நட்பெனப்படுவது...

💥நட்பு என்பற்கான உருவகம் இங்கு மிக அதீதம். அதன் மீதான  எதிர்பார்ப்பு அப்படியே. என்னால் அதை ஈடு செய்ய என்னால் இயல்வது இல்லை எப்போதும்.

நட்பு என்பது எப்போதும் பொருந்தா கதாபாத்திரம்.


💥நீண்டதொரு�வாழ்க்கைப்பயணத்தில் நானொரு "சகபயணி"யாய் வந்து போகிறேன் ஒவ்வொருவரின் வாழ்விலும்.

என் வாழ்விலும் மற்றவர்களும் அப்படியே.

பின் நின்று, உடன் நடந்து, முன்னோக்கி கடந்து, பின் எங்கோ தொலைதூரத்தில் ஓடி, சின்னதொரு வெளிச்சப்புள்ளியாகி பின் மறைகிறார்கள்.

சிலர் மீண்டும் பின்னோக்கி பின் மறைகிறார்கள்..

💥எத்தனை மனிதர்கள் கடந்திருக்கிறார்கள், கடக்க இருக்கிறார்கள்.

💥மனதிற்கு இனியவர்களாக அடையாளப்படுத்திகொள்பவர்களுக்காக மெல்ல நடந்து காத்திருக்கிறோம்.
பொருந்தா அரைவேக்காடுகளையெல்லாம் அலட்சிய புன்னகையோடு கடந்து செல்லவே யத்தனிக்கிறோம்.

💥நீண்ட தொலைவு நீடித்திருக்கும் வல்லமையும், வாய்ப்பும் சிலருக்கே வாய்க்கிறது. சில வழித்துணை, சில வாழ்க்கைத்துணை.

💥யாருக்காக யாரை இழக்கிறோம் என்பதில் இருக்கிறது வாழ்க்கையின் சூட்சுமம்.

💥எங்கோ தூரத்தில் ஒலிக்கிறது வாலின் இந்த தூரத்துப்பாடல்

"ஆடும் வரைக்கும் ஆடியிருப்போம், தங்கமே ஞானத்தங்கமே.

ஆட்டம் முடிந்தால் ஓட்டம் எடுப்போம் தங்கமே ஞானத்தங்கமே!!"
-பாரதி.

1 கருத்துரைகள்:

Yaathoramani.blogspot.com said...

நட்பு குறித்து ஆழமான அருமையான
வித்தியாசமான அலசல்.
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்