யார் தான் நிரப்புவது இந்த வெற்றிடத்தை..
எங்கே போனார்கள் கதைச்சொல்லிகள்...
முன்பெல்லாம் வீடுகளில் தாத்தா, பாட்டிகள் இருந்தார்கள். அவர்கள் குழந்தைகள் வளர்ப்பில் பெரும்பங்கு வகித்தார்கள்.
தாத்தா, பாட்டிகள் சொன்ன கதைக் கேட்டு வளந்த பிள்ளைகள், பிற்காலத்தில் இலக்கிய, அறிவியல் துறைகளில் சிறந்து விளங்கினார்கள். இன்றைய வாழ்க்கைச்சூழலில் கூட்டுக்குடும்பங்கள் மாறி , பெரும்பாலும் தனிக்குடித்தனங்கள் பெருகிவிட்ட சூழலில் கதைச்சொல்லிகளாக,கலைச்சொல்லிகளாக இருந்த தாத்தா, பாட்டிகள் தொலைந்துப் போய் விட்டதாகவே தெரிகிறது.
சிட்டுக்குருவிகள் இன்று வழக்கொழிந்துப் போனதைப் போலவே இதையும் வெறுமனே விட்டு விடவும் தமிழ்ச்சூழல் தயாராகி விட்டதாகவே தோன்றுகிறது.
மாறிவிட்ட வாழ்க்கை முறை, பழக்கவழக்கங்கள், பாஸ்ட் புட் கலாச்சாரம் ஆகியவற்றால் இனி வரும் தலைமுறையினர் தாத்தா, பாட்டி ஆகும் வரை உயிரோடிருப்பார்களா என்பதே கேள்விக்குறியாகி விட்டது.
கதைச்சொல்லிகள் இருந்த அந்த வெற்றிடத்தை இனி வரும் காலங்களில் யார் நிரப்புவது?.
முன்பெல்லாம் கெட்டவிஷயங்கள் வாசற்படியேறி, கதவைத்தட்டி உள்ளே நுழைந்தது என்றால், இப்போது எல்லா விஷங்களும் நேரடியாக, சாட்டிலைட் வழியாக, வரவேற்பறை நுழைவதால் தொலைக்காட்சிகள் நல்ல கதைச்சொல்லியாக இருக்க முடியாது எனத்தோன்றுகிறது.
தங்கள் குழந்தைகளுக்கு பொருளாதார பாதுகாப்பு அளிப்பதையே வாழ்நாள் லட்சியமாகக் காட்டிக்கொள்ளும் பெற்றோர்களுக்கு அவர்களுக்குள்ளே பேசிக்கொள்வதே பெரும்பாடாகிவிடுமோ
என்ற சூழல் கூட விரைவில் வந்து விடும் .
கதைச்சொல்லியாக இருக்க அதிக வாய்ப்புக்களைக் கொண்டுள்ள ஆசிரியர்களோ, கதைச்சொல்லியாக இல்லாமல் , மற்றவர்களை புறஞ்சொல்லிகளாகவும், தம் மாணவர்களை குறைச்சொல்லிகளாகவும் மாறிவிட்டனர் என்பது பொதுவான குற்றச்சாட்டு.
அட கடவுளே..
யார் தான் கதைச்சொல்லி என்ற வெற்றிடத்தை நிரப்புவது?
விஷம் பரப்பும் ஊடகங்கள், பணத்தின் பின் ஓடும் பெற்றோர்கள், பாடத் திட்டம் தடுக்கி விழும் ஆசிரியர்கள்;யார் தான் மாறவேண்டும் இனிவரும் நாட்களில்..
யார் தான் நிரப்புவது இந்த வெற்றிடத்தை..
தனியாய் தனக்குத் தானே கதைச்சொல்லிக் கொண்டு வாழ வேண்டிய சூழ்நிலை நாளைய குழந்தைக்களுக்கு வந்து விடுமோ..
தோல்வி நிலை என நினைத்தால்...
தோல்வி என்றால் உங்களிடம் சரக்கு இல்லை
என்று பொருள் இல்லை;
வேறு யுக்திகளைக் கையாள வேண்டிய அவசியத்தை
உணர்ந்து விட்டீர்கள் என்று பொருள்.
தோல்வி என்றால் வாழ்க்கையே வீணாக்கிவிட்டதாகப்
பொருள் இல்லை;
மீண்டும் ஆரம்பிக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்று பொருள்.
தோல்வி என்றால் விட்டுவிட வேண்டும்
என்று பொருள் அல்ல;
இன்னும் செம்மையாக உழைக்க வேண்டும்
என்று பொருள்.
தோல்வி என்றால் உங்களால் அடைய முடியாது என்று பொருள் அல்ல;
அடையக் கொஞ்சம் தாமதமாகலாம்
என்று பொருள்.
தோல்வி என்றால் கடவுள் உங்களை கைவிட்டு விட்டார் என்று பொருள் அல்ல;
உங்களுக்கு வேறு நல்ல எதிர்காலத்தை நிர்ணயம் செய்து வைத்திருக்கிறார்
என்று பொருள்.
- ஜுனா ஆக்னியஸ்.ஜெ.
பன்னிரெண்டாம் வகுப்பு இ பிரிவு.
வாழ்த்தலாம் வாங்க...
இன்று பிறந்த நாள் காணும் எங்கள் வேதியியல் ஆசிரியை லீலா மகேஸ்வரி அவர்களுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
கனிவும், கருணையும், அதீத கடமை உணர்வும் உடைய ஆசிரியர்கள் எல்லோர்க்கும் வாய்ப்பதிலை.
அப்படிப்பட்ட, எங்கள் நலனில் மிக அக்கறைக் கொண்ட லீலா டீச்சரின் பிறந்த நாளில் அவர் வாழ்வில் எல்லா வளமும் பெற வாழ்த்தி சந்தோஷிக்கிறோம்.
-பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும்
பதினொன்றாம் வகுப்பு அ1,அ,ஆ பிரிவு மாணவிகள்.
எங்கள் வாழ்த்தை வலையுலகமும் வழிமொழியட்டும்.
(சென்ற பதிவால் உண்டான கோபத்தை இதில் காட்டவேண்டாம்)
கனிவும், கருணையும், அதீத கடமை உணர்வும் உடைய ஆசிரியர்கள் எல்லோர்க்கும் வாய்ப்பதிலை.
அப்படிப்பட்ட, எங்கள் நலனில் மிக அக்கறைக் கொண்ட லீலா டீச்சரின் பிறந்த நாளில் அவர் வாழ்வில் எல்லா வளமும் பெற வாழ்த்தி சந்தோஷிக்கிறோம்.
-பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும்
பதினொன்றாம் வகுப்பு அ1,அ,ஆ பிரிவு மாணவிகள்.
எங்கள் வாழ்த்தை வலையுலகமும் வழிமொழியட்டும்.
(சென்ற பதிவால் உண்டான கோபத்தை இதில் காட்டவேண்டாம்)
இந்தப் பதிவு உடனடியாக நீக்கப்பட நேரிடலாம். சில மணித்துளிகளுக்குள் வந்துப் பாருங்கள்.
ஆன் லைனில் இருப்பவர்களுக்கு ஒரு அழைப்பு.
வலைப்பதிவர்களும் தமிழக முதல்வராக எளிய வழி...
இந்த வார ஹிட் செய்தி:
தனியார் பள்ளிகளுக்கு கல்விக்கட்டணம் நிர்ணயித்த குழுவின் தலைவர் நீதிபதி கோவிந்தராஜன் ராஜினாமா.
(உடல்நலத்தைக் காரணம் காட்டியுள்ளார்).
நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கட்டண விபரம் 21-10-10 அன்று தமிழக அரசின் www.tn.gov.in இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. குழுவுக்கு போதுமான விபரங்களைத் தெரிவிக்காத 532 பள்ளிகள் கட்டணம் வசூலிக்கக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வார ஹைக்கூ:
தாய்ப்பால் கேட்காமல்
தாயைக் கேட்டது
குப்பைத் தொட்டி குழந்தை
- தென்றல் நிலவன்.
இந்த வார அதிர்ச்சி:
கட்டுமானப் பொருள்களில் மிக முக்கியமாவையான சிமெண்ட், செங்கல், முறுக்கேற்றப்பட்ட கம்பிகள் விலை கடந்த ஒரு மாதத்தில் 30 சதவீதம் உயர்ந்துள்ளது. 50 கிலோ சிமெண்ட் விலை ரூபாய் 145 லிருந்து திடீரென ரூபாய் 300 ஆக தமிழகத்தில் உயர்ந்துள்ளது. ஆனால் பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சிமெண்ட்டின் விலை, இறக்குமதிச் செலவு, சுங்க வரி உள்பட ரூபாய் 190. ( எந்த வித காரணமும் இன்றி ஏன் இப்போது விலை உயர வேண்டும் என்பது பலரின் கேள்வி).
இந்த வார கருத்து:
டாட்டா, பிர்லா யாராக இருந்தாலும் கடன் தான் அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்துகிறது. புத்திசாலிகள் சேமிக்கிறார்கள், அதி புத்திசாலிகள் கடன் வாங்குகிறார்கள்.
-ப.சிதம்பரம்.
