"முன்பெல்லாம் பரீட்சை ரிசல்ட் வரும்போது எங்களைத்தேடி நிறைய மாணவிகள் வருவாங்க, தேர்ச்சி பெற்றதுக்கு எங்களுக்கு நிறையா சாக்லேட் தருவாங்க, அவ்வளவு சாக்லேட்டா வச்சுட்டு என்ன பண்ணறதுன்னு பக்கத்து வீட்டுக்காரங்களுக்கு அள்ளிக்
கொடுப்போம்.
ஆனால் இப்ப ரிசல்ட் அன்னிக்கு ஸ்கூல் பக்கம் வருபவர்கள் ரொம்ப கம்மி, இப்பெல்லாம் நாலஞ்சு சாக்லேட் கிடைக்குறதே பெரிய விஷயமாயிடுச்சு, இந்த அளவு பிஞ்சுகள் மனசுல விஷத்த விதைச்சது யாரு"
சமீபத்தில் சந்தித்த முன்பு படித்த பள்ளியின் மூத்த ஆசிரியர் ஒருவர் சொன்ன வார்த்தைகள் இது.
என்னடா " வடை போச்சே" ஸ்டைலில் பேசுறாரே அப்படினு நினைச்சேன்.
அப்புறம் ஒரு விஷயம் சொன்னாரு இத சாக்லேட் சம்பந்தப்பட்ட விஷயமா பாக்கல, ஜெயித்த பிறகு ஆசிரியரை மரியாதை செய்யும் ஒரு சின்ன நடைமுறை. ஒரு நன்றியறிவிப்பு. ரிசல்ட் வரும் போது உண்டான மகிழ்ச்சியை அதற்குறிய மனிதர்களுடன் கொண்டாடுதல்."
அவர் பாலகுமாரன் ஸ்டைலில் பேச பேச எனக்குள் ஏராளமான கேள்விகள் உதித்தன. அயற்சியாய் வானம் பார்த்தேன்.
இந்த நிகழ்வை ஆசிரியர்களுக்கான மரியாதை குறைந்துவிட்டதை குறிப்பதாக எடுத்துக்கொள்ளலாமா?
எதற்கெடுத்தாலும் மாணவர்களை குற்றம் சொல்லுதல் போல இதற்கும் மாணவர்கள் தான் காரணமா?
மாணவர்களிடம் மூத்தவர்களை மதிக்கும் பண்பு குறைந்துவிட்டதா?
மாணவர்கள் டியூசன் போன்ற வெளியிடங்களில் அதிக அளவு விஷயங்கள் கிடைப்பதால் பள்ளி ஆசிரியர்கள் மீதான மரியாதை குறைந்து விட்டதா?
ஆசிரியர்களுக்கான அவமரியாதை, நன்றி மறந்து விடுதல் என்பது நாளை பெற்றோர்களுக்கும் நிகழ்ந்து விடுமா?
ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என்ற உறவு முக்கோணத்தில், சமநிலை பிறழ்ந்ததற்கு யார் பொறுப்பு?
ரிசல்ட் பார்க்க முன்பெல்லாம் பள்ளிக்கு மட்டுமே வரவேண்டும் என்ற நிலை தற்போது மாறி, குறுஞ்செய்திகள் மூலமாகவே தேர்வு முடிவுகள் கிடைத்து விடுவதால், ஆசிரியர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆகவே இது சின்ன விஷயமே. ஆசிரியர்-மாணவர் உறவு என்பதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று எளிதாக எடுத்துக்கொள்ளலாமா?
அல்லது இப்படி யோசித்த விதம் தவறா?தவறு இருப்பின் சுட்டிக்காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம், யோசிக்கும் விதத்திலும், நடந்துக்கொள்ளும் விதத்திலும்.
இது சம காலக்கல்வி தொடர் பதிவின் பாகம் 3 .
24 கருத்துரைகள்:
ம்.. யோசிக்கணும்
//அல்லது இப்படி யோசித்த விதம் தவறா?தவறு இருப்பின் சுட்டிக்காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம், யோசிக்கும் விதத்திலும், நடந்துக்கொள்ளும் விதத்திலும்.//
நல்லாதான் யோசிக்கிறீங்க ஆனால் இதற்கு பதில் கொஞ்சம் யோசிச்சுதான் சொல்லனும்....
>>>
ரிசல்ட் பார்க்க முன்பெல்லாம் பள்ளிக்கு மட்டுமே வரவேண்டும் என்ற நிலை தற்போது மாறி, குறுஞ்செய்திகள் மூலமாகவே தேர்வு முடிவுகள் கிடைத்து விடுவதால், ஆசிரியர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
correct
good way u r thinking
நல்ல கேள்விதான்.. பதில்தான் தெரியலை..
நல்ல கேள்விகள் தான் என்ன யாரும் பதில்தான் சொல்ல மாட்றாங்க
/ ரிசல்ட் பார்க்க முன்பெல்லாம் பள்ளிக்கு மட்டுமே வரவேண்டும் என்ற நிலை தற்போது மாறி, குறுஞ்செய்திகள் மூலமாகவே தேர்வு முடிவுகள் கிடைத்து விடுவதால், ஆசிரியர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆகவே இது சின்ன விஷயமே. /
இதுவும் ஒரு காரணம்.. ஆசிரியர் மாணவர் உறவும் மாறி இருக்கிறது.
நல்லதொரு சிந்தனை
ஒட்டு போட்டாச்சு சார்
காவலன் படத்துக்கு மீண்டும் ஆப்பு
நல்ல கேள்விதான்.. பதில்தான் தெரியலை..//
அதேதான்..
