K.R.P. செந்தில் அவர்கள் கவிதைப்போட்டிக்கு அனுப்பிய கவிதை...

நான் இறந்து போயிருந்தேன்
சுற்றி அழும் கூட்டம் ஏதுமற்று
தனியாக
வழிதவறிய
மலை உச்சியின் நேர் கீழே
என் உடல் ..

 இன்னும் சற்று நேரத்தில்
இறந்து போகும்
என் செல்பேசியும்...


தொடர்ந்த அழைப்புகளுக்கு
பதிவு செய்யப்பட்ட
பதில்களை கேட்டு வெறுத்துப்போன
மனைவி ;சபித்துக்கொண்டே
அடுப்பை அணைப்பாள்.

நாளையோ
அதற்கடுத்த நாளோ
என்னை தேடும் உத்திகள்
மேற்கொள்ளப்படும்
அதற்குள்
மலை எறும்புகளுக்கோ
ஓநாய்களுக்கோ உணவாகி
எலும்புகளாய் கிடைப்பேன்..

 அதுவரை
என்னை நேசித்தவர்களின்
நம்பிக்கைகளில்
நான் உயிருடன்தான் இருப்பேன்.. 

 http://krpsenthil.blogspot.com/

krpsenthil@gmail.com

14 கருத்துரைகள்:

எல் கே said...

good one .

செல்வா said...

கவிதை உண்மைலேயே நல்ல இருக்குங்க .
அப்புறம் உங்க ப்ளாக் உள்ள வரும்போது வைரஸ் வார்னிங் வருது ..
என்னனு பாருங்க ..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

nice .all the best senthil anna

வினோ said...

கவிதை அருமை

naveen (தமிழமிழ்தம்) said...

my firewall is preventing me to enter ur blogsite, it says that ur site is linked to ulavu.com, which contains suspicious malware. kindly check sir.

வினோ said...

கவிதை அருமை...

Unknown said...

கவிதையை வெளியிட்டமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ...

Unknown said...

கருத்துரை வழங்கிய எல்.கே.., ப.செல்வகுமார்., ரமேஷ்., வினோ.,தமிழமிழ்தம்.,அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்..
அடிக்கடி வாங்க..

Unknown said...

இப்போது வைரஸ் பிரச்சனை இருக்காது என்று நம்புகிறோம்.
உலவு.காம் இணைப்பை நீக்கிவிட்டோம். சுட்டிக்காட்டிய ப.செல்வக்குமார்,தமிழமிழ்தம் ஆகியொர்க்கு நன்றிகள்.Thanks for your care..

Unknown said...

எங்கள் அன்பான அனைவருக்கும்...
இந்த கவிதை வழங்கியுள்ள திரு.கே.ஆர்.பி. செந்தில் அவர்களின் சுயவிபரத்தை வாய்ப்பிருந்தால் படித்துப்பாருங்களேன்..

Unknown said...

எங்கள் அன்பான அனைவருக்கும்...
இந்த கவிதை வழங்கியுள்ள திரு.கே.ஆர்.பி. செந்தில் அவர்களின் சுயவிபரத்தை வாய்ப்பிருந்தால் படித்துப்பாருங்களேன்..
http://www.blogger.com/profile/00109845562741363082

பவள சங்கரி said...

உண்மையிலேயே அருமையான கவிதைங்க......வாழ்த்துக்கள்.

Dhanalakshmi said...

கவிதை நல்லாயிருக்குங்க... வாழ்த்துக்கள்.

cheena (சீனா) said...

அன்பின் செந்தில்

கவிதை அருமை - நல்ல கற்பனையில் எழுதப்பட்ட கவிதை. நன்று நன்று - நல்வாழ்த்துகள் செந்தில் - நட்புடன் சீனா

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்