இந்த வார கலாட்டா:
விஜய் நடிக்கும் காவலன், அஜித் நடிக்கும் மங்காத்தா ஒரே நேரத்தில் தயாராகி வருவதால் வலைப்பதிவர்கள் உற்சாகம்.
(கலாய்க்க மேட்டர் ரெடி)
இந்த வார தகவல்:
உங்கள் செல் போன் எண்ணிலிருந்து உங்களுக்குத் தெரியாமல் SMS, போன் செய்ய முடியும்(ஹேக்கிங்). குறிப்பிட்ட இணையதளத்திலிருந்து புதிய பாடல்களை அல்லது மென்பொருளை பதிவிறக்கம் செய்ய அழைக்கும் SMS உங்கள் செல்போன்களுக்கு வரும்போது கவனமாக இருங்கள்.
கொசுறுத் தகவல்: உலகிலேயே அதிக அளவு செல்போன் நுகர்வோரைக் கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. மொத்தம் 67 கோடி இணைப்பு.
பேசு இந்தியா பேசு...
இந்த வார குழப்பம்:
அடுத்ததாக நாங்கள் வெளியிட இருக்கும் பதிவு எங்களின் ஐம்பதாவது இடுகை. அதனை வித்தியாசமாக அமைக்க எங்கள் மேலிடம் உத்தரவிட்டுள்ளது.(அது வேற யாருமில்ல,பாரதி ஆறாம் வகுப்பு ஆ பிரிவு) என்னப் பண்றது?
நீங்க தான் பிரபல வலைப்பதிவராச்சே ஒரு ஐடியா சொல்லுங்கோ...
இந்த வார உதிரிப்பூக்கள்:
தூங்கும் போது குறட்டை விடுவதும் நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனையே. குண்டாக இருப்பது, துரித உணவு, வாழ்க்கை முறை மாற்றங்களால் இப்பிரச்சனை ஏற்படுகிறது.
உலகிலேயே முதல் முறையாக 15 வயது இத்தாலிய சிறுவனுக்கு செயற்கை இதயம் பொருத்தப்பட்டுள்ளது.பேட்டரி சார்ஜ் உதவியுடன் இயங்கும் இந்த ரோபோ இதயத்துடன் 25 வருடங்கள் வாழ முடியும்.
ராஜாஜியும், அண்ணாவும் சட்டமேலவை உறுப்பினராகித்தான் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தனர். (சட்ட மேலவையில் பட்டதாரித் தொகுதிகள் போன்று வலைப்பதிவர்களுக்கென்று தொகுதிகள் உருவாக்கப்படுமா?)
டிஸ்கி:1
இந்தப் பதிவின் முதல் கருத்துரையைப் பார்க்கவும்.
தனியார் பள்ளிகளுக்கு கல்விக்கட்டணம் நிர்ணயித்த குழுவின் தலைவர் நீதிபதி கோவிந்தராஜன் ராஜினாமா.
(உடல்நலத்தைக் காரணம் காட்டியுள்ளார்).
நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கட்டண விபரம் 21-10-10 அன்று தமிழக அரசின் www.tn.gov.in இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. குழுவுக்கு போதுமான விபரங்களைத் தெரிவிக்காத 532 பள்ளிகள் கட்டணம் வசூலிக்கக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வார ஹைக்கூ:
தாய்ப்பால் கேட்காமல்
தாயைக் கேட்டது
குப்பைத் தொட்டி குழந்தை
- தென்றல் நிலவன்.
இந்த வார அதிர்ச்சி:
கட்டுமானப் பொருள்களில் மிக முக்கியமாவையான சிமெண்ட், செங்கல், முறுக்கேற்றப்பட்ட கம்பிகள் விலை கடந்த ஒரு மாதத்தில் 30 சதவீதம் உயர்ந்துள்ளது. 50 கிலோ சிமெண்ட் விலை ரூபாய் 145 லிருந்து திடீரென ரூபாய் 300 ஆக தமிழகத்தில் உயர்ந்துள்ளது. ஆனால் பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சிமெண்ட்டின் விலை, இறக்குமதிச் செலவு, சுங்க வரி உள்பட ரூபாய் 190. ( எந்த வித காரணமும் இன்றி ஏன் இப்போது விலை உயர வேண்டும் என்பது பலரின் கேள்வி).
இந்த வார கருத்து:
டாட்டா, பிர்லா யாராக இருந்தாலும் கடன் தான் அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்துகிறது. புத்திசாலிகள் சேமிக்கிறார்கள், அதி புத்திசாலிகள் கடன் வாங்குகிறார்கள்.
-ப.சிதம்பரம்.
இந்த வார கலாட்டா:
விஜய் நடிக்கும் காவலன், அஜித் நடிக்கும் மங்காத்தா ஒரே நேரத்தில் தயாராகி வருவதால் வலைப்பதிவர்கள் உற்சாகம்.
(கலாய்க்க மேட்டர் ரெடி)
இந்த வார தகவல்:
உங்கள் செல் போன் எண்ணிலிருந்து உங்களுக்குத் தெரியாமல் SMS, போன் செய்ய முடியும்(ஹேக்கிங்). குறிப்பிட்ட இணையதளத்திலிருந்து புதிய பாடல்களை அல்லது மென்பொருளை பதிவிறக்கம் செய்ய அழைக்கும் SMS உங்கள் செல்போன்களுக்கு வரும்போது கவனமாக இருங்கள்.
கொசுறுத் தகவல்: உலகிலேயே அதிக அளவு செல்போன் நுகர்வோரைக் கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. மொத்தம் 67 கோடி இணைப்பு.
பேசு இந்தியா பேசு...
இந்த வார குழப்பம்:
அடுத்ததாக நாங்கள் வெளியிட இருக்கும் பதிவு எங்களின் ஐம்பதாவது இடுகை. அதனை வித்தியாசமாக அமைக்க எங்கள் மேலிடம் உத்தரவிட்டுள்ளது.(அது வேற யாருமில்ல,பாரதி ஆறாம் வகுப்பு ஆ பிரிவு) என்னப் பண்றது?
நீங்க தான் பிரபல வலைப்பதிவராச்சே ஒரு ஐடியா சொல்லுங்கோ...
இந்த வார உதிரிப்பூக்கள்:
தூங்கும் போது குறட்டை விடுவதும் நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனையே. குண்டாக இருப்பது, துரித உணவு, வாழ்க்கை முறை மாற்றங்களால் இப்பிரச்சனை ஏற்படுகிறது.
உலகிலேயே முதல் முறையாக 15 வயது இத்தாலிய சிறுவனுக்கு செயற்கை இதயம் பொருத்தப்பட்டுள்ளது.பேட்டரி சார்ஜ் உதவியுடன் இயங்கும் இந்த ரோபோ இதயத்துடன் 25 வருடங்கள் வாழ முடியும்.
ராஜாஜியும், அண்ணாவும் சட்டமேலவை உறுப்பினராகித்தான் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தனர். (சட்ட மேலவையில் பட்டதாரித் தொகுதிகள் போன்று வலைப்பதிவர்களுக்கென்று தொகுதிகள் உருவாக்கப்படுமா?)
டிஸ்கி:1
இந்தப் பதிவின் முதல் கருத்துரையைப் பார்க்கவும்.
சத்தம் போடாதே... -நந்தினி.B.
என் அம்மா உறங்குகிறாள்.
கத்தாதே குருவியே,
பாடாதே இளங்குயிலே,
என் அன்பு அம்மா உறங்குகிறாள்.
வெளிச்சமாய் வீசாதே வெண்ணிலவே
சீக்கிரம் மேகத்திற்குள் சென்று மறைந்துக்கொள்.
ரீங்காரத்துடன் தேன் உறிஞ்சும் வண்டுகளே
உங்கள் பாடல்களை நிறுத்திக்கொள்ளுங்கள்.
ஏய் பேய் போல வேகமாய் காற்றிலாடும் ஊஞ்சலே
பூனைப் போல் மெதுவாய் நகர்ந்துச் செல்
என் அம்மா உறங்குகிறாள்
தாமரை, நா.முத்துக்குமார், கபிலன், யுகபாரதி கவிதைகள்
என படிப்பவரை யோசிக்க வைத்து,
வாசகர்களை எளிதில் ஈர்க்கும் நா.முத்துக்குமார்,
விகடன் தீபாவளி மலரில் எழுதியிருக்கும் கவிதை
"ஏழு பள்ளிகளில் படித்தவன்''.
இயல்பான நடையில், ஒரு வார்த்தைக் கூட
மிகையில்லாது நீள்கிறது. //ஏழு பள்ளிகளில் படித்த
ஆர்.எஸ். கேசவன்
எட்டாவது பள்ளியாக
எங்கள் வகுப்புக்கு
வந்து சேர்ந்தபோது
அரையாண்டு விடுமுறை முடித்து
நாங்கள்
முழு ஆண்டு ஜூரத்தில் இருந்தோம்//
//சொல்வதற்கும் அவனிடம்
ஏராளம் கதைகள் இருந்தன
கேட்பதற்கு எங்களிடம்
இரண்டே இரண்டு
காதுகள் மட்டுமே//
//ஒன்பதாவது பள்ளிக்கு
எங்களைச் சுருட்டி
கதையாக மாற்றி
சிரித்தபடி போனான்//
இயற்கைக்கு பரிசளிக்கப்பட்ட செயற்கை மரணம்...
கடவுள் படைத்த இயற்கையை
ரசித்து எழுத எண்ணமிட்டேன்..
