சங்கவி SPEAKS....

பக்கம் ததும்ப,ததும்ப எழுதுபவர்கள் எல்லாம் எழுத்தாளன் ஆக முடியாது,எழுத்துக்களை ஆளக் கூடியவனே எழுத்தாளன் ஆவான்.

வாய் மூடாமல் பேசுபவர் எல்லாம் பேச்சாளர் ஆகமுடியாது,சிறந்த முறையில் தெளிவுப்பட வரிசைப்படுத்தி பேச்சை ஆள்பவனே பேச்சாளன் ஆகிறான்.

முதல் வைத்திருப்பவன் எல்லாம் முதலாளி ஆகமுடியாது,அதனை ஆளக்கூடியவனே முதலாளி ஆவான்.அது போல தன் மனதை கட்டுப்படுத்தி ஆள கூடிய ஆற்றல் படைத்தவனே மனிதனாக ஆகிறான்..

 
பிறப்பால் நாம் பெறுவது உடல் வலிமை. அதனைக் கொண்டு மனிதன் பெறுவது மனவலிமை.. மனவலிமை என்பது தன்னைப் பற்றியும், தன்னைச் சுற்றி இருப்பவர்கள் பற்றி புரிந்துக்கொள்ளுதல்...

இயற்கை எவரையும் ஓரே நிலையில் இருக்க அனுமதிப்பதில்லை. தற்போது தன்னிடம் உள்ள ஏதாவது தற்காலிக வலிமையால் கர்வம் கொள்பவர் எதிர்காலத்தில் எப்படியிருப்போம் என்பதை அறியாதவர்கள்.

கர்வம் கொள்ளுதல் இலட்சியத்தை அடைவதற்கான வழி அல்ல...
 எந்த நிலை வந்தாலும் வந்த நிலை மறவாதே" என்ற வார்த்தைகளை மனதில் நிறுத்தி செயல்பட வேண்டும்.
"

"மாற்றம்" எனபதை தவிர மற்றவை மாறக்கூடியவைதானே.

நமக்கு நடக்கும் நன்மை, தீமை அனைத்தும் நம் அனுபவத்திற்காகவே..
 கருத்துக்குவிப்பு: கே.சங்கவி. பன்னிரெண்டாம் வகுப்பு "" பிரிவு..
---


9 கருத்துரைகள்:

Anonymous said...

Unmaiyana karuthukkal..

Geetha said...

Unmaiyana varigal..

செல்வா said...

கருத்துக்குவிப்பு உண்மைலேயே இயல்பா இருக்குங்க ..
வாழ்த்துக்கள் ..!!

தமிழ் அமுதன் said...

good post..!

Unknown said...

எங்களின் அனைத்துப் பதிவுகளுக்கும் உடனடியாக கருத்துரை வழங்கும் ப.செல்வக்குமாரின் அன்புக்கு நன்றிகள்.
கருத்திட்ட கீதா, தமிழ் அமுதன் மற்றும் பெயர் குறிப்பிடாத அந்த உள்ளத்திற்கும் நன்றிகள்.

வினோ said...

கருத்துக்குவிப்பு நல்லா இருக்குங்க..

Dhanalakshmi said...

மிகவும் அருமை....

ராம்ஜி_யாஹூ said...

பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் பொழுது பதிவா

உங்கள் பரிச்சையை நினைத்து எனக்கு பயமாகவும் பதட்டமாகவும் இருக்கிறது

cheena (சீனா) said...

அன்பின் சங்கவி

அருமை அருமை - எழுத்தாளன், பேச்சாளன், மனிதன் என்பவர்கள் யார் என விளக்கிய விதம் நன்று. நல்வாழ்த்துகள் சங்கவி - நட்புடன் சீனா

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்