இன்று, நாளை, நாளை மறு நாள்.


செய்முறைத்தேர்வுகள் இனிதே நிறைவு பெற்ற நிலையில், வாழ்த்திய அனைத்து வலையுலக சொந்தங்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்.

இன்று பன்னிரெண்டாம் வகுப்பு மாணவியர்க்கு பிரிவு உபச்சார விழா...

பிரிவு உபச்சார விழாவிற்கான உரை உங்களுக்காக, நீங்கள் திருத்தம் செய்வதற்காகவும், இன்னும் கூடுதல் விஷயங்களை இணைப்பதற்க்காகவும்.

********************************************************************************
இன்று, நாளை, நாளை மறு நாள் என்று மூன்று விஷயங்கள்
+2 முடிக்க இருக்கும் உங்களுக்காக...

இன்று நீங்கள் செய்ய வேண்டிய விஷயம், மனசிலிருந்து மற்ற எல்லா விஷயங்களையும் எடுத்து விடுங்கள். படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள். டிவி பார்த்தல், மொபைல் போன் நோண்டுதல், தேவையற்ற விளையாட்டு, காதல் (செய்தித்தாள்களை படிப்பதால், உலகம் போக்குக்காக இதையும் சொல்லாத்தான் வேண்டியிருக்கிறது)
என எல்லாவற்றையும் உங்கள் மனதிலிருந்து எடுத்து விடுங்கள். இவையெல்லாம் உங்கள் நேரத்தை உங்களை அறியாமல் திருடிவிடும் களவாணிகள். சின்ன சின்ன சந்தோஷங்களுக்கு ஆசைப்பட்டால், பெரிய சந்தோஷங்களை அனுபவிக்க முடியாது.  டிவி பார்த்தல், மொபைல் போன் நோண்டுதல், தேவையற்ற விளையாட்டு, காதல் இதெல்லாம்
சின்ன சந்தோஷங்கள்.


நாளை நீங்கள் செய்ய வேண்டிய விஷயம் என்பது, பரீட்சைக்கு பிறகான விஷயங்கள்.
பரீட்சையோடு வாழ்க்கை முடிந்து விடுவது இல்லை, பரீட்சைக்கு பிறகு புத்தம் புது வாழ்க்கை துவங்குகிறது என்பதை மறந்து விடக்கூடாது. அது கல்லூரி வாழ்க்கை.
என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், அதற்கு எவ்வளவு செலவாகும், பாடத்தின் கடினத்தன்மை என்பதைப்பற்றிய தகவல்களை சேகரியுங்கள்.
நாங்களும் உதவுகிறோம்.
  
நாளை மறுநாள் செய்ய வேண்டிய விஷயமென்பது, வாழ்க்கைக்கும் கொஞ்சம் தயாராவது.

இன்றைய உலகத்தில் மனிதர்களை புரிந்துக்கொள்ளுதல் என்பது தான் சிரமமான விஷயமானதாக இருக்கிறது.

வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டுமென்றால் தன்னைச்சுற்றியுள்ள மனிதர்களை புரிந்துக்கொண்டு, அதற்கேற்ப தகவமைத்துக்கொள்ளுதல் மிக முக்கியம்.
ஏனெனில் இன்றைய உலகம் நல்லவர்களால் மட்டும் நிரம்பி இருக்கிறது என்று சொல்லிவிட முடியாது. சுற்றி இருப்பவர்களால் நம்மிடம் இருக்கக்கூடிய மிக சில நல்ல விஷயங்களையும் இழந்து விடக்கூடாது.

எந்த சூழ்நிலையிலும் நம்முடைய சுயத்தை, ஒரிஜினாலிட்டியை இழந்து விடக்கூடாது என்பது இதன் உள்ளர்த்தம்.

*********************************************************************************
பதிவர்களின் வழிகாட்டுதல்களையும் எதிர்நோக்குகிறோம்.