நான் வார்த்தைகளைக் கோர்க்க
நான் இயற்கையின் கூந்தலை வருடிய போது
சின்ன சின்ன வேதனைகள்
அதன் விசும்பலில் தெறித்து விழுந்தது.
இவையெல்லாம் யார் தந்த துன்பம்?
உன்னை காயப்படுத்தி வென்றது
மனிதனின் வேதனை அம்புகளா?
என் கேள்விக்கு அது
வேறு ஏதோ பதிலுரைத்தது..
ரசித்து எழுத எண்ணமிட்டேன்..
நான் வார்த்தைகளைக் கோர்க்க
நான் இயற்கையின் கூந்தலை வருடிய போது
சின்ன சின்ன வேதனைகள்
அதன் விசும்பலில் தெறித்து விழுந்தது.
இவையெல்லாம் யார் தந்த துன்பம்?
உன்னை காயப்படுத்தி வென்றது
மனிதனின் வேதனை அம்புகளா?
என் கேள்விக்கு அது
வேறு ஏதோ பதிலுரைத்தது..
பாலகுமாரன் @ விகடன் தீபாவளி மலர்...
விகடன் தீபாவளி மலர் வந்தாச்சு-னா தீபாவளியே வந்தாச்சு என்று தான் அர்த்தம். அதன் விமர்சனம் தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில்,
பாலகுமாரன் பேட்டியில் மிக ரசித்த விஷயங்கள் மட்டும் உங்களுடன் இப்போது பகிரப்படுகிறது...
*சோறு போடும் உத்தியோகம்; அது சமூக அந்தஸ்து. மனதின் குதியலைக் காட்டக் கவிதை. வில் வளைத்து, லட்சியம் அடிப்பது போன்று படிப்பவரைத் தாக்கும் சிறுகதை, தவிர்க்கவே முடியாத சினிமா, இதற்கெல்லாம் நடுவே அடிஆழத்தில், இறைத்தேடல் இருந்தது.
ஆர்யக் கூத்தாடினாலும் நான் காரியத்தில் கண்ணாக இருந்தேன்...
*வாழ்வில் எல்லா விஷயங்களிலும் விழுந்து புரண்டு ஓர் அமைதியான இடத்தை அடைந்திருக்கிறேன். எழுத்துதான் இதற்குக் காரணம்.
*எந்தப் புகழும் எனக்குள் ஓட்டவில்லை. எந்தப் போற்றுதலும் என்னைச் சாய்க்கவில்லை.
*என் வேலை இது; இதைத் துல்லியமாய் செய்தலே என் நோக்கம்.
இது பிடித்திருக்கிறதா சரி:
இல்லையா அதுவும் சரி என்று போய்க்கொண்டிருக்கிறேன்.
*வாசகருடன் ஒட்டியும் ஒட்டாமலும் இருத்தலே என் விருப்பம்.
சந்திக்கும் போது, வாசகர் வணக்கம் சொல்வதே போதும்.
*சினிமாவை என்றும் நான் முழுமையாக ஏற்காததும், முழுமையாக கற்காததும்
நான் பின்வாங்கக் காரணம்.
நான் எழுத்தாளனாகவே இருந்தேன். எழுத்து வேறு: சினிமா வேறு!
*என் எழுத்து ஆன்மிகத்தின் பக்கம் திசை திரும்பியது என்பது தவறு. அதிகமாய் வெளிப்பட்டது எனலாம். இதற்கு என் வயது காரணம்.
*எல்லா நேரமும் எல்லா இடங்களிலும் ஒரு சக்தி இடையறாது அசைக்கிறது. அதுவே எல்லாம். அதற்கு ஆரம்பம்... முடிவு எதுவும் இல்லை...
*இங்கே எல்லா உறவும், எல்லா செயலும் நாடகம் என்பதும்,
இதை நடத்திக்கொண்டே பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதும் உணர்த்தப்பட்டது.
என்னை கவனித்தபடி இருக்கத் தூண்டப்பட்டேன். இது பெரிய கொடுப்பினை.
*ஒரு எழுத்தாளன், எல்லாம் எழுதிவிட்டேன் என்று சொல்லமாட்டான்.
எழுத்துச் சிந்தனை வற்றாத ஊற்று.
*எழுத்தாக்குவதற்கு உடல் வலு, மன வலு வேண்டும். எனக்கு இன்னமும் இருக்கிறது.
அடுத்ததாக எழுத, சுமார் ஆயிரத்தைந்நூறு பக்கங்களுக்கு, ராஜேந்திர சோழன் மனதளவில் தயார். கொஞ்சம் பயணப்பட வேண்டும். எழுதுவேன்...
காத்திருக்கிறேன் தோழி.. ---எம்.மணிமேகலை
கவிதையல்ல இது
என் பள்ளியின் குரல்...
நான் வெறும் கட்டிடம் அல்ல..
உன் கனவுகளை நனவாக்க
கற்பனைகளை நிஜங்களாக்க
அறிவை அருவியாக்க
ஆற்றலை முழுமையாக்க
அன்பை ஆயுதமாக்க
பண்பை படிப்பாக்க
உலகை உனக்குரியதாக்க
காத்திருக்கிறேன் தோழி...
எனக்குள் வரும் உன்னை
வெறும் புத்தகப் புழுவாக மாற்ற அல்ல..
இந்த உலகிற்கு நல்லதோர்
மனிதநேயம் மிக்க மனிதனாக மாற்ற
காத்திருக்கிறேன் தோழி..
உதாரணங்கள் எப்போதும்
அகிம்சைக்கு மகாத்மா...
அன்புக்கு அன்னை தெரசா..
வீரத்திற்கு கட்டபொம்மன்....
போதும் பழைய உதாரணங்கள்..
இனிமேல் இவை அனைத்திற்கும்
உன்னை உதாரணமாக்கு....
--எம்.மணிமேகலை
பன்னிரெண்டாம் வகுப்பு இ பிரிவு...
என் பள்ளியின் குரல்...
நான் வெறும் கட்டிடம் அல்ல..
உன் கனவுகளை நனவாக்க
கற்பனைகளை நிஜங்களாக்க
அறிவை அருவியாக்க
ஆற்றலை முழுமையாக்க
அன்பை ஆயுதமாக்க
பண்பை படிப்பாக்க
உலகை உனக்குரியதாக்க
காத்திருக்கிறேன் தோழி...
எனக்குள் வரும் உன்னை
வெறும் புத்தகப் புழுவாக மாற்ற அல்ல..
இந்த உலகிற்கு நல்லதோர்
மனிதநேயம் மிக்க மனிதனாக மாற்ற
காத்திருக்கிறேன் தோழி..
உதாரணங்கள் எப்போதும்
அகிம்சைக்கு மகாத்மா...
அன்புக்கு அன்னை தெரசா..
வீரத்திற்கு கட்டபொம்மன்....
போதும் பழைய உதாரணங்கள்..
இனிமேல் இவை அனைத்திற்கும்
உன்னை உதாரணமாக்கு....
--எம்.மணிமேகலை
பன்னிரெண்டாம் வகுப்பு இ பிரிவு...
navin robins அவர்களின் சவால் கவிதை -- நான் இறந்து போயிருந்தேன்
தெம்மாங்கு பாடி, உயிர் கொடுத்தார்கள் வாஞ்சையில்,
எனக்கு, காளை பூட்டிய ஏர் உழுத நஞ்சையில்;
நெகிழ்ந்தேன் நான் அவர்கள் காட்டிய அன்பெனும் உரத்தில்,
இசையான தெம்மாங்கு சுரத்தில்;
தென்றலின் இசைக்கு தலையாட்டி மகிழ்ந்து,
வளர்ந்தேன் நான் நித்தமும் வளர்த்தவர்களை நினைந்து;
பருவமடையும் நாள் வந்தது, பூவாக விரும்பிய நான் நாத்து,
என் கால்களில் வந்தடையும் காவிரியை எதிர்பார்த்து;
வரவில்லை காவிரி, தரவில்லை தண்ணீரை பரவி;
மனம் சோராமல் காத்து நின்றேன் வயல்வெளியில்,
நிலவோ தேய்ந்து வளர்ந்தது நாளொரு வண்ணமாய் வான்வெளியில்;
அப்போதும் உயிர் கொண்டுதான் இருந்தேன் ஆனால்,
நான் இறந்துதான் போயிருந்தேன் எனக்கு உயிர் கொடுத்தவர்,
என் நிலை கண்டு தன் உயிர் மாய்த்த பின்!
இந்த வாரம்: ரசித்தவைகளும், யோசிக்க வைத்தவைகளும்..
இந்த வார ஹிட் செய்தி:
இந்த வார ஹைக்கூ:
"சிறியது தான் புல்லாங்குழல்
கேலி செய்த மூங்கில்
பிணம் சுமக்கும் பாடை"
இந்த வார கவிதை:
"காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடிகளைப்
பதிக்க விரும்பினால்,
உனது கால்களை,
இந்த வார தகவல்:
இந்த வார மனிதர்:
இந்த வார கருத்து:
இந்த வார குழப்பம்:
கலாய்க்கும் பாணியில் நாங்கள் எழுதிய
விருந்தாளிகள் கிளம்பிவிட்ட நிலையில் காமன்வெல்த் போட்டிகள் டெல்லி-2010 ன் இரண்டாம் பாகம் துவங்கிவிட்டது. டெல்லி முதல்வர், ஏ.ஆர்.ரஹ்மான், உயர்மட்ட விசாரணைக் குழுத் தலைவர் வி.கே.சங்கலு
ஆகியோரின் பேட்டிகள் பரபரப்பைக் கூட்டுகின்றன.பிரதமர் வழங்கிய விருந்தில் சுரேஷ் கல்மாடி புறக்கணிப்பு.
