பித்தன் பேசுகிறேன்


எங்கள் வலைப்பூவிற்கு இன்று முதல் பொறுப்பேற்ப்பது "தீதும் நன்றும்" குழுவினர்.
எமக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
- இருளும் ஒளியும் குழுவினர்.  (வாய்ப்பிருந்தால் தேர்வுக்கு பிறகு சந்திப்போம்)
**********************************************************************************

பித்தன் பேசுகிறேன் 
                                    "வாழ்க வளமுடன்" 

அனைவருக்கும் வணக்கம் நான் பித்தன், என்னை அடிக்கடி நீங்கள் பார்த்திருக்கக்கூடும், சில சமயங்களில் நீங்கள் கூட என்னைப்போல நடந்துக்கொண்டிருக்கக்கூடும்.

நான் எதிர்மறை எண்ணங்களின் குவியல். இருளிலிருந்து ஒளியும், தீதிலிருந்து நன்றும் உருவாவதாக நம்புபவன்.

நான் பேசுவதையேல்லாம் கேட்டுவிட்டு நீங்கள் என்னை பைத்தியக்காரன் என்று சாடக்கூடும். எனக்கு அதைப்பற்றி கவலையில்லை, என் பேர் சொல்லி அழைப்பதாக நினைத்துக்கொள்வேன்.

சரி, விஷயத்திற்கு வருவோம், என் இன்றைய கேள்வி இதுதான். எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் என்பது ஒரு பழைய சினிமா பாடல். அது எப்படி எல்லோரும் எல்லாமும் பெற முடியும்? முடியுமெனில் மனித இனம் உருவாகி இத்தனை வருடமாகி ஏன் அது சாத்தியப்படவில்லை?

வாழ்க வளமுடன் என்று வாழ்த்துக்கிறார்களே? அது எப்படி சாத்தியம். எல்லோரும் வளமுடன் எப்படி வாழ முடியும்?

பள்ளம்  என்ற ஒன்று இல்லாமல் எப்படி உயர்வு என்பது சாத்தியம்?

அவரவர் திறமைக்கேற்ப, முயற்சிக்கேற்ப, தனித்தன்மைக்கு ஏற்ப வாழ்க என்று தானே சொல்ல வேண்டும்.
  
எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும், வாழ்க வளமுடன் என்பதெல்லாம் ஒரு பேராசையின் வெளிப்பாடாகவே தெரிகிறதே?

மீண்டும் சந்திப்பேன்.

33 கருத்துரைகள்:

Anonymous said...

//நான் எதிர்மறை எண்ணங்களின் குவியல்//

தொடரட்டும் உங்கள் பணி!

சக்தி கல்வி மையம் said...

அருமையான பதிவு .. நிறைவான பதிவு ...

See.,

http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_16.html

செல்வா said...

தீதும் நன்றும் குழுவினரை வரவேற்கிறேன் ..
இருளும் ஒளியும் குழுவினரையும் விரைவில் எதிர்பார்க்கிறேன்!!

செல்வா said...

கண்டிப்பா எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கவேண்டும் என்பது பேராசையின் வெளிப்பாடே .. ஏன்ன அவுங்க அவுங்க திறமைக்கு தகுந்த மாதிரி நிச்சயம் வாய்ப்புகள் கிடைக்கும் .. இதுல எல்லோருக்கும் எல்லாமும் கிடைச்சிட்டா யாருக்கு திறமை இருக்கு யாருக்கு திறமை இல்லை அப்படிங்கிறதே தெரியாம போய்டும் ..

Speed Master said...

வருக வருக

சி.பி.செந்தில்குமார் said...

>>>
எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும், வாழ்க வளமுடன் என்பதெல்லாம் ஒரு பேராசையின் வெளிப்பாடாகவே தெரிகிறதே?

illai..இல்லை.. அது ஒரு பாசிட்டிவ் திங்க்கிங்க் அவ்வளவுதான்

மாணவன் said...

