உன்னை நானறிவேன்..,




உங்களிடம் இருக்கிறதா ஒரு சவாலை எதிர் கொள்ளும் துணிச்சல் என்ற பதிவில் கவிதை ஒன்றின் முதல் பாதியை கொடுத்து, மீதி பாதியை நிறைவு செய்ய  நாங்கள் விடுத்த சவாலை ஏற்று,   கவிதைகள் வழங்கிய

கவிதை காதலன் 
# கவிதை வீதி # சௌந்தர் (மூன்று முடிவுகள் வழங்கியுள்ளார்)
வெண் புரவி (தனி பதிவாக எழுதியுள்ளார்)
சென்னை பித்தன் (மூன்று முடிவுகள் வழங்கியுள்ளார்)
vinu 
Ramani 
வெ.இரா.சிதா (ஐந்து வேறுபட்ட பார்வைகளில் கவிதை வழங்கியுள்ளார்)
VELU.G   

ஆகியோர்க்கு நன்றிகள்.

மேற்கண்ட பதிவர்களின் வரிகளை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

சிறப்பான முடிவுகளை வழங்கிய மேற்கண்ட பதிவர்களுக்கு "வலையுக கவியரசு" என்னும் விருது வழங்கி கௌரவிக்கிறோம்..


கவிதையை நிறைவு செய்வதில் எமது முயற்சி...(நீல நிறத்தில் உள்ளது.)

ஒரு மிகப்பெரிய
யுத்தத்திற்கான
ஆயத்தங்கள்
உன்னிடம் தெரிந்தது.


மெல்லியதாய்
துவங்கிய
உன் வார்த்தைகள்
ஐப்பசி அடைமழையாய்
வலுக்கிறது.


நான் நிராயுதபாணியாய்
மௌனம் காக்கிறேன்.
தற்காப்பு வார்த்தைகள்
மட்டுமே
மனதில் கோர்க்கிறேன்.


என் மௌன நீட்டிப்பு
உன்னை
மேலும்
ஆவேசமடையச்செய்கிறது.


உன் கண்களும்
சுவாசமும்
நிலைக்கொள்ளாது
அலைகின்றன.


வார்த்தைகள்
மேலும் தடிக்கின்றன.
கேடயம் தாண்டி
சில
என் இதயம்
துளைக்கின்றன.


நீ
எல்லை தாண்டிய
போதும்
மேலும்
மௌனம் காக்கிறேன்.
எதையும் பொருட்படுத்தாத
பாவனையில்


ஏனெனில்...

உன்னை நானறிவேன்..,


இன்னும் 
சிறிது நேரத்தில் 
காட்சிகள் 
மாறியிருக்கும்.


என் தோள் சாய்ந்து
ஓய்ந்திருப்பாய்..


மேகங்கள் 
கலைந்து விட்ட 
தெளிந்த வானமாய் 
நிசப்தம் வளர்ப்பாய்...


இருவர் மட்டுமான 
வாழ்க்கை பயணத்தில்


உன் அதிர்வும்
உன் அமைதியும்
"என்னை அன்றி 
வேறு எவரிடம்
செலுத்தக்கூடும்?"

ஈழ போரில் தன் இரண்டு மகன்களையும் இழந்து விட்டு,  இருவர் மட்டுமாய் வாழ்க்கை பயணத்தை தொடரும் ஒரு பெற்றோரின் மனநிலை இங்கே கவிதையின் நிறைவாகியிருக்கிறது.

ஸ்பெக்ட்ரம்(SPECTRUM) ; அட இது வேறங்க...



பூ மாலை என்பது பூக்களின் தொகுப்பு எனில் நிறமாலை என்பது என்னவாக இருக்கமுடியும்?
ஆம். நிறமாலை என்பது நிறங்களின் தொகுப்பு.
ஸ்பெக்ட்ரம்(SPECTRUM) என்பது நிறமாலை என்பதன் ஆங்கிலபதம்.

வெள்ளை நிறம் என்பது பல்வேறு நிறங்களின் தொகுப்பு, அதாவது ஊதா முதல் சிவப்பு வரையுள்ள வண்ணங்களின் தொகுப்பு. ஒவ்வொரு வண்ணத்திற்கு அலைநீளம் என்பது உண்டு. அலைநீளம் அடிப்படையில் சொல்லுவதென்றால் வெள்ளை என்பது பல்வேறு அலைநீளங்களின் தொகுப்பு.

வெள்ளை நிற ஒளியை ஒரு முப்பட்டகம் வழியாக அனுப்பும் போது, அது  VIBGYOR என்று சொல்லக்கூடிய ஊதா(VIOLET),கருநீலம்(INDIGO), நீலம்(BLUE), பச்சை(GREEN), மஞ்சள்(YELLOW), ஆரஞ்சு(ORANGE) மற்றும் சிவப்பு(RED) வண்ணங்களாக பிரிகையடைகிறது. இந்த நிகழ்ச்சிக்கு நிறப்பிரிகை என்று பெயர்.