யோசிக்கிறேன் ஏதாவது தோணுசின்னா மீண்டும் வாரேன்ன்ன்ன்ன்ன்ன்..
good one
நல்லாதான் கேள்வி கேக்கறீங்க.. :-)
எல்லாரும் போல நானும் எஸ்கேப்..
இனிப்புகள் கொண்டு கொடுப்பது ஒரு சின்ன அங்கீகாரம் அவர்களுக்கு! இன்னொன்று நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு ஆசிரியரும் உங்கள் மதிப்பெண்ணை வைத்து அடுத்து நீங்கள் என்ன படிக்கலாம் என்று யோசனை சொல்வார்கள்! இது ஒரு இலவச ஆலோசனை கூட! இதில் அந்த காலம் இந்த காலம் என்றில்லை! அப்பவும் முதல் நாளே மாலை மலரில் வந்துவிடும்! இருந்தாலும் பள்ளிக்கு செல்வோம்! ஆனால் இந்த மரியாதையெல்லாம் உங்கள் மனதளவில் வரவேண்டும்! கட்டாயப்படுத்தி வருவது சரியல்ல! இன்னொன்று ஆசிரியர்களை பொறுத்ததும் கூட! இப்ப உள்ளவர்களைப்பற்றி எனக்கு சரியாக தெரியாது!
கட்டாயம் ஆசிரியர்களை மீட் செய்யணும் ரிசல்டிற்கு பிறகு.
மாணவர்வளுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையிலான பிணைப்பை முறித்த பெருமை பலரை சாரும் ஊடகங்கள் பெற்றோர் பல இடங்களில் ஆசிரியர்களே மேலும் மாணவர்கள் பள்ளியில் கற்றுக்கொள்வதை காட்டிலும் வெளியில் அதிகம் கற்றுக் கொள்கினறனர் மிக ஆழமான நுணுக்கமான கேள்விகள்
ரிசல்ட் பார்க்க முன்பெல்லாம் பள்ளிக்கு மட்டுமே வரவேண்டும் என்ற நிலை தற்போது மாறி, குறுஞ்செய்திகள் மூலமாகவே தேர்வு முடிவுகள் கிடைத்து விடுவதால், ஆசிரியர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆகவே இது சின்ன விஷயமே. ஆசிரியர்-மாணவர் உறவு என்பதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று எளிதாக எடுத்துக்கொள்ளலாமா?
...... உங்கள் ஆதங்கம் நியாயமானதே. பாடங்கள் சொல்லி கொடுக்கும் போதே, ஆசிரியருக்கும் மாணவருக்கும் ஒரு Bonding இல்லாமல் போய் விடுவதும் இந்த நிலைக்கு ஒரு காரணமாக இருக்குமோ?
உங்கள் வலைத்தளம் ஏன் அடிக்கடி காணாமல் போய்விடுகிறது?
ஆசிரியர் வெறும் மனிதனாக மட்டும் பார்க்கப்படுகிற காலக்கட்டம் இது. மாணவனக்கான வழியை அவன் நடக்காமல் தாண்டுகிறான்;ஆசிரியரும் புரிதலை மறந்து உரைதலுக்கு முன்னுரிமை அளிக்கிறார்.இவர்களிடையேயான இடைவெளி அதிகமாகி விட்டது. அந்த இடைவெளியில் அவரவர்களுக்கான ஆதாய சந்தோசங்கள் நிரம்பி வழிகின்றன. எனவே, எதிர்ப்பார்ப்புகள் பொய்ப்பது இயற்கையே...
மேல் விபரங்களுக்கு... விரைவில் "குறட்டை" உறுமலில்
ஆசிரியர்கள் மீது மாணவர்கள்
வைக்கும் மரியாதை என்றும் குறையாது.
மாதா,பிதா,குரு,தெய்வம்
இதை நல்ல மாணவர்கள் மறக்க மாட்டார்கள்
முன்பெல்லாம் பாடம் என்பதை தாண்டியும் ஒரு நல்ல புரிதல் இருக்கும். குடும்பம் பற்றி எல்லாம் ஆசிரியர்கள் கேட்பார்கள், இப்போது அப்படி இல்லை. எல்லாம் காலத்தின் மாற்றம்!! இருப்பினும் சில ஆசிரியர்களை மனம் மறப்பதேயில்லை. ஏன் என்றால் எல்லோருடைய உயர்வுக்கும் பின்னால் நிச்சயம் ஒரு ஆசிரியரின் அறிவுரைகள், பாராட்டுதல், உதவி இருந்திருக்கும்.
தமிழனுக்கு என்றுமே முதலில்
"மாதா, பிதா, குரு" பின்னர் தான் எல்லாமே!! ♥♥♥
சரியான கேள்வி! என்ன சொல்றது?
இப்பெல்லாம் பசங்க பள்ளிக்கு வந்து படிக்கிறதே பெரிய விஷயம் இதில பாஸ் பண்ணினா சாக்லேட் வேறையா....
நேற்று இரவு உங்கள் வலைப்பதிவிற்குள் நுழைய முடியவில்லை..Blog not found என வந்தது. இது எனக்கு மட்டுமா எனத் தெரியவில்லை..FYI.
அன்பின் பாரதி
ஆசிரியர் மாணவர் உறவு முன்பிருந்ததைப் போல இல்லை என்றாலும் - இந்த அளவிற்குக் குறைந்து போய் விட வில்லை. பள்ளிக்குச் செல்வது - ஆசிரியரைச் சந்திப்பது - மரியாதை செலுத்துவது இதெல்லாம் இன்றும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. மேன்மேலும் உறவு செழிக்க நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் பெற்றுக்கொள்ளவும்
http://pirashathas.blogspot.com/2011/01/blog-post_07.html
Post a Comment