கலாய்ப்பு சிறப்பிதழ்-3 கலக்கல்SMSகள்.


சூடான டெரர் செய்திகள்:
மாணவர்களுக்கு பரீட்சை வைக்கும் அறிமுகப்படுத்தியவர் ஹென்றி ஃபிசல் என கண்டறியப்பட்டதால், தமிழக மாணவர்கள் அவர் மீது கொலைவெறித் தாக்குதல் திட்டம்.
ஹென்றி ஃபிசல், வருத்தகிரி ஓடும் தியேட்டரில் மறைந்துள்ளதால் இதுவரை யார் கண்ணிலும் படாமல் பாதுகாப்பாக உள்ளார்- எமது சிறப்பு செய்தியாளர்.

கடவுள் என்னிடம், உனக்கு நூறு கோடி வேண்டுமா, உன்னைப் போன்ற உண்மை நண்பன் வேண்டுமா? என்றார். நான் நூறு கோடி தான் என்றேன். (நாம அப்புறமா பிரிச்சுக்கலாம் மச்சி)


"என்னங்க, நான் செத்ததுக்கு அப்புறம் நீங்க வேற கல்யாணம் பண்ணிக்கிவீங்களா?"
"ஆமானு சொன்னா நீ கோவிச்சுக்குவ, மாட்டேன் சொன்னா உங் தங்கச்சி கோவிச்சுக்குவா"

"தோல்விகளால் நீ அடிபட்டு வீழ்ந்தால் உடனே எழுந்து விடு. இல்லையென்றால் இந்த உலகம் உன்னை புதைத்து விடும்.


"டேய்,பரீச்சையில எத்தன கேள்வி கேட்டாங்க"
"அஞ்சு கேள்வி கேட்டாங்க.."
"நீ எத்தன கேள்வி எழுதின?"
"முதல் மூணு கேள்வி, கடைசி ரெண்டு கேள்வி மட்டும் விட்டுட்டேன்"

"மனுசன பொறந்த ஏதாவது சாதிக்கனுடா"
"நல்ல வேளங்க டீச்சர், நான் குழந்தையாக தான் பொறந்தேன்"

"அமெரிக்காவில மழை வந்தா, அஞ்சு நிமிஷத்துல மழைத்தண்ணி காணாம போயிடும்.
"இந்தியாவில் மழை வந்தா, அஞ்சு நிமிஷத்துல ரோடு காணாம போயிடும்."

பிராங்களின் கருத்து: வற்றிப்போனால் தான் கிணறின் அருமை புரியும்.

"எல்லா கோழியும் கொக்கரகொ-னு கூவுது ஆனா ஒரு கோழி மட்டும் ஜெய்ஹிந்த்-னு கூவுது ஏன்னு தெரியுமா?"
"அது விஜயகாந்த் வீட்டு கோழி"
இப்படிக்கு தேசபக்தியை, கோழிகளுக்கும் ஊட்டுவோர் சங்கம்.
தலைவர்:விஜயகாந்த். செயலாளர்: அர்ஜூன். பொருளாளர்: சரத்குமார்.
(தலைமை அலுவலகம்: கார்கில். முக்கிய எதிரி: வாசிம் கான்).

இந்த பதிவுக்கு வாக்களிக்காதவர்கள், அழுகை வரும் வரை, இப்போதைய அரையாண்டுத்தேர்வு எழுத வைக்கப்படுவார்கள், அதுவும் இயற்பியல் மற்றும் வேதியியல்.

38 கருத்துரைகள்:

karthikkumar said...

கலாய்ப்பு சிறப்பிதழ்-3 கலக்கல்SMSகள்//
ஆமா யாரை கலாய்க்க?

karthikkumar said...

வற்றிப்போனால் தான் கிணறின் அருமை புரியும்.///
இதுக்கு பேர் தத்துவம்ங்க.

Unknown said...

///மனுசன பொறந்த ஏதாவது சாதிக்கனுடா"
"நல்ல வேளங்க டீச்சர், நான் குழந்தையாக தான் பொறந்தேன்"///

அதுனாலதான் நான் இது வரைக்கும் எதுவேமே சாதிக்கல போல

karthikkumar said...

இந்த பதிவுக்கு வாக்களிக்காதவர்கள், அழுகை வரும் வரை, இப்போதைய அரையாண்டுத்தேர்வு எழுத வைக்கப்படுவார்கள், அதுவும் இயற்பியல் மற்றும் வேதியியல்.///நான் போட்டுட்டேன்பா

karthikkumar said...

