கொஞ்சம் காரம்... ரசித்த டிவிட்டர்கள்...@bharathbharathi
இந்தியாவுக்கு மூணு பக்கம் தண்ணீர் # எங்களுக்கு நாலு பக்கமும் கண்ணீர் # தமிழக மீனவன்.

@Ganesukumar 
நல்லா சிரிச்சு பேசிட்டு இருந்த பயபுள்ளைகிட்ட நாளைக்கு திங்ககிழமைன்னு சொன்னேன். மூஞ்சி வெளக்கெண்ணையை குடிச்ச மாதிரி ஆயிடுச்சு.

@minimeens 
கிராமத்திலிருந்து வந்தவனின் பஞ்ச் டயலாக்: அங்கே யூரியாவக் கலக்குனேன். இங்கே ஏரியாவக் கலக்குறேன்.

@navish_senthil 
ஈழத்தமிழனுக்காகப் பேசினால்தான் 'இறையாண்மை' என்கிறீர்கள். மீனவனுக்காக குரல் கொடுக்க ஏன் தயக்கம்? #TNfisherman #indianfishermen #TNfishermen

@araathu 
சிவனுக்கு ஒரு அடியாள்தான்- எமன். பிரம்மாவிற்கு உலகெங்கும் அடியாட்கள் - நாம்.

@Ganesukumar
ரிங்க்டோனில் சிட்டுக்குருவியின் சத்தத்தை பதிந்து நிஜ குருவியை அழித்தாயிற்று #SaveEarth

@TBCD 
  #TNfisherman #indianfishermen #TNfishermen #நடக்கலாம் தமிழ் நடிகர் நடிகைகள் இராசபக்சே முன்னிலையில் இலங்கை ஆக்ரமித்த தமிழகத்தில் நடனம் !

@Ganesukumar 
தமக்கு இலவச உணவு கிடைப்பதற்காக எதோ ஒரு உணவுவிடுதியில் பேருந்தை நிறுத்திவிட்டு ஊழலைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள் ஓட்டுனரும் நடத்துனரும்

@kolaaru
தன்னுடைய காதல் ஏழாவது காதலாக இருந்தாலும்,முதல் காதல் போலவே உறுகி உறுகி பேட்டி கொடுக்க சினிமாகாரர்களால் மட்டுமே முடியும் # ஃபெர்பாமன்ஸ்


@selvu 
தினம் ஒரு மொக்கை : என்னதான் ஒரு District கோணல் மாணலா இருந்தாலும் , அத தமிழ்ல சொல்லும்போது மா'வட்டம்' அப்படின்னுதான் சொல்லுவாங்க!

@meetmadhan 
எல்லா நிச்சயமின்மைக்கு அப்பால்/ இந்த வானத்தின் நிரந்திரம்/ என்னை திகைப்பூட்டிகொண்டே இருக்கிறது - கருணாகரன்

@BalaramanL 
தமிழர்கள் மீன் வலை வைத்திருக்கிறார்கள். இலங்கைப் படையினர் மீனவர் வலை வைத்திருக்கிறார்களோ?? #tnfisherman #tnfishermen #Indianfishermen


@jill_online 
தமிழக வாக்காளர்களே !! நல்ல ஆளுங்கட்சியை தேர்ந்தெடுப்பது அப்புறம் , ஒரு சிறந்த எதிர்கட்சியையாவது இந்த தேர்தலில் தேர்ந்தெடுங்கள்..

@minimeens 
இப்பல்லாம் குழம்புக் கரண்டியில் சோறு போட்டு, நெய் கரண்டியில் குழம்பூற்றி விட்டு நிறைய பணம் கேட்கிறார்கள்.#காக்கைக்கு இதைவிட அதிகம் வைப்பம்

@settaikaaran 
ஆட்கள் தேவை : சட்டமன்ற தேர்தலில் போட்டியிட 40 பேர் தேவை சாப்பாடு தங்குமிடம் இலவசம் அனுக வேண்டிய முகவரி விஜய டி ராஜேந்தர் M.A தலைவர்

@TBCD 
#நடக்கலாம் #TNfisherman #indianfishermen #TNfishermen இந்திய எல்லை கடற்கரையுடன் முடிகின்றது. அலைகளும் இலங்கைக்கே சொந்தம் !