இந்த வண்ணங்களில் ஊதா குறைந்த அலைநீளமுடையது, சிவப்பு அதிக அலைநீளமுடையது.

சூரிய ஒளியும் கூட வெள்ளை நிற ஒளியே. மழைத்துளியின் வழியே சூரிய ஒளி செல்லும் போது நிறப்பிரிகை ஏற்படுவதன் காரணமாக தான் வானவில் உண்டாகிறது. இவ்வாறு  சூரிய ஒளி சிதறலடிக்கப்படும் நிகழ்ச்சியை ஒளிச்சிதறல் என்றும் அழைக்கிறார்கள்.

ஊதா நிறம் குறைந்த அலைநீளமுடையதாக இருப்பதால், அதிக அளவில் சிதறலடிக்கப்படுவதால் வானம் நீலநிறமாக காணப்படுகிறது.

சர்.சி.வி. ராமன் இத்தகைய ஒளிச்சிதறலை பற்றி ஆய்வு செய்துதான் நோபல் பரிசு பெற்ற கண்டுபிடிப்பான ராமன் விளைவினை உருவாக்கினார்.

வானம் நீலநிறமாக காணப்படுவதன் காரணமும் இதுதான்.

உதிரிப்பூக்கள்:

ஸ்பெக்ட்ரம் என்பதை அதிர்வெண் அடிப்படையில் அதிர்வெண்களின் தொகுப்பு என்றும் கூறலாம்.

ஊதாவிற்கு அலைநீளம் குறைவு ஆனால் அதிர்வெண் அதிகம்.
சிவப்பு வண்ணத்திற்கு அலைநீளம் அதிகம்,ஆனால் அதிர்வெண் குறைவு. (குழப்பமா இருக்கா, சுத்துதே சுத்துதே பூமி-னு பாடத்தோணுதா?)

வானவில் உண்டாகும் நிகழ்வில் முழு அக எதிரொளிப்பு நிகழ்ச்சியும்
நடைப்பெறுகிறது.

மின்காந்த அலையிலிருந்து பெறப்படும் நிறமாலைக்கு மின்காந்த நிறமாலை என்று பெயர்.

கட்புலனாகும் நிறமாலை என்பது, மின்காந்த நிறமாலையில் உள்ள மனிதக் கண்ணால் பார்க்கக்கூடிய நிறமாலைப் பகுதியாகும்.இந்த அலைநீள எல்லையுள் அடங்கும் மின்காந்தக் கதிர்வீச்சு "கட்புலனாகும் ஒளி" அல்லது வெறுமனே "ஒளி" எனப்படுகின்றது.

கேள்வி நேரம்:

வானம் காலை மற்றும் மாலை வேளைகளில் சிவப்பாக காணப்படுவதன் காரணத்தை யூகிக்க முடிகிறதா?

தபால் பெட்டி சிவப்பு வண்ணத்தில் இருப்பதற்கான காரணம் என்ன?

வாகனங்களின் பின்புறத்தில் சிவப்பு விளக்கு பயன்படுத்தப்படுவதன் காரணம் என்வென்று சொல்லமுடியுமா?

நிறமாலைமானி என்பது என்ன கருவி என சொல்ல முடியுமா?(எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனைக்கால்கள்?)

உங்களிடம் இருக்கிறதா ஒரு சவாலை எதிர் கொள்ளும் துணிச்சல்.




கவிதைக்காரர்களுக்கு ஒரு சவால்..

இங்கே உள்ள கவிதையை நிறைவு செய்ய வேண்டும். 


விதிமுறைகள் ஏதுமில்லை. 


முற்றிலும் புதியதாக எழுதவிரும்பினால், கவிதையின் களம் மாறாமல் இருந்தல் நலம்.


தலைப்பு உங்கள் விருப்பம். உங்கள் வலைப்பூவில் வெளியிட்ட பின், எங்களுக்கு தகவல் சொன்னால் கூட போதும்.


நிறைவு பகுதியுடன் கூடிய எங்களின் கவிதை, வரும் திங்கள் அன்று வெளியிடப்படும். 


பார்க்கலாம்.. கலக்கப்போவது யாரு-னு?

ரு மிகப்பெரிய
யுத்தத்திற்கான
ஆயத்தங்கள்
உன்னிடம் தெரிந்தது.

மெல்லியதாய்
துவங்கிய
உன் வார்த்தைகள்
ஐப்பசி அடைமழையாய்
வலுக்கிறது.

நான் நிராயுதபாணியாய்
மௌனம் காக்கிறேன்.
தற்காப்பு வார்த்தைகள்
மட்டுமே
மனதில் கோர்க்கிறேன்.

என் மௌன நீட்டிப்பு
உன்னை
மேலும்
ஆவேசமடையச்செய்கிறது.

உன் கண்களும்
சுவாசமும்
நிலைக்கொள்ளாது
அலைகின்றன.

வார்த்தைகள்
மேலும் தடிக்கின்றன.
கேடயம் தாண்டி
சில
என் இதயம்
துளைக்கின்றன.