"என்னங்க, நான் செத்ததுக்கு அப்புறம் நீங்க வேற கல்யாணம் பண்ணிக்கிவீங்களா?"
"ஆமானு சொன்னா நீ கோவிச்சுக்குவ, மாட்டேன் சொன்னா உங் தங்கச்சி கோவிச்சுக்குவா"///
இப்படிக்கு மச்சினிச்சி கையால் மர்டர் ஆவோர் சங்கம்.

Unknown said...

எதுக்கு வம்பு வாக்களிச்சுடுவோம் இவங்க வாட்டுக்க எக்ஸாம் எழுத வச்சுடுவாங்க போல

மாணவன் said...

//கடவுள் என்னிடம், உனக்கு நூறு கோடி வேண்டுமா, உன்னைப் போன்ற உண்மை நண்பன் வேண்டுமா? என்றார். நான் நூறு கோடி தான் என்றேன். (நாம அப்புறமா பிரிச்சுக்கலாம் மச்சி)//

சூப்பர்...

தொடருங்கள்.........

மாணவன் said...

//இந்த பதிவுக்கு வாக்களிக்காதவர்கள், அழுகை வரும் வரை, இப்போதைய அரையாண்டுத்தேர்வு எழுத வைக்கப்படுவார்கள், அதுவும் இயற்பியல் மற்றும் வேதியியல்.//

தமிழ்மணம் இண்ட்லி இரண்டிலும் ஓட்டுப் போட்டு விட்டேன் நீங்க வேணும்னா ஜெக் பண்ணிப் பாருங்க rrsimbu என்று எனது நிஜப்பெயர் இருக்கும் நீங்க எங்க மாணவன் ஓட்டு காணும்னு ஏதாவது ஃபனிஷ்மெண்ட் கொடுத்துடாதீங்க...

ஹிஹிஹி.......

தினேஷ்குமார் said...

இயற்பியல் ஓகே வேதியல் வேண்டாம்

தினேஷ்குமார் said...

karthikkumar said...
VADAI
பங்கு காலைல இருந்து சுத்திக்கிட்டு இருக்கியே என்ன கம்பனி லீவா இன்று

karthikkumar said...

dineshkumar said...
karthikkumar said...
VADAI
பங்கு காலைல இருந்து சுத்திக்கிட்டு இருக்கியே என்ன கம்பனி லீவா இன்று//

கமபனி லீவு இல்ல பங்கு நான் லீவு. ஹி ஹி

தினேஷ்குமார் said...

"தோல்விகளால் நீ அடிபட்டு வீழ்ந்தால் உடனே எழுந்து விடு. இல்லையென்றால் இந்த உலகம் உன்னை புதைத்து விடும்.


"மனுசன பொறந்த ஏதாவது சாதிக்கனுடா"
"நல்ல வேளங்க டீச்சர், நான் குழந்தையாக தான் பொறந்தேன்"

நானும் தான்

தினேஷ்குமார் said...

karthikkumar said...
dineshkumar said...
karthikkumar said...
VADAI
பங்கு காலைல இருந்து சுத்திக்கிட்டு இருக்கியே என்ன கம்பனி லீவா இன்று//

கமபனி லீவு இல்ல பங்கு நான் லீவு. ஹி ஹி

அதான்னே பார்த்தேன் எங்க பார்த்தாலும் பங்கு வட வாங்குராறேன்னு

தினேஷ்குமார் said...

நான் வாக்களித்தாலும் இயற்பியல் தேர்வு மட்டும் எழுத நான் தயார்

Prathap Kumar S. said...

//அறிமுகப்படுத்தியவர் ஹென்றி ஃபிசல் என கண்டறியப்பட்டதால்//

இவரைத்தான் ரொம்ப வருசமா தேடறேன்.... நீங்க முடிச்சப்புறம் ஒரு ஆட்டோவுல ஏத்தி
துபாய் முட்டுச்சந்துக்கு அனுப்பி வைங்க...:))

கலக்கல்ஸ்...:))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ok im laughing

வினோ said...

அது ஏங்க ரெண்டு பாடம் மட்டும்?

ஆமினா said...

//மாணவர்களுக்கு பரீட்சை வைக்கும் அறிமுகப்படுத்தியவர் ஹென்றி ஃபிசல் என கண்டறியப்பட்டதால், //

மனுஷன் என் கைல மட்டும் கிடைக்கட்டும்.

NKS.ஹாஜா மைதீன் said...

