வலையுலக பிரம்மாக்கள்...-

                                  
இந்த வாரம் வலைப்பூக்களில் ஊடே வலம் வந்தப்போது என்னை பிரம்மிக்க வைத்த பதிவர்கள் பற்றிய பகிர்வு. 
வலை வலம் இன்னமும் தொடர்ந்துக் கொண்டிருப்பதால் இதன் பட்டியல் நீளும்.
 


எந்தப் பொருள் பற்றி எழுதினாலும், மிக கலக்கலாய் எழுதி, பல் பொருள் வித்தகனாகத் திகழும் கே.ஆர்.பி. செந்தில்  , என்னை ஆச்சர்யப்படுத்தும் பதிவர்களில் ஒருவர். இவரின் சமீப அரசியல் கவிதையின் காரம் இன்னும் ஜீரணமாகவிலை.

எந்த வலைப்பூவிற்கு சென்றாலும் அந்த வலைப்பூவை பின் தொடர்பவர்களின் பட்டியலில் இருக்கிறார்.

கே.ஆர்.பி. செந்தில் உருவம், ரமணா படத்தில் வரும் விஜயகாந்த் போல இருக்கும்  என்பது என் கற்பனை.

எங்கள் முந்தைய பதிவான ரத்த சரித்திரம் http://bharathbharathi.blogspot.com/2010/11/blog-post_08.html கவிதைக்கு   கே.ஆர்.பி. செந்தில் என்ன பின்னூட்டம் எழுதுவார் என ஆவலாய் காத்திருந்து ஏமாந்தது தான் மிச்சம்.

நாங்கள் கோவை என்கவுண்டர் பற்றிய தினமலர் செய்தியை வெளியிட்டு, ஆரூரன் விசுவநாதன் கையால் கொட்டு வாங்கிய வலியோடு வலைப்பூக்களை வலம் வந்து கொண்டிருந்தப் போது   என்னை கவர்ந்தவர்  மங்குனி அமைச்சர்.

என்கவுண்டர் பற்றிய எனது கருத்தை பிறகுச் சொல்கிறேன்  என்று ஆரம்பித்து விட்டு, என்கவுண்டர் சரி என்றுச் சொல்பவர்கள் பாசிட்டிவ் ஓட்டுப்போடுங்க, தப்புனு சொல்பவர்கள் நெகடிவ் ஓட்டுப்போடுங்க-னு ரெண்டு வரி எழுதி விட்டு கல்லா கட்டிவிட்டார்.
 
கக... போ...

அப்புறம் உண்மைத் தமிழன். 
இவர் இட்லி- தோசை-பொங்கல்-வடை-சட்னி-சாம்பார் என பதிவிட்டதைப் பார்க்கும் போது,அவைகள் அத்தனையையும் தனிப் பதிவுகளாக போட்டிருக்க வேண்டிய விஷயங்கள்தான் என்றுத் தோன்றியது. நிறைய விஷயங்கள் பற்றி பதிவுகளை எழுதியுள்ளார். கொஞ்சம் அசைவ நெடி அடிப்பதால், முக சுழிப்பு உண்டானதையும் உணர முடிந்தது என்னால்.(கேட்டால் அதைத்தான் விரும்புகிறார்கள் என்பாரோ..) 



அப்புறம் அதீத கனவுகள் வி.ராதா கிருஷ்ணன். ,
உண்மையை யார்தான் உண்மையாய் இருந்திட விட்டது என்ற முகப்புரையுடன் துவங்கும் இவரின் வலைப்பூ பதிவுகளின் வேகம் ஆச்சர்யம். நுனிப்புல் தொடர் கதையின் இரண்டாம் பாகம் முடித்து, மனுஷன் மூன்றாம் பாகத்திற்கு தயாராகி விட்டார்.
எப்படிச் சாமி டைம் கெடைக்குது உங்களுக்கு..
 
புதிய தலைமுறைகள் வார இதழில் வலைப்பதிவர்கள் பற்றி, மிக துல்லியமான் , விரிவான கட்டுரையை எழுதியிருந்த யுவகிருஷ்ணா  என்னை ஆச்சர்யப்பட வைத்த இன்னும் ஒரு வலைப்பதிவர்.

“...........மூன்றாவது வலைப்பதிவிலேயே சரக்கு காலியாகி, டைரி லெவலுக்கு வந்து, பின் பத்திரிகைகளில் வந்ததை எடுத்துக் காப்பி-பேஸ்ட் செய்பவர்களும் உண்டு........”  இது அவரின் கட்டுரையிலிருந்த வரிகள்.

(பட்டியல் தொடரும்)


-ஆச்சயர்ங்ளுடன்...  மிட்டாய் கடையை பார்த்து அசந்த பட்டிக்காட்டான்.

19 கருத்துரைகள்:

ஆரூரன் விசுவநாதன் said...

//நாங்கள் கோவை என்கவுண்டர் பற்றிய தினமலர் செய்தியை வெளியிட்டு, அரூரன் விசுவநாதன் கையால் கொட்டு வாங்கிய வலியோடு //

குழந்தைகள் இதை படித்து வருவதால், அவர்கள் மனதில் நச்சு விதை வேண்டாமே என்ற காரணத்தில் மட்டுமே பின்னூட்டமிட்டேன். பழி வாங்கும் மனோநிலையை பள்ளிக் குழந்தைகளுக்கு ஊட்ட வேண்டாமே.

அடுத்த தலைமுறையையாவது சரியாக வளர்ப்போம்.

அன்புடன்
ஆரூரன் விசுவநாதன்.

எம் அப்துல் காதர் said...

சரி சரி எங்களையெல்லாம் எப்ப இப்படி அறிமுகப் படுத்துவீங்க!!