நீ
எல்லை தாண்டிய
போதும்
மேலும்
மௌனம் காக்கிறேன்.
எதையும் பொருட்படுத்தாத
பாவனையில்

ஏனெனில்...

பன்னிக்குட்டி ராம்சாமி - ஒரு டெரர் பயோடேட்டா.


ஸ்டாப் தி மியுஸிக்...! ஹூ இஸ் தி டிஸ்டப்பன்ஸ்? தொழிலதிபர்கள், கூடை வெச்சிருக்கவன், பஞ்சுமுட்டாய் விக்கிறவன், பாலிடிக்ஸ் பண்றவன், கடஞ்சொல்லி பீடி குடிச்சவன் எல்லாம் அப்படியே ஒன் ஸ்டெப் பேக் மேன்!


நான் ரொம்ப்ப பிசி, டெல்லி ப்ரோக்ராம கேன்சல் பண்ணிட்டு வந்திருக்கேன், பூஸ் ரெடியா? ஓக்கே... காந்தக் கண்ணழகி, பூ மிதிக்கப் போவமா?
ஸ்டார்ட் மியூசிக்! 


பெயர்: பன்னிக்குட்டி ராம்சாமி.

பட்டப்பெயர்: இரண்டாயிரம் பின்னூட்டம் வாங்கிய அபூர்வ சிந்தாமணி.

வரலாற்றில் அடையாளம் :    நையாண்டி மூவரில் மூத்தவர்.
                                                              (மற்ற இருவர்   பட்டாபட்டி 世界上最好的外套杀, 
                                                                 மங்குனி அமைச்சர் ககக போ)

தொழில் : அனைவரையும் "ஓட்டுவது", சிரிப்பு போலீசை விரட்டுவது.    
                               (மாமூலான தகராறு) .

உப தொழில் : பதிவுகளை கொஞ்சம் பெண்டு நிமித்தி, டிங்கரிங் பண்ணி, 
                                பெயிண்டு அடிச்சு கலாய்ப்பது.

அதிகம் பாதிக்கப்பட்டவர்கள்: சின்ன டாகுடரு, பெரிய டாகுடரு.

எதிரிகள் : முன்பு விஜய் , இப்போது ராஜபக் ஷே.
                        (ஒண்ணு டம்மி பீசு இன்னொண்னு நிஜ பிசாசு)

பலம்: ரொம்ப காலமாக குட்டியாகவே இருப்பது.  (பன்னிக்"குட்டி" )

பலவீனம்: ஆங்கிலத்தில் வலைப்பூவின் பெயர் வைத்திருப்பது. 
                        (சீனா அய்யா எங்கிருந்தாலும் சவுக்கோடு மேடைக்கு வரவும்)

எம்மை கவர்ந்தது: டிவிட்டர் போரில் முன்ணணி வீரராய் களம் கண்டது.

நல்லவிஷயம் : சமூக பதிவுகளில் பின்னூட்டம் இடும் போது நாகரீகம் காட்டுவது.

பஞ்ச் டயலாக் : என்னப் பத்தி தெரியுமில்ல? ங்கொக்கா மக்கா...! குசும்பப் பாத்தியா? படுவா...பிச்சிபுடுவேன் பிச்சு!

டிஸ்கி : பன்னிக்குட்டியாரின் இன்னுமொரு பரிமாணத்தை அறிய, இந்த பதிவில் அவருடைய பின்னூட்டங்களை படிக்கவும்.
(இதெல்லாம் நாளைக்கி சரித்திரத்துல வரும், பாடத்துல வரும்...)


********************************************************************************

எமது முந்தைய பயோடேட்டாக்கள்:





கடுகு சைஸ் பொருளை வச்சு இந்த உலகத்தை அழிக்க முடியுமா?


கடுகு சைஸ் பொருளை வச்சு இந்த உலகத்தை அழிக்க முடியுமா?
முடியும் என்கிறது ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடின்படி அமைந்த E=Mc2 
என்னும் சமன்பாடு.


உதாரணத்துக்கு ஐம்பது கிலோ இருக்கின்ற ஒருவர் உங்கள் மீது மெதுவாக வந்து மோதினால் உங்களுக்கு பெரிய விஷயமாக தோன்றாது, ஆனால் அதே  ஐம்பது கிலோ எடை இருப்பவர், நூறு கிலோ மீட்டர் வேகத்தில் வந்து உங்கள் மீது மோதினால், "பிப்டி கேஜி தாஜ்மகால்" அப்படினு பாட்டு பாட முடியுமா?   ஐம்பது கிலோ எடை, இயக்கத்தில் வேகமாக வந்து மோதியதால் எடை அதிகமாகி விடுமல்லவா?

நூறு கிலோ மீட்டர் வேகத்தில் வருவதற்கு பதில் ஒளியின் திசைவேகத்தில் வந்து மோதினால்?

ஒளியின் திசைவேகம் என்பது C= 3 x 108 ms-1. அதாவது ஒரு செகண்டில் மூணு லட்சம் மீட்டர் வேகத்தில் வந்து மோதுவதாக கற்பனை செய்துக்கொள்ளுங்கள். இப்போது அதிக வேகத்தின் காரணமாக பொருளின் நிறை  நிச்சயம் மிக அதிகமாக இருக்கும்.