{முற்பகலில் "செ(ய்)யின்" பிற்பகலில் "விலங்கு"}
"சிறியது தான் புல்லாங்குழல்
கேலி செய்த மூங்கில்
பிணம் சுமக்கும் பாடை"
-துறவி.
"காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடிகளைப்
பதிக்க விரும்பினால்,
உனது கால்களை,
இழுத்து,இழுத்து நடக்காதே...."
--ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்.
(அக்-15 கலாம் அவர்களின் பிறந்தநாள்.)
இந்த வார தகவல்:
தமிழகத்தில் 39 ஆயிரம் ஏரிகள் இருப்பதாகக் கணக்கு சொல்லப்படுகிறது. ஆனால் அவற்றில் சில ஆயிரம் ஏரிகள் காணமலே போய்விட்டன. இருக்கும் ஏரிகளில் பெரும்பாலானவை தூர்ந்து போய் கிடக்கின்றன. பல ஏரிகள் ஆக்ரமிக்கப்பட்டு வீட்டுமனைகளாக மாறிவிட்டன.
இந்த வார மனிதர்:
ஐ.சி.சி. டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் சச்சின்,
8 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் முதலிடம்
(ரிட்டன் ஆப் தி டிராகன்).
தரவரிசையில் சச்சின் முதலிடம் பிடிப்பது இது ஒன்பதாம் முறை.
8 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் முதலிடம்
(ரிட்டன் ஆப் தி டிராகன்).
தரவரிசையில் சச்சின் முதலிடம் பிடிப்பது இது ஒன்பதாம் முறை.
இந்த வார கருத்து:
ஆஸ்திரேலியா மிக அழகான நாடு. ஆனால், அதை புத்திசாலித்தனமாக பயன்படுத்திக்கொள்ள அந்த நாடு தவறி விட்டது. இந்தியர்களின் மீது நடத்தப்பட்ட இனவெறித் தாக்குதல்களால் அந்நாட்டின் நன்மதிப்பு வெகுவாகக் குறைந்துள்ளது.
--பிரிட்டிஷ் நிபுணர் சைமன் அன்ஹோல்ட்.
(இந்தியர்கள் அதிகம் விரும்பும் நாடுகளில் முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலியா, இப்போது மூன்றாம் இடத்தில்)
"பிரபல வலைப்பதிவர்க்கு கொலை மிரட்டல்" வாசிக்கப்பட்ட அளவுக்கு, நல்ல பதிவாக நாங்கள் கருதிய "உலுக்கி எடுத்த உண்மைகளும், இரக்கமில்லா இரவுகளும்" வலைஉலகவாசகர்களால்
கவனிக்கப்படவில்லை.{ஒண்ணுமே புரியல (வலை) உலகத்திலே...}
உலுக்கி எடுத்த உண்மைகளும், இரக்கமில்லா இரவுகளும்...
எனக்கு மனிதர்களைப் பிடிக்கும் என்று லீலா டீச்சர் சொன்னாங்க.
அதன் தொடர்ச்சியாய் யோசித்ததில்;
என் இரவுகள் உறக்கமில்லாது நீண்டன.சில முரண்பாடுகள் என்னை உலுக்கி எடுத்தன, ஆச்சர்யம் என்னவென்றால் சில
உடன்பாடுகளும் அதே வேலையைச் செய்தன.
அதன் தொடர்ச்சியாய் யோசித்ததில்;
என் இரவுகள் உறக்கமில்லாது நீண்டன.சில முரண்பாடுகள் என்னை உலுக்கி எடுத்தன, ஆச்சர்யம் என்னவென்றால் சில
உடன்பாடுகளும் அதே வேலையைச் செய்தன.
உண்மைத்தான்.மனிதர்களும்,அவர்தம் மனங்களும் விசித்திரங்கள் நிறைந்தது.
காலம் கருதாது , காரியங்கள் செய்துவிட்டு, பின் காலமெல்லாம் அதைச் சொல்லிச்சொல்லி மாயும் மனிதர்களும் உண்டு.
எல்லாவற்றிலும் முரண்பாடு இருந்தாலும், வாழ்தல் நிமித்தம்; திருத்தங்கள் இல்லாது நாட்கள் நகர்த்தும் மனிதர்களும் உண்டு.
"நான் சொல்லுவது என்னவென்றால் " என்று அவர் சொன்னார். அதையேதான் இவரும் சொன்னார். இருப்பினும் குரல்கள் உயர்ந்தன. வார்த்தைகள் வலுத்தன.
அதிக வருடங்கள் வாழ்ந்தவர்கள் கூட, "ஈகோ" தாண்ட இயலாது. கிணத்துத் தவளையை தேசிய மிருகமாய் அறிவித்தார்கள்.
அருகருகே வாழும் மனிதர்களின்
மனங்களிடையானஇடைவெளியாய் மிகப்பெரிய சுந்தரவனக்காடுகள்இருந்தன.அதனில் விதவிதமான விலங்குகளைச் சுதந்திரமாக உலவவிட்டார்கள்.வேளை தவறாது அதற்கு உணவிட்டார்கள், உணவிட்ட பொழுதுகளில் எல்லாம் யார் பகைவர்கள் என்பதையும் ஊட்டிவிட்டார்கள். பின்னொரு நல்ல நாளில் அண்டை மனிதரை மரணிக்க வைத்தார்கள். பின் ஒன்றும் நடவாததுப் போல, இறுதி ஊர்வலத்தில் சோகமுகமூடி தரித்தனர். அடுத்தது யார் என திரிந்தார்கள்.
அடிக்கடி நல்லது செய்தார்கள்; அவற்றின் பளபளப்பில் விகாரங்களை வெளித்தெரியாது மறைத்தார்கள்.
வெற்றி தேடி மூச்சிரைக்க ஓடியவர்களின் போரட்டத்தினை ரசிக்க, ஓய்வுகளை ஏற்படுத்திக்கொண்டார்கள்.ஜெயித்தபின், அதனில் தங்கள் பங்கு அதிகமென்று
உலகத்தார்க்கு முரசரைந்து அறிவித்தனர்.
நான் இல்லாது இந்த உலகம் இயங்காது என மூளைச்சலவை செய்தார்கள்.
மற்றவர்களை"போன்சாய்" மரங்களாக்கினார்கள்.
எது ஆகாது என சூளுரைத்தார்களோ அதன் காலடியிலேயே கிடந்தார்கள்.
வெற்றி தேடி மூச்சிரைக்க ஓடியவர்களின் போரட்டத்தினை ரசிக்க, ஓய்வுகளை ஏற்படுத்திக்கொண்டார்கள்.ஜெயித்தபின், அதனில் தங்கள் பங்கு அதிகமென்று
உலகத்தார்க்கு முரசரைந்து அறிவித்தனர்.
நான் இல்லாது இந்த உலகம் இயங்காது என மூளைச்சலவை செய்தார்கள்.
மற்றவர்களை"போன்சாய்" மரங்களாக்கினார்கள்.
உலகத்தை ரசித்தல் மிகப்பிடிக்கும் என்றார்கள். மற்றவர்களை விழி மூடி ரசிக்க பணித்தார்கள்.
விளையாட்டுப் போட்டிகளின் வீரர்கள் போன்று இறுதியில் கைக்குலுக்கினார்கள்.
உறவாடிக் கெடுத்தப்பின்..
எல்லாவற்றிற்கும் ஒரு "பின்புலம்" இருந்தது. ஆனால் முன்பே அது
தெரியாமல் பார்த்துக்கொண்டார்கள்.
எது நிஜம், எது போலி என எல்லாவற்றையும் சந்தேகிக்க;எல்லாமே போலியாகவே தெரிகிறது.
இப்படியாய் இன்னுமாய் மனிதர்களும், அவர்தம் மனங்களும் விசித்திரங்கள் நிறைந்ததாய் இருப்பதால் லீலா டீச்சருக்கு மனிதர்களைப் பிடித்திருக்கக்கூடும்.
அது சரி. எனக்கு என்னப் பிடிக்கும் என நீங்கள் கேட்கவேயில்லையே...
எனக்கு என்னைப் பிடிக்கும்;
மேலே சொன்ன அத்துணை விசித்திரங்களும், முரண்பாடுகளும்,உடன்பாடுகளும் எனக்குள்ளும் நிரம்பி வழிவதால்....
எனக்கு என்னைப் பிடிக்கும்....
காரணமில்லாது ஏதேனும் செய்துவிட்டு, பின் காரணங்களை அடுக்கி சிலிர்ப்பூட்டினர்.
விளையாட்டுப் போட்டிகளின் வீரர்கள் போன்று இறுதியில் கைக்குலுக்கினார்கள்.
உறவாடிக் கெடுத்தப்பின்..
பெரும்பாலானான நேரங்களில் நடித்ததால்,
எது வேடம்; எது நிஜம் என கணிக்க இயலாது
போனது சக நடிகர்களால் கூட...
