"கொஞ்ச வருசத்துக்கு முன்னாடி எனக்கு ஒரு ஆக்சிடெண்ட் ஆச்சி, அதுல என் படிப்பு நரம்பு கட்டாயிடிச்சு, அதுக்கு முன்னாடி எல்லாம் நான் நிறைய படிப்பேன்.இப்ப படிக்க முடியறதில்ல...பொன்னியின் செல்வன், துணையெழுத்து எனக்கு புடிச்ச புத்தகங்கள்"என முன்பு படித்ததை மட்டுமே பெருமை பேசிக்கொண்டிருந்த காலம் இப்போது மாறி இருக்கிறது.
ஒரு குழந்தையின் வரவிற்கு பின் ஒரு ஆண் அல்லது பெண்ணின் வாழ்க்கை புரட்டிப் போடப்படுவது போல, இந்த வலைப்பூ வந்த பிறகு எங்கள் வாழ்க்கைப் பாதை மிக மாறியிருக்கிறது.
எங்கள் வலைப்பூ ஒரு குழந்தை.
உலகத்து சந்தோஷங்களை எங்களுக்கும்,
எங்கள் சந்தோஷங்களை உலகத்திற்கும் அடையாளம் காட்டிய உயிரோவியம்.
எங்கள் வலைப்பூ ஒரு குழந்தை,
சூல் கொள்ளாது சுமந்த குழந்தை,
மனதில் சுமந்த குழந்தை. உயிர் கொண்ட ரோஜா.
குழந்தையும் தெய்வமும் கொண்டாடுமிடத்து.
நீங்கள் எங்களின் வலைப்பூ குழந்தையைக் கொண்டாடுகிறீர்கள்.
இங்கே நாங்கள் மற்றவர்களால் கொண்டாடப்படுகிறோம்.
வலைப்பூவால் எங்களுக்கு ஒரு சமூக அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.
ஆசிரியர்களைப் பார்த்து , பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடிக் கொண்டிருந்த நாங்கள் இப்பொழுதெல்லாம், அவர்களுடன் கதைத்து, கலாய்த்து, உரையாடி, வலைப்பூவுக்கான உரம் சேர்க்கிறோம்.
நிறைய படிக்கிறோம் , நிறைய யோசிக்கிறோம்...
வகுப்பறையில் அமைதிக்காக்கிறோம். வலைஉலகில் வாலாட்டுகிறோம்..
வகுப்பறையில் வாலாட்டினால் நறுக்கப்படுகிறது.
வலைப்பூவில் வாலாட்டினால் வாக்குகள் விழுகிறது.
எப்படியோ ஆன்லைனில், ஆள் இல்லாது அநாதையாய் கிடந்த எங்கள் ரோஜாப்பூந்தோட்டத்தில்; இப்போது ஆட்கள் நடமாட்டம் தென்படுகிறது.
கொஞ்சம் நம்பிக்கையும் சுடர் விடுகிறது. ஜாம்பவான்கள் ஆதிக்கம் செலுத்தும் பதிவுலகில்,இந்த வாயுள்ள பிள்ளைகள், வார்த்தைகள் உள்ள பிள்ளைகளாய் பிழைத்துக்கொள்வோம் என நம்பிக்கையும் வருகிறது.
பயப்பட ஒன்றுமில்லை, ஏனெனில் இழப்பதற்கு ஒன்றுமில்லை.
இனி அச்சமடையவும் ஒன்றுமில்லை, ஏனெனில் வலைஉலகில் நாங்கள் அநாதைகளும் அல்ல...
எது எப்படியோ, புத்தகம் வாசித்தலை நிறுத்தியதால் இற்றுப்போயிருந்த "படிப்பு நரம்பு" மீண்டும் முழுவேகத்தில்;புது ரத்தம் பாய்ச்சப்பட்டு...
அதற்காகவும், ஆரம்பம் முதல் தொடரும் உங்களின் அன்புக்காகவும்,தமிழர்கள் வாழும் திசைகள் எட்டும் நோக்கி எங்கள் நன்றி கலந்த வணக்கங்கள்.
(.... அது சரி, பதில் வணக்கம் சொல்லாம போனா எப்படி?வணக்கத்த வார்த்தைல சொல்லுங்க, இன்ட்லியில் வாக்களித்தும் சொல்லுங்க...)