***********************************************************************************

நவைச்சுவையை எதிர்பார்த்து வந்தவர்கள் இந்த பதிவில்
 பன்னிக்குட்டி ராம்சாமி அவர்களின் பின்னூட்டங்களை படிக்கவும்.
கோக்கு மாக்கு பதில்கள் தேவை. 


37 கருத்துரைகள்:

S Maharajan said...

//தினம் ஒரு மொக்கை : என்னதான் ஒரு District கோணல் மாணலா இருந்தாலும் , அத தமிழ்ல சொல்லும்போது மா'வட்டம்' அப்படின்னுதான் சொல்லுவாங்க!//

super

Jana said...

மீனவர்துயர்.. தொடர்கதை. தமிழர்கள்தானே....

ஃஃரிங்க்டோனில் சிட்டுக்குருவியின் சத்தத்தை பதிந்து நிஜ குருவியை அழித்தாயிற்றுஃஃ
டச்சிங்.

ரஹீம் கஸாலி said...

போட்டாச்சு போட்டாச்சு எல்லாத்திலும் வோட்டு போட்டாச்சு

sakthistudycentre-கருன் said...

சிரிப்போ.. சிரிப்பு...
வோட்டு போட்டாச்சு

மாணவன் said...

எல்லாமே நல்லாருக்குங்க பாரதி...

சில ட்விட்டுகள் வலிக்கின்றன வேதனைதான்..... வேற என்ன முடியும்.. தமிழகத்தில் அல்லவா பிறந்துவிட்டோம்...

MANO நாஞ்சில் மனோ said...

ஆரம்பமே கண்ணீரில் தொடங்குகிறதே.........

கும்மி said...

தமிழக மீனவர்களுக்கு ஆதரவாக ட்விட்டரில் நடக்கும் போராட்டம் CNN-IBN சேனலை அசைத்துள்ளது. சிறப்பு செய்திகள் வழங்குவதாக உறுதியளித்துள்ளனர். நேற்றிலிருந்து இந்தியாவின் Trend ல் #tnfisherman முதலிடத்தில் உள்ளது. ட்விட்டரில் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் நம் தமிழக மீனவர்களுக்கு ஆதரவாக ஒரு ட்விட்டாவது அனுப்புவோம்.

THOPPITHOPPI said...

//நல்லா சிரிச்சு பேசிட்டு இருந்த பயபுள்ளைகிட்ட நாளைக்கு திங்ககிழமைன்னு சொன்னேன். மூஞ்சி வெளக்கெண்ணையை குடிச்ச மாதிரி ஆயிடுச்சு.//

ஹஹாஹா

நகைச்சுவை என்றாலும் உண்மைதான்

பாலா said...

சென்ற வாரம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சில சிட்டுகுருவிகளை பார்த்த போது மனதில் இனம் புரியாத சந்தோஷம்.

Speed Master said...

//தமிழக வாக்காளர்களே !! நல்ல ஆளுங்கட்சியை தேர்ந்தெடுப்பது அப்புறம் , ஒரு சிறந்த எதிர்கட்சியையாவது இந்த தேர்தலில் தேர்ந்தெடுங்கள்..


well said

கோமாளி செல்வா said...

பணிச்சுமை காரணமாக இப்பத்தான் வரேங்க .,
டுவிட்டர் நல்லாத்தான் இருக்கு..

கோமாளி செல்வா said...

// S Maharajan said...
//தினம் ஒரு மொக்கை : என்னதான் ஒரு District கோணல் மாணலா இருந்தாலும் , அத தமிழ்ல சொல்லும்போது மா'வட்டம்' அப்படின்னுதான் சொல்லுவாங்க!//

சூப்பர்//ஹி ஹி ஹி , நன்றிங்க ..

NKS.ஹாஜா மைதீன் said...

நறுக்குன்னு 3 ஒட்டு போட்டு விட்டு கிளம்பியாச்சு....

அரசன் said...

அனைத்தும் அருமை நண்பரே ....
தொடருங்க,,,

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

செல்வா ட்விட்டேரை தவிர மிச்ச எல்லாம் சூப்பர்....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

செல்வா வோடது சூப்பரோ சூப்பர். ஹிஹி

சுந்தரா said...

காரம் = :( + :)

Anonymous said...

