ரசித்தவைகளும், யோசிக்கவைத்தவைகளும்...

இந்த வார திகில் :
 ஏனோ இந்த வாரம், வலையுலகில் எமக்கு போதாத காலம் போலும்.பின்னூட்டமிட நேரமே அமையவில்லை, முன்னதாக திங்கள் கிழமை எங்கள் வலைப்பூ தொலைந்து போனது.

"வலைப்பூ என்பது ஒரு உயிருள்ள குழந்தை" இது எங்களின் முந்தைய பதிவின் தலைப்பு.எங்கள் வலைப்பூ முன்று மாதமே ஆன குழந்தை, திருவிழாவில் தொலைத்திருந்தால் கூட பரவாயில்லை, வீட்டிற்குள்ளேயே அதை தொலைத்துவிட்டோம்.

 மீண்டும் வலைப்பூ ஒன்றை உருவாக்கி, பதிவுகளை உருவாக்கி, பின்தொடருபவர்களை சம்பாதிக்க வேண்டும், மீண்டும் பூஜ்ஜியத்திலிருந்து, ஆரம்பிக்க வேண்டும் என நினைத்தபோதே தலைச்சுற்றியது.

 அந்த இக்கட்டான நேரத்தில் நிறைய அன்பு உள்ளங்கள் நாங்கள் இருக்கிறோம் என்று ஆதரவு காட்டினார்கள்.ஆறுதல் சொன்னார்கள்... அவர்களுக்காகவோ என்னவோ அப்படியே திரும்பக்கிடைத்தது ரோஜாப்பூந்தோட்டம்.
வடைப்போனால் பரவாயில்லை, கடையே காணவில்லை என்றால்...
அன்பு காட்டிய அத்துணை நல்ல உள்ளங்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்.

குழந்தைகள் கடத்தல் இன்னும் தொடர்கிறதா?பிள்ளை பிடிக்கும் கும்பலிடமிருந்து, பாதுகாப்பாய் இருந்துகொள்ள மேலதிக தகவல்கள் தேவை.

 இந்த வார உலகம்:

 ராமதாஸின் மாம்பழ தாகத்திற்கும் மாஸா தான் தீர்வா?
saranram@facebook.com

 சுதந்திரமாக வந்து செல்வதற்கு இது இந்தியா இல்லை என்று ராஜபக்ஷேவுக்குக் காட்டியிருக்கிறார்கள் பிரிட்டன் தமிழர்கள்.
podiyan@twitter.com


 குற்றம் சொல்லுதல் தேசிய வியாதி ஆகிவிட்டது, குற்றம் செய்தல் தேசிய தொழிலாகி விட்டதால்.
kuttisuvaru@twitter.com


 விருதகிரி விமர்சனம்@ விகடன்...

 ஸ்காட்லாந்து யார்டில் பயிற்சி எடுக்கச் செல்லும் விஜயகாந்த், அந்த நாட்டு பிரதமரைத் தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்றி ஸ்காட்லாந்து யார்டுக்கே பயிற்சி கொடுக்கிறார். இருக்காதா பின்னே....

 இந்த வார தகவல்:

 உலகம் முழுவதும் 20 கோடி பேர் இடம் பெயர்ந்து வாழ்கின்றனர். இது உலக மொத்த மக்கள் தொகையில் மூன்று சதவீதம்.

இலங்கையில் போரால் 3 லட்சம் பேர் இடம் பெயர்ந்தனர். இவர்களில்30,000க்கும் மேற்பட்டவர்கள் உளவியல் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.போருக்குப்பின் 98,000 பெண்கள் விதவைகளாக குடும்பத்துக்கு தலைமை வகிக்கின்றனர்.
சர்வதேச இடம் பெயர்வோர் தினம்-டிசம்பர்18.
 நன்றி: தினமலர் & தினமணி.