தீதும் நன்றும் குழுவினரை வரவேற்கிறேன் ..
இருளும் ஒளியும் குழுவினரையும் விரைவில் எதிர்பார்க்கிறேன்!!

:)

சிதா said...

மற்றவர்கள் நம்மை நல்லவர்கள் என நினைக்கவேண்டும் என்பதன் வெளிப்பாடு தான் இத்தகைய சுயநல வாழ்த்துகள்.எங்கே! அவர்களிடம் அவசரகாலத்தில் பணம் கேட்டுப்பாருங்கள். வாழ்க...வாழ்க வளமுடன் என வாழ்த்துவார்களா? எனப்பார்ப்போம்.

அஞ்சா சிங்கம் said...

வாழ்த்து சொல்றதுக்கு காசா பணமா மனசார சொல்லிட்டு போகலாம் .
வாழ்த்துக்கள் எல்லாம் பலித்து விடும் என்றிருந்தால் ஒரு பய வாழ்த்த மாட்டான் ..........

FARHAN said...

வாழ்க வளமுடன் என்று வாழ்த்துக்கிறார்களே? அது எப்படி சாத்தியம். எல்லோரும் வளமுடன் எப்படி வாழ முடியும்?

பள்ளம் என்ற ஒன்று இல்லாமல் எப்படி உயர்வு என்பது சாத்தியம்?


//இது பேராசை இல்லை வாழ்த்து சொல்வோருக்கும் வாழ்கையில் ஏற்ற இறக்கம் வரும் தெரியாமல் இல்லை வாழ்க வளமுடன் என்பதனுள் பொருள் துன்பம் வந்தாலும் எதிர் நீச்சல் போட்டு வாழ்ந்து காட்டு என்னும் உள்ளார்ந்த பொருளையும் கொண்டுள்ளது

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தொடரட்டும் உங்கள் பணி
வாழ்த்துக்கள்..

வைகை said...

அவரவர் திறமைக்கேற்ப, முயற்சிக்கேற்ப, தனித்தன்மைக்கு ஏற்ப வாழ்க என்று தானே சொல்ல வேண்டும்./////

இதுபோன்று கேட்பது வாதத்திற்கு நன்றாக இருக்கும்.......ஆனால் நடைமுறையில் அதன் பொருள் எல்லாருக்கும் கிடைக்க வேண்டும் என்பது பொருள் அல்ல.....எல்லாம் கிடைத்தவர்களில் ஒருவனாக இருக்க வேண்டும் என்பதே!

ரஹீம் கஸ்ஸாலி said...

தொடரட்டும் உங்கள் பணி
வாழ்த்துக்கள்..
நண்பரே....உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். பார்க்கவும்.
http://blogintamil.blogspot.com/2011/02/2-wednesday-in-valaichcharam-rahim.html

Unknown said...

எப்புடிங்க இவ்வளவு யோசிக்கிறீங்க???/

ஹேமா said...

எதற்கும் முயற்சி தேவை.முயற்சி செய்து கிடைக்காவிட்டாலும் வெற்றியேதான் !

அன்புடன் நான் said...

வாழ்க வளமுடன்...

அன்புடன் நான் said...

ஒருத்தனை ஒழிக என்பதால் அவன் ஒழிந்தா போகிறான்.... அது பொலதான் வாழ்க என்பதும்

சென்னை பித்தன் said...

புதுக் குழுவுக்கு வாழ்த்துகளும்,இனிய வரவேற்பும்.
வாழ்க வளமுடன் என்பது செந்தில்குமார் சொல்வது போல் ஒரு ஆக்க பூர்வமான் சிந்தனையே!நார்மன் வின்செண்ட் பீல் சொல்வார்--மற்றவர்களுக்கு நன்மை நினைக்கும் போது அந்த எண்ணங்கள் எறி வளை போல் திரும்பி நம்மை வந்தடையும் என்று!

போளூர் தயாநிதி said...

தீதும் நன்றும் குழுவினரை வரவேற்கிறேன் ..வாழ்க வளமுடன்...