எல்லாவற்றிற்கும் ஒரு "பின்புலம்" இருந்தது. ஆனால் முன்பே அது
தெரியாமல் பார்த்துக்கொண்டார்கள்.
எது நிஜம், எது போலி என எல்லாவற்றையும் சந்தேகிக்க;எல்லாமே போலியாகவே தெரிகிறது.
இப்படியாய் இன்னுமாய் மனிதர்களும், அவர்தம் மனங்களும் விசித்திரங்கள் நிறைந்ததாய் இருப்பதால் லீலா டீச்சருக்கு மனிதர்களைப் பிடித்திருக்கக்கூடும்.
அது சரி. எனக்கு என்னப் பிடிக்கும் என நீங்கள் கேட்கவேயில்லையே...
எனக்கு என்னைப் பிடிக்கும்;
மேலே சொன்ன அத்துணை விசித்திரங்களும், முரண்பாடுகளும்,உடன்பாடுகளும் எனக்குள்ளும் நிரம்பி வழிவதால்....
எனக்கு என்னைப் பிடிக்கும்....
பிரபல வலைப்பதிவர்க்கு கொலைமிரட்டல்
வலைப்பதிவர்கள் பற்றிய டெரர் செய்திகள்:
பரிசல்காரன்-வலைப்பதிவர்க்கு,ரோஜா பூந்தோட்டம் வலைப்பதிவர்கள் கொலை மிரட்டல்.. "நாங்க வலைப்பூ ஆரம்பிச்சு ஒரு மாசம் ஆச்சு, இன்னும் ஒரு வாழ்த்துக்கூட சொல்லல"
(இப்பல்லாம் கொலைமிரட்டல் அனுப்பறதுதானே லேட்டஸ்ட் பேஷன்.....
இந்த வழக்கிற்கும் வாய்ப்பாடிக்குமார், வேல் கண்ணன் ஆகியோர்க்கும் எந்த தொடர்பும் இல்லை யுவர் ஆனர்)
நல்லா கெளப்பறாங்கய்யா பீதிய.....
(இப்பல்லாம் கொலைமிரட்டல் அனுப்பறதுதானே லேட்டஸ்ட் பேஷன்.....
இந்த வழக்கிற்கும் வாய்ப்பாடிக்குமார், வேல் கண்ணன் ஆகியோர்க்கும் எந்த தொடர்பும் இல்லை யுவர் ஆனர்)
நல்லா கெளப்பறாங்கய்யா பீதிய.....
பனித்துளி சங்கர், கே.ஆர்.பி.செந்தில்,மலிக்கா, ஆகியோரின் பதிவுகள் வெளியாகும் போதெல்லாம் "எந்திரன்" வசூல் பாதிக்கப்படுவதால் , சன் குழும அன்பர்கள் மேற்கண்ட வலைப்பதிவர்களை "விருந்து" வைக்க தேடுவதாக எமது உளவுப்பிரிவு ரகசிய தகவல்..
(டி. ஆரின் பேமஸ் வார்த்தைக்களை இங்கே சொல்லிக்கொள்ளவும்)
பெரியவிளம்பர இடைவெளி :
"ஸ்பீட் ஒன் டெரா பைட்ஸ், மெமரி ஒன் ஜெட்டா பைட்ஸ்" சக்தியொடு , எங்க வலைப்பதிவு வந்தவுடனே கருத்துரை வழங்கும் ஆதவா, ஜோயல்சன், வி.ராதாகிருஷ்ணன், சிவாஜி, பேரு:மாதேஸ்வரன், இயற்கை ராஜி,செல்வம், சங்கவி , நீச்சல்காரன், திருநாவுக்கரசு பழனிசாமி,ரோகிணி சிவா ஆகியோர்க்கு நன்றிகள்...
(ஆரம்பிச்சப்ப வந்தாங்க, நாங்களும் வழிமேல விழி வச்சு தெனமும் பாக்குறோம்.. ஆளையே காணலியே.. காமன்வெல்த் போட்டிக்காக டெல்லி போயிருப்பாங்களோ....)
(டி. ஆரின் பேமஸ் வார்த்தைக்களை இங்கே சொல்லிக்கொள்ளவும்)
பெரியவிளம்பர இடைவெளி :
"ஸ்பீட் ஒன் டெரா பைட்ஸ், மெமரி ஒன் ஜெட்டா பைட்ஸ்" சக்தியொடு , எங்க வலைப்பதிவு வந்தவுடனே கருத்துரை வழங்கும் ஆதவா, ஜோயல்சன், வி.ராதாகிருஷ்ணன், சிவாஜி, பேரு:மாதேஸ்வரன், இயற்கை ராஜி,செல்வம், சங்கவி , நீச்சல்காரன், திருநாவுக்கரசு பழனிசாமி,ரோகிணி சிவா ஆகியோர்க்கு நன்றிகள்...
(ஆரம்பிச்சப்ப வந்தாங்க, நாங்களும் வழிமேல விழி வச்சு தெனமும் பாக்குறோம்.. ஆளையே காணலியே.. காமன்வெல்த் போட்டிக்காக டெல்லி போயிருப்பாங்களோ....)
சங்கவி SPEAKS....
பக்கம் ததும்ப,ததும்ப எழுதுபவர்கள் எல்லாம் எழுத்தாளன் ஆக முடியாது,எழுத்துக்களை ஆளக் கூடியவனே எழுத்தாளன் ஆவான்.
வாய் மூடாமல் பேசுபவர் எல்லாம் பேச்சாளர் ஆகமுடியாது,சிறந்த முறையில் தெளிவுப்பட வரிசைப்படுத்தி பேச்சை ஆள்பவனே பேச்சாளன் ஆகிறான்.
முதல் வைத்திருப்பவன் எல்லாம் முதலாளி ஆகமுடியாது,அதனை ஆளக்கூடியவனே முதலாளி ஆவான்.அது போல தன் மனதை கட்டுப்படுத்தி ஆள கூடிய ஆற்றல் படைத்தவனே மனிதனாக ஆகிறான்..
பிறப்பால் நாம் பெறுவது உடல் வலிமை. அதனைக் கொண்டு மனிதன் பெறுவது மனவலிமை.. மனவலிமை என்பது தன்னைப் பற்றியும், தன்னைச் சுற்றி இருப்பவர்கள் பற்றி புரிந்துக்கொள்ளுதல்...
K.R.P. செந்தில் அவர்கள் கவிதைப்போட்டிக்கு அனுப்பிய கவிதை...
நான் இறந்து போயிருந்தேன்
சுற்றி அழும் கூட்டம் ஏதுமற்று
தனியாக
வழிதவறிய
மலை உச்சியின் நேர் கீழே
என் உடல் ..
இன்னும் சற்று நேரத்தில்
இறந்து போகும்
என் செல்பேசியும்...
தொடர்ந்த அழைப்புகளுக்கு
பதிவு செய்யப்பட்ட
பதில்களை கேட்டு வெறுத்துப்போன
மனைவி ;சபித்துக்கொண்டே
அடுப்பை அணைப்பாள்.
நாளையோ
அதற்கடுத்த நாளோ
என்னை தேடும் உத்திகள்
மேற்கொள்ளப்படும்
அதற்குள்
மலை எறும்புகளுக்கோ
ஓநாய்களுக்கோ உணவாகி
எலும்புகளாய் கிடைப்பேன்..
அதுவரை
என்னை நேசித்தவர்களின்
நம்பிக்கைகளில்
நான் உயிருடன்தான் இருப்பேன்..
http://krpsenthil.blogspot.com/
krpsenthil@gmail.com
சுற்றி அழும் கூட்டம் ஏதுமற்று
தனியாக
வழிதவறிய
மலை உச்சியின் நேர் கீழே
என் உடல் ..
இன்னும் சற்று நேரத்தில்
இறந்து போகும்
என் செல்பேசியும்...
தொடர்ந்த அழைப்புகளுக்கு
பதிவு செய்யப்பட்ட
பதில்களை கேட்டு வெறுத்துப்போன
மனைவி ;சபித்துக்கொண்டே
அடுப்பை அணைப்பாள்.
நாளையோ
அதற்கடுத்த நாளோ
என்னை தேடும் உத்திகள்
மேற்கொள்ளப்படும்
அதற்குள்
மலை எறும்புகளுக்கோ
ஓநாய்களுக்கோ உணவாகி
எலும்புகளாய் கிடைப்பேன்..
அதுவரை
என்னை நேசித்தவர்களின்
நம்பிக்கைகளில்
நான் உயிருடன்தான் இருப்பேன்..
http://krpsenthil.blogspot.com/
krpsenthil@gmail.com
கவிதை BY ஆர்.சர்மிளா. எட்டாம் வகுப்பு ஈ பிரிவு...
அம்மாவின் அரவணைப்பு..,
வானத்தில் இருப்பது நட்சத்திர கூட்டங்கள்..
கடலில் இருப்பதோ
மீன்களின் கூட்டங்கள்
ஆனால்
என் மனதில் இருப்பதோ
அம்மாவின் அன்பு முத்தங்கள்
- ...ஆர்.சர்மிளா. எட்டாம் வகுப்பு ஈ பிரிவு...