25 கருத்துரைகள்:

sathishsangkavi.blogspot.com said...

வாழ்த்துக்கள்...

Unknown said...

உங்கள் எண்ணங்கள் அத்தனையும் உண்மை

அருமையா சொல்லி இருக்கீங்க சகோ

வாழ்த்துக்கள்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அவசரமாகச் செல்வதால் ஓட்டுக்கள் மட்டும் போட்டுச் செல்கிறேன்! கமெண்டு அப்புறமா வரும்!!

Speed Master said...

வாழ்த்துக்கள்.

MANO நாஞ்சில் மனோ said...

நல்ல பகிர்வு....

ஆதவா said...

முன்பு நான் 10 வகுப்பு எழுதும் போது எனக்கு எந்த அறிவுரையும் வழங்கப்படவேயில்லை.. இப்பொழுதெல்லாம் பரவாயில்லை.. ஒரு நல்ல உபயோகமான பதிவு இது.

Jana said...

எண்ணங்கள் அனைத்தும் வண்ணம்போல அமைய வாழ்த்தக்கள்.

சக்தி கல்வி மையம் said...

வாழ்த்துக்கள்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நல்லா படிக்கணும். வாழ்த்துக்கள்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தேர்வு எழுதும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்...

வைகை said...

அப்பிடியே இன்றிலிருந்து ப்ளாக் பக்கமும் வராதிங்க! படிப்பை மட்டும் பாருங்க...வாழ்த்துக்கள்! :)

மாணவன் said...

அனைவரும் வெற்றிப்பெற வாழ்த்துக்கள்

கவி அழகன் said...

வாழ்த்துக்கள்...

செங்கோவி said...

காதல் பற்றி சொல்லாமல் விடுவதுதான் நல்லது..ஏதோ அதுவும் ஒரு சகஜமான விஷயம் போல் தோன்றுகிறது..மற்றபடி போதும் என்றே நினைக்கிறேன்..தேர்வு முடிவு எப்படி இருந்தாலும் சந்திக்கத் தயாராய் இருக்கச் சொல்லுங்கள்!

சி.பி.செந்தில்குமார் said...

வாழ்த்துக்கள்

Chitra said...

வாழ்த்துக்கள்...

...very nice post.

குறையொன்றுமில்லை. said...

தேர்வு எழுதும் அனைவருக்கும் ஆல் த பெஸ்ட்.வாழ்த்துக்கள்.

Prabu Krishna said...

தேர்வு எழுதப் போகும் அனைத்து மாணாக்கர்களுக்கும் வெற்றி பெற வாழ்த்துகள்.

Anonymous said...

ஆசிரியர் ஆசிரியர் தாங்க..தேர்வு எழுதப்போகும் அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள்

ரஹீம் கஸ்ஸாலி said...

கடந்த ரெண்டு நாட்களாக வேலைப்பளுவின் காரணமாக, என் தளத்தில் பதிவிட மட்டுமே முடிந்தது. மற்ற தளங்களுக்கு செல்லவும், வாக்கிடவும் பின்னூட்டமிடவும் முடியவில்லை. மன்னிக்கவும். இதோ மீண்டும் வந்துவிட்டேன்

சுசி said...

வாழ்த்துகள்..

சென்னை பித்தன் said...

ப்ளாக் பிரச்சினை சரியாகி விட்டது பாரதி.நன்றி.
உரை நல்லாருக்கு.
அனைவருக்கும் வாழ்த்துகள்!

ம.தி.சுதா said...

நல்லதை நினைப்போம் நல்லதே நடக்கும்.. வாழ்த்துக்கள்..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
தாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..

Admin said...

வாழ்த்துக்கள்

இராஜராஜேஸ்வரி said...

. சின்ன சின்ன சந்தோஷங்களுக்கு ஆசைப்பட்டால், பெரிய சந்தோஷங்களை அனுபவிக்க முடியாது.//
பொன் எழுத்துக்களில் பதியுங்கள்!!

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்