கலக்கல் கலாயிப்புகள்......தொடரட்டும்.....

சாந்தி மாரியப்பன் said...

//அறிமுகப்படுத்தியவர் ஹென்றி ஃபிசல் என கண்டறியப்பட்டதால்//

:-)))))

செல்வா said...

//ஹென்றி ஃபிசல், வருத்தகிரி ஓடும் தியேட்டரில் மறைந்துள்ளதால் இதுவரை யார் கண்ணிலும் படாமல் பாதுகாப்பாக உள்ளார்- எமது சிறப்பு செய்தியாளர்.//

உங்க நக்கலுக்கு ஒரு அளவே கிடையாதா ..?

செல்வா said...

//"முதல் மூணு கேள்வி, கடைசி ரெண்டு கேள்வி மட்டும் விட்டுட்டேன்"//

நானும் அப்படித்தான் பண்ணுவேன் ..!

வைகை said...

இந்த பதிவுக்கு வாக்களிக்காதவர்கள், அழுகை வரும் வரை, இப்போதைய அரையாண்டுத்தேர்வு எழுத வைக்கப்படுவார்கள், அதுவும் இயற்பியல் மற்றும் வேதியியல்.//////////


அறிவியல் வேதியல் இதெல்லாம் யாரு?!! இந்த புள்ளஎல்லாம் பதிவு எழுதாதா?!

அன்பரசன் said...

கலக்கல் போங்க

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ok im laughing///////////


தோடா... வந்தீனாறு தொர!!!!!!!

வைகை said...

அன்பரசன் said...
கலக்கல் போங்க//////////


இன்னாப்பா கலக்கினாங்கோ?!

FARHAN said...

சூப்பர் கலக்கல்

Chitra said...

கடவுள் என்னிடம், உனக்கு நூறு கோடி வேண்டுமா, உன்னைப் போன்ற உண்மை நண்பன் வேண்டுமா? என்றார். நான் நூறு கோடி தான் என்றேன். (நாம அப்புறமா பிரிச்சுக்கலாம் மச்சி)


...Great deal! ha,ha,ha,ha,...

ம.தி.சுதா said...

அட.. அட.. அட இப்படியா ரெரரா ஒர பதிவ போடுவாய்ங்க... ஸ்ஸ்சப்பா..

மதி.சுதா.

நனைவோமா ?

ஹேமா said...

என்னா..... ஒரு அறிவு இந்த பாரதிக்கு !

ரஹீம் கஸ்ஸாலி said...

அப்படியே நம்ம கடைப்பக்கம் வாங்கே....நானும் ஒரு போட்டி வச்சுருக்கேன்
http://ragariz.blogspot.com/2010/12/riddle-to-rajini-fans.html

pichaikaaran said...

இவங்க வாட்டுக்க எக்ஸாம் எழுத வச்சுடுவாங்க போல”

இதுல டான்ஸ் வேற ஆட சொல்லுவாங்க போலிருக்கே... எஸ்கேப்

ரஹீம் கஸ்ஸாலி said...

பாடல்களை சரியாக சொன்னதால் உங்களுக்கான விருது என் பின்னூட்டத்தில் வழங்கியுள்ளேன். பார்வையிடவும்
http://ragariz.blogspot.com/2010/12/riddle-to-rajini-fans.html

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

சூப்பர்...
தொடருங்கள்.........

Unknown said...

Super! :-)

Anonymous said...

என் பதிவிற்கு கருத்து சொன்னதற்கு நன்றி பாரதி! தங்களை பின் தொடர்பவர்கள் வரிசையில் இன்று முதல் இணைகிறேன். எனக்கு பிடித்த சிரிப்பு வெடி.. //"மனுசன பொறந்த ஏதாவது சாதிக்கனுடா" "நல்ல வேளங்க டீச்சர், நான் குழந்தையாக தான் பொறந்தேன்" //

Unknown said...

உலகம் உருண்டை அதனாலதான் எல்லா கட்சிக்கும் நான் போய் பார்த்துட்டு வாரேன்

- இப்படிக்கு தமிழக மக்களின் கருத்துக்கு தலை வணங்கி ஹேர் ஸ்டைல் மாற்றி நடித்த விஜய்

eeasy baby said...

ரொம்ப சூப்பர் , மேட்டுபாளைய பசங்களுக்கு பரீட்சை பயம் இருப்பது தெரிகிறது. அடுத்த ஸ்டேட் first உங்க ஊரு பசங்க தான்.jokes
கலக்கல் அருமை ,

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்