-----------------------------------------------------------------------
கனவு
லட்சியத்தின் ஒரு வழி பாதை
நிஜங்கள் கூட தோற்றுப் போகும் உத்தமம்
கற்பனைகளின் சங்கமம்
ஏழைகளின் ராஜ சிம்மாசனம்
உறவுகளின் ரகசிய உடன்பாடு
கனவுகள் ஏமாற்றம் அடையும் போது தான்
கண்ணீர் விழிகளில் குடியேற இடம் தேடுகிறது
-ஆர்.நிர்மலா..
-----------------------------------------------------------------------------------------------
மழை...
ஓ..வானமே உன் மகன் குறும்புக்காரன்...
அடிக்கடி ஓடியாடி விளையாடி
ஆடைகளை அழுக்காக்குகிறான்...
நீயோ சலவையில் கெட்டிக்காரி.
அடித்து துவைக்கும்
சத்தம் இடியாய் கேட்கிறது.
அலாசுகின்ற நீர் மழையாய் பெய்கிறது.
சிறிது நேரத்தில்
உன் மகன் பளிச்சென மின்னுகிறான்
...ஜி.ரோசரி. XI-A...
இறந்த பின்னும் வலிக்கிறது...லீலா மகேஸ்வரி அவர்களின் சவால் கவிதை
நான் இறந்து போயிருந்தேன்.
இறந்தபின்னும் உயிர் வலி குறையவில்லை.
இது முதல் முறை அல்ல..
பல தருணங்களில்
பலரின் முன்பு
என் இறப்பு நிகழ்ந்திருக்கிறது.
"உயிரியல் இறப்பு அல்ல..
உளவியல் மரணம்"
சிநேகிதியின் மதிப்பெண் பட்டியல் ஒப்பிட்டு
பொழிந்த அப்பாவின் வார்த்தைகள்..
பெண் கேட்டு வந்த உறவினர்களின்
"குத்தல்" கேள்விகள்...
கள்ளமில்லா நண்பனின் வருகைக்கு
பாட்டி பூசிய விகார சாயம்...
சொந்தமானவர்களின் சொல்லம்புகள்...
சக பயணியின் அத்துமீறல்...
மேலதிகாரியின் காரணமில்லா கடுமை...
துரோகத்தால் மூச்சு திணறிய நட்பு...
துளி விஷம் கலந்துவிடப்பட்ட தினசரிகள்...
Subscribe to:
Posts (Atom)
Popular Posts
Blog Archive
-
▼
2010
(107)
-
▼
October
(33)
- யார் தான் நிரப்புவது இந்த வெற்றிடத்தை..
- தோல்வி நிலை என நினைத்தால்...
- வாழ்த்தலாம் வாங்க...
- இந்தப் பதிவு உடனடியாக நீக்கப்பட நேரிடலாம். சில மணி...
- வலைப்பதிவர்களும் தமிழக முதல்வராக எளிய வழி...
- சத்தம் போடாதே... -நந்தினி.B.
- தாமரை, நா.முத்துக்குமார், கபிலன், யுகபாரதி கவிதைகள்
- இயற்கைக்கு பரிசளிக்கப்பட்ட செயற்கை மரணம்...
- பாலகுமாரன் @ விகடன் தீபாவளி மலர்...
- காத்திருக்கிறேன் தோழி.. ---எம்.மணிமேகலை
- navin robins அவர்களின் சவால் கவிதை -- நான் ...
- இந்த வாரம்: ரசித்தவைகளும், யோசிக்க வைத்தவைகளும்..
- உலுக்கி எடுத்த உண்மைகளும், இரக்கமில்லா இரவுகளும்...
- பிரபல வலைப்பதிவர்க்கு கொலைமிரட்டல்
- சங்கவி SPEAKS....
- K.R.P. செந்தில் அவர்கள் கவிதைப்போட்டிக்கு அனுப்ப...
- கவிதை BY ஆர்.சர்மிளா. எட்டாம் வகுப்பு ஈ பிரிவு...
- இறந்த பின்னும் வலிக்கிறது...லீலா மகேஸ்வரி அவர்களின...
- ரசிக்க வைத்தவைகளும், யோசிக்க வைத்தவைகளும்....இந்த ...
- பிளஸ் டூ ஸ்டார் உடன் ஒரு சந்திப்பு…..
- நானும் பிரபல எழுத்தாளர்களும்.. நிலாபர் நிஷா.
- puthiya parithi அவர்களின் சவால் கவிதை-- நான் இறந்த...
- ரவிஉதயன் அவர்களின் சவால் கவிதை-- நான் இறந்து போயி...
- Mitr-Friend Bhushavali அவர்களின் சவால் கவிதை-- நான...
- எல். கே. அவர்களின் சவால் கவிதை--நான் இறந்து போயிரு...
- மலிக்கா அவர்களின் மற்றுமொரு சவால் கவிதை..
- நாம் மாணவர்கள்...
- அன்பரசன் அனுப்பிய சவால் கவிதை
- Markanday Sureshkumar அவர்கள் அனுப்பிய நான் இறந்த...
- மலிக்கா அவர்கள் அனுப்பிய நான் இறந்து போயிருந்தேன் ...
- இந்த வாரம் ரசிக்க வைத்தவைகளும், யோசிக்க வைத்தவைகளு...
- நான் இறந்து போயிருந்தேன்...என்ற தலைப்பில் எழுத...
- உடம்பு என்பது ஒரு அரசாங்கம்..
-
▼
October
(33)
ட்விட்டர் வரை உறவு...
பூக்கள் பறிப்பதற்கே...
அருகான்மை தோட்டங்கள்
-
-
வணக்கம் வள்ளுவ! - ஈரோடு தமிழன்பன் I Vanakkam Valluva - ஈரோடு தமிழன்பன் அவர்கள், கவிஞர், சிறுகதை ஆசிரியர், புதின ஆசிரியர். நாடக ஆசிரியர், சொற்பொழிவாளர் எனப் பன்முக ஆளுமைகளைக் கொண்டவர். ...1 week ago
-
அம்மாவின் சேலை - "பூபாளம்" இதழில் வெளியானது - சிறுகதையை வெளியிட்ட "பூபாளம்" இதழுக்கு நன்றி பீரோவைத்திறந்து, அடுக்கப்பட்டிருந்த அம்மாவின் சேலைகளைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான் ரகு. ரகம் வாரியாகப் ப...3 weeks ago
-
சார்த்தா - எஸ். எல். பைரப்பா - அந்தக் காலத்தில் வணிகம் செய்வதற்காக நாடு விட்டு நாடு குழுவாக பயணம் செய்துள்ளனர். நீண்ட நாள் பயணம் என்பதால், ஒரு குழுவாகவே அனைவரும் இணைந்து சென்றுள்ளனர். ...4 weeks ago
-
ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு பெர்ப்ளெக்ஸிட்டி ப்ரோ இலவசம் - பெர்ப்ளெக்ஸிட்டி என்பது சாட்ஜிபிடி, ஜெமினி, கிளாட், க்ரோக் உள்ளிட்ட முன்னணி இயற்றறிவு (GenAI) செயலிகளின் நவீன சேவைகளை ஒரே இடத்தில் வழங்கும் ஒரு செயலியாகு...1 month ago
-
இந்த மாடுகளை காப்பாத்த யாருமே இல்லையா... - ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடக்கிறதோ இல்லையோ மாட்டுப் பொங்கல் அன்று வாசலில் போடும் காளைகளின் உருவங்கள் இணையத்தில் வைரல் ஆகிவிடுகிறது ... அந்த ...7 months ago
-
ALP: என் ஜோதிடத் தேடலின் தீர்வு - என் மனைவியைப் பெண் பார்க்கப் போயிருந்தபோது. இருவீட்டாருக்கும் பரம திருப்தி. மாப்பிள்ளை-பெண்ணுக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துப்போன சமயத்தில் ‘இந்தாங்க. ...1 year ago
-
ரமேஷ் கதைகள் - காலச்சுவடு வாயிலாக நான் வாசித்த இவரது முதல் சிறுகதை முன்பு ஒருகாலத்தில் நூற்றியெட்டு கிளிகள் இருந்தன. கொஞ்ச காலம் கழிந்து அதே தலைப்பில் சிறுகதை தொகுப...2 years ago
-
11 STD COMPUTER || CH-4-5 || BOOK IN ONE WORDS || NEW PDF 23-24 - 11 STD COMPUTER || CH-4-5 || BOOK IN ONE WORDS || NEW PDF 23-24 QUESTION PAPER PDF LINK: DOWNLOAD2 years ago
-
Tìm hiểu thống kê XSMB theo tổng và ứng dụng của nó - Bằng cách tìm hiểu và phân tích các tổng số, người chơi có thể tìm ra những mẫu số xuất hiện thường xuyên và áp dụng chúng để dự đoán các kết quả tiếp theo...2 years ago
-
Best Moisturizer in India - *Re'equil - Best Moisturizer in India* *DISCLAIMER: This content is not sponsored* *Re'equil CERAMIDE HYALURONIC ACID* moisturiser is priced *Rs. 356. * I...2 years ago
-
LOVE BIRDS (2023) கன்னடம் - சினிமா விமர்சனம் ( ரொமான்ஸ் ) @ அமேசான் பிரைம் - 1996ல் பி வாசு இயக்கத்தில் பிரபு தேவா , நக்மா நடிப்பில் வெளியான லவ்பேர்ட்ஸ் தமிழ் படத்துக்கும் , 2020 ல் ஆக்சன் அட்வென்ச்சர் அமெரிக்கன் படமாக...2 years ago
-
Hindu Genocide Alert - இந்தியாவிற்கு வரவிருக்கும் பேராபத்து - MUST WATCH... - இந்தியாவில் நெருங்கி வரும் சிவில் சண்டை :3 years ago
-