 இந்த வார பின்னூட்டங்கள்:

 அன்பரசன் அவர்களது கவிதைக்கான பின்னூட்டத்தில்
கே.ஆர்.பி.செந்தில் சொன்னது....காதல் கவிதைகளில் மேலோட்டமான விசயங்களை தவிர்த்து ஆழமான புரிதல்களை கவிதையாக்க முயலுங்கள்.. ஒரே ஒரு கவிதை எழுதினாலும் உலகின் தலை சிறந்த காதல் கவிதைகளில் ஒன்றாக இருக்கவேண்டும் என்கிற முனைப்புடன் எழுதுங்கள்... - அம்மாடியோவ்..

 நடிகர் விஜய் பற்றிய ஒரு பதிவில்  ம.தி. சுதா பின்னூட்டமிட்டது
 " நல்ல கதையம்சம் உள்ள படத்தில் விஜய் நடித்தால், முதலாவதாய் ரசிக்கத்தயார்"
-இன்னும் எத்தனை பேர் இதனை வழிமொழிகிறீர்கள்.

 இந்த வார வருத்தம்:

ஈசன் படம் நல்லாயில்லை என்று எழுதப்பட்டிருந்த ஒரு பதிவு.
-சசி குமாருக்கே சறுக்கலா?

 இந்த வார பெண்:

கனடா உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று, திருக்குறள் சாட்சியாக பதவி ஏற்றுக்கொண்ட ஈழத் தமிழ்ப்பெண் ஜூனிதா நாதன்.

 ரத்த சரித்திரம் - Why பிளட், Same பிளட்  :


 ஸ்பெக்ட்ரம் பற்றி முழுவிபரங்கள் தெரிந்துக் கொள்ளுவதற்காக சன், கலைஞர் செய்திகளை மாறி,மாறி பார்த்ததில் சித்தம் குழம்பி, பித்த சரித்திரம் ஆனது தான் மிச்சம். தேர்தல் நெருங்க, நெருங்க இன்னும் என்னும் என்னவெல்லாம் நடக்கப்போகுதோனு பயமாயிருக்கு...
-அய்யோ பூச்சாண்டி...

மறவாமல் வாக்களிக்கவும்.

36 கருத்துரைகள்:

Arun Prasath said...

கடை கெடசிருச்ச்சே வாழ்த்துக்கள்

Arun Prasath said...

ஐ வடை

Unknown said...

//அருண் - அரசியல்வாதி என்ன வித்தியாசம்?

அரசியல்வாதி மைக்கோட இருப்பாரு

அருண் பைக்கோட இருப்பாரு//

karthikkumar said...

Arun Prasath said...
கடை கெடசிருச்ச்சே வாழ்த்துக்கள்///

யோவ் கடை எப்பவோ கெடச்சிருச்சி. இப்ப வந்து வாழ்த்துக்கள் சொல்லிட்டு. nonsense. @ bharathbharathi
கடை திரும்ப கிடைத்ததற்கு வாழ்த்துக்கள்.

karthikkumar said...

ட்விட்டர் வரிகளெல்லாம் சூப்பர்

karthikkumar said...

கவிதை பற்றி krp செந்தில் சார் சொன்னது போல் ட்ரை பண்ணுங்க.

Unknown said...

//கவிதை பற்றி krp செந்தில் சார் சொன்னது போல் ட்ரை பண்ணுங்க.//
அது எமக்கு மட்டுமில்ல, எல்லோர்க்கும் சேர்த்து தான்..
ஹா ஹா ஹா...

karthikkumar said...

பாரத்... பாரதி... said...
//கவிதை பற்றி krp செந்தில் சார் சொன்னது போல் ட்ரை பண்ணுங்க.//
அது எமக்கு மட்டுமில்ல, எல்லோர்க்கும் சேர்த்து தான்..
ஹா ஹா ஹா..///

ஏங்க எனக்கும் கவிதைக்கும் சம்பந்தமே இல்ல. நான் கவித எழுதுற வேலையும் இல்ல. நான் சும்மாதாங்க சொன்னேன். :)

வைகை said...