வேகத்தை இன்னும் அதிகரித்து ஒளியின் திசைவேகத்தின் இருமடி வேகத்தில் செலுத்தினால், அதாவது C2 = 9 x 1016  ms-1  என்னும் வேகத்தில் மோதினால் எப்படியிருக்கும்?  கட்டாயம் கடுகு சைஸ் பொருளின் நிறை,  எதிரில் இருக்கும் எந்தவொரு பொருளையும் தூள் தூளாக்கி விடும்.

இவ்வாறு இயங்கும் பொருளொன்றின் திசைவேகம் மாறுவதன் காரணமாக ஏற்படும் நிறை அதிகரிப்பை ஆற்றலாக மாற்ற இயலும் என்பது தான் E=Mc2
சமன்பாட்டின் தத்துவமாகும்.அதன் பெயரே நிறை ஆற்றல் இணைமாற்றுச்சமன்பாடு என்பது தான்.

கடுகு சைஸ் பொருளை வச்சு இந்த உலகத்தை அழிக்க முடியுமா? என்று கேட்டால் முடியும் என்பது தான் அறிவியல் உண்மை. இந்த ஆற்றலை உலகை அழிக்க பயன்படுத்தாது, ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு கூட பயன்படுத்தலாம்.

உதிரிப்பூக்களாய் சில தகவல்கள் :

நியூட்டனின் இயக்கவியல் கோட்பாடுகளின் படி நீளம், நிறை, காலம் மாறாதவை. அதாவது எங்கு, எப்படி அளந்தாலும் ஒரு பொருளின் நீளம் மாறாமல் இருக்கும். ஆனால் ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு படி நீளம் மாறும்,அது போலவே நிறை மாறும், காலமும் மாறும்.
(எல்லாம் மாறிவிடும் என்று சொல்லும் ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாட்டில் ஒரே ஒரு விஷயம் மட்டும் மாறாததாக சொல்லப்படுகிறது. அது என்னவென்று சொல்ல முடியுமா?)

ஐன்ஸ்டீனின் புகழ்பெற்ற இந்த சமன்பாட்டிற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படவில்லை என்பது உங்களுக்கு தெரியுமா? (ஒளிமின் விளைவிற்கான சமன்பாட்டிற்காகவே வழங்கப்பட்டது)


ஐன்ஸ்டீனின் இந்த E=Mc2சமன்பாட்டினை பயன்படுத்தியே ரூதர்போர்ட் என்பவர் அணுகுண்டினை வடிவமைத்தார்.


இந்த சமன்பாட்டினை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தித்தான் அணுக்கரு உலைகளில் அணுசக்தி உருவாக்கப்படுகிறது.



அணுக்கரு உலைகளில் உருவாக்கப்படும் அணுசக்திதான் இனிவரும் நாட்களை வழிநடத்தும் என்பது எதிர்கால உண்மை.

பித்தன் பேசுகிறேன்


எங்கள் வலைப்பூவிற்கு இன்று முதல் பொறுப்பேற்ப்பது "தீதும் நன்றும்" குழுவினர்.
எமக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
- இருளும் ஒளியும் குழுவினர்.  (வாய்ப்பிருந்தால் தேர்வுக்கு பிறகு சந்திப்போம்)
**********************************************************************************

பித்தன் பேசுகிறேன் 
                                    "வாழ்க வளமுடன்" 

அனைவருக்கும் வணக்கம் நான் பித்தன், என்னை அடிக்கடி நீங்கள் பார்த்திருக்கக்கூடும், சில சமயங்களில் நீங்கள் கூட என்னைப்போல நடந்துக்கொண்டிருக்கக்கூடும்.

நான் எதிர்மறை எண்ணங்களின் குவியல். இருளிலிருந்து ஒளியும், தீதிலிருந்து நன்றும் உருவாவதாக நம்புபவன்.

நான் பேசுவதையேல்லாம் கேட்டுவிட்டு நீங்கள் என்னை பைத்தியக்காரன் என்று சாடக்கூடும். எனக்கு அதைப்பற்றி கவலையில்லை, என் பேர் சொல்லி அழைப்பதாக நினைத்துக்கொள்வேன்.

சரி, விஷயத்திற்கு வருவோம், என் இன்றைய கேள்வி இதுதான். எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் என்பது ஒரு பழைய சினிமா பாடல். அது எப்படி எல்லோரும் எல்லாமும் பெற முடியும்? முடியுமெனில் மனித இனம் உருவாகி இத்தனை வருடமாகி ஏன் அது சாத்தியப்படவில்லை?

வாழ்க வளமுடன் என்று வாழ்த்துக்கிறார்களே? அது எப்படி சாத்தியம். எல்லோரும் வளமுடன் எப்படி வாழ முடியும்?

பள்ளம்  என்ற ஒன்று இல்லாமல் எப்படி உயர்வு என்பது சாத்தியம்?