26 கருத்துரைகள்:
good one..:)
(.... அது சரி, பதில் வணக்கம் சொல்லாம போனா எப்படி?வணக்கத்த வார்த்தைல சொல்லுங்க, இன்ட்லியில் வாக்களித்தும் சொல்லுங்க...)//
வணக்கம்.... வாக்கு போடாச்சு
இப்போ வணங்கனுமா? வாழ்த்தனுமா?
சரி, 1 நாள் வெயிட் பண்ணுங்க ஒரு பரிசு தரேன்
வணக்கம்
ஏனுங்க!! வணக்கம் வச்சிட்டங்கோஒஒ !!!!
வணக்கம் வாக்கு ரெண்டும்....
வணக்கம்
வந்தனம்
நமஸ்தே
நமஸ்கார்
صباح الخير
goeie môre
goeie môre
Բարի լույս
yaxşı səhər
magandang umaga
goedemorgen
bonjour
Guten Morgen
καλημέρα
//வகுப்பறையில் அமைதிக்காக்கிறோம்.வலைஉலகில் வாலாட்டுகிறோம்.. //
இது அருமைங்கோ ..!!
என்னுடைய வாழ்த்துக்களும் வணக்கங்களும்!!
super..keep going..i am with you...:))
வாழ்த்துகளோடு வணக்கங்களும்
வணக்கம்.
வாழ்த்துக்கள்.
நன்றி.
ஓட்டு போட்டாச்சு..
வாழ்த்துக்கள் பாரத்!!!!
//பயப்பட ஒன்றுமில்லை, ஏனெனில் இழப்பதற்கு ஒன்றுமில்லை.
இனி அச்சமடையவும் ஒன்றுமில்லை, ஏனெனில் வலைஉலகில் நாங்கள் அநாதைகளும் அல்ல... //
அருமை அருமை...
நிச்சயமாக நாங்கள் எப்போதும் உங்களோடு இணைந்திருப்போம்
தொடரட்டும் உங்கள் பொன்னான பணி
பாராட்டுகளும், வாழ்த்துக்களுடன்
உங்கள்.மாணவன்
வலைப்பூ என்பது ஒரு உயிருள்ள குழந்தை.உருவாக்கியவர்களுக்கு மட்டுமே அதன் வலியும், வேதனையும் புரியும்.
இங்கே பெண்கள் மட்டுமில்லது; ஆண்களும் பிரசவிக்கிறார்கள்.
மனசில் சுமந்த பாரத்தை, தமிழ்ப் பாலூட்டி , பதிவாக்குகிறார்கள்.
வணக்கம்.
வாழ்த்துக்கள்.
கலக்குறீங்க பாஸ்
//பயப்பட ஒன்றுமில்லை, ஏனெனில் இழப்பதற்கு ஒன்றுமில்லை. //
சூப்பர்..!! :-))
பாரத்... பாரதி... said...
வலைப்பூ என்பது ஒரு உயிருள்ள குழந்தை.உருவாக்கியவர்களுக்கு மட்டுமே அதன் வலியும், வேதனையும் புரியும்.
இங்கே பெண்கள் மட்டுமில்லது; ஆண்களும் பிரசவிக்கிறார்கள்.
மனசில் சுமந்த பாரத்தை, தமிழ்ப் பாலூட்டி , பதிவாக்குகிறார்கள்.
உண்மைதான் வாழ்த்துக்கள் சகோ
காலைல எனக்கு தெரிந்த தெரியாத மொழில வணக்கம் சொன்னேன் அவ்வளவுதான் .......
தொடருங்கள் தோள்கொடுப்போம் தோழர்களாக என்றும்...........
பொழச்சிக்குவீங்கப்பூ! நல்லாருங்க! நல்லாருங்க!
"அறிவை விரிவு செய், அகண்டமாக்கு; விசாலப்பார்வையால் விழுங்கு மக்களை" - பாவேந்தர்
வணக்கம் பாரத்.நன்றியும் கூட !
உங்கள் பதிவு உண்மையின் பிரதிபலிப்பு.
அதனாலேயே என்னவோ சில குழந்தைகள் என்ன செய்வது என்று தெரியாமல் சண்டையிட்டுக்கொள்கின்றன............
நன்றி
பாரதிக்குப் பதில் வணக்கமும் பாராட்டுகளும்!
வணணக்கம்.. ..அருமை :)
வாழ்த்துக்கள்...
கலக்குங்க... கலக்குங்க....!
Post a Comment