karthikkumar said...
Arun Prasath said...
கடை கெடசிருச்ச்சே வாழ்த்துக்கள்///

யோவ் கடை எப்பவோ கெடச்சிருச்சி. இப்ப வந்து வாழ்த்துக்கள் சொல்லிட்டு. nonsense. @ bharathbharathi
கடை திரும்ப கிடைத்ததற்கு வாழ்த்துக்கள்///////


தம்பி ரெண்டுபேரும் ஊருக்கு புதுசா?!! கட கெடச்சு ரெண்டு பதிவே போட்டாச்சு! இப்ப வந்து வாழ்த்துக்கள் சொல்லிக்கிட்டு?! அப்பறம்........ பாரதி கடை கெடச்சதுக்கு வாழ்த்துக்கள்!!! ஹி! ஹி!!

வைகை said...

பாரத்... பாரதி... said...
//கவிதை பற்றி krp செந்தில் சார் சொன்னது போல் ட்ரை பண்ணுங்க.//
அது எமக்கு மட்டுமில்ல, எல்லோர்க்கும் சேர்த்து தான்..
ஹா ஹா ஹா../////

இத சிரிக்காம சொல்லியிருந்தா ட்ரை பன்னிருப்போம்! உங்களுக்கே நம்பிக்கை இல்லை எங்க மேல!! :-((((

Unknown said...

:-))

மாணவன் said...

தகவல்கள் அருமை...

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

தினேஷ்குமார் said...

ஏனோ இந்த வாரம், வலையுலகில் எமக்கு போதாத காலம் போலும்.பின்னூட்டமிட நேரமே அமையவில்லை,

இந்த வாதம் ஒப்புக்கொள்ள மாட்டாது

தினேஷ்குமார் said...

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது....காதல் கவிதைகளில் மேலோட்டமான விசயங்களை தவிர்த்து ஆழமான புரிதல்களை கவிதையாக்க முயலுங்கள்.. ஒரே ஒரு கவிதை எழுதினாலும் உலகின் தலை சிறந்த காதல் கவிதைகளில் ஒன்றாக இருக்கவேண்டும் என்கிற முனைப்புடன் எழுதுங்கள்... - அம்மாடியோவ்..

முயற்சிக்கலாம் முயன்றால் முடியாமலா போகும் ஒரு பூஸ்ட்

Unknown said...

என்னப்பா ஞாயம் - உங்க பதிவுக்கு வர்றவங்க மட்டும் குனிஞ்சி குனிஞ்சி ஓட்டும், கருதும் சொல்லணும் ஆனா உங்களுக்கு மட்டும் நேரமில்லம்பிங்க

வெளங்கிடும்

தினேஷ்குமார் said...

karthikkumar said...
பாரத்... பாரதி... said...
//கவிதை பற்றி krp செந்தில் சார் சொன்னது போல் ட்ரை பண்ணுங்க.//
அது எமக்கு மட்டுமில்ல, எல்லோர்க்கும் சேர்த்து தான்..
ஹா ஹா ஹா..///

ஏங்க எனக்கும் கவிதைக்கும் சம்பந்தமே இல்ல. நான் கவித எழுதுற வேலையும் இல்ல. நான் சும்மாதாங்க சொன்னேன். :)

பங்கு சம்பந்தம் சம்மதபட்டாதான் சம்மதமில்லாமல் சங்கதி சொல்லுமா கவிதை

THOPPITHOPPI said...

நல்ல ரசனை

செல்வா said...

உங்க தொகுப்பு அருமைங்க ..
அதே மாதிரி படம் நல்லா இல்லைனா சசிகுமார் என்ன யார இருந்தாலும் சறுக்கு தான் ..!!

Unknown said...

//என்னப்பா ஞாயம் - உங்க பதிவுக்கு வர்றவங்க மட்டும் குனிஞ்சி குனிஞ்சி ஓட்டும், கருதும் சொல்லணும் ஆனா உங்களுக்கு மட்டும் நேரமில்லம்பிங்க

வெளங்கிடும்//

அய்யா, நாங்கள் ரோஜாப்பூந்தோட்டத்திற்கு சொந்தக்காரர்கள்,

உங்கள் இன்றைய பதிவில் எமக்குத்தான் வடையும், சுடுச்சோறும்.