அவரவர் திறமைக்கேற்ப, முயற்சிக்கேற்ப, தனித்தன்மைக்கு ஏற்ப வாழ்க என்று தானே சொல்ல வேண்டும்.
  
எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும், வாழ்க வளமுடன் என்பதெல்லாம் ஒரு பேராசையின் வெளிப்பாடாகவே தெரிகிறதே?

மீண்டும் சந்திப்பேன்.

அரசியல் ஆடுகளம் : டிவிட்டரில் ரசித்தவை.

@RajanLeaks
கடன் தான் தமிழகத்தை வாழ வைக்கிறது-அன்பழகன் # செஞ்சோத்துக் கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா!

@Pattapatti
த‌னி‌த்து போ‌ட்டி‌யிட தயாரா? ராமதாசு‌க்கு சர‌த்குமா‌ர் க‌ே‌ள்‌வி #.. விடாதீங்க.. பல்லு விளக்காம கேளுங்க தலீவா.. நாறட்டும்.

@araathu 
விருப்பமுள்ளவர்கள் மட்டும் வருமானவரி கட்டலாம் எனில், தற்போது பீத்திக்கொள்ளும் எத்தனை பேர் அதே வரி கட்டுவீர்கள்.


@settaikaaran 
தினமும் அறிக்கை விடும் செயலலித்தாவை ஓய்வில் இருக்கிறார் என்றால் கோவம் வராதா # அதிமுக வினர் அமளி....

@bharathbharathi
நீங்க புரட்சியெல்லாம் பண்ண வேண்டாம். ஒழுங்கா ஓட்டுப்போட வாங்க # எகிப்து மக்கள் to இந்தியன்ஸ் #tnfisherman

@minimeens 
நங்கநல்லூர் வெற்றிவேல் தியேட்டரில் வில்லாளன் படம் காலைக்காட்சியாக ஓடிக் கொண்டே இருக்கிறது. விசாரித்தால் அந்த வெற்றிவேல்தான் ஹீரோவாம்.






@RajanLeaks
என் வாழ்க்கையில் எல்லாமே விதிப்படிதான் நடந்துள்ளது-பிரபுதேவா # மத்தவனுக்கெல்லாம் வாசப்படியா நடக்குது! நல்லா உதிர்க்கறானுகப்பா தத்துவம்

@saran 
இந்தியனுக்கு ஒண்ணுன்ன தமிழன் வருவான்,ஆனா தமிழனுக்கு ஒண்ணுன தமிழன் மட்டும்தான் வருவான்,ஆனா இந்திய வேற்றுமையில் ஒற்றுமை காணும்நாடு #TNfisherman

@anbuvijay 
வெட்கமில்லை வெட்கமில்லை வெட்கமென்பதில்லையே - உச்சிமீது ஸ்பெக்ட்ரம் வந்து இடி இடித்த போதிலும்..

@jill_online:
காதல்,காதலியின் முதலெழுத்தை மாத்திரமல்ல காதலனின் தலையெழுத்தையும் மாற்றிவிடுகிறது #Feb14

@THOPPITHOPPI
மருத்துவர் அய்யா எந்தக் கூட்டணில இருக்காருன்னு அவருக்கே தெரியல, மொதல்ல அவர் கால்ல ஒரு ஜீபிஎஸ் பட்டைய மாட்டுங்க #tnfisherman


@baleprabu 
இந்தியன் ஆயில்: பெட்ரோல் விலை குறையும். //போங்க தம்பி எங்களுக்கு ஏற்கனவே காது குத்தியாச்சு.

@arasu1691 
சர்வாதிகாரத்தை விட அதிக ஆபத்தானது , ஜனநாயகத்தின் முகமூடியில் ஒளிந்திருக்கும் முதலாளித்துவம் #முகமூடி

@kolaaru 
திமுக கூட்டணிக்கு பாமக வரவேண்டும்:திருமா # இங்க வாங்க பாஸ்..நாம அடிவாங்குறது சகஜம்தான..பயந்தா தொழில் பண்ண முடியுமா.,

@kathirerode 
வெறும் தகவல்களைத் தாங்கும் எழுத்தை விட உணர்வுகளைத் தாங்கும் எழுத்தின் ஆயுள் நீளமானது.

@andalmagan 
தென் இந்தியாவின் அவமானம் கருணாநிதி காங்கிரஸ் பத்திரிக்கை கடும் தாக்கு-அப்ப நீங்க ஒட்டுமொத்த இந்தியாவின் அவமானம்..