டிவிட்டரில் எங்களைப்பற்று ஏதும் வரவில்லையா? நீங்கள் ரசித்தவை... நாங்கள் சுவத்தவை.நன்று

சசிகுமார் said...

//ரிங்க்டோனில் சிட்டுக்குருவியின் சத்தத்தை பதிந்து நிஜ குருவியை அழித்தாயிற்று//

அற்ப்புதமான வாசகம்

சி.பி.செந்தில்குமார் said...

>>>@Ganesukumar
ரிங்க்டோனில் சிட்டுக்குருவியின் சத்தத்தை பதிந்து நிஜ குருவியை அழித்தாயிற்று #SaveEarth

கலக்கல்

ஹேமா said...

சிரித்தாலும் வேதனை கலந்த,
வேதனையை மறக்கச் சிரிக்கத் தந்த வரிகள் !

வைகை said...

இதில் சிலவற்றை தவிர்த்திருக்கலாம் பாரதி! சில காமெடியான டிவிட்களால் மீனவனின் சோகம் மறைக்கப்படுகிறது! அனைத்து கமென்ட்களையும் படியுங்கள் உங்களுக்கே புரியும்!

ஆமினா said...

//ஈழத்தமிழனுக்காகப் பேசினால்தான் 'இறையாண்மை' என்கிறீர்கள். மீனவனுக்காக குரல் கொடுக்க ஏன் தயக்கம்?//

நெத்தியடி வரிகள்

வைகை said...

ஃஃரிங்க்டோனில் சிட்டுக்குருவியின் சத்தத்தை பதிந்து நிஜ குருவியை அழித்தாயிற்றுஃஃ//////


உண்மைதான்...சமீபத்தில் நான் சென்ற பொழுது எங்கள் வீட்டு முற்றத்தில் விளையாடும் குருவிகளை பார்க்க முடியவில்லை, என் குழந்தைக்கு படத்தில்தான் காண்பிக்க வேண்டும்போல!

அருண் பிரசாத் said...

blog, twitter, face book.ஒண்ணு விடுறது இல்லை போல..... இருங்க உங்க ஸ்கூலுக்கு வரேன்......

இரவு வானம் said...

ஆமா அருண்பிரசாத் சொன்னது சரிதான், ஸ்கூல்ல உட்காட்ர்து எல்லா சோசியல் நெட்வொர்க்கையும் அலசறதா? இருங்க ஹெச் எம் கிட்ட கம்ப்ளைண்ட் பண்றேன் ...

Harini Nathan said...

//ஈழத்தமிழனுக்காகப் பேசினால்தான் 'இறையாண்மை' என்கிறீர்கள். மீனவனுக்காக குரல் கொடுக்க ஏன் தயக்கம்?//
நல்லாருக்கு பாரதி...

பாரத்... பாரதி... said...

ஆனா எல்லாவற்றிலும் கத்துக்குட்டிகள் தான். கண்டிப்பா ஸ்கூலுக்கு வாங்க.. மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து மிக அருகில் தான்..

KANA VARO said...

இவை சிரிப்பும் சீரியசுமான ட்விட்டுகள், ரசிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது.

ஜீ... said...

//ரிங்க்டோனில் சிட்டுக்குருவியின் சத்தத்தை பதிந்து நிஜ குருவியை அழித்தாயிற்று//
True!

Chitra said...

மனதை கனக்க வைக்கும் உணர்வுகள்....

சென்னை பித்தன் said...

நல்ல தேர்வு பாரதி!

செங்கோவி said...

மீனவர் துயர் இப்போதாவது தீர்க்கப்படவேண்டும்..

மாத்தி யோசி said...

இன்றுதான் முதல் முறையாக உங்கள் பக்கம் வருகிறேன் நண்பர்களே! இனிமேல் பதிவுகளுக்கு கமெண்டுகள் போடுவேன்! இன்ட்லியிலும் தொடருகிறேன்! என்னுடன் நட்புக்கு உங்களை அழைக்கிறேன்!

நன்றி.

Nesan said...

Suvaiyanapativu

பலே பிரபு said...

சிலது கொடுமையான உண்மைகள்

Madurai pandi said...

இந்த கொடுமை எப்போது முடியும்!!

Blog Archive

Follow by Email

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்