Unknown said...

வலையுலகில் எனக்கு தெரிந்ததை, பாதித்ததை, கோபப்படுத்தியதை பகிர்ந்து கொள்கிறேன்.. உண்மையில் நாளைய உலகம் உங்களைபோல் இளையோர் கையில்தான் இருக்கிறது. என்னைபொருத்தவரை உங்களின் வலைபக்கமும் என்னை மிகவும் கவர்ந்த ஒன்றுதான்..

பாராட்டுக்கு என் வந்தனமும், நன்றியும்...

Unknown said...

அதிரடி கவிதை போட்டி

குழந்தைகள் தினம் அல்ல அல்ல...
சின்னஞ்சிறு மனிதர்களின் தின விழாவினை மனதில் கொண்டு இந்த கவிதை போட்டிக்கு வலையுலக அன்பர்களை ஆவலுடன் அழைக்கிறோம்.

http://bharathbharathi.blogspot.com/2010/11/blog-post_12.html

THOPPITHOPPI said...

krp பற்றி அருமையாக சொன்னீர்கள்

ஹரிஸ் Harish said...

ஆச்சயர்ங்ளுடன்... மிட்டாய் கடையை பார்த்து அசந்த பட்டிக்காட்டான்//

நானும் இந்த நிலைல தான் இருக்கேன்..பகிர்வுக்கு நன்றி

Arun Prasath said...

அட இது நல்லா இருக்கே, தேடு தேடுனு தேடுவீங்க போல.....

அருண் பிரசாத் said...

//மேட்டுப்பாளையம் நகரவை மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியரின் படைப்புலகம்....//

இப்போதான் உங்களை பார்க்கிறேன்...பழைய பதிவுகளையும் மேய்ந்தேன்... நல்லாவே எழுதறீங்க... வாழ்த்துக்கள்... தொடர்ந்துவரேன்

சைவகொத்துப்பரோட்டா said...

வலைப்பக்கங்களுக்கான உங்கள் முன்னுரையும் அழகு!

test said...

Nice! :))

உண்மைத்தமிழன் said...

என்னைப் பற்றிய விமர்சனத்திற்கு மிக்க நன்றி நண்பரே..!

இதுவா முகம் சுளிக்க வைக்குது..? ரொம்ப ஆச்சரியப்படுத்துறீங்க..!

பை தி பை.. இது மாதிரி எங்களது பெயரைக் குறிப்பிட்டே பதிவுகளை இட்டால் தயவு செய்து எங்களுக்கு தெரியப்படுத்திவிடுங்கள்.

நானே இதனை தற்செயலாகத்தான் கவனித்தேன். இன்று பார்க்கவில்லையென்றால் அவ்வளவுதான்.

அப்புறம் நீங்கள்தான் எங்கள் மீது வருத்தப்படுவீர்கள். கவனிக்கவில்லை. மறுமொழி தெரிவிக்கவில்லையென்று..!

மங்குனி அமைச்சர் said...

தப்புனு சொல்பவர்கள் நெகடிவ் ஓட்டுப்ப்போடுங்க-னு ரெண்டு வரி எழுதி விட்டு கல்லா கட்டிவிட்டார்.கக... போ... ////

ஹா,ஹா,ஹா.........அந்தப்பதிவின் பின்னூட்டத்தில் நடந்த விவாதத்தை கவனித்தீர்களா ????

செல்வா said...

உங்கள் பட்டியல் தொடர வாழ்த்துக்கள்..!! தொடருங்க .. ,!!

Unknown said...

கருத்துரை நல்கிய அனைவருக்கும் மிக்க நன்றிகள்..
ஆரூரன்விசுவநாதன்அவர்களுக்கும்,உண்மைத்தமிழன் அவர்களுக்கும் எம் வார்த்தைகள் எந்த வகையிலாவது தங்களை வருத்தியிருந்தால் மன்னிக்கவும்..

Unknown said...

எம் அப்துல் காதர் said..

//சரி சரி எங்களையெல்லாம் எப்ப இப்படி அறிமுகப் படுத்துவீங்க!!//

யுவ கிருஷ்ணா உங்களைப் பற்றியும் புதிய தலைமுறையில் எழுதியுள்ளார்.

உங்களை நாங்கள் அறிமுகப்படுத்துவதா?
தல... நீங்க தான் எங்களை வழி மொழிந்து, வழி காட்ட வேண்டும்..

Unknown said...

மங்குனி அமைச்சர் said...//ஹா,ஹா,ஹா.........அந்தப்பதிவின் பின்னூட்டத்தில் நடந்த விவாதத்தை கவனித்தீர்களா ????//

உண்மையில் அந்த விவாதம் நிறைய விஷயங்களைத் தெரிந்துக்கொள்ள உதவியாக இருந்தது.

Anonymous said...

ரொம்ப நல்ல தொடக்கம்...மனதில் பட்டதை அப்படியே எழுதி இருக்கிறீர்கள்

Unknown said...

வருகைக்கும்,கருத்துரைக்கும் நன்றி சதீஷ் ஸார்..

Radhakrishnan said...

மிக்க நன்றி பாரத் பாரதி. நான் எழுதும் கதைகள் எல்லாம் சில வருடங்கள் முன்னர் எழுதப்பட்டவை. அவைகளை வலைப்பூவில் சேகரித்து வருகிறேன். அடியார்க்கெல்லாம் அடியார் கதையும் விரைவில் முழுமை அடைந்து விடும். சில விசயங்கள் அவ்வப்போது நேரடியாக எழுதுவது உண்டு.

எழுதுவதை தவிர வலைப்பூவில் எதுவும் சாதித்தது இல்லை. தங்களின் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி.

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்