@arasu1691 
காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் இனி பள்ளிகளுக்கும் செல்ல வேண்டியிருக்கும் # பொடியனுக தொல்லை தாங்கல

@minimeens 

ஐநா சபையில் தமது உரைக்கு பதிலாக போர்ச்சுகல் நாட்டு உரையை படித்தார் எஸ்.எம்.கிருஷ்ணா #அப்ப எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சா




@krpsenthil 
இவ்வளவு பேரும் கொதிச்சு டிவிட்டறோம், கொலைன்ஜர் மற்றும் அடிபொடிகள் கள்ள மௌவுனம் காப்பது ஏன்? #tnfisherman

@naiyaandinaina 
முபாரக்: பல குடும்பம், பல பதவின்னு கொள்ளடிச்சவன்லாம் நல்லா இருக்கான், ஒரே பதவி மட்டும் வச்சி நா படுற அவஸ்தை.. ஐய்யய்யய்யோ #tnfisherman

@pannikkuttir
எல்லோரும் ட்ரெயின்லதான் செகண்ட்கிளாஸ்ல போவாங்க, ஆனா தமிழன் வாழ்வு/சாவு எல்லாமே செகண்ட்கிளாஸ்தான் இந்தியாவுல #tnfisherman

@selvu 
தினம் ஒரு மொக்கை: குண்டு பல்பு ஒடஞ்சா குண்டு வெடிச்ச அளவுக்கு சவுண்ட் வராது,ஆனா டியூப் லைட் ஒடஞ்சா டியூப் வெடிச்ச அளவுக்கு சவுண்ட் வரும்!

@THOPPITHOPPI
ஆளுங்கட்சியாக இருந்தால் மட்டும் அதிமுக என்ன செய்திட போகிறது, அல்லக்கைகள் காலில் விழுந்து நாறும் உச்சகட்ட கேவலத்தை விட? #tnfisherman

@RajanLeaks
சத்தியமூர்த்தி பவனில் நைட்லதான் கூட்டம் கூடும் ஏன்னா அப்பதான் தங்கபாலு பூஜை போடுகிறார் # எடியூரப்பாவுக்கு சூனியம் வெச்சது அவர்தானா?

இன்று, நாளை, நாளை மறு நாள்.


செய்முறைத்தேர்வுகள் இனிதே நிறைவு பெற்ற நிலையில், வாழ்த்திய அனைத்து வலையுலக சொந்தங்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்.

இன்று பன்னிரெண்டாம் வகுப்பு மாணவியர்க்கு பிரிவு உபச்சார விழா...

பிரிவு உபச்சார விழாவிற்கான உரை உங்களுக்காக, நீங்கள் திருத்தம் செய்வதற்காகவும், இன்னும் கூடுதல் விஷயங்களை இணைப்பதற்க்காகவும்.

********************************************************************************
இன்று, நாளை, நாளை மறு நாள் என்று மூன்று விஷயங்கள்
+2 முடிக்க இருக்கும் உங்களுக்காக...

இன்று நீங்கள் செய்ய வேண்டிய விஷயம், மனசிலிருந்து மற்ற எல்லா விஷயங்களையும் எடுத்து விடுங்கள். படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள். டிவி பார்த்தல், மொபைல் போன் நோண்டுதல், தேவையற்ற விளையாட்டு, காதல் (செய்தித்தாள்களை படிப்பதால், உலகம் போக்குக்காக இதையும் சொல்லாத்தான் வேண்டியிருக்கிறது)
என எல்லாவற்றையும் உங்கள் மனதிலிருந்து எடுத்து விடுங்கள். இவையெல்லாம் உங்கள் நேரத்தை உங்களை அறியாமல் திருடிவிடும் களவாணிகள். சின்ன சின்ன சந்தோஷங்களுக்கு ஆசைப்பட்டால், பெரிய சந்தோஷங்களை அனுபவிக்க முடியாது.  டிவி பார்த்தல், மொபைல் போன் நோண்டுதல், தேவையற்ற விளையாட்டு, காதல் இதெல்லாம்
சின்ன சந்தோஷங்கள்.


நாளை நீங்கள் செய்ய வேண்டிய விஷயம் என்பது, பரீட்சைக்கு பிறகான விஷயங்கள்.
பரீட்சையோடு வாழ்க்கை முடிந்து விடுவது இல்லை, பரீட்சைக்கு பிறகு புத்தம் புது வாழ்க்கை துவங்குகிறது என்பதை மறந்து விடக்கூடாது. அது கல்லூரி வாழ்க்கை.
என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், அதற்கு எவ்வளவு செலவாகும், பாடத்தின் கடினத்தன்மை என்பதைப்பற்றிய தகவல்களை சேகரியுங்கள்.
நாங்களும் உதவுகிறோம்.
  
நாளை மறுநாள் செய்ய வேண்டிய விஷயமென்பது, வாழ்க்கைக்கும் கொஞ்சம் தயாராவது.

இன்றைய உலகத்தில் மனிதர்களை புரிந்துக்கொள்ளுதல் என்பது தான் சிரமமான விஷயமானதாக இருக்கிறது.

வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டுமென்றால் தன்னைச்சுற்றியுள்ள மனிதர்களை புரிந்துக்கொண்டு, அதற்கேற்ப தகவமைத்துக்கொள்ளுதல் மிக முக்கியம்.
ஏனெனில் இன்றைய உலகம் நல்லவர்களால் மட்டும் நிரம்பி இருக்கிறது என்று சொல்லிவிட முடியாது. சுற்றி இருப்பவர்களால் நம்மிடம் இருக்கக்கூடிய மிக சில நல்ல விஷயங்களையும் இழந்து விடக்கூடாது.