Jana said...

தாங்கள் குறிப்பட்ட எல்லாமும் பெறவேண்டும், வாழ்க வளமுடன் என்பவை, அப்போது உச்சத்தில் இருந்த சமவுடமை, மார்ஸிய சி;தனைகளின் பாதிப்புக்களால் வந்தவையாகவே கருதலாம். இருப்பினும் ஒரு மன மகிழ்ச்சிக்காக, நல்ல உணர்வுக்காக அப்படி சொல்லிக்கொள்வதிலும் மனிதம் துளிர்விடுவதாக எண்ணியும் இரக்கலாம்.

Unknown said...

நானும் வரவேற்கிறேன்

இளங்கோ said...

//எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும், வாழ்க வளமுடன் என்பதெல்லாம் ஒரு பேராசையின் வெளிப்பாடாகவே தெரிகிறதே?//
Hmmm...

Chitra said...

வாழ்க வளமுடன் என்று வாழ்த்துக்கிறார்களே? அது எப்படி சாத்தியம். எல்லோரும் வளமுடன் எப்படி வாழ முடியும்?


.... they are sending their positive wishes and thoughts.... good vibrations! எல்லோரும் நல்லா இருக்கணும் என்று நினைக்கிறவங்க, நிச்சயமாக, தெரிந்தே மற்றவர்களுக்கு தீது நினைக்க மாட்டாங்க - செய்ய மாட்டங்க...
We need not see the literal meaning, right?

செங்கோவி said...

தீதும் நன்றும் குழுவே வருக....
இருளும் ஒளியும் குழுவினரே விரைவில் மீண்டு வாருங்கள்!

எதற்கு இந்த எதிர்மறைப் பதிவு?

வினோ said...

வாருங்கள், வாருங்கள்

Unknown said...

அருமையான பதிவு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வருக வருக தீதும் நன்றும் குழுவினரே....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஏன் இந்த எதிர்மறை எண்ணம்....?

இராஜராஜேஸ்வரி said...

புதுக் குழுவிற்கு வாழ்த்துக்கள்.!
எண்ணம் போல் வாழ்வு!!

Vijay Periasamy said...

///அவரவர் திறமைக்கேற்ப, முயற்சிக்கேற்ப, தனித்தன்மைக்கு ஏற்ப வாழ்க என்று தானே சொல்ல வேண்டும்.///



இதைத்தான் டார்வின் அப்பொழுதே " SURVIVAL OF THE FITTEST " என்று கூறியிருக்கிறார்.


ஒரு டவுட் ?

அரசியல் பின்புலம், பணக்காரராக பிறத்தல், சாதிக்கட்சியின் ஆதரவு இவையனைத்தும் திறமை, முயற்சியில் அடங்குமோ ?

சிதா said...

எனது ஐந்து முடிவுகளை இப்பொது தருகிறேன்.மீண்டும் முயற்சிக்கிறேன்.

1.நீ
என் கருவறையின்
வெளி நடப்பு...

2.கடைசிகால
கஞ்சிக்கு
தவமிருக்கும்...
தாய்
நான்.

3.வீதியோரம்
வீசியெறியப்பட்ட...
மக்கி போன
மனைவி
நான்...

4.குடி போதையில்
நீ
இருக்கிறாய்...

5.பிறக்கும் போதே
பிறழ்ந்த பிறவியானவன்...
நீ

சாகம்பரி said...

வாழ்க்கையின் வெற்றியே நிறைவான மனதை பெறுவதுதான். " குறையொன்றுமில்லை ....." என்பதுகூட நிறைவான மனதின் வெளிப்பாடுதான். அது மன நிறைவைப் பெற வாழ்த்துவதுதான் " எல்லோரும்...." மற்றும் "வாழ்க வளமுடன்.." என்பதும். இதை பொருளாதார ஒப்பீடாக நினைக்கக்கூடாது.

சாகம்பரி said...
This comment has been removed by the author.

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்