உண்மை உறங்காது - நாடக விமர்சனம் - இவ்வாண்டு பிப்ரவரி 9 ஆம் தேதி நாரத கான சபாவில் அரங்கேறிய இந்நாடகம், மேலும் சில மேடைகளை கண்டுவிட்டு.. ஏப்ரல் 3 அன்று மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் க்ளப்பில் ...4 years ago
-
Amazon kindle வாசிப்பனுபவத்தில் நன்மையும் தீமையும் - *வணக்கம் உறவுகளே* *சுகநலங்கள் எப்படி ?* *வாசிப்புப் பழக்கம் என்பது தற்போதைய காலத்தில் மிக மிக அருகி வருவதற்குக் காரணம் டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி தா...5 years ago
-
”வட இந்தியாவைவிட தமிழ்நாடு பாதுகாப்பானது...!!!” - ஃபாத்திமாவின் தாயின் இந்தக் கூற்று எத்தனை வலி நிறைந்தது என்று எனக்குத் தெரியும். ஏனெனில் நானும் என் மகனை இதைச் சொல்லித்தான் வட நாட்டில் படிக்க அனுமதி மறுத்...5 years ago
-
என்னதான் முடிவு? - நித்யா கோலம் போட்டுக் கொண்டிருந்தாள். அவளுக்குக் கோலம் போடுவதில் எப்போதுமே அதிக ஆர்வம் உண்டு. அன்று வெள்ளிக் கிழமை வேறு. எனவே மிகவும் மும்முரமாகக் கோலம்...6 years ago
-
சீனி கிழங்கு... - சீனி கிழங்கு... திருநெல்வேலி மாவட்டம் செட்டிகுளம்தான் எங்க அம்மாவின் ஊர், பெரிய விவசாய குடும்பம், பெண்கள் தென்னைமரம் ஏறி தேங்காய் பறிக்கும் அளவுக்கு விவ...6 years ago
-
Get Clearer Skin With These Clever Tips! - Most people think that acne is just a problem on your face, but it is often a shoulder thing or a butt thing, on the buttocks. The below article can provi...6 years ago
-
மருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்! எது? - சர்வதேச அளவில், 'ஆட்டிசம்' பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது; இதற்கு, இந்தியா மட்டும் விதிவிலக்கல்ல. 'ஆட்டிசம்' பாதிக்கப்பட்ட குழந்த...6 years ago
-
மல்லியின் காதலுடன்.. - என்றும் என் நினைவில் நீ 💕🌷💕🌷💕🌷💕🌷💕🌷💕 என்ன செய்தாய் என்னை -நான் எப்படித் தொலைந்தேன் உன்னில் கடக்கும் நிமிடம் யாவும்-என் கண்ணுக்குள் காட்சியானாய் ...6 years ago
-
பொது வெளியின் இன்றைய நிலை - *ஒவ்வொருவரும் * *தனது கனவு வெளியை * *திறந்து வைத்து ... * *அவரவர் * *கனவு வெறியை மொய்க்க * *மற்றவர்களை அழைக்கின்றனர்.* *அதனில்* *தனது கனவு வெளியை மொய...6 years ago
-
சீமராஜா - சினிமா விமர்சனம் - சிவகார்த்திகேயன், சூரி, இமான், பொன்ராம் வெற்றிக் கூட்டணியின் மூன்றாவது படைப்பாக வெளிவந்திருக்கும் படம் சீமராஜா... காதல், காமெடி, சண்டை, பன்ச் டயலாக் என...7 years ago
-
செத்தாள் சப்பரம் - சூரியன் கத்தரிக்கோலை எடுத்து வெட்ட ஆரம்பித்தால் அதிகபட்சம் அஞ்சு நிமிசம்தான்.. தலையிலுள்ள முடி காணாமல் போய் கிட்டத்தட்ட மொட்டைபோட்டு ஐந்து ...7 years ago
-
ஓட்டென்றால் அதன்உரிமை அறியா மக்கள்-நாட்டில் உள்ளவரை தீராது ஐயா சிக்கல்! - ஓட்டென்றால் அதன்உரிமை அறியா மக்கள்-நாட்டில் உள்ளவரை தீராது ஐயா சிக்கல்! நோட்டென்றால் ஓடியதை வாங்கிக் கொண்டே-மாற்று நோக்கமின்றி சொன்னபடி அளித்தல் கண்டே! ந...7 years ago
-
மணக்கும் டிஜிட்டல் இந்தியா - என்ன தான் ஜியோ புரட்சி வந்தாலும் பலரும் ஜியோவை secondary ஆகத்தான் பயன்படுத்துகிறோம். அதாவது வங்கிப்பரிவர்த்தனைகள் உள்ளிட்ட முக்கிய சேவைகளுக்கு தாங்கள் நீ...7 years ago
-
கோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு. - ஒளிப்பதிவாளராக இருந்த விஜய் மில்டன் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் கோலி சோடா. பெரும் வெற்றிப்படமாக அமைந்தது. அதன் இரண்டாம் பாகம் விரைவ...7 years ago
-
மைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி7 years ago
-
*தமிழகம்- 61* - தமிழகம் 61 —�—�—�—�—�—�—�—� தற்போதைய தமிழக எல்லைகளை கொண்ட மொழிவாரி மாநிலமாக தமிழகம் அமைக்கப்பட்டு நேற்றுடம் 61 ஆண்டுகள் நிறைவுற்று 62வது ஆண்டில் அடியெடித்த...7 years ago
-
வாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்ட...7 years ago
-
கே டிவியில் பார்த்த படங்களின் விமர்சனத் தொகுப்பு - ஒரு இலக்கியப் பார்வை. - வழக்கமாக விமானப் பயணங்களில் நான் புத்தகங்கள் எதுவும் படிப்பதில்லை. இரண்டு நாட்களுக்குத் தொடரும் பெரும் பயணங்களிலுமே நான் இதைத்தான் கடைப்பிடிக்கிறேன். சமீப...7 years ago
-
அரியலூரில் விதைத் திருவிழா .... - உடலையும், உயிரையும் காணியினுள் கரைத்து வாழும் சம்சாரிகளுக்கு "வெரப்புட்டி" என்பது பெரும் பொக்கிசம். அது ஒரு வரமும் கூட. விதைப்பதற்காக பிரத்யோகமாக முடையப...8 years ago
-
செகாவ் அமைக்க நினைத்த சானிடோரியம் கேட்கின்றோம் உதயா...! - தொடர்ந்து கல்வியில் புரட்சி ஏற்படுத்த வேண்டும் என்று முனைப்புடன் செயல்படும் கல்விச் செயலர் குறித்து சொல்லாமல் இருக்க இயலவில்லை. மிக அருமையான திட்டங்கள் வழ...8 years ago
-
சிற்பங்கள் கண் திறந்தால்! - சிற்பங்கள் கண் திறந்தால்! ------------------------------------------------------------------------------ சிற்பங்கள் கண் திறந்தால் வாழ்த்துச் சொல்லும்...8 years ago
-
புரட்சித் தலைவிக்கு அஞ்சலி! - நான் அதிமுக உறுப்பினர் இல்லை, அபிமானியும் இல்லை. அரசியலில் அவ்வளவு ஆர்வமும் இல்லை. ஆனாலும் என் மனதில் சோகத்தைக் கவிய வைத்தது இந்த மரணம்!! புரட்சித் தலைவி...8 years ago
-
அவன் அன்று இறைவன் - கண்ணை மூடும் கறுப்பு வானம் வெள்ளை குளமாய் வட்ட நிலவு சிந்திக்கிடக்கும் சில்லறை விண்மீன் சிலிர்க்க வைக்கும் சிக்கன காற்று ********* அடங்கிப்போகும் அவசர உலகம...8 years ago
-
ரெமோ என்னும் மாய யதார்த்தம்..... - ரெமோ படத்த பத்தி ஏகப்பட்ட விமர்சனங்கள் வந்துடுச்சு..... அதுனால இத வழக்கமான விமர்சனம் மாதிரி இல்லாம படத்த பத்தி சில குறிப்பிட்ட விஷயங்களை மட்டும் பார்ப்ப...8 years ago
-
தொடரி- தடம் புரண்டதா? - டெல்லி டூ சென்னை வரும் ரயில் கேண்டீனில்(பேஸ்ட்ரி) வேலை செய்பவர் தனுஷ். அதே ட்ரைனில் வரும் பிரபல நடிகையின் மேக்கப் உதவியாளர் கீர்த்தி சுரேஷ்அதே ட்ரைனில் பயண...8 years ago
-
கலியன் -4 (இறுதி) - பிரபாவிடம் இருந்து ஒரு கடிதம் வந்திருந்தது...கடிதம் நான் இதுவரை பார்த்திராத ஒரு லேசான மெடீரியல் -இல் இருந்தது.எழுதப்பட்டதா அச்சிடப்பட்டதா தெரியவில்லை. ப...9 years ago
-
சிமோனிலா கிரஸ்த்ரா - சிமோனிலா கிரஸ்தா வாசித்தேன். வளரும் அல்லது வளர்ந்துவிட்ட எழுத்தாளர் மாதவன் எழுதிய சிறுகதைத் தொகுப்பு. இணைய இதழ்களில் வெளிவந்த மாதவனின் சிறந்த சிறுகதைகளைத்...9 years ago
-
.நாண்டுக்கிட்டு செத்துப்போ - ப்ளாக் பக்கம் போயி வருசக்கணக்காச்சு(ஆமா இவரு பெரிய வெண்ண... போடாங் ...), இப்போ கொஞ்சம் வெட்டியாதான் இருக்கோம்(நீ எப்பவுமே வெட்டிதானடா ) அப்படியே பிளாக் ப...9 years ago
-