எந்த சூழ்நிலையிலும் நம்முடைய சுயத்தை, ஒரிஜினாலிட்டியை இழந்து விடக்கூடாது என்பது இதன் உள்ளர்த்தம்.

*********************************************************************************
பதிவர்களின் வழிகாட்டுதல்களையும் எதிர்நோக்குகிறோம்.

எனது பள்ளி... எனது நம்பிக்கை...



இன்னும் சில நாட்களில்
எங்கள் பள்ளி நாட்கள்
முடிந்து விடும்..
அதன் பின்
வாழ்க்கையை
நேரடியாக சந்திக்கப் போகிறேன்..
இவள் கை களைத்து
தோற்றுப் போய்விடுவாளோ
என கவலைப்பட வேண்டாம்...

வெறும் புத்தகப்புழுவாய்
இருந்து விடாமல்
எதார்த்த வாழ்வின்
நடைமுறை சிக்கல்களையும்;
மனித மனதின் முரண்பாடுகளையும்
எனது பள்ளி
கற்றுக்கொடுத்திருக்கிறது.

வாழ்க்கையின்
சிரமங்கள் எதனையும்
எதிர் கொள்ளும்
வலிமையை
எனது தோள்களுக்கு
என் பள்ளி வாழ்க்கை
தந்திருக்கிறது.

நான் தோற்று விழமாட்டேன்.
வீழ்ந்தாலும்
உடன் எழுவேன்.

சிகரங்கள்
என்னை
பாடமாய்
எடுத்து படிக்குமாறு
எழுவேன்...

மிக உயரமாய்...



(மீள்பதிவு)

உலுக்கி எடுத்த உண்மைகளும், இரக்கமில்லா இரவுகளும்...



எனக்கு மனிதர்களைப் பிடிக்கும் என்று லீலா டீச்சர் சொன்னாங்க.
அதன்  தொடர்ச்சியாய் யோசித்ததில்;
என் இரவுகள் உறக்கமில்லாது நீண்டன.சில முரண்பாடுகள் என்னை உலுக்கி எடுத்தன, ஆச்சர்யம்  என்னவென்றால்  சில உடன்பாடுகளும்  அதே வேலையைச் செய்தன.


உண்மைத்தான்.மனிதர்களும்,அவர்தம் மனங்களும் விசித்திரங்கள் நிறைந்தது.

காலம் கருதாது , காரியங்கள் செய்துவிட்டு, பின் காலமெல்லாம் அதை சொல்லிச்சொல்லி மாயும் மனிதர்களும் உண்டு.

எல்லாவற்றிலும் முரண்பாடு இருந்தாலும், வாழ்தல் நிமித்தம்; திருத்தங்கள் இல்லாது நாட்கள் நகர்த்தும் மனிதர்களும் உண்டு.
 
"நான் சொல்லுவது என்னவென்றால் " என்று அவர் சொன்னார். அதையேதான் இவரும் சொன்னார். இருப்பினும் குரல்கள் உயர்ந்தன. வார்த்தைகள் வலுத்தன.

அதிக வருடங்கள் வாழ்ந்தவர்கள் கூட, "ஈகோ" தாண்ட இயலாது. கிணத்துத் தவளையை தேசிய மிருகமாய் அறிவித்தார்கள்.
அருகருகே வாழும் மனிதர்களின்மனங்களிடையான இடைவெளியாய்  மிகப்பெரிய சுந்தரவனக்காடுகள்இருந்தன.அதனில் விதவிதமான விலங்குகளைச் சுதந்திரமாக உலவவிட்டார்கள்.வேளை தவறாது அதற்கு உணவிட்டார்கள், உணவிட்ட பொழுதுகளில் எல்லாம் யார் பகைவர்கள் என்பதையும் ஊட்டிவிட்டார்கள். பின்னொரு நல்ல நாளில் அண்டை மனிதரை  மரணிக்க வைத்தார்கள். பின் ஒன்றும் நடவாததுப் போல, இறுதி ஊர்வலத்தில் சோகமுகமூடி தரித்தனர். அடுத்தது யார் என திரிந்தார்கள்.
அடிக்கடி நல்லது செய்தார்கள்; அவற்றின் பளபளப்பில் விகாரங்களை வெளித்தெரியாது மறைத்தார்கள்.

எது ஆகாது என சூளுரைத்தார்களோ அதன் காலடியிலேயே  கிடந்தார்கள்.
வெற்றி தேடி மூச்சிரைக்க ஓடியவர்களின் போரட்டத்தினை ரசிக்க, ஓய்வுகளை ஏற்படுத்திக்கொண்டார்கள்.ஜெயித்தபின், அதனில் தங்கள் பங்கு அதிகமென்று உலகத்தார்க்கு  முரசரைந்து  அறிவித்தனர். 


நான் இல்லாது இந்த உலகம் இயங்காது என மூளைச்சலவை செய்தார்கள்.
மற்றவர்களை "போன்சாய்"  மரங்களாக்கினார்கள்.

