இறப்பதற்கு குடும்பத்தில்

யாருமே இல்லை

சென்னை பித்தன் said...

”ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டு
சூரையங்காட்டிடைக் கொண்டு போய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந்தார்களே.”

இன்றைய கவிதை said...

தங்களின் கோரிக்கைப்படி என்னால் இயன்ற குமுறலை “இன்றைய கவிதை” மூலம் வெளிப்படுத்துவேன் , நாளை பதிவு செய்கிறேன்

நன்றி
ஜேகே

இளங்கோ said...

//எங்கோ அடையாளமின்றி
இறந்து போக வேண்டும்
என்பது என் ஆசை//
நெகிழ வைத்த வரிகள்

தோழி பிரஷா said...

"எங்கோ அடையாளமின்றி
இறந்து போக வேண்டும்
என்பது என் ஆசை"
ஆழமான வரிகள்!
நல்லாயிருக்கு...

தோழி பிரஷா said...

"எங்கோ அடையாளமின்றி
இறந்து போக வேண்டும்
என்பது என் ஆசை"
ஆழமான வரிகள்!
நல்லாயிருக்கு...

ஆதவா said...

இறந்து போக நினைப்பவரின் பார்வையில் கவிதை.. புதுமையான கோணம்... ஆனால் நீங்கள் கவனிக்க மறந்தது என்னவெனில் எங்கோ இறந்து போனால் சிரமங்கள் கூடுமே தவிர குறையாது!

லீலா said...

மீள் பதிவு என்றாலும் சுடுகிற உண்மை வீரியத்துடன் வெளிப்பட்டது அடையாளமில்லாமல் இறந்து போதல் வாழ்கையை வாழாதவருக்குரியது பூந்தோட்ட ரோஜாக்கள் அனைத்தும் செய்முறை மதேர்வுகள் அனைத்திலும் முழு மதிப்பெண்கள் பெற வாழ்த்துக்கள்

Blog Archive

Follow by Email

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்