நாஞ்சில் நாடனின் ஒரு சிறுகதையும், சில பின்னூட்டங்களும். - 💥வெளி ஊருக்குப் பிழைக்கப் போகிறவர்கள், என்ன வேலை செய்தாலும் இங்கே வரும்போது தங்களை மிகவும் நல்லநிலையில் இருப்பதாகக் காட்டிக்கொள்கிறார்கள். அப்படி காட்டிக...9 years ago
-
மதுராந்தகி - மன்னா நம் அரண்மனையை உங்கள் புதல்வர்கள் முற்றுகையிட்டுவிட்டார்கள். கனத்த மவுனம்’ உப்பரிகையில் நின்று கோட்டை சுவரை வெறித்து பார்த...9 years ago
-
வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் - வலைச்சரத்தில் வெற்றிகரமாக ஆறாம் நாள் பதிவர்களுடன் வந்து விட்டேன் ! இதுவரை அதிகம் இங்கு பேசப்படாத பதிவர்கள் , அவர் தம் பதிவுகள் வேண்டும் என்றே , தேடி தே...10 years ago
-
அம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்!! - ஒரு கட்சிக்கான விசுவாசம், ஒரு நடிகருக்கான விசுவாசம் என்பது ஒருவரின் தனிப்பட்ட உரிமை. அதற்குள் தலையிட யாருக்குமே உரிமை கிடையாது. ஆனால் ஏன் இவரை விசுவாசிக்க...10 years ago
-
Portable மென்பொருளை Winrar மூலம் எளிதில் உருவாகுவது எப்படி - எந்த கணினியிலும் நிறுவாமல் நம் பென் டிரைவில் வைத்தே பயன்படுத்த விண்டோஸ் மென்பொருள்களை Portable மென்பொருள்களாக எப்படி உருவாக்குவது என்று பார்போம் . மேலும...10 years ago
-
கணித புலிக்குட்டி..!! - " அப்பா கோகுல் Cheating பண்றான்பா..!! " " இல்லப்பா.. அண்ணன் தான் Cheating பண்றான்...!! " நான் பெத்த கண்மணிகள் ரெண்டும் கண்ணு மண்ணு தெரியாம சண்டை போட்டுட...10 years ago
-
PG TRB ANSWER KEY (10-01-2014) - http://www.trbtnpsc.com/2014/11/pgtrb-2014-2015-notification-syllabus.html10 years ago
-
-
கயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்) - கயல், ஒரு மினி பட்ஜெட் டைட்டானிக். படத்தில கப்பலே இல்லையே, அப்புறம் இவன் எதுக்கு டைட்டானிக்கோட ஒப்பிடுறான் எண்ட டவுட்டு உங்களுக்கு வரலாம். டைட்டானிக், கப்பல...10 years ago
-
கப்பல் விமர்சனம் - கப்பல் விமர்சனம் வைபவ்,கருணாகரன்,குண்டு அர்ஜுன் இன்னும் ரெண்டு பேர் நண்பர்கள். கல்யாணம் ஆனால் நட்பு போயிடும்ன்னு கல்யாணமே வேணாம் என சின்ன வயசிலையே முடி...10 years ago
-
நாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு - *நடுத்தர வர்க்கம் நாலு பேருக்காகவே வாழ்ந்து கொண்டிருப்பது போலத் தோன்றுகிறது.பொருளாதாரம்தான் இதன் அடிப்படை.உதவி செய்ய யாராவது வேண்டும்.சமயத்தில் கைமாத்தாக ...10 years ago
-
தூக்கம்! - செல்வாவின் குழந்தைப் பருவத்தில் நிகழ்ந்தது இது. நான்காம் வகுப்பு நிறைவடைந்து கோடை விடுமுறையைக் கழிப்பதற்காகத் தனது அத்தை வீட்டிற்குச் சென்றிருந்தார். அங்...11 years ago
-
எக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக் - ஃபேஸ்புக் (Facebook) பிரபல சமூக வலைத்தளமாக இருப்பதால் பல அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகள், நிறுவனங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் பலரும் அதிக நேரத்தை அ...11 years ago
-
Dubai Health Authority Recruitment - Dubai Health Authority Recruitment :We'd like to extend our thanks and appreciation to all our customers for their trust by applying in Dubai Health Author...11 years ago
-
உலகின் எடை 25 கிராம் ONLY - TV CLOUD STICK துப்பாக்கி படம் சூட்டிங் நடந்து கொண்டு இருக்கும் போதே, “என் தலைப்பை சுட்டுட்டாங்க”னு தலைல அடிச்சுகிட்டாங்க ”கள்ளத்துப்பாக்கி” என்ற படகுழ...11 years ago
-
ஓவரா பேசுவல்ல(!) வா...- ஹூவே!~ - வணக்கம் நண்பர்களே.... இந்தப்பதிவு ஓவரா பேசுற என்னையப்போல(!) ஆளுக்கு ஒரு எச்சரிக்கை...! இரவு 12.30 மணி.... கைப்பேசி அழைப்பு அப்பாடக்கர் உதவியாளர் எனும்(...11 years ago
-
கேப்டன் பிலிப்ஸ் (Captain Philips)... - நாம் அடிக்கடி செய்திதாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் படிக்கும், பார்க்கும் சோமாலிய கடற்கொள்ளைகள் பற்றிய உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்...11 years ago
-
என்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் ??!! - நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல, எதிர் விமர்சனம் எதிர் பதிவு போடற எதிர்கட்ச்சிக்காரங்களை கேட்க விரும்பறேன், என்னய்யா நீங்க போடறதுக்கு மட்டும்தான் ஹிட்ஸ...12 years ago
-
கல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ...12 years ago
-
வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே' - நீண்ட நாட்களுக்கு பின் பின் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி இதற்கு காரணம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திரு எம்.ஏ. சுமந்திரன் அவர்கள் BB...12 years ago
-
மீண்டும் விஸ்வரூபம்.. - போஸ்ட் போட்டு நாளாச்சே.. ப்ளாக் இருக்கா.. இல்லை அதையும் ஆட்டைய போட்டுட்டானுகளானு .... செக் பண்ண வந்தேன் சாமி.. கோவிச்சுக்காதீங்க...ஹிஹி12 years ago
-
சிங்கப்பூர் 13 - இன்று கிளம்புரேன். ஸோ சாங்கி ஏர் போர்ட் பத்திதான் இன்றைய பதிவு. வீட்டை பூட்டிண்டு வராண்டாவில் இறங்கியதும் பூத்தொட்டியில் ரொம்ப குட்டியாக ஒரு பைனாப்பிள் கா...12 years ago
-
KLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints - இணைய நண்பர்களே, கடந்த ஆகஸ்ட் மாதம் உங்கள் அனைவரையும் கட்டிப்போட்ட *“HUNT FOR HINT”* கேமின் முன்னோடி *“KLUELESS”* தனது *8* ஆம் பாகத்தை இன்று மாலை இந்திய நே...12 years ago
-
ஆணாதிக்கம் - *உலகில் நடக்கும் பயங்கரவாத செயளானாலும் சரி அடக்கு முறை என்னும் ராணுவ புரட்சி களானாலும் சரி முதலில் பாதிக்கப் படுபவர்கள் பெண்களும் மற்றும் குழந்தைகளும்தான...13 years ago
-
26 அக்டோபரில் வெளி வருகிறது Windows 8 சலுகை விலையில் அப்டேட் செய்ய - கணினி துறையில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் இயங்கு தளமான விண்டோசின் அடுத்த பதிப்பை வெளியிட இருக்கிறது மைக்ரோசாப்ட் நிறுவனம். முந்தைய பதிப்புகளில் இரு...13 years ago
-
உணவகத்தொழிலில் உயர் லட்சியங்கள்-பாகம்-1. - * பாதுகாப்பான, தரமான உணவு, நம் அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென்பதே,**புதிதாக அமலுக்கு வந்துள்ள உணவு பாதுகாப்பு மற...13 years ago
-
ஹாய் பசங்களா . . . - ஹாய் பசங்களா . . . நான் கொஞ்சம் இல்ல ரொம்ப பிஸி . . . அதான் இந்த பக்கம் எட்டி பாக்க முடியல . . என்னை ரொம்ப மிஸ் பண்ணுற எல்லாருக்கும் நான் சொல்லுறது ஒன்னே...13 years ago
-
சென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்.... - இது காமெடி பதிவல்ல - சென்ற வாரம், பல ஊடகங்களில் - இந்தியாவை குறித்து பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டதால், எனது வேலைகளுக்கு மத்தியில் சட்டென்று கொட்ட வந்...13 years ago
-
-
-
-