உலகத்தை ரசித்தல் மிகப்பிடிக்கும் என்றார்கள். மற்றவர்களை விழி மூடி ரசிக்க பணித்தார்கள்.

காரணமில்லாது ஏதேனும் செய்துவிட்டு, பின் காரணங்களை அடுக்கி சிலிர்ப்பூட்டினர்.


விளையாட்டுப்போட்டிகளின் வீரர்கள் போன்று இறுதியில் கைக்குலுக்கினார்கள்.
உறவாடிக் கெடுத்தப்பின்..


பெரும்பாலானான நேரங்களில் நடித்ததால்,  எது வேடம்; எது நிஜம்  என கணிக்க இயலாது போனது சக நடிகர்களால் கூட...
எல்லாவற்றிற்கும் ஒரு "பின்புலம்" இருந்தது. ஆனால்  முன்பே  அது
தெரியாமல்  பார்த்துக்கொண்டார்கள்.

எது நிஜம், எது போலி என எல்லாவற்றையும் சந்தேகிக்க;எல்லாமே போலியாகவே  தெரிகிறது.

இப்படியாய் இன்னுமாய் மனிதர்களும், அவர்தம் மனங்களும் விசித்திரங்கள் நிறைந்ததாய் இருப்பதால் லீலா டீச்சருக்கு மனிதர்களை பிடித்திருக்கக்கூடும்.

அது சரி. எனக்கு என்ன பிடிக்கும் என நீங்கள் கேட்கவேயில்லையே...

எனக்கு என்னை பிடிக்கும்;

மேலே சொன்ன    அத்துணை விசித்திரங்களும், முரண்பாடுகளும்,உடன்பாடுகளும்   எனக்குள்ளும்  நிரம்பி வழிவதால்....
எனக்கு என்னை பிடிக்கும்....  



(இது ஒரு மீள்பதிவு)

உங்களின் வாழ்த்துக்களை எதிர்நோக்கி...



எமது பள்ளியில் +2 மேல்நிலை பொதுத்தேர்வுகளுக்கான செய்முறைத் தேர்வுகள் ( Practical exams)  04-02-2011 முதல் 10-02-2011 வரை நடைப்பெற உள்ளது.

இந்த ஆண்டு களமிறங்கும் 7 லட்சத்து 23,900 பேரில், செய்முறை தேர்வுடன் மதிப்பெண் வேட்டையைத் தொடங்கும் 5 லட்சத்து 52 ஆயிரம் பேரில் எம் மாணவியர் 216 பேர்.


உங்கள் மனத்தின் பெருந்தன்மைக்கேற்ப, எம்மாணவியரையும், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாணவர்களையும் வாழ்த்த அன்புடன் அழைக்கிறோம்.

டிஸ்கி:

செய்முறைத்தேர்வின் காரணமாக எமது வலையுலக பதிவிடுதல் அதிக அளவில் இருக்காது. (அட.. யாருப்பா அது.. சந்தோஷத்துல கைத்தட்டி விசிலடிக்கிறது?)

பின்னூட்டம், தேர்வு முடிந்த பிறகே இட முடியும் என்பதால், சூழ்நிலைக்கருதி, "சற்றே பொறுத்தருள்க"
    
தேர்வு முடிந்த பின் எம் "வலையுலக மாமூல்வாழ்க்கை" வழக்கம் போல தொடரும்..
பரீச்சைக்கு நேரமாச்சு....


எங்க வீட்ல துக்கம் நடத்திருக்கு, பகிர்ந்து கொள்ள வருவீங்களா?





#tnfishermanஆத்மா பேசுகிறது... 


நான் இறந்து போயிருந்தேன்
எனக்காக
தமிழ்நாடே
எழவு வீடாய்
மாறியிருந்தது...

நீங்கள் கொடுக்கும்
"லட்சங்கள்
எம் புருஷனுக்கு ஈடாகுமா?"
என் மனைவி
தலையிலடித்து
கதறுகிறாள்.

விஷயம் என்னவென்று
உணராமல்
தாய் அழுவதால்
என் குழந்தைகளும்
வெடித்து அழுகின்றன.

இந்த வகை மரணத்தில்
இதுவே இறுதியாய் இருக்கட்டும்
என
டிவிட்டர்களும்
வலைப்பதிவுகளும்
தமிழ் உணர்வுடன்
அனல் பரப்பி
தகிக்கின்றன.

ஆனால்
ஒன்றை மட்டும்
என்னால் இயல்பாய்
எடுத்துக்கொள்ளமுடியவில்லை.

நீந்த இயலாத
என்னை இரையெடுத்த
அந்த சிங்கள அரக்கன்
தன்
பல் இடுக்கில்
சிக்கிய இறைச்சித்துண்டை
சிரித்துக்கொண்டே
நீக்கிக்கொண்டு
இருப்பதை

பார்க்கும் போதுதான்
என் ஆத்மாவே
மரித்துவிடும் போலிருக்கிறது.

- பாரதீ.


Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்