தாமரை, நா.முத்துக்குமார், கபிலன், யுகபாரதி கவிதைகள்

                     
இது நான் எழுதியிருக்க வேண்டிய கவிதை 
என படிப்பவரை யோசிக்க வைத்து,
வாசகர்களை எளிதில் ஈர்க்கும் நா.முத்துக்குமார், 
விகடன் தீபாவளி மலரில் எழுதியிருக்கும் கவிதை 
"ஏழு பள்ளிகளில் படித்தவன்''. 
இயல்பான நடையில், ஒரு வார்த்தைக் கூட 
மிகையில்லாது நீள்கிறது. 

//ஏழு பள்ளிகளில் படித்த
ஆர்.எஸ். கேசவன்
எட்டாவது பள்ளியாக
எங்கள் வகுப்புக்கு
வந்து சேர்ந்தபோது
அரையாண்டு விடுமுறை முடித்து
நாங்கள்
முழு ஆண்டு ஜூரத்தில் இருந்தோம்//

//சொல்வதற்கும் அவனிடம்
ஏராளம் கதைகள் இருந்தன
கேட்பதற்கு எங்களிடம்
இரண்டே இரண்டு
காதுகள் மட்டுமே//

//ஒன்பதாவது பள்ளிக்கு
எங்களைச் சுருட்டி
கதையாக மாற்றி
சிரித்தபடி போனான்//

வானம் என் வளர்ப்புத் தாய் 

என்பதைக் கருவாகக்
கொண்டு விரிகிறது கபிலன் எழுதிய கவிதை
வானம்பாடி.

வானத்தின் விளைப்பொருட்களை 
இனிய உவமைகளுடன் 
அழகுணர்வுடன் காட்டுகிறார்
அழுத்தமான வார்த்தைகளைக் கொண்டு,
மனசு மலைத்துப்போகும்
அர்த்தம் தெனிக்கும் தாமரையின்
மற்றக்கவிதைகளைப் போலவே,
பேச மறுத்த மனசின் ஓசைகளை விவரிக்கிறது
"அழுது கொண்டிருக்கும் முதுகு" - கவிதை.


விகடன் தீபாவளி மலரில் கவிதைகளில்
முதலாவதாக இடம்பெற்றிருக்கிறது
தாமரையின் இந்த கவிதை.


//உனக்கான நஞ்சை நான் அருந்தி
தொண்டையில் நிறுத்திக்கொண்டேன்
என்பதற்காகவாவது
நான் இன்னும் கொஞ்சம்
நன்றாக நடத்தப்பட்டிருக்கலாம்...// 


//ஒரு கை என் முதுகைத்
தடவிக் கொடுப்பதாக
ஒரு கனவு இன்னும்
வந்துக்கொண்டே இருக்கிறது//


என இயலாமை மற்றும் எதிர்ப்பார்ப்பை
வெளிப்படுத்தி முடிகிறது


முதல் காதலைவிட இரண்டாவது காதல்
எல்லாவிதத்திலும் சிறந்தது என சான்றளிக்கிறது
யுகபாரதியின் கவிதை.


இறுதியாய் இடம் பெற்றிருக்கிறது
ஷங்கர் ராம சுப்ரமணியன் எழுதிய ஐந்து கவிதைகள்.

என் வீட்டுக்கு முகம் உண்டு என்ற கவிதை
அருமையாக இருக்கிறது.
மற்ற கவிதைகள் எமக்குப் புரியவில்லை.
உங்களுக்கு புரிந்தால் சொல்லுங்கள்.

10 கருத்துரைகள்:

NaSo said...

படிச்சு பார்த்துட்டு கண்டிப்பாக சொல்லறேங்க.

செல்வா said...

முத்துகுமார் கவிதைனா சொல்லவா வேணும் ..?
எல்லாமே கலக்கல்ங்க ..!!

ஆரூரன் விசுவநாதன் said...

நல்ல பகிர்வு..வாழ்த்துக்கள்.....

நானும் படித்துப் பார்க்கிறேன்

Unknown said...

வாழ்த்துரை வழங்கிய நாகராஜ சோழன், ப.செல்வக்குமார் மற்றும் ஆரூரன் விசுவநாதன் ஆகிய அன்பு உள்ளங்களுக்கு எம் நன்றிகள்..

அன்பரசன் said...

நானும் படித்துப் பார்க்கிறேன்..

எஸ்.கே said...

கவிதைகள் சூப்பர் பகிர்வுக்கு நன்றி!

cheena (சீனா) said...

அன்பின் பாரதி - நல்ல கவிதைகள் - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

இராஜராஜேஸ்வரி said...

கவிதைப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_23.html

தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். கருத்துரைகளை அறியப்படுத்தவும். நன்றி.

குணசேகரன்... said...

இன்றுதான் முதன் முதலில் உங்கள் பதிவை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வாழ்த்துக்கள்.
உங்கள் பதிவின் நடை அருமை..பகிர்தலுக்கு நன்றி.
where is followers button?its not displayed.
http://zenguna.blogspot.com

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்