ஏற்கனவே
வாக்கும் அளிச்சாச்சு..
ஏன்
எமக்கு நடுமண்டையில் பின்னூட்ட
கொட்டு...

NKS.ஹாஜா மைதீன் said...

விஜய்யை பற்றிய கமெண்ட் ...நானும் வழிமொழிகிரேன்..

ஆமினா said...

ஆரம்பம் முதல் கடைசி வரை சுவாரசியமாக இருந்தது.

இடையில் உங்கள் பேச்சு கோர்த்திருந்ததை பார்த்து வயிறு வலிக்க சிரிச்சேன்!!!

சூப்பர் பாரதி

செங்கோவி said...

ஈசனை மறக்கலாம்னு வந்தா இங்கேயும் வந்துட்டானே..அம்மோஓஒ!

-----செங்கோவி
ஈசன் - விமர்சனம்

Unknown said...

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு - பொதுவா சொன்னேங்க மன்னிக்கவும்

மன்னிக்க தெரிந்த மனது கடவுளுக்கும் மேலே ...........

Unknown said...

வித்தியாசமான இடுகை எழுதியமைக்கு பாராட்டுக்கள் ...

Unknown said...

நல்ல பகிர்வு

T.V.ராதாகிருஷ்ணன் said...

சூப்பர்

அன்பரசன் said...

//அன்பரசன் அவர்களது கவிதைக்கான பின்னூட்டத்தில்
கே.ஆர்.பி.செந்தில் சொன்னது....காதல் கவிதைகளில் மேலோட்டமான விசயங்களை தவிர்த்து ஆழமான புரிதல்களை கவிதையாக்க முயலுங்கள்.. ஒரே ஒரு கவிதை எழுதினாலும் உலகின் தலை சிறந்த காதல் கவிதைகளில் ஒன்றாக இருக்கவேண்டும் என்கிற முனைப்புடன் எழுதுங்கள்... - அம்மாடியோவ்..//

:)

அன்பரசன் said...

தகவல்கள் இரண்டும் அருமை.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

me the last

Chitra said...

கலக்கல் தொகுப்பு!

அந்நியன் 2 said...

என்னது கடை தொலஞ்சு போச்சா !!!
அது எப்போ ? திரும்ப கிடைச்சதுக்கு வாழ்த்துக்கள் நல்லவன் கையிலே கிடைச்சதுனாலே திரும்ப கிடைச்சிடுச்சு ,அதுவே ஒரு அரசியல் வாதிக் கையிலே கிடைச்சிருந்தால் லஞ்சம் கொடுத்துதான் திரும்ப கடையை வாங்கணும்.

உலவு ஓட்டுருமை மட்டும்தான் எனக்கிருக்கு அதைப் பொருத்தவும் இன்ட்லி சில சமயம் வேலை செய்யுது நிறையா சமயம் நெட்வொர்க் எர்ரர்னு காண்பிக்குது.

சி.பி.செந்தில்குமார் said...

என்னது?பிளாக் பிளாக் ஆகிடுச்சா?சங்கவிக்கு அடுத்து நீங்களா?அடடா அடுத்து எல்லாரும் ஜாக்கிரதை

ம.தி.சுதா said...

நல்ல அலசல் ஒன்று வாழ்த்துக்கள்.. நான் முதல்லேயே சொன்னேனல்லவா கிடைக்குமென்று...

Meena said...

அடிச் சக்கை! அமெரிக்காவில் இன்று எனக்கு(அதுதான் உங்கள் வலைப் பூ )
கல்கண்டு, ஆனந்த விகடன், கல்கி, சினிமா இதழ் எல்லாம் ஒன்றாய்க் கலந்து இலவசமாய்க்
கிடைத்து விட்டதே! உங்கள் வலைப் பூ மேலும் சிறந்திட என் வாழ்த்துக்கள்!

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

me the last


//

Me the LAST..

Vijay Periasamy said...

வார்த்தைகள் ஒவ்வொன்றும் , நெருப்பு துண்